11/19/2013

| |

மட்டக்களப்பு கச்சேரி கதவை அடைத்து ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு கச்சேரியில் இன்று மாவட்ட அபிவிருத்தி மீளாய்வக் கூட்டம் இடம்பெறவிருந்த நிலையில் மட்டக்களப்பு ஆரையம்பதிப் பகுதியில் நிலவும் முஸ்லிங்களின் காணிப் பிரச்சினையினை தீர்த்துத் தருமாறு கோரி மண்முனைப் பற்றுப் பிரதேச முஸ்லிங்கள் நடாத்திய ஆர்பாட்டம் அமைச்சர்களிடம் மகஜர் கையளித்ததனைத் தொடர்ந்து சுமூக நிலைக்கு வந்துள்ளது.
இன்று காலை முதல் கச்சேரி கதவை அடைத்து ஆர்பாட்டத்தில் ஆரையம்பதிப் பிரதேச முஸ்லிங்கள் ஈடுபட்டனர்.
ஆரையம்பதிப் பகுதியில் உள்ள தங்களது காணிகளை ஆரையம்பதி மக்கள் அபகரிப்பதாகவும் அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பூ.பிரசாந்தன் ஆகியோர் உடந்தையாக இருந்து தங்களது காணிகளை அபகரிப்பதாகவும் ஆர்பாட்டக்காரர்கள் தெரிவித்ததுடன் காணிகளை மீட்டுத் தரும்படியுமே கோரிக்கை விடுத்தனர்.
அபிவிருத்திக் கூட்டத்திற்க வருகைதந்த அமைச்சர்களையும் மாகாண சபை உறுப்பினர்களையும் மறித்த இவ் ஆர்பாட்டக் காரர்கள் கச்சேரிக்குச் செல்ல முடியாது தடுத்தனர்.
பலத்த பாதுகாப்பினை பொலிஸார் ஏற்படுத்தியிருந்த போதும் ஆர்பாட்டக்காரர்கள் அமைச்சர்களைத் தடுத்து தங்களது காணிகளை மீட்டுத் தரும்படி கோசமிட்டு பாரிய குழப்பத்தில் ஈடுபட்டனர்.
பிரதி அமைச்சர்களான வி.முரளிதரன் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஆகியோர் ஆர்பாட்டக் காரர்களுடன் பேசிய நிலையில் மகஜர்கள் கையளிக்கப்பட்டதுடன் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததனைத் தொடர்ந்து சுமுக நிலைக்குத் திரும்பியது.
போலிஸார் பாதுகாப்பாக அமைச்சர்களை கச்சேரிக்கு அழைத்து சென்றதுடன் கதவு மூடப்பட்டு பாதுகாப்ப பலப்படுத்தப்பட்டது.