10/17/2013

| |

தென்சூடானில் உருத்திரகுமாரனின் ‘அமைச்சர்கள்’ கைது – சிறுமிகள் மீது பாலியல் பலாத்காரம்! - See more at: http://www.tamilkathir.com/news/13983/58//d,full_art.aspx#sthash.wF9iLakf.K2RogSbM.dpuf

தென்சூடானில் சிறுமிகள் மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட உருத்திரகுமாரனின் ‘அமைச்சர்கள்’ அந் நாட்டுக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருப்பதாக உருத்திரகுமாரனின் ‘பிரதிப் பிரதமர்’ கலாநிதி ராம் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்
தமிழீழத்திற்கான முதலாவது தூதரகத்தை தென்சூடானில் திறக்கப் போவதாகவும், விரைவில் தமிழீழத்திற்கான அங்கீகாரத்தை தென்சூடானிய அரசாங்கத்தின் ஊடாகப் பெறப் போவதாகவும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போலிப் பரப்புரைகளை உருத்திரகுமாரன் குழுவினர் முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் உருத்திரகுமாரனின் ‘அமைச்சர்கள்’ தென்சூடானிய சிறுமியர் மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக அந் நாட்டுக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தகவலை உருத்திரகுமாரனின் ‘பிரதிப் பிரதமரான’ கலாநிதி ராம் சிவலிங்கம் தற்பொழுது வெளியிட்டுள்ளார்.

அனைத்துலக தொடர்பகத்தையும், அதன் கிளைகளையும் உடைக்கும் நோக்கத்துடன் கே.பியால் உருவாக்கப்பட்ட உருத்திரகுமாரனின் தலைமையில் இயங்கி வரும் நாடுகடந்த ‘அரசாங்கத்திற்குள்’ அரங்கேறிய நிதி மோசடிகள், உள்குத்துவெட்டுக்கள் ஏற்கனவே வெளிவந்துள்ள நிலையில் உருத்திரகுமாரனின் அமைச்சர்களின் முறைகேடான பாலியல் உறவுகள் தொடர்பான தகவல்கள் தற்பொழுது வெளிவந்துள்ளன.

உருத்திரகுமாரனின் நாடுகடந்த ‘அரசாங்கத்தை’ புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் முற்றாகப் புறக்கணித்து வருவதன் விளைவாக தேர்தல்களுக்கான வேட்பாளர்களைத் தேடிப் பிச்சைவேட்டையில் உருத்திரகுமாரனும், அவரது கையாட்களும் இறங்கியுள்ள பின்புலத்தில் இப்பாலியல் குற்றச்சாட்டுக்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilkathir.com/news/13983/58//d,full_art.aspx#sthash.wF9iLakf.K2RogSbM.dpuf.