9/22/2013

| |

வீட்டுக்கு வாக்களியுங்கள்” கிளிநொச்சியில் கபே அமைப்பினர்; தேர்தல் பிரச்சாரம் - பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் உதவி தேர்தல் ஆணையாரிடம் முறைப்பாடு.

வீட்டுக்கு புள்ளடியிடுங்கள் என உதாரணமாக விளக்கமளிப்பது போன்று நேற்றும் (21) வாக்களிப்பு நிலையங்களுக்கு முன்னால் கபே அமைப்பினர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுப்பட்டுள்ளமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் உதவி தேர்தல் ஆணையாளருக்கு முறைப்பாடு செய்துள்ளார்
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது 21.09.2013ல் நடைபெறும் வடமாகாணசபைத் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களில் “கபே” அமைப்பினர் (சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம்) வாக்காளர்களை வழிமறித்து “எப்படி வாக்களிப்பது” என்று விளக்கமளிக்கும் போர்வையில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எவ்வாறு வாக்களிப்பது என்பதை உதாரணமாக எடுத்துச் செயற்படுகின்றனர். கபே அமைப்பின் இலட்சினை பொறிக்கப்பட்ட தொப்பி, ரீசேட் அணிந்தவாறு இவ்வாறு செயற்படுவது கபே அமைப்பின் நிலைப்பாட்டிற்கும் தேர்தல் விதிமுறைகளுக்கும் மாறானதாகும். அத்துடன் தேர்தல் நடைபெறும் இன்று இத்தகைய செயற்பாட்டை கபே அமைப்பு மேற்கொள்ள முடியாது என்பதை இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.என அம்முறைப்பாட்டில் தெரியவிக்கப்பட்டுள்ளது
அத்தோடு கபே அமைப்பில் அங்கம் வகிக்கின்ற பெரும்பாலனவர்கள் தேர்தலுக்கு முதல்நாள் வரை தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு ஆதரவாக பிரச்சாரங்கள் மற்றும் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் என்பதோடு கிளிநொச்சியில்  கபே அமைப்பின் முக்கியஸ்தராக இருப்பவர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பதவியொன்றை வகிப்பவர் என்பதும் குறிப்பிட்டத்தக்கது. நேற்றையதினம் தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு வாக்களிப்பு நிலையங்களுக்கு முன்னால் காணப்பட்ட கபே அமைப்பின் உறுப்பினர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லும் மக்களிடம் மேற்கண்டவாறு நடந்துகொண்டதாக மக்களும் தெரிவித்துள்ளனர்