9/03/2013

| |

சகல சமூகங்களையும் ஒன்றிணைக்க ஜனாதிபதி சிறந்த பாலமாகத் திகழ்கிறார் மட்டு. மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை

* சுனாமியால் அழிந்த பேதுருவானவர் ஆலயத்தை புனரமைக்க அரசாங்கமே உதவியது
* வாகரை மக்கள் சார்பில் படைவீரர்களுக்கு நன்றி தெரிவிப்பு
‘ஜனாதிபதி அவர்களை நான் பாலம் அமைப்பவராகவே பார்க்கின்றேன். ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணிப்பதற்கு மாத்திரம் இந்தப் பாலங்கள் அமைக்கப்படவில்லை.
மொழி, மத, இன வேறுபாடின்றி சகல சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் ஒன்றிணைப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சிறந்த பாலமாகத் திகழ்கிறார்’ என மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை தெரிவித்தார்.
வாகரை சென். பீற்றர் அபோஸ்தர் பேதுருவானவர் ஆலயத் திறப்புவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட சென். பீற்றர் அபோஸ்தர் (பேதுருவானவர்) ஆலயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை மேலும் கூறியதாவது :
கிழக்கு மாகாணத்தின் மதிப்பிற்குரிய ஆளுநர் அவர்களே, கிழக்கு மாகாண தளபதி ஜெனரல் லால் பெரேரா மற்றும் இம் மாகாணத்தைச் சேர்ந்த பிரிகேடியர்கள் உட்பட அனைத்து இராணுவ உத்தியோகத்தர்களே, அமைச்சர்களே, பாராளுமன்ற உறுப்பினர்களே, ஜனாதிபதியுடன் வருகை தந்திருக்கும் அரசாங்க அதிகாரிகளே, கிறிஸ்தவ விவகார பணிப்பாளர் குணவர்தன அவர்களே, அவருடைய குழுவினர்களே, வாகரை பிரதேச செயலாளர் அவர்களே, அவரது உத்தியோகத்தர்களே, புனித பீற்றர் அபோஸ்தர் தேவாலயத்தின் சம்பிரதாயபூர்வ திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் உங்கள் அனைவரையும் வரவேற்பதற்கு கிடைத்த வாய்ப்பு குறித்து நான் பெருமைப்படுகின்றேன்.
மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களே வாகரை மக்களும் எனது மறை மாவட்டத்தைச் சேர்ந்த அனைவரும் நீங்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை எங்களுக்கு பெருமையாக இருக்கிறது.
சுனாமி பேரலை கிழக்கு கரையோரத்தை முற்றாக அழித்த போது
இந்த தேவாலயமும் வணக்கத்திற்குரிய குருமார்களின் வசிப்பிடமும் முற்றாக அழிவடைந்தன. இவ்விதம் பாதிக்கப்பட்ட எங்களுக்கு யார் உதவி செய்வார்கள் என்று காத்திருந்த போது அரசாங்கமே முன்வந்து எங்கள் தேவாலயத்தை பெளத்த சாசன அமைச்சு மற்றும் கிறிஸ்தவ விவகார திணைக்களத்தின் ஊடாக புனர்நிர்மாணம் செய்வதற்கு உதவி செய்தது.
இதற்கு நன்றிக்கடனாகவே நாம் எமது புதிய தேவாலயத்தின் திறப்பு விழாவிற்கு உங்களை அழைத்து கெளரவிக்க விரும்பினோம். இந்ததேவாலயம் அழகாக காட்சி அளிக்கிறது. வாகரை மக்களும் இந்த மறை மாவட்டத்தைச் சேர்ந்த அனைவரும், நீங்கள் தாராளமாக செய்த உதவிக்கு என்றும் நன்றி உணர்வுடன் இருக்கின்றார்கள்.
ஜெனரல் லால் பெரேரா அவர்கள் பலவிதத்திலும் எங்களுக்கு உதவி செய்திருக்கிறார். ஜனாதிபதி அவர்களே, உங்களுடன் தொலைபேசியில் உரையாடுவதற்கும் அவர்தான் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். நாம் அழைத்த போது நீங்கள் உடனடியாக ‘நான் உங்கள் அழைப்பை ஏற்றுக் கொள்கிறேன்’ என்று உறுதியளித்தீர்கள். நீங்கள் உறுதியளித்தபடி இன்று இங்கே வந்திருக்கிaர்கள். இந்த உறுதிமொழியை நிறைவேற்றியமைக்கா நான் உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நான் உங்களை பாலம் அமைப்பவராகவே
பார்க்கிறேன். ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணிப்பதற்கு மாத்திரம் இந்தப் பாலங்கள் அமைக்கப்படவில்லை. மொழி, மத, இன வேறுபாடின்றி சகல சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் ஒன்றிணைப்பதற்கு நீங்கள் பாலம் அமைத்திருக்கிaர்கள்.
நீங்கள் எவ்வித வேறுபாடும் இன்றி அனைவரையும் சரிசமமாக நடத்துகிaர்கள். நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒரே நாட்டுப் பிள்ளைகளாக அமைதியாகவும், நல்லுறவுடனும் வாழ்வதையே விரும்புகிaர்கள். உங்கள் கனவு நனவாவதற்கு நாம் பிரார்த்திக்கும் அதேவேளையில், உங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் தருவோம் என்று உறுதியளிக்க விரும்புகிறோம்.
ஜெனரல் லால் பெரேரா முதல், வாகரை இராணுவ பிரிகேடியர் வரை சகல இராணுவ அதிகாரிகளுக்கும், சிப்பாய்களுக்கும் எனது விசேட நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். தேவாலயம் திறக்கப்படும், அங்கு திருவிழா நடத்தப்படுமென்று அறிவிக்கப்பட்ட நாள் முதல் நூற்றுக் கணக்கான இராணுவ அதிகாரிகளும் நல்ல முறையில் திட்டமிட்டு இரவு பகலாக கஷ்டப்பட்டு இந்தப் பணியை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளார்கள்.
எங்கள் பங்கு தந்தை வண. ஜெயகாந்தன், இராணுவத்தினரின் ஒத்துழைப்பு குறித்து விரிவாக விளக்கக் கூடிய நிலையில் இருக்கிறார். இராணுவத்தினர் மக்களுடன் இணைந்து மக்களுக்கு பல்வேறு வகையிலும் உதவி செய்வதை நான் பார்த்திருக்கிறேன்.
கிறிஸ்தவ விவகார பணிப்பாளர் குணவர்தன, அரசாங்க அதிபர், மட்டக்களப்பு பிரதேச செயலாளர் ஆகியோர் எங்களுக்கு புதிய தேவாலய திறப்பு விழா தொடர்புடைய நிகழ்வுகளுக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். குறிப்பாக வாகரை பிரதேச செயலாளரும் அவரது அதிகாரிகளும் எமக்கு ஆதரவை அளித்தமைக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த பேர்டி பெரேரா இதற்கான ஒழுங்குகளை செய்தமைக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நான் சகல வண. குருமாருக்கும், வண. சகோதரர்களுக்கும், வண. சகோதரிகளுக்கும் வாகரை மக்களுக்கும் எனக்களித்த ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
உங்கள் அனைவரையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக :-
கிழக்கு மாகாணத்தின் மதத் தலைவர் என்ற முறையில் ஜனாதிபதி அவர்கள் எனக்கு அளித்த இந்த பேருதவிக்கு நான் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். ஜனாதிபதி அவர்கள் ஒரு தேசம், ஒரு மக்கள், ஒரு குடும்பம் என்ற தத்துவத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். ஜனாதிபதி என்ற முறையில் நீங்கள் சமயத் தலைவர்களின் ஆசீர்வாதத்துடனும் வழிகாடலுடனும் இந்நாட்டை விடுவித்து எமது மக்கள் சுதந்திரமாகவும் சகோதர, சகோதரிகளாகவும் வாழ வழிவகுத்து ள்Zர்கள்.
இதற்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.