9/04/2013

| |

வாகரை பணிப்பெண்ணின் மரணம் குறித்து உறவினர்கள் சந்தேகம்

சவூதி அரேபியா, ஜித்தாவில் பணிப்பெண்ணாக பணியாற்றிய இளம் பெண்ணொருவரின் மரணம் குறித்து அவரது   உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளார்கள்.தனது மகளுடைய மர்ம மரணம் தொடப்பாக விசாரணை நடத்தி உண்மை நிலையினைக் கண்டறிய வேண்டுமென மரணமான பெண்ணின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பில் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலிலுள்ள ஓமடியாமடுவைச் சேர்ந்த யோகேஸ்வரன் சாந்தி (வயது 24) என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உறவினர்களுக்கு 31.08.2013 அன்று தகவல் வழங்கப்பட்டது.அதன்பின்னர் சடலம் கொண்டுவரப்பட்டு 01.08.2013 ஆம் திகதி நல்லடக்கம் செய்யப்பட்டது.