10/17/2013

| |

தேசிய கணித வினா விடைப் போட்டியில் இரண்டாம் இடத்ததை மட்டக்களப்பு வின்சன்ட் பெண்கள் தேசிய பாடசாலை மாணவி பெற்றுள்ளார்.

மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்ட தேசிய கணித வினா விடைப் போட்டி – 2013 இல் கிழக்கு மாகாணத்தில்   மட்டக்களப்பு வின்சன்ட் பெண்கள் தேசிய பாடசாலை மாணவி தேசிய கணித வினா விடைப் போட்டியில்    இரண்டாம் இடத்ததைப் பெற்றுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர்  தேசிய பாடசாலையில்  தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவி இராமநாதன் வேதிகாதேவி என்ற மாணவியே வெற்றி பெற்றுள்ளார்.
கல்வி அமைச்சின் கணிதக்கிளையினால் நடாத்தப்பட்ட இப்போட்டி கடந்த 04.10.2013 அன்று கென்வெல ராஜசிங்க தேசிய பாடசாலையில் நடாத்தப்பட்டது.
தமிழ், சிங்களம், விஞ்ஞானம், கணிதம், சமூக விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் பாடங்களில் போட்டிகள் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.