10/10/2013

| |

யாழ்.பல்கலை மாணவிகளை வேட்டையாடிய விரிவுரையாளர் அதிரடியாகப் பணிநீக்கம்

யாழ்.பல்கலைக்கழகத்தில் பல மாணவிகளை தன் காம இச்சைக்கு அடிபணியவைக்க முயன்ற பொருளியல்துறை விரிவுரையாளர் இளங்குமரனை பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது பல்கலைக்கழக நிர்வாகம்.

விரிவுரையாளர் இளங்குமரன் தன்னிடம் கற்கும் மாணவிகளை, தனது பாலியல்வேட்டைக்கு இணங்காவிட்டால் அவர்களை வெவ்வேறு வழிகளில் துன்புறுத்தி வந்தார். குறிப்பாக தன்னுடன் இணங்காத மாணவிகளின் பரீட்சைப்புள்ளிகளிலும் கைவைத்தார்.
இந்த நிலையில் இளங்குமரனின் காமவேட்டையை பொறுத்துகொள்ளமுடியாத மாணவிகள் பல்கலை மாணவர் ஒன்றியத்திடம் இது குறித்து முறையிட , விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. ஆரம்பத்தில் காமவிரிவுரையாரைக் காப்பாற்ற முயற்சித்த பல்கலைக்கழகத்துணைவேந்தர், பின்னர் மாணவர்களின் போராட்டம் காரணமாக நீதியான விசாரணை நடத்த முன்வந்தார்.இந்த விசாரணைகளின் பின்னர் இளங்குமரன் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதால், அவர் பல்கலைக்கழகப்பேரவையால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.அத்துடன் பல்கலைக்கழகத்துக்குள் நுழையவும் அவருக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.