11/19/2013

| |

மட்டக்களப்பு காந்தி பூங்கா மற்றும் நீருற்று பூங்கா திறந்துவைப்பு.

மட்டக்களப்பு நகரில் தேசத்துக்கு நிழல் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நகரின் மத்தியில் அமைக்கப்பட்ட காந்தி பூங்கா மற்றம் மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு எதிரில் அமைக்கப்பட்ட நீருற்றுப் பூங்கா என்பன இன்று காலை வைபவ ரீதியாகத் திறந்துவைக்கப்பட்டது. 28 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட காந்தி பூங்காவும் 5 மில்லியன் ரூபாவில் நிர்மானிக்கப்பட்ட நீருற்றுப் பூங்காவுமே இன்று திறந்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எஸ்.சிவநாதன் தலைமையில் இடம்பெற்ற இத் திறப்பு விழாவில் பிரதி அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா,வி.முரளிதரன்,அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ,மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் இரா நெடுஞ்செழியன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள் கலந்தகொண்டனர்.