9/11/2013

| |

உடல் முழுக்க சித்திரவதை செய்யப்பட்டே ஓமடியாமடு சாந்தி கொல்லப்பட்டாள்.*****திடுக்கிடும் தகவல்கள்

 க.ருத்ரா  (மட்டக்களப்பு )
மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப் பெண்களாக வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் பெண்களின் தொகை நாளுக்கு  நாள் அதிகரித்துச் செல்கின்றதே தவிர குறைந்தபாடில்லை.
அன்றாடம் வறுமையில் வாழ்கின்ற மக்கள் தங்களது வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றமடையச் செய்தல்;, குடும்ப சுமையை குறைத்தல், நல்லதொரு வீடு கட்டுதல்,பிள்ளைகளின் எதிர்கால கல்வி மற்றும் திருமணம் போன்ற பல தேவைகளை முன் நிறுத்தி அவற்றினை எப்படியாயினும் நிறைவேற்றிட வேண்டும் என்கின்ற பல கற்பனைகளை மனதில் எண்ணியவாறு மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்காக செல்கின்றனர்.

அவ்வாறு செல்கின்றவர்கள் இங்குள்ள உள்ளுர் முகவர் மூலமாக முதற் தடவையாக ஏமாற்றப்படுகின்றார்கள். அதன் பின்பு அவர்கள் சென்றடையும் நாடுகளிலுள்ள முகவர் நிலையங்களினால் ஏமாற்றப்படுகின்றார்கள். இவை எப்படி? எவ்வாறு? இடம்பெறுகின்றது என்பதை பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தெளிவாக கூறினாலும் அனேகமானோர்கள் தாங்கள் எதிர்நோக்கிய சம்பவங்களை வெளிப்படுத்தாமல்  தங்களுக்கு ஏற்பட்ட துயரங்களை மனதில் மறைத்து வைத்துள்ளனர். இந்த விடயமானது ஒட்டு மொத்தமாக வெளிநாடு செல்லும் எல்லா பெண்களையும் குறிப்பிட்டு கூறவில்லை. மத்தியகிழக்கில் தங்களுக்கு ஏற்பட்ட  பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றவர்கள், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பணிப்பெண்ணாக மத்திய கிழக்கு நாட்டிற்க்கு செல்லுவதற்க்கு ஆயத்தமாகவுள்ள  பெண்களையே குறிப்பிட வேண்டிய தேவையுள்ளது. தலை வெட்டப்பட்டும், உடற்பாகங்களில் ஆணி ஏற்றப்பட்டும்,அங்கவீனர்களாக்கப்பட்டும்,சுடுநீர் ஊற்றப்பட்டும்,உடல் உபாதைகள்,மற்றும் பாலியல் பலாத்காரம், ஏன் சில நேரங்களில் மரண தண்டனைக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். என்பதை நான் கூறி தெரிவதைவிடுத்து நீங்கள் எல்லோரும் பல்வேறு வகையான ஊடகங்கள்; மூலமாக அன்றாடம் அறிந்த விடயங்களே. வழக்கம் போல் முகவர் மூலமாக அரேபிய நாடுகளுக்கு பணிப் பெண்களாக செல்வோர்கள் சிலர் அங்கு தங்களுக்கு ஏற்படும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க முடியாமல் விளக்கில் வீழ்ந்த விட்டில் பூச்சிகளாய் அந்த நாடுகளில் இருந்து அலறுகின்றனர். இவ் ஓலச் சத்தம் தங்களை பெரிதும் வாழ்த்தி வழியனுப்புவதற்க்கு ஒத்தாசையாக இருந்த மனைவிமார்களை அனுப்பிவைத்த கணவன்மார்களுக்கும்,பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்களுக்கும், சகோதரிகளை அனுப்பும் சகோதரங்களுக்கும் காதில் கேட்பதில்லை. காரணம் பணம் ஒன்றே அவர்களது தேவைப்பாடாகும்.  ஏன் இச்சத்தம் சில வேளைகளில் அரசின் காதுகளிலும் கேட்பதில்லை. அரசிற்;;கு அதிக வருமானத்தினை பெற்றுத்தரும் தொழில் வாய்ப்புகளில் வெளிநாட்டு  வேலை வாய்புத் துறையினது பங்களிப்பும் முக்கியமான ஒன்றாகும்;. எனவேதான் அவர்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விடயங்களில் அவர்களுக்;கு ஏற்றால்போல் சாதகமான  பல கொள்கைகளை தன்னகத்தே கொண்டுள்ளனர்.

அண்மையில் பிரபல்யமாக எல்லோராலும் பேசப்பட்டு வந்த மூதுர் றிஸானாவின் கதை  அரசின் பொறுப்பற்ற செயலுக்கு ஒரு முன்னுதாராணமாகும். இவர் மட்டுமல்ல நமக்கு தெரியாமல் பல சோக சம்பவங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இப்பட்டியலானது நீண்டு கொண்டே செல்லுகின்றதே தவீர குறைந்த பாடில்லை  அன்று றிஸானாவிற்கு தலை துண்டிக்கப்பட்டு  மரணதண்டனை வழங்கப்பட்டது.  நேற்று இது போன்றே வாழைச்சேனை கறுவாக்கேணியைச் சேர்ந்த காந்திமதிக்கு ஜோர்தான் நாட்டில் தனது வீட்டு எஜமானால் துப்பாக்கி சூடு இடம்பெற்றது. இன்று உடல் உபாதைகளுக்கும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும் உட்படுத்தப்பட்டு பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வாகரை ஓமடியாமடுவைச் சேர்ந்த  யோகேஸ்வரன் சாந்தி  உயிரிழந்துள்ளார்.

அன்று றிஷானா, நேற்று காந்திமதி,இன்று சாந்தி,நாளை யாரோ,???இவ் மரணப்பட்டியலை தடுப்பது யாhர்? சாந்தியின் மரணம் தொடர்பில் தெரிய வருவதாவது…

மட்டக்களப்பு ஓமடியாமடு வாகரைப் பகுதியினைச்; சேர்ந்த யோயேஸ்வரன் சாந்தி இறக்கும் போது வயது (24) ஆகும்.

இவர் ஏழு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மூன்;;;;றாவது பிள்ளையாகும். மண்டுர் தமிழ் மகா வித்தியாலயத்தில் நான்காவது ஆண்டில் கல்வி கற்றுள்ளாh.;  20 வயதில் தனது குடும்பத்தின்  வறுமையை போக்கும் பொருட்டு வெளிநாடு செல்ல ஆசைப்பட்டாள்.  ஏனைய பெண்கள் வெளிநாடு செல்வதைப் போன்று அவளும் சவுதி நாட்டிற்க்கு பணிப்பெண்ணாக தொழில் புரிந்து வர சென்றாள். இறுதியில் அவள் சடலமாக வீடு வந்து சேர்ந்த சோக சம்பவம் இங்குள்ள மக்கள் எல்லோருடைய  இதயங்களைகளையும் உலுக்கியது.

தந்தை திடீரென நோய் வாய்ப்பட்டதினால் இவரது தாயார்  இறந்ததினால்  குடும்ப பொறுப்பை ஏற்க்க வேண்டிய கட்டாய நிலமைக்கு தள்ளப்பட்டார். அதன் விளைவாக 4 வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில்  சவுதி நாட்டிற்;கு பணிப்பெண்ணாக சென்றிருந்தார்.  தமக்கு கீழே தங்கியிருக்கும் தங்கை மற்றும் தம்பிகளின் எதிர்கால படிப்பு, வீடு கட்டுதல் மற்றும் தன்னுடைய திருமணம் போன்ற தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதன் நிமித்தம் இங்குள்ள முகவர் மூலம் கொழும்பு முகவர் ஊடக சவுதி நாட்டிற்க்கு 10.10.2009ஆம் திகதி சாந்தி சென்றிருந்தார். இதே வேளை அவரது தந்தை சீ.யோகேஸ்வரன் மகள் சாந்தி பற்றி தெரிவிக்கையில்  எனது மகள் தாயாரின் உயிர் பிரிவினை தாங்கிக் கொள்ளமுடியாமலும் வறுமை நிலை காரணமாகவும் சகோதரங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடனே வீட்டுப்பணிப்பெண்ணாக சவுதியரேபியா நாட்டிற்க்கு சென்றிருந்தார். நான்கு வருடங்களாக உன்னைக் காணமல் உமது இறந்த உடலை காண்பதற்க்காகவா மகளே உயிருடன் இருந்தேன்.எனக்கு எருது மாடுகள் வாங்கி கொடுக்கும்படியும் என்னை கவனமாக பார்க்கும்படியும் தங்கையிடம் கூறிச் சென்றாயே எனது தங்கமே. இனி எப்போது உன்னைப் பார்ப்பேன். எனது மகள் இன்று சடலமாக பெட்டியில் வந்துள்ளாளே. என்று தலையில் அடித்து கதறி அழுதார்;.

தொழில் புரியவென்று சென்ற எனது மகள் நஞ்சருந்தி  மரணம் அடைந்ததாக கூறப்படுவதை எப்படி ஐயா ஏற்கமுடியும்? அந்த படுபாவி வீட்டுக்காரன் என்ட மகளை கொண்டு போட்டான் ஐயா.. என்று அவர் தனது இரண்டு கைகளினாலும்  தலையில் அடித்து அழுத காட்;சியானது இறுதி சடங்கில் கலந்து கொண்டவர்களின் நெஞ்சங்களை உருக வைத்தது.

தனது சகோதரியின் மரணம் தொடர்பாக சாந்தியின் மூத்த சகோதரி யோகேஸ்வரன் மேதினி வயது (22) கூறுகையில் சவுதி சென்று ஆறு மாதங்கள் கடந்த நிலையில் தொலைபேசி ஊடாக  அக்காவின் செய்தி கேட்டு எல்லோரும் சந்தோஷமாக இருந்தோம். அவ்வேளை அப்பாவை நல்லா பாருங்கள் பணம் அனுப்புகின்றேன் அவருக்கு மாட்டுப் புணையல் வாங்கிக் கொடுங்கள். தன்னைப்பற்றி கவலைப்படவேண்டாம். ஈடு வைத்த தங்க மாலையையும் மீட்டுக்கொள்ளுங்கள். என்று பல விடயங்களைத் தெரிவித்தார். அதுவே அவரது முதலும் இறுதியுமான பேச்சாக இருக்கும் என்று நினைக்கவில்லை. என்று சாந்தியின் சகோதரி மேதினி கண்ணீர் மல்க தனது சகோதரியின் துயரக் கதையைக் கூறினார்.  அக்கா பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. அக்காவினை இலங்கைக்கு எடுப்பதற்க்கு பல முயற்சிகள் செய்தோம். ஆனால் அக்காவினை அனுப்பிய கொழும்பு முகவர் யார் என்று தெரியாமல் போய்விட்டது. என்று மேலும் அவர் சோகத்துடன் கூறினார். சாந்தியின் இழப்பினை தாங்க முடியாமல் அவரது தந்தை மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் ஆழ்ந்த  துயரத்தில் உள்ளனர்.

இன,மத, மொழி, கடந்து தனக்காகவும் தன்னுடைய குடும்பத்தினர்களுக்காகவும் சொந்த நாட்டின் நலனுக்காகவும் தங்களடைய பிஞ்சு குழந்தைகளையும் சகோதரங்களையும் அன்புக் குடும்பங்களையும் நாட்டையும் விட்டு பிரிந்து வெளிநாடுகளில் உழைக்கும்  ஏழை பணிப்பெண்களின் இந்த  அவல நிலமை எப்போதுதான் தீரும்.

இதேவேளை 01.09.2013 ஆம் திகதியன்று சாந்தியின் நல்லடக்கம் இடம்பெற்றது. இதன் போது அவரது சடலம் இடப்பட்ட பெட்டியை திறந்து பார்த்த மக்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர். உடலின் பல்வேறு இடங்களில் காணப்பட்ட சித்திரவதைக் காயத் தழும்புகளே இதற்கு காரணமாகும். இதனைத்தொடர்ந்து; ஒன்று திரண்ட மக்கள் வாகரை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்து அவர்களின் ஆலோசனைப்படி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தீர்மானம் .மேற்கொண்டனர். பொலிசாரும் மக்களின் கருத்திற்கு செவிசாய்த்து சடலத்தை தற்போதைக்கு அடக்கம் செய்யும்படியும் மேலதிக விசாரணைகள் இடம்பெறும்போது மீண்டும் சடலத்தை தோண்டி எடுப்பதற்கான ஒத்துழைப்பை வழங்குவதாகவும்,இது தொடர்பான விசாரணைகளை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஊடாக மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர். அதன் பின்பே சடலம் அடக்கம் செய்யப்பட்டது. சாந்திக்கு நியாயம் வேண்டி அவரது தந்தை வாகரை பிரதேச செயலாளர் ஆர் இராகுலநாயகியிடம் சவுதி நாட்டு தூதுருவருக்கான மகஜர் ஒன்றை கையளித்தார்.

இம் மகஜரில்  கூறப்பட்டுள்ளதாவது.

எனது மகளான யோகேஸ்வரன் சாந்தி  வயது (24) என்பவர் கடந்த 2009 ஆண்டு சவுதி நாட்டிற்கு பணிப்பெண்ணாக தொழில் பெற்றுச் சென்றார்.கடந்த 2013.07.26 ஆம் திகதி நஞ்சருந்தி இறந்துவிட்டதாக தூதரகத்தின் மூலமாக அறிவிக்கப்பட்டது. இதற்கிணங்க 2013 .08.28 ஆம் திகதி அவரது சடலம் எங்களுக்கு அனுப்பி வைக்கபட்டது. ஆனால் எனது மகள் நஞ்சருந்தி உயிரிழந்தது பற்றி பூரணமான விளக்கம் தரப்படவில்லை. எப்படி. யாரால். ஏன். என்பதை என்னால் அறியமுடியவில்லை. ஏழைகளாகிய எங்களது பொருளாதார கஷ்ட நிலை காரணமாகவே  பணிப்பெண்ணாக தொழில் செய்யச்சென்று பலர் இந் நிலைக்கு ஆளாகின்றனர். எனவே எனது மகளது மரணத்திற்க்கு சவுதி; அரசு நீதியான தீர்பினை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன். என்று தனது கையொப்பம் இட்ட மகஜரை பிரதேச செயலாளரிடம் கையளித்தார்.

இந்த மகஜரில் குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கு பதில் கிடைக்குமா.  உயிரிழந்த பெண்ணுக்கு  நீதி கிடைக்குமா. என மக்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இதேவேளை சமுதாய நலனில் அக்கறையுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும் இது போன்ற நிகழ்வுகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். என்பதே பாதிக்கப்பட்ட மக்களினது எதிர்பார்பு ஆகும்.

எமது மாவட்டத்சை; சேர்ந்த பல பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் இவ்வாறான பல்வேறுபட்ட துன்பங்களுக்கும், உடல் உபாதைகளுக்கும்  உள்ளாகி பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வேளைகளில் பாதிக்கப்பட்டோர்களது உறவினர்கள மாவட்டத்தினை பிரதிநிதித்துவ படுத்தும் அரசியல் வாதிகளிடம் சென்று முறையிடும் போது அதற்கான உடனடி தீர்வினை பெற்றுத்தராமல் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு தெரியப்படுத்தியுள்ளோம் இது தொடர்பாக பாராளுமன்றத்தில் உரையாற்றி தீர்வினை பெற்றுத்தருவோம் என்று சாட்டுப் போக்குகளை கூறி சமாளித்துவிடுவார்கள். அது மட்டுமல்லாமல் இவ்வாறான விடயங்களுக்கு உதவி செய்வதாக கூறி ஊடகங்கள் ஊடாக அறிக்கைகளை விட்டு விளம்பரம் மற்றும் பிரபல்யம் தேடுவதையே முன்னிலைப்படுத்தி செயல்படுத்தி வருகின்றனர். இது இங்குள்ள புத்திஜீவிகளின் உள்ளங்களை புண்படுத்துவதாகவே உள்ளது. பெண்கள் மத்திய கிழக்கிற்க்கு பணிப்பெண்களாக செல்லும் விடயம் தொடபில் அரசியல் வாதிகள் மடடுமல்லாது பிரதேச செயலாளர்களும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் கவனத்தில் கொள்வதுடன் இதனை தடுப்பதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகும்.               க.ருத்ரா