11/09/2013

| |

இந்தியப் பிரதமர் இலங்கைக்கும் வடமாகாணத்திற்கும் வரவேண்டும்

மன்னார் மறைமாவட்டத்தின் ஆயர் அதி. வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங் கலந்து கொள்ள வேண்டும் என்று விடுத்துள்ள வேண்டுகோளில் இலங்கை வரும் போது இந்தியப் பிரதம மந்திரி மன்னார் உட்பட வடமாகாணத்திற்கு வருகை தர தவறக்கூடாது என்றும் வழியுறுத்தியுள்ளார்.
இந்தியாவே இந்த யுத்தத்தை ஊக்குவித்திருக்கின்ற காரணத்தினால் அதனால் ஏற்பட்ட விளைவுகளை இந்தியப் பிரதம மந்திரி இங்கு வந்து பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங் வடமாகாணத்திற்கு வந்து அங்குள்ள தமிழர்களைச் சந்தித்து உரையாடினால் யுத்தத்தினால் ஏற்பட்டுள்ள பக்க விளைவுகளை அவரால் நன்கு தெரிந்து கொள்ளமுடியும் என்றும் அதிவணக்கத்துக்குரிய ஆயர் இராயப்பு ஜோசப் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியா தமிழர்களின் தாயின் ஸ்தானத்தில் இருப்பதனால் இந்தியா விழித்தொழுந்து தமிழ் மக்கள் படும் வேதனையைத் தீர்த்து வைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.