9/18/2013

| |

கூட்டமைப்புக்கு வாக்களித்தால் வதிவிட விசா கிடைக்காத அரசியல் தஞ்ச கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பபடுவர்

இந்தவார இறுதியில் இலங்கையின் வடக்கில் இடம்பெற விருக்கும் மாகாணசபைக்கான தேர்தலின் முடிவில் அரச தரப்புக் கட்சிகள் தவிர்ந்த ஏனைய தமிழ்க் கட்சிகள் வடக்கு மாகாண சபையைக் கைப்பற்றி அங்கு ஆட்சியமைத்தால் ஐரோப்பிய நாடுகளிலுள்ள வடபகுதியைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களை அவர்களின் நாட்டுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கலாம் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பில்பெனியன் தெரிவித்தார்.
அந்தநாட்டின் வடபகுதியில் இடம்பெற்ற யுத்தத்துக்குப் பின்னர் படிப்படியாக அங்கு மீள் குடியமர்வு இடம்பெற்று வந்துள்ளது. யுத்தகாலத்தில் இடம் பெயர்ந்த பலர் ஐரோப்பிய நாடுகளிற்கு வந்துள்ளனர். இவர்களில் அநேகமானவர்கள் தாங்கள் தஞ்சமடைந்திருக்கும் நாடுகளின் குடிவரவு திணைக்களங்களில் புகலிடக் கோரிக்கையை சமர்ப்பித்துவிட்டு காத்திருக்கின்றனர். பல ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதால் அது எங்களைப் பொறுத்தவரையில் ஒருபிரச்சினையான விடயம்தான் என்றும் மேற்படி ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் இப்போது மீள்குடியமர்ந்ததைப் போல ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோரிநிற்பவர்களும் மீண்டும் நாடு திரும்புவதற்கான வாய்ப்புக்களும் சூழலும் இதனால் உருவாகும்.
யுத்தகாலத்தில் வடக்கில் காணப்பட்ட நெருக்கடிகளும் நிச்சயமற்ற தன்மைகளும் நீங்கி அங்கு தமிழ்க்கட்சி ஒன்றிடம் மாகாண நிர்வாகம் செல்லும் போது ஐரோப்பிய நாடுகள் இந்த விடயத்தில் தமது கவனத்தை ஆழமாகச் செலுத்த முடியும்.
இதன் மூலம் இந்த நாடுகளின் குடிவரவுத் திணைக்களங்களில் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் புகலிடக் கோரிக்கையாளர் களின் விண்ணப்பங்களை நியாயபூர்வமான காரணங்களுடன் நிராகரிக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனைவிட அதிகளவு புகலிடக் கோரிக்கையாளர்கள் தமது கோரிக்கை தொடர்பாக தாம் தஞ்சம் கோரும் நாடுகளின் நீதிமன்றங்களில் சட்ட உதவி நாடி வழக்குத் தொடுத்துள்ளனர். இவ்வாறான பல வழக்குகள் அந்த நாடுகளில் இன்னனும் நிலுவையில் உள்ளன.
எனவே இலங்கையின் வடபகுதியில் நடக்கவிருக்கும் தேர்தலின் முடிவைப் பொறுத்து இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பாக நீதிமன்றங்களும் குடிவரவு அதிகாரிகளும் தீர்க்கமான ஒரு தீர்மானத்துக்கு செல்வதற்கான வாய்ப்புக்கள் இப்போது உருவாகி வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த வருட ஆரம்பத்தில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக்குழுவின் அமர்வு ஒன்றின்போது ஆசிய நாடுகளிலிருந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான விடயம் அதிக சிரத்தையுடன் விவாதிக்கப்பட்டதாகவும், இதன்போது அமர்வில் கலந்துகொண்ட பல்வேறு உறுப்பினர்கள் வெவ்வேறு கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
எனினும் இந்தக் கோரிக்கையாளர்களது சொந்த நாட்டில் நிலவும் யதார்த்த நிலைமைகள் கருத்தில் எடுத்துக்கொள்வது மிக அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
(ஜெனிவா)