9/12/2013

| |

அவுஸ்திரேலிய பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பார்


புதிதாக தெரிவுசெய்யப்பட்ட அவுஸ்திரேலிய பிரதமர் ரொனி அபொட் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
அவுஸ்திரேலியா பிரதமருடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று புதன்கிழமை காலை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கலந்துரையாடியுள்ளார். இதன்போதே பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்;டில் கலந்துகொள்வதாக ரொனி அபொட் உறுதிப்படுத்தியுள்ளார்.