10/09/2013

| |

புளட்டுக்கே சதியா? வடக்கு மாகாண சபை அமைச்சர்கள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடமாகாணத்தில் வெற்றி பெற்ற பின்னர் அக்கூட்டமைப்பினுள் இரு பெரும் பிணக்குகள் எழுந்திருந்தது. ஒன்று ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சர் பதவிப்பிரமாணம் செய்யக்கூடாது என்பது. அதற்கு செருப்பால் அடுத்தது போல் தீர்வு வழங்கப்பட்டது. யார் எதை சொன்னாலும் நாட்டின் ஜனாதிபதி முன்தான் பதவிப்பிரமாணம் என்ற முடிவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவெடுக்க வல்ல சக்திகள் எடுத்தன.

இரண்டாவது பிணக்காக அமைச்சுப்பதவிகளுக்கு சத்தியாக்கிரகம் , கட்சியின் தலைமையிலிருந்து விலகுகின்றோம் என்ற மிரட்டல், அறிக்கைகள் என்ற போருக்கு மத்தியில் பின் வருவோர் வடக்கு மாகாண சபை அமைச்சர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.புளட்டின் சார்பில் யாருக்கும் அமைச்சு பதவிகள் கிடைக்கவில்லை என தெரியவருகிறது.

1. நீதியரசர் சி. வி. விக்கினேஸ்வசரன் –                                                                                                முதலமைச்சர், உள்ளுராட்சி,கிராமிய வளர்ச்சி,புனர்வாழ்வு 

2. பொ. ஐங்கரநேசன் – ஈபிஆர்எல் எஃப் -
விவசாயம், மீன்பிடித்துறை,சிறு தொழில்,உல்லாச பிரயாண துறைகள்  

3. பா. டெனிஸ்வரன் – டெலோ –
நீர்ப்பாசனம்,பாதை அபிவிருத்தி,வீடமைப்பு துறைகள் 

4. த. குருகுலராஜா – தமிழரசுக் கட்சி – 
கல்வி.கலாசாரம்,போக்குவரத்து துறைகள் 

5. ப. சத்தியலிங்கம் – தமிழரசுக் கட்சி – 
சுகாதாரம்.சமூக சேவை ,விளையாட்டு  துறைகள்