12/31/2013

| |

லயன் எயார் விமானத்தின் பாகங்கள், மனித எலும்புக்கூடுகள் யாழ். துரையப்பா அரங்கில் காட்சிக்கு வைப்பு

யாழ்ப்பாணத்திற்கும் மன்னாருக்கும் இடையில் உள்ள இரணைத்தீவுக்கு அப்பால் 1998ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 29ம் திகதி முற்பகல் 11 மணியளவில் எல்.ரி.ரி.ஈ. ஷெல் தாக்குதலின் மூலம் ஆள்கடலில் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயார் விமானத்தின் உதிரிப் பாகங்களும் பயணிகளின் ஆடைகள் போன்றவையும் அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற ரஷ்ய விமா னியின் தங்கப் பல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த விமானம் இரணைத் தீவில் இருந்து வடபகுதியில் சுமார் 4 கடல் மைல்களுக்கு அப்பால் கடலில் தரைமட்டத்தில் மூழ்கியிருந்தது.
இதனை தோண்டி எடுக்கும் பணிகள் இவ்வாண்டு மே மாதம் 3ம் திகதி முதல் 6ம் திகதி வரையில் ஆழ்கடலில் இடம்பெற்றன.
இந்த விமானத்தில் 4 ரஷ்ய விமானிகள் உட்பட 7 விமான சிப்பந்திகளும் 48 பயணிகளும் இருந்தனர். எல்லாமாக 3 விமான உபசரணையாளர்களும் இருந்தனர். இதில் பெண் உபசரணையாளராக இருந்த செல்வி தர்ஷினி குணசேகர முன்னாள் பொலிஸ் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரான குணசேகரவின் புதல்வியாவார்.
இந்த விமானத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பயணிகளின் எலும்புகள், ஆடைகள் போன்ற பொருட்கள் ஜனவரி மாதம் 11,12ம் திகதிகளில் துரையப்பா மைதானத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். பயணிகளின் உறவினர்கள் அன்றைய தினம் அங்கு வந்து அப்பொருட்களை அடையாளம் காட்டுமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
»»  (மேலும்)

| |

முனைக்காடு பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு

முனைக்காடு தெற்கு பாலர் பாடசாலையில் 2013.12.30ம் திகதி பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாலர் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் பாலர் பாடசாலையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் சிறுவர்களுக்கான சிறந்த கல்வியை புகட்டி அத்திவாரமாக இருக்கின்ற ஆசிரியர்களை மாலை அணிவித்து கௌரவித்தலும் பாடசாலையில் சிறந்து விளங்கிய மாணவர்களை கௌரவித்து பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றதுடன். மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந் நிகழ்வில் பட்டிப்பளைப் பிரதேச கோட்டக்கல்விப் பணிப்பளார் திரு.ந.தயாசீலன், யுக்டா நிறுவன தலைவர் திரு.அ.கருணாகரன், மட்/முனைக்காடு விவேகானந்த வித்தியாலய அதிபர் பொ.நேசதுரை ஆகியோரும் பிள்ளைகளது பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
»»  (மேலும்)

| |

மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் சாதனையாளர் பாராட்டு விழா

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு சாதனைகளைப்படைத்தவர்களை கௌரவிக்கும் மாபெரும் நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் தலைவர் கே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியி; ஆலொசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அமலநாதன்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் தர்மரெட்னம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கௌரவ அதிதிகளாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன்,மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி,மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்பரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது மாணவர்களின் பல்வேறு சாகசங்களைக்கொண்ட நிகழ்வுகள் நடைபெற்றதுடன் பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்தவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களில் சாதனை படைத்தவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் கடந்த நான்கு வருடங்களாக கராத்தே பயிற்சியினைப்பெற்று கறுத்தப்பட்டடி பெற்றவர்களுக்கு இதன்போது அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
அத்துடன் கராத்தே கலையினை கற்பிப்பதற்கு தகுதி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதி சான்றிதழ்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.
»»  (மேலும்)

12/30/2013

| |

தமிழில் தேசிய கீதத்தை பாடுவதில் என்ன தவறு: அமைச்சர் வாசுதேவ கேள்விநான்கு மொழிகளை கொண்டுள்ள தென் ஆபிரிக்காவின் தேசிய கீதம் அந்த நான்கு மொழிகளில் பாடப்படுவதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
மகரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் நடைபெற்ற இளைஞர் நாடாளுமன்றத்தில் சிறப்புரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தென் ஆபிரிக்காவின் நான்கு மொழிகளில் தேசிய கீதத்தை பாடி அந்நாட்டின் சமாதானம் ஏற்பட்டது என்றால் இரண்டு மொழிகளை மட்டும் கொண்டுள்ள இலங்கையில் தமிழில் தேசிய கீதத்தை பாடினால் எந்த தவறு?
சகல பிரஜைகளும் மனதிற்கு இசைவாக தமது மொழியில் தேசிய கீதத்தை பாடுவதற்கு இருக்கும் விருப்பத்திற்கு இடமளிக்க வேண்டும்.
இலங்கையின் சுதந்திர விடுதலைப் போராட்டம் தேசிய தோற்றத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை.
தேசிய சங்கம் ஆங்கிலேயருடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் கொள்கையிலும் தர்மபால போராட்டம் சமயத்தின் அடிப்படையிலும் வடக்கில் இந்துக்கள் தமிழ் நாடு என்ற தோற்றப்பாட்டிலும் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
லங்கா சமசமாஜ கட்சி மட்டுமே சுதந்திரப் போராட்டத்தை தேசிய கொள்கையின் அடிப்படையில் முன்னெடுத்தது. அந்த கட்சி இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் இணைந்து செயற்பட்டது.
எனினும் தென் ஆபிரிக்க சுதந்திரப் போராட்டம் முழுமையான தேசிய ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்பட்டது. இதனால் சுதந்திரம் அடைந்த தென் ஆபிரிக்காவில் பல இனங்கள் வாழ்ந்த போதும் அங்கும் இனவாதம் தலைத்தூக்கவில்லை.
நெல்சன் மண்டேலா தன்னை தென் ஆபிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி என்று அடையாளப்படுத்தி கொள்ளவில்லை. ஜனநாயக தென் ஆபிரிக்காவின் முதலாவது ஜனாதிபதி தான் என்றே அவர் தன்னை கூறிக்கொண்டார்.
அத்துடன் அவர் தன்னை சிறையில் அடைத்த வெள்ளையர்கள் மன நோகும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு கறுப்பினத்தவர்களை தூண்டவில்லை.
கறுப்பு, வெள்ளை என சகல இனத்தவரும் தென் ஆபிரிக்கர்கள் என அவர் கருதி செயற்பட்டதால் அந்நாட்டில் மீண்டும் இனவாதம் தலைத்தூக்கவில்லை என்றார்.
»»  (மேலும்)

12/28/2013

| |

இருவழிப்பாதை நெடுஞ்சாலைக்காக ஏறாவூர் நகரை அகலப்படுத்தும்

தேசிய நெடுஞ்சாலைக்கு ஏற்றதாக ஏறாவூர் நகரை ஊடறுத்துச் செல்லும் பிரதான வீதியை விஸ்தரிக்கும் பணிகள் ஏறாவூரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளும் அதன் ஊழியர்களும் ஏறாவூர் நகரில் வீதி விஸ்தரிக்கப்படும் எல்லையை அளந்து அடையாளமிட்டு வருகின்றனர்.
ஏற்கெனவே விஸ்தரிக்கப்பட்டுள்ள ஏறாவூர் நகர பிரதான வீதி ஒரு வழிப்பாதையாகவே உள்ளது. தற்போதுள்ள வீதியில் வருவதும் போவதுமாக ஒரே நேரத்தில் இரு வாகனங்கள் மாத்திரமே செல்லக் கூடியதாகவுள்ளது.
இது இனிமேல் தேசிய நெடுஞ்சாலைத் தராதரத்திற்கேற்ப இருவழிப்பாதையாக அதாவது ஏக காலத்தில் வீதியில் வருதற்கும் போவதற்குமாக நான்கு வாகனங்கள் பயணிக்க முடியும்.
அகலமாக்கப்படும் நவீன நெடுஞ்சாலையின் ஒரு மருங்கு 36 அடி அகலமானதானதாக இருக்குமென்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜனவரி மாதம் முதல் வீதி விஸ்தரிப்புப் பணிகள் ஆரம்பமாகும் என்றும் அவர் கூறினார்.
புதிய வீதி விஸ்தரிப்பின் காரணமாக ஏறாவூர் நகர கடைத் தொகுதிகளிலுள்ள பலரது கடைகள் பாதியளவுக்கு உடைக்கப்படவேண்டிய நிலைமை தோன்றியுள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

»»  (மேலும்)

| |

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 2014ம் வருடத்திற்கான வேலைத்திட்டமிடல் கூட்டம்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 2014ம் வருடத்திற்காக புதிய செயற்பாடுகள் தொடர்பாக திட்டமிடல் கூட்டம் எதிர்வரும் 29.12.2013 திகதி கட்சித் தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில் கட்சியின் தலைமை செயலகத்தில்  நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறிப்பிடுகையில்,
2013ம் வருடத்தின் செயற்பாடுகள் தொடர்பாக மீளாய்வுகள் மேற்கொள்ளப்படுவதோடு புதிய வருடத்திற்கான புதிய திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்தாகவும் குறிப்பாக 2014ம் வருடத்தில் தேர்தல்களை எதிர்நோக்குவது மக்களின் வலுவாக்கம் ஊடாக கட்சியின் முன்னோக்கிய செயற்பாடுகள் போன்றவை தொடர்பாக ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
»»  (மேலும்)

12/27/2013

| |

பயங்கரவாத தடுப்பு காவல்துறை விசாரணையில் தமிழ் பிரபாகரன்”

நானும்  வாடியபயிர்இலங்கையின் விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் தமிழ்நாட்டு ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரனை புலனாய்வுப்பிரிவினர் விசாரித்து வருவதாக கூறுகிறார் இலங்கை காவல்துறையின் சார்பில் பேசவல்ல அதிகாரியான அஜித் ரோஹன.
இந்த விசாரணைகள் முடிந்ததும் அவர் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் இது நடந்து முடிய இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பிடிக்கும் என்றும் கூறினார் அஜித் ரோஹன இவரை கைது செய்தபோது அவருடன் இருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், அவர் சுற்றுலாப்பயணியாக மட்டுமே வந்தார், சுற்றுலாப்பயணியாக மட்டுமே நடந்துகொண்டார் என்று பிபிசி தமிழோசையிடம் தெரிவித்திருக்கிறாரே என்று கேட்டபோது, அவர் அதை மறுத்தார்.
தமிழ் பிரபாகரன் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்திருந்தாலும், தமிழ் பிரபாகரனிடம் தாங்கள் கைப்பற்றிய கேமராவை ஆராய்ந்தபோது, அதில் அவர் ராணுவ நிலைகளை மட்டும் தேர்ந்தெடுத்து படம் பிடித்திருந்ததை தாங்கள் கண்ட்தாகவும், குறிப்பாக நாவற்குடா பகுதியில் இருக்கும் இராணுவ முகாம், அந்த பகுதியின் இராணுவ நடமாட்டங்கள், இராணுவ வாகனங்களின் நடமாட்டங்களையெல்லாம் அவர் படம் பிடித்திருந்தார் என்றும் கூறிய அஜித் ரோஹன, ஒரு சுற்றுலா பயணியான அவர் எதற்காக இராணு இலக்குகள், இராணுவத்தினரை மட்டும் குறிவைத்து படம் பிடிக்கவேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
அவரது கேமராவில் வேறு எந்த படங்களும் எடுக்கப்படவில்லை என்று கூறிய அவர், பாதுகாப்பு விவகாரங்களை மட்டும் அவர் குறிப்பாக படம் பிடித்தது ஏன் என்பதுதான் தங்களின் சந்தேகத்தை அதிகரிப்பதாக கூறுகிறார். இவரது கைது குறித்தும், இலங்கையில் இவரது நடத்தை குறித்தும் இந்திய தூதரகத்திற்கு உரிய முறையில் தாங்கள் தெரிவித்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
அடுத்து என்ன?.தமிழ் பிரபாகரன் விஷயத்தில் இரண்டு வழிகள் இருப்பதாக தெரிவித்த அஜித் ரோஹன, தாங்கள் அவரிடம் தற்போது விசாரித்துக் கொண்டிருப்பதாகவும், அவர் இலங்கைக்குள் வந்து சட்டவிரோத செயல்களை செய்திருந்தாலோ, அல்லது அவரது குற்றச்செயல்கள் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக இருந்தாலோ, அதற்கான இலங்கை சட்டங்களின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். அப்படியில்லாத பட்சத்தில் அவர் குடிவரவு குடியகல்வு விதிகளை மீறியிருப்பதாக தெரிந்தால் அவரை அந்த துறையிடம் கையளிப்போம் என்றும், குடிவரவு குடியகல்வுத்துறை ஆணையர் தமிழ் பிரபாகரன் மீது உரிய நடவடிக்கையை எடுப்பார் என்றும், பெரும்பாலும் அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என்றும் கூறினார் இலங்கை காவல்துறையின் சார்பில் பேசவல்ல அதிகாரியான அஜித் ரோஹன.
மறைப்பதற்கு ஒன்றுமில்லையென்றால் இந்த கைது ஏன்?
ஒருபக்கம் இலங்கையில் நிலைமைகள் முன்னேறிவிட்டது, யார் வேண்டுமானாலும் வந்து நேரில் பார்க்கலாம் என்கிறீர்கள், ஆனால் அப்படி வந்த இவரை கைது செய்திருக்கிறீர்களே, இது இலங்கை அரசு முன்னுக்குப்பின் முரணாக செயற்படுவதாக இல்லையா என்று அவரிடம் பிபிசி தமிழோசை கேட்டதற்கு பதிலளித்த அஜித் ரோஹன, இந்த ஆண்டில் மட்டும் 12 லட்சம் சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வந்து சென்றிருப்பதாகவும் அதில் ஆறு பேர் மட்டுமே தாங்கள் கைது செய்திருப்பதாகவும் கூறினார் அவர்.
“12 லட்சம் பேரில் வெறும் ஆறுபேரை மட்டுமே நாங்கள் கைது செய்திருக்கிறோம். அந்த ஆறுபேரைக்கூட குறிப்பிட்ட இலங்கை சட்டங்களை மீறி செயற்பட்டதற்காக மட்டுமே கைது செய்திருக்கிறோம். இதை நாங்கள் மட்டும் செய்யவில்லை. எல்லா நாடுகளும் செய்யும் நடைமுறை தான் இது”, என்றார் அஜித் ரோஹன.
உதாரணமாக இங்கிலாந்திலோ, அமெரிக்காவிலோ இருக்கும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் நின்று சுற்றுலாப்பயணிகள் யாரும் படம் எடுக்க முடியாது என்று கூறிய அவர், அந்த மாதிரியான விதிகள், கட்டுப்பாடுகள் இலங்கையிலும் இருக்கிறது என்றும் எனவே இலங்கை விதிகளை மதித்து நடக்கும் சுற்றுலாப்பயணிகள் யாரையும் தாம் கைது செய்வதில்லை என்றும் கூறினார் இலங்கை காவல்துறையின் சார்பில் பேசவல்ல அதிகாரியான அஜித் ரோஹன.
அதேசமயம் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் பிரபாகரன் தம்முடன் தங்கியிருந்த தமது நண்பர்தான் என்றாலும், அவர் ஊடகவியலாளர் என்பது தனக்குத் தெரியாது என்கிறார் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்.
»»  (மேலும்)

12/26/2013

| |

காரைதீவில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சுனாமிப்பேரலை 9ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள்
2004 ஆம் ஆண்டு அனர்த்ததின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூறும் முகமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும், கிழக்கின் அதிசயம் சமூக சேவை ஒன்றியமும் இணைந்து “சுனாமி நினைவு தீபம்” அம்பாறை மாவட்டத்தில் காரைதீவில் ஈஸ்வரா சனசமூக நிலையத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர் குமாரசிறி தலைமையில் நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது.இந் நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் உள்ளீட்ட கட்சியின் பிரதி நிதிகள் பலரும் கலந்து கொண்டு உயிரிழந்த செந்தங்களின் ஆத்ம சாந்திக்காக தீபம் ஏற்றி பிராத்தனை ஈடுபட்டனா
இதே வேளை காரைதீவு இந்து சேவா அபிவிருத்தி அமைப்பினால் ஏற்றாடு செய்யப்பட்டுருந்த சுனாமியினால் உயிரிழந்த உறவுகளுக்கான அஞ்சலி நிகழ்ச்சியிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் உள்ளீட்ட கட்சியின் பிரதி நிதிகள் பலரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

| |

நேபாள பாராளுமன்றத்தில் இணைய மாவோயிஸ்ட் கட்சி இணக்கம்

நேபாள பாராளுமன்றத்தில் இடம் பெற மாவோயிஸ்ட் கட்சி ஒப்புக் கொண்டதையடுத்து அந்நாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.
நேபாள நாடாளுமன்றத்திற்கு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் நேபாள காங்கிரஸ் கட்சி 105 இடங்களில் வெற்றி பெற்றது. அதற்கடுத்து மார்க்சிஸ்ட லெனினிஸ்ட் கட்சி 91 இடங்களிலும் வெற்றிபெற்றது.
இதனையடுத்து, அந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டி, பாராளுமன்றத்தில் இடம்பெற மாவோயிஸ்ட் கட்சி மறுப்பு தெரிவித்தது. இதனால் புதிய அரசு அமைவதிலும், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதிலும் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில் காத்மாண்டுவில் செவ்வாய்க்கிழமை நேபாள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், மாவோயிஸ்ட், மாதேசி மக்கள் உரிமை அமைப்பு ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கூடி, ஆலோசனை நடத்தினர்.
இதில், தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து பாராளுமன்றக் குழு மூலம் விசாரணை நடத்துவது, 6 மாதங்களுக்குள் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவது உள்ளிட்ட 4 முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் இந்தக் கூட்டத்தில் பாராளுமன்றத்தில் இடம்பெற மாவோயிஸ்ட் கட்சி ஒப்புக்கொண்டது.
»»  (மேலும்)

| |

வெருகல் பிரதேச சபை பட்ஜட் தோற்கடிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள வெருகல் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோல்வியடைந்துள்ளது.
வெருகல் பிரதேசசபையின் மாதாந்த அமர்வு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதன்போது பிரதேசசபை தவிசாளரினால் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக மூன்று பேரும் எதிராக நான்கு பேரும் வாக்களித்தனர். இதனால், வெருகல் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோல்வியடைந்துள்ளது.
»»  (மேலும்)

| |

கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டவர் இந்திய ஊடகவியலாளரா? சீமானின் வலதுகரமா?

நானும்  வாடியபயிர்


இலங்கையின் கிளிநொச்சிப் பகுதியில் சுற்றுலா விசாவில் வந்து பாதுகாப்புப் படையினர் நிலைகொண்டுள்ள இடங்களை படம் பிடித்ததற்காக இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதை பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்திய இலங்கை காவல்துறையின் பேச்சாளர் அஜித் ரோஹன, சுற்றுலா விசாவில் வந்த ஒருவர் நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடன் இடங்களை புகைப்படம் எடுத்த காரணத்தாலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.நாட்டின் குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டங்களை அந்த நபர் மீறினார் என்றும், நாளை மேலதிக நடவடிக்கைக்காக அவரை குடிவரவு அதிகாரிகளிடம் காவல்துறையினர் ஒப்படைப்பார்கள் என்றும் ரோஹன தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றும், 24 வயதான அவர் தன்னை ஒரு ஊடகவியலாளர் என்று தெரிவிக்கவில்லை என்றும் கூறும் காவல்துறை பேச்சாளர், சுற்றுலா விசாவில் வருபவர்கள் இவ்வகையான நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்றும் சுட்டிகாட்டினார்.

நண்பர் என்கிறார் சிறீதரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அந்த நபருடன் பயணித்தார் என்றும், அவர்கள் ஏன் வட மாகாணத்தில் அதிமுக்கியமான பாதுகாப்பு தொடர்பான இடங்களை படம் எடுக்க வேண்டியத் தேவை ஏற்பட்டது என்றும் கேள்வி எழுப்பினார் அஜித் ரோஹன.ஆனால் பிபிசி தமிழோசையிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர் தனது நண்பர் என்றும், வட மாகாண சபையின் உறுப்பினர் பசுபதி பிள்ளை, பிரதேச சபை உறுப்பினர் தயாபரன் உட்பட தமது குழுவினருடன் வேரவில், வலைப்பாடு, கிராஞ்சி, ஜெயபுரம் போன்ற பகுதிகளுக்கு தான் பயணித்தபோது, அவரும் உடன்வந்தார் என்பதையும் உறுதிப்படுத்தினார்.

அந்தப் பகுதியிலுள்ள மக்களைச் சந்திப்பதற்காகவும், அவர்களுடன் சில விஷயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காகவும் தாம் சென்றிருந்த்தாக சிறீதரன் தெரிவித்தார்.
இராணுவ முகாம்கள் இருக்கும் பகுதிகளுக்கு தாங்கள் செல்லவில்லை என்றும் அவர் கூறினார்.
கைது செய்யப்பட்டுள்ள தனது நண்பர் இதற்கு முன்பும் ஒரு முறை இலங்கைக்கு வந்து சென்றுள்ளார் எனவும் சிறீதரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
»»  (மேலும்)

12/25/2013

| |

தமிழ் தேசிய கூட்டமைப்பா? கூத்தமைப்பா?

003a
»»  (மேலும்)

| |

தெற்கு சூடான்: போலீஸ் நிலையத்துக்குள் 200 பொதுமக்கள் சுட்டுக்கொலை

தெற்கு சூடானில் மோசமான கொடூரங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன.
ஒருவாரத்துக்கு முன்னர் அங்கு வெடித்த இன வன்முறைகளில் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.இருநூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்றை நேரில் பார்த்த மூன்று சாட்சிகள் தன்னிடம் பேசியுள்ளதாக ஜூபாவில் உள்ள செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் நியூர் இனக்குழுவைச் சேர்ந்தவர்கள்.
அனைவரையும் போலீஸ் நிலையம் ஒன்றுக்குள் தள்ளிவிட்டு, அவர்களை அரசபடையினர் சுட்டுக்கொன்றதாக நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.
அண்டையிலுள்ள கிராமங்களுக்குள் நுழைந்த ஆயுததாரிகள், வீடு வீடாகச் சென்று டின்கா இனக்குழுவைச் சேராதவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடித் தேடி சுட்டுக்கொன்றதாக இன்னொருவர் கூறினார்.
இதுதவிர, நாடெங்கிலும் உள்ள ஐநா அலுவலக வளாகங்களில் சுமார் 45 ஆயிரம் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
தெற்கு சூடானில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர்.
அதிகாரபூர்வமான கணக்குகளின்படி, 500 பேர் வரை உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், உயிரிழப்பு எண்ணிக்கை அதனைவிட அதிகம் என்று தொண்டுநிறுவனங்கள் கூறுகின்றன.
»»  (மேலும்)

12/24/2013

| |

முன்னாள் முதல்வரின் கிறிஸ்மஸ் தின வாழ்த்துச் செய்தி

இன, மத பேதங்கள் மறந்து எல்லோர்மீதும் அன்பும் இரக்கமும் கொண்டு அனைவரும் ஒற்றுமையாக வாழ வாழ்த்துகின்றேன்'  முன்னாள் முதல்வரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகருமான சிவனேசதுரை – சந்திரகாந்தன் அவர்கள் தமது கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.
இயேசுநாதன் அவதரித்த தினமாக உலகெங்கும் பரந்துவாழும் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் இயேசுவால் போதிக்கப்பட்ட கருணை, அன்பு, இரக்கம் போன்ற நற்குணங்களுடன் அனைவரும் வேறுபாடுகளைக் கழைந்து ஒற்றுமையுடன் வாழ முயற்சிக்கவேண்டும்.
எமது நாட்டில் , எமது பிரதேசத்தில் இல்லாத வளமில்லை என்னும் அளவிற்கு வளங்கள் பரந்து கிடக்கின்றன. அதனை பயன்படுத்தி நாம் வாழ்க்கையில் முன்னேறுவதற்குரிய வழிவகைகளை ஆராயவேண்டும். அப்போதுதான் வறுமை என்னும் கொடுமை அழிவடைந்து போகும். அந்த நிலை ஏற்படுகின்றபோது அனைவருக்கும் வாழ்வில் நிலையான மகிழ்ச்சி ஏற்படும்.
எனவே இந்த இனிய நன்னாளில் எமக்குள் இருக்கின்ற வேறுபாடுகளை களைந்து ஒவ்வொருவரையும் தமது உறவினராக நினைத்துப் பார்க்கின்ற அளவிற்கு எமது மனங்களில் எண்ணங்கள் வேரூன்றுகின்றபோதூன் தற்போது உருவாகியிருக்கும் சமாதானமான நிலை நிலைத்து அழியாத நிலையில் இருக்கும் என்றுகூறி, கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டங்களில் இணைந்திருக்கும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை பெருமையுடன் கூறிக்கொள்கின்றேன்.
சிவனேசதுரை – சந்திரகாந்தன்
;(தலைவர்- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்  கட்சி , முன்னாள் முதல்வரும், மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும் )
»»  (மேலும்)

| |

தமிழ்தேசிய கூட்டமைப்பின் கட்டுபாட்டிலுள்ள மற்றுமொரு பிரதேசசபையின் வரவு செலவு திட்டம் தோல்வி

 நாவிதன்வெளிப் பிரதேச சபையின் 2014 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மேலதிக ஒரு வாக்கால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற வரவு செலவு திட்ட வாக்களிப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உபதவிசாளர் அ.ஆனந்தன் அவர்கள் எதிர்த்து வாக்களித்ததன் காரணமாக மேற்படி வரவு-செலவு திட்டம் தேல்வியடைந்துள்ளது.
நாவிதன்வெளிப் பிரதேச சபையின் 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று காலை 9 மணிக்கு தவிசாளர் சி.குணரெட்ணம் தலைமையில் இடம்பெற்றது.
இப்பிரதேச சபையில் மொத்தம் 7 உறுப்பினர்களில், 4 பேர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் ஏனையவர்கள் முஸ்லிம் கங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினையும் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் தமிழ்த் சேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டுத் தெரிவாகி உப தவிசாளராக உள்ள அ.ஆனந்தனும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்ததன் காரணமாக மேற்படி வரவுசெலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

12/23/2013

| |

உயர்தர பரீட்சையில் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் வாழைச்சேனையை சேர்ந்த மாணவன் கணித துறையில் சாதனை

க.பொ.த.உயர்தர பரீட்சையில் ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவனான வாழைச்சேனையை சேர்ந்த கோபிதாசன் கோபிஷாந்த் கணித பிரிவில் 3 B சித்திகளை பெற் று பாடசாலை மட்டத்தில் முதலாம் இடத்தையும் மாவட்டத்தில் 16 ம் இடத்தினையும் பெற்று பொறியியல் பீடத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்
இவர் தரம் 1 முதல் கா.பொ.த சாதாரணம் வரை வாழைச்சேனை இந்து கல்லூரியில் கல்வி பயின்றவர் சாதாரண தரப்பரீட்சையில் 9 A சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தார். உயர்தரம் கற்பதற்காக ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது
»»  (மேலும்)

| |

கணிதப் பிரிவில் மட்டு மாவட்டத்தில் 1ஆம், 2ஆம் இடத்தை பெற்று சாதனை படைத்த மாணவர்கள்

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் மட்டு மாவட்டத்தில் 1ஆம், 2ஆம் இடத்தை பெற்று சாதனை படைத்த காத்தான்குடி பிரதேச முஸ்லிம் மாணவர்கள்.
இலங்கை கல்வி திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தற்போது வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, கணிதப் பிரிவில் 3ஏ சித்திகளைப் பெற்ற காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவி வெள்ளத்தம்பி ஐனுல் பஸீஹா, மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய மட்டத்தில் 19வது இடத்தையும் பெற்றுள்ளதோடு, கணிதப் பிரிவில் 3ஏ சித்திகளைப் பெற்ற மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் றஹ்மதுல்லாஹ் ஜின்தா நவாஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் இடத்தையும், தேசிய மட்டத்தில் 52வது இடத்தையும் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், காத்தான்குடிக்கும், பாடசாலைக்கும் பெருமையை தேடிக்கொடுத்துள்ளனர்.
இதில் மட்டு மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற மாணவியின் தந்தை வெள்ளத்தம்பி கல்முனையில் பாதணிகள் விற்பனை நிலையம் வைத்துள்ளதோடு, மாவட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்ற மாணவரின் தந்தை காத்தான்குடியில் இருந்து வெளியாகும் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் றஹ்மதுல்லாஹ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

12/22/2013

| |

தமிழரசுக் கட்சியினர் இப்போது மீண்டும் சாதிக் கதைகளில்... மனம் குமுறுகிறார் பருத்தித்துறைப் பிரதேச சபையின் உப தலைவர் மாணிக்கம் லோகசிங்கம்

முன்னொரு காலத்தில் வடக்கில் தலைவிரித்தாடிய சாதி வெறிக் கொள்கை பிரபாகரன் காலத்தில் ஆயுதத்திற்குப் பயந்து அறவே இல்லாமல் போயிருந்தது உண்மையே. இன்று அது மீண்டும் தலைவிரித்தாடுவதைக் காண முடிகிறது. குறிப்பாக தமிழரசுக் கட்சியிலிருக்கும் தலைவர்கள் இந்தப் பாகுபாட்டை வெளிப்படையாகவே காட்டி வருகின்றனர். எனக்கும் அந்தக் கொடுமை நடந்தது என்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியிலுள்ள பருத்தித்துறைப் பிரதேச சபையின் உப தலைவர் மாணிக்கம் லோகசிங்கம் அவர்கள்.
பொருளாதாரத்துறையில் பட்டம் பெற்ற பிரபல ஆசிரியரான திரு. லோகசிங்கம் தனது மனக்குமுறலை  கொட்டித் தீர்த்தபோது பெற்றுக் கொண்ட விடயங்களை இங்கே தருகின்றோம்.
எதனை வைத்து இந்தச் சாதிப் பிரச்சினையை சந்திக்கு இழுக்கிaர்கள்?
நான் இழுக்கவில்லை. தமிழரசுக் கட்சியினர்தான் என்னை பிரச்சினைக்கு இழுத்துள்ளார்கள். நான் நேரடியாகப் பாதிக்கப்பட்டவன். மனம் வெதும்பி இருக்கிறேன். அடிபட்ட வனுக்குத்தான் அதன் வலி தெரியும். எனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவது தவறா?
தவறில்லை, ஆனால் இந்தக் காலத்தில் சாதிப் பாகுபாடு, சாதி பார்த்தல் என்பதை நம்ப முடியாமலுள்ளது?
நான் சொன்னால் எவருமே நம்பமாட்டார்கள். ஆனால் என்னிடம் ஆதாரங்கள் பல உள்ளது. அத்துடன் என்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் தமிழரசுக் கட்சியிலுள்ள பல மேட்டுக் குடியினர் தெரிவிப்பது போன்று தம்மை தீண்டத்தகாதவர்கள் என வெளியே சொல்ல விரும்புவதில்லை. அதனால்தான் பல விடயங்கள் கிடப்பிலேயே உள்ளன.
எதனை வைத்து நீங்கள் தீண்டத்தகாதவர் என்பதால் பழிவாங்கப்பட்டதாகக் கூறுகிaர்கள்?
எனக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடச் சந் தர்ப்பம் வழங்கப்ப டவில்லை. காரணம் கேட்டபோது எனக்கு மறைமுகமாக சாதிக்கதை கூறப்பட்டது. அதனை விளங்கிக் கொள்ளாத அளவிற்கு நான் ஒன்றும் படிப்பறிவில்லாதவன் அல்ல. நான் ஒரு பொருளாதாரப் பட்டதாரி. வடக்கின் பொருளாதாரத்தை கைவிரல் நுனியில் வைத்துள்ளேன்.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததுதான் உங்களது இப்பிரச்சினைக்குக் காரணமா?
இல்லை. அண்மைக்காலமாக வடக்கில் தமிழரசுக் கட்சியினர் தமது மேட்டுக்குடித்தனத்தைக் காட்டி வருகின்றனர். அவர்கள் எம்மைப் போன்றவர்களைப் புறந்தள்ளி தமது செயற்பா டுகளை மேற்கொள்கின்றனர். இது தவறு என்பதை உணர வைப்பதே எனது நோக்கம்.
இந்நிலை எப்போதிருந்து ஆரம்பித்தது?
புலிகளின் மறைவிற்குப் பின்னர்தான் இது வெளித்தோன்ற ஆரம்பித்தது. அதுவரை இவர்கள் புலிகளுக்குப் பயந்து அடக்கி வைத்திருந்தார்கள், அடங்கியும் இருந்தார்கள்.
பிரபாகரனும் நீங்கள் கூறும் தீண்டப்படாத சமூகத்திலிருந்து வந்தவர் என்றே பலராலும் கூறப்படுகிறது. ஆனால் அப்பிரபாகரன் கூறியவற்றை இத்தமிழரசுக் கட்சியின் மேட்டுக் குடியினர் கை கட்டி, வாய்மூடி நின்று கேட்டுத்தானே வந்துள்ளனர்?
அது பிரபாகரனின் துப்பாக்கிக்குப் பயந்து கேட்டது. இப்போதுதான் பிரபாகரன் இல்லையே. அதனால் இவர்கள் பழைய குருடி கதவைத் திறவடி என்பதாக நடந்து கொள்கிறார்கள். முன்னொரு காலத்தில் சில தீண்டத்தகாதவர்களை கோவில்களுக்குள் செல்லக் கூட இவர்களைப் போன்றவர்கள் அனுமதிப்பதில்லை. ஆனால் இப்போது எமது அதே ஆட்கள்தான் சுவாமியைக்கூடக் காவுகிறார்கள். இதனை மாற்றி பழைய நிலைக்குச் செல்ல சிலர் முயற்சிக்கிறார்கள். அதனையே தமிழரசுக் கட்சியும் செய்ய முனைகிறது.
மாகாண சபையில் போட்டியிட வாய்ப்புத் தரப்படவில்லையே தவிர நீங்கள் அதே தமிழரசுக் கட்சியில் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டு இப்போது ஒரு பிரதேச சபையின் உப தலைவராக இருக்கிaர்களே? அன்று வாய்ப்புத் தந்தபோது தமிழரசுக் கட்சி சாதி பார்க்கவில்லையே?
ஐயோ, அது ஒரு பெரிய கதை. நான் தமிழரசுக் கட்சி சார்பாக பிரதேச சபைத் தேர்தலில் நிறுத்தப்பட வேண்டிய முக்கியமான ஒருவராக இருந்தேன். ஆனால் அவர்கள் என்னை வழமைபோல் புறந்தள்ளிவிட்டார்கள். அதன் பின்னர் தம்பி சுரேஸ் பிரேமச்சந்திரன்தான் எனது ஊரில் எனக்கிருந்த செல்வாக்கை அறிந்து தமிழ்க் கூட்டமைப்பில் தனது கட்சி சார்பாக நிறுத்தினார், நான் வெற்றியும் பெற்றேன்.
இம்முறையும் மாகாண சபைத் தேர்தலில் அவ்வழியையே நாடியிருக்கலாமே?
நாடினோம், நானும் சுரேஸ் எம்.பியும் ஒற்றைக் காலில் நின்றோம். ஆனால் கடந்த முறைக்குப் பழி வாங்கவும், எங்கே தீண்டத்தகாத நான் வெற்றிபெற்று சரிக்குச் சமனாக வந்துவிடுவேனோ என்ற பயத்திலும் என்னைக் கழற்றி விட்டுவிட்டார்கள். நான் மட்டும் இத்தேர்தலில் போட்டியிட்டிருந்தால் இன்று நான்தான் வடக்கின் விவசாய, பொருளாதாரத்துறை அமைச்சராக இருந்திருப்பேன். பெருமைக்காகக் கூறவில்லை. உண்மை இது. மக்களுக்கு இது நன்கு தெரியும்.
ஆரம்பத்திலேயே இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப் பட்டவர்களுடன் கலந்து பேசியிருக்கலாமே?
யாருடன் பேசச் சொல்லுகிaர்கள்? அப்படியிருந்தும் பேசினேன். அவமானம்தான் பதிலாகக் கிடைத்தது. அவர்கள் திட்டமிட்டுச் செய்தார்கள். எனக்காகப் பேசச் சென்ற சுரேஸ் எம்.பியையே உதாசீனம் செய்துள்ளார்கள். இதனை விடவும் அவர்களது கால்களில் என்னை விழச் சொல்கிaர்களா? அது எனக்குத் தேவையில்லை, ஒருபோதும் செய்யவும் மாட்டேன்.
முதலமைச்சர் வேட்பாளராக இருந்த விக்னேஸ்வரன் அவர்களிடம் முறையிட்டி ருக்கலாமே?
அவர் பாவம். அவருக்கு எதுவுமே தெரியாது. நல்லவர், படித்தவர், பண்பானவர். தெரியாமல் தமிழரசுக் கட்சியின் அரசியல் சாக்கடைக்குள் விழுந்துவிட்டார். அவருக்கு இந்தச் சாதிக் கதைகள் புரிய நியாயமில்லை. அவர் கொழும்பில் வாழ்பவர் அவரது சம்பந்திமார் கெளரவமான பெரும்பான்மையின சமூகத்தினர். அவரிடம் போய் சாதி பற்றி எப்படிக் கதைப்பது. அவருக்குத் தெரிந்தது ஆண் சாதி, பெண் சாதியாகத்தான் இருக்கும்.
சாதிக்கு மதிப்பளிக்காவிடினும் உங்களது படிப்பிற்காக எனினும் தமிழரசுக் கட்சியினர் மதிப்பளித்திருக்கலாம் அல்லவா?
நிச்சயமாக. நான் ஒரு பட்டதாரி. பொருளாதாரத் துறையில் பல ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறேன். என்னிடம் கல்வி கற்ற பல மாணவர்கள் இன்று புகழ்பெற்ற கணக்காளர்களாகவும், பொருளாதார நிபுணர்களாகவும் விளங்குகின்றனர். வடக்கின் பொருளாதாரம் எப்படி அமைய வேண்டும் என்பதை என்னை விடவும் அறிந்தவர்கள் வடக்கில் இருக்க முடியாது. ஆனால் தமிழரசுக் கட்சித் தலைவர்கள் இவற்றைப் பார்க்கவில்லை. அவர்கள் சாதியை மட்டுமே பார்த்தார்கள்.
நீங்கள் பருத்தித்துறை பிரதேச சபையின் உப தலைவர். சபையில் உங்களது செயற்பாடுகள் எப்படி உள்ளது? உங்களது கட்சியைச் சேர்ந்த சக உறுப்பினர்களது ஆதரவு எப்படி?
ஐயோ, அதை ஏன் கேட்பான். அங் குள்ள மேட்டுக் குடியினர் என்னைப் படாத பாடு படுத்தி வருகின்றனர். தலைவர் இல்லாத தருணத்தில் நான் தலைமை வகிக்க நேரிட்டால் தலைமை தாங்கும் கதிரையை தூக்கிச் சென்று சபைக்கு வெளியே வைத்துவிட்டு வருவார்கள். கூச்சல் குழப்பம் விளை விப்பார்கள். எனக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி உறுப்பினர்களே ஆதரவு வழங்குவதுண்டு.
கதிரையை கொண்டு சென்று வெளியே வைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அமைதியாகச் சென்று விடுவீர்களா?
இல்லை, நான் விட மாட்டேன், நானே சென்று அதனைத் தூக்கி வந்து சபையை நடத்துவேன். என்னை எவரும் நேரடி யாக எதுவுமே செய்துவிட முடியாது. எனக்கு மக்கள் பலம் உள்ளது. அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக நின்றாலும் இலகுவாக வெற்றி பெறும் அளவிற்கு எனக்கு செல்வாக்கு உள்ளது. அதுதான் தமிழரசுக் கட்சியினரின் பயம்.
இப்போது தங்கள் மீது கட்சி ஒழுக்காற்று விசாரணை நடத்தவுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளாரே. இதற்கு முகங்கொடுக்க நீங்கள் தயாரா?
என்மீது ஒழுக்காற்று விசாரணையா? எதற்கு? தமிழரசுக் கட்சியினர் எனக்குச் செய்த துரோகத்திற்கு அவர்கள் தமக்குத் தாமே விசாரணை நடத்த வேண்டும். எனினும் எனது நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கி திரு. மாவை சேனாதிரா ஜாவிற்கு நான் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன். அக்கடிதத்தை அவர்கள் முழுமையாக வாசித்தால் என்மீது தவறில்லை என்பதைப் புரிந்து கொள்வார்கள்.
வடக்கில் மாகாண ஆட்சியைக் கைப்பற்றியதன் பின்னர் தமிழ்க் கூட்டமைப்பின் செயற்பாடு எப்படி உள்ளது?
மிகவும் சிரமமாக உள்ளது. கட்சிக்குள் உட்கட்சிப் பூசல்கள் உச்சக்கட்டத்தில் உள்ளது. பதவிப் போட்டி தலை விரித்தாடுகிறது. அவர்கள் எவரிடமும் நிர்வாகத் திறன் துளியளவும் இல்லை. தெரிந்தவர்களிடம் கேட்டு நடக்கவும் அவர்களது வரட்டுக் கெளரவம் விடுவதாக இல்லை. போகிற போக்கில் தம்மால் முடியாது எனக் கூறி மீண்டும் அரசாங்கத்திடம் மாகாண சபையை அவர்கள் கையளிப்பர். இது விரைவில் நடக்கும்.
நீங்கள் தெரிவிக்கும் இந்த விடயங்கள் எதுவுமே வெளியே மக்களுக்குத் தெரிவதில்லை. குறிப்பாக ஊடகங்கள் எதிலுமே இவை வெளிவருவதில்லை. காரணம் என்ன?
உள்ளூர் ஊடகங்கள் பலவும் அவர்களது கட்டுப்பாட்டிலேயே உள்ளன. உண்மை தெரிந்திருந்தாலும் உரைப்பதற்கு இடமில்லை. அதனால் இவர்கள் பாடு கொண்டாட்டமாக உள்ளது. இது நீண்ட காலத்திற்கு நிலைக்காது.
இறுதியாக நீங்கள் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வாக கூற முனைவது என்ன?
தமிழரசுக் கட்சி சாதி பார்ப்பதை நிறுத்த வேண்டும். தமிழரில் சிறுபான்மைத் தமிழன், தீண்டத்தகாத தமிழன், ஆலயத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்ட தமிழன் என்ற பேதம் இருக்கக் கூடாது. என்னைப் போன்று சாதியின் பெயரால் பாதிக்கப்பட்டவர்களை இனம் கண்டு உரிய கெளரவமளிக்க வேண்டும். இனப்பிரச்சினையை இனியும் இழுத்தடிக்காது அரசாங்கத்துடன் பேசி ஒரு நல்ல தீர்வினைக் காண வேண்டும்.
»»  (மேலும்)

12/21/2013

| |

வேலூர், நீலகண்டராயன் பேட்டை சேரியில் சாதிவெறியர்கள் தாக்குதல்.

Photo de Paruthikulam Mathi Aadhavan.இன்று 18-12-2013 சாதிவெறிப்பிடித்த பா.ம.க வை சார்ந்த வன்னியர்களின் தாக்குதலுக்குள்ளான வேலூர் மாவட்டம், நீலகண்டராயன்பேட்டை, காட்டரம்பாக்கம், அரியூர், சோகனூர், பாராஞ்சி, நதிவெடுதாங்கல் ஆகிய சேரிகளை பார்வையிட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி ஒன்றிய, நகர மேலிடப் பொறுப்பாளர் பாசறை செல்வராசு, அண்ணன் விடியல் இரா.வெற்றித்தமிழன், காஞ்சி தென்றல் கலைக்குழுவைச் சார்ந்த தோழர் சந்தோசு Thendral Kalaikuzhu ஆகியோருடன் நான் சார்ந்திருக்கின்ற ஊடக மையம் Kanchi Vck சார்பில் நானும் சென்றிருந்தேன். தோழர் ஜோசுவா அவர்களின் உதவியினால் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தமிழ்த்தேசிய விடுதலைப் பேரவையின் வேலூர் மாவட்ட துணை செயலாளர் சரவணன், ஒன்றிய நிர்வாகி வேலாயுதம் ஆகிய தோழர்களுடன் சாதிவெறியர்களின் தாக்குதலுக்குள்ளான சேரிகளுக்கு சென்றிருந்தோம். நாங்கள் பார்வையிட்டதில்... கடந்த 5 நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டையிலிருந்து சோளிங்கர் - அரக்கோணம் செல்லும் வழியில் உள்ள நீலகண்டராயன்பேட்டை, காட்டரம்பாக்கம், அரியூர், சோகனூர், பாராஞ்சி, நதிவெடுதாங்கல் ஆகிய சேரிகளில் பா.ம.க.வை சார்ந்த சாதிவெறிப்பிடித்த வன்னியர்கள் 50 பேர் கொண்ட கும்பலாக முகத்தில் முகமூடி அணிந்துகொண்டு சேரிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். சேரியில் உள்ள தலித் மக்கள் வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள், தொலைக்காட்சிப் பெட்டி, இருச்சக்கர வாகனங்கள், சேரியில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டிகள், தெரு விளக்குகள், ஆகியவற்றை அடித்து நொறுக்கி சேரிப் பெண்களையும், குழந்தைகளையும், ஆண்களையும் கட்டையில் ஆணிகளால் சுற்றப்பட்ட ஆயுதங்களை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். முதலில் நீலகண்டராயன் பேட்டைசேரி.. இரண்டு பெண் காவலர்கள் மட்டுமே பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருந்தனர். சுமார் ௧௦ வீடுகளே இருக்கும் பகுதி இது. அனைத்து வீடுகளும் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள். இந்த வீடுகளின் கதவு, ஜன்னல், தொலைக்காட்சிப் பெட்டி, மீட்டர் பாக்ஸ், குடிநீர் குழாய், இருச்சக்கர வாகனங்கள் ஆகியவற்றை அடித்து சேதப்படுத்தி உள்ளனர். அந்தப் பகுதியைச் சார்ந்த லோகம்மாள் என்பவரிடம் விசாரித்தோம்.. என்னமா நடந்தது? உங்களைத் தாக்க என்ன காரணம்? என்று கேட்டோம். லோகம்மாள் கூறியது, ஒரு இருச்சக்கர வாகனத்தில் இருவர் பயணம் செய்து வந்தனராம். அவர்கள் போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. தடுமாறி கீழே விழுந்திருக்கிறார்கள். விழுந்தவர்களை தூக்கி எழுப்பி குடிக்க தண்ணீர் கொடுத்திருக்கிறார்கள். விழுந்ததில் ஒருவர் ஏய் சேரிக்காரனே நீ கொடுக்கின்ற தண்ணீர் வேண்டாம் எனக்கு என்று சொல்லியிருக்கிறார். இதனால் ஏதோ வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. விழுந்தவர்களும் எழுந்து சென்று விட்டார்கள். இந்த சம்பவம் நடந்தது 16-12-2013 மதியம். அன்று இரவு சுமார் 7.30 மணி இருக்குமாம். சேரியின் பின் பகுதியில் இருந்து 50 பேர் கொண்ட கும்பல் முகத்தில் முகமூடி அணிந்துகொண்டு சேரி வீடுகளை தாக்கியுள்ளனர். வயதான மூதாட்டி ஒருவரை காலில் தாக்கியுள்ளனர். பற தேவடியா பசங்களா வெளிய வாங்கடா என்று அழைத்து கையில் வைத்திருந்த ஆணிகளால் சுற்றப்பட்ட கட்டையில் சேரி ஆண்களை பலமாக தாக்கியுள்ளனர். தாக்குதலுக்குள்ளானவர்கள் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனராம். இவரின் எதிர் வீட்டில் அனைவரும் ஊருக்கு சென்றிருந்தார்களாம். வீடு பூட்டப்பட்டு கிடந்ததாம். பூட்டப்பட்ட வீட்டின் கதவை கடப்பாரையினைக் கொண்டு தாக்கி சேதப்படுத்தினார்களாம். மற்றொரு அம்மாவிடம் விசாரித்தோம்.. இவர் வீட்டின் தொலைக்காட்சிப்பெட்டி, இருச்சக்கர வாகனம் ஆகியவற்றை அடித்து நொறுக்கியதுடன் பறத் தேவடியாலே உனக்கு எதுக்குடி ஜாக்கெட் என்று கூறி அந்தம்மாவின் ஜாக்கெட்டை கிழித்துள்ளனர். என் கைய கத்தியால அறுத்தான் ஒருத்தன். எங்க வீட்டுக்காரர் வந்தவுடன் என்னை விட்டுட்டு அவர புடிச்சி அடிச்சானுங்க. கிழிந்த ஜாக்கெட்டுடன் தான் காலை வரை இருந்தேன். காவல்துறையினர் தான் துணியை மாற்றிக்கொள்ளுங்கள். குளித்துவிட்டு வேற ஆடை போட்டுக்கொள்ளுங்கள். அதிகாரிகள் வந்து விசாரிப்பார்கள் என்றனராம். ஏதுமறியாத அந்தம்மா அவர்கள் சொன்னதைக் கேட்டு மாற்று உடை அணிந்து கொண்டிருந்தார். கிழிந்த அந்த ஜாக்கெட்டை எங்களிடம் காண்பித்து கண்ணீர் மல்க அழுது புலம்பினார். எங்களைப் பார்க்க இன்னும் எந்த அதிகாரிகளும் வரவில்லை. எல்லாம் இந்த ஊராட்சி மன்றத் தலைவர் சிதம்பரம் என்பவரின் தூண்டுதலில் தான் நடந்ததுள்ளதாக பயத்தில் கூறினர். இவர் பா.ம.க. வை சார்ந்தவராம். இந்த சாதிவெறிப் பிடித்த மிருகங்களின் அட்டூழியம் எப்போது அடங்கும். நீலகண்டராயன் பேட்டை சேரி மக்களின் கண்களில் இன்னும் பயம் குடிகொண்டிருக்கிண்றது. இதுவரை எந்த ஊடகமும் இந்த செய்தியினை வெளியிடவில்லை. ஏன் வெளியிட மறுக்கின்றன ஊடகங்கள்? 
»»  (மேலும்)

| |

பாவம் விக்கி உண்மையை பேசுகிறார்

 வடமாகாண உள்ளூராட்சி மன்றங்கள் மன நிறைவு தருவதாக இல்லை – விக்னேஸ்வரன்வடமாகாண உள்ளூராட்சி மன்றங்களின் இன்றைய நிலை மன நிறைவு தருவதாக இல்லை என மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த  வட மாகாண  உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கான விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே முதலமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
யாழ். பொதுநூலக  கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
அங்கு கருத்து வெளியிட்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்து -
“வடமாகாண உள்ளூராட்சி மன்றங்களின் இன்றைய நிலை மன நிறைவு தருவதாக அமையவில்லை. முதன் முதலாக தொடங்கப்பட்ட வட மாகாண சபை என்பதால், பல பூர்வாங்க விடயங்களில் என் கவனம் உள் நுழைந்து இருந்ததால் முழுமையான கவனத்தை  உள்ளூராட்சி மன்றங்களின் மீது செலுத்த முடியவில்லை. உள்ளூராட்சி உறுப்பினர்களின் சுயநலம் கட்டுக்கடங்காமல் செல்வதை நான் அவதானித்துள்ளேன்”
»»  (மேலும்)

12/20/2013

| |

வறுமையைத் தாண்டி மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவி(மட்டு செய்தியாளர்)

இன்று வெளியான க.பொ.த உயர்தர பெறுபேறுகளின்படி வாழைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த மாணவியான பற்குணராஜா தயானி விஞ்ஞானப்பிரிவில் 1A, 2B சித்திகளுடன் மட்டு மாவட்டத்தில் 21 ஆவது இடத்தினைப்பெற்று மருத்துவ துறைக்கு தெரிவாகியுள்ளார்.

மிகுந்த கஷ்டத்தின் மத்தியில் வறுமையோடு போராடி சாதனை படைத்த இவர் பேத்தாளை விபுலானந்தா வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் 8A, C சித்திகளுடன் தெரிவாகி மட்டு வின்சென்ட் மகளிர் கல்லூரியில் உயர்தரம் பயின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=bLnZWaXu7Kw
»»  (மேலும்)

| |

கடற்கரை சமூகங்களுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் - சாகித்ய அகாடமி விருது பெற்ற ஜோ டி குருஸ் பேட்டி

கவுரவமிக்க சாகித்ய அகாடமி விருதை கொற்கை நாவல் வென்றுள்ள சூழலில் தி இந்து நாளேட்டுக்காக ஜோ டி குருஸ் அளித்த பிரத்தியேகப் பேட்டி:
  • இந்த நாவலை எழுத 5 ஆண்டு காலத்தை செலவிட்டுள்ளீர்கள். இந்த பெரும் Jody groosஉழைப்புக்கு இவ்வளவு உயர்ந்த தேசிய விருதை எதிர்பார்த்தீர்களா?
நிச்சயமாக இல்லை. ஆனால் எனது பணியை என் சமூகத்தின் தம்பிமார்கள் ஒருநாள் புரிந்து கொள்வார்கள் என எதிர்பார்த்தேன். தமிழ்ச் சமூகம் ஒரு நாள் என்னை அங்கீகரிக்கும் என நம்பினேன். ஆனால் அது எப்படிப்பட்ட அங்கீகாரம் என்பதை என்னால் ஊகிக்க இயலவில்லை.
  • இன்று மிக உயர்ந்த விருது கிடைத்துள்ளதை எப்படி உணர்கிறீர்கள்?
கடற்கரை சமூகங்களுக்கு கிடைத்த முதல் அங்கீகாரமாகக் கருதுகிறேன். அதுவும் தேசிய அளவிலான அங்கீகாரம் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதே நேரத்தில் மிரட்சியாகவும் உள்ளது.
  • பெரும் கொண்டாட்டம் தரும் விருது என இதனைக் கருதலாமா?
நிச்சயமாக இல்லை. கொண்டாட இதில் எதுவும் இல்லை. குறிப்பாக கொண்டாடுவதற்கான மனநிலை என்னிடம் இல்லை. மாறாக நான் பிறந்த சமூகத்தின் மீதான எனது பொறுப்புகளையும் கடமை களையும் அதிகப்படுத்தியுள்ளதாக கருது கிறேன். எனக்கு முன்னால் இறைந்து கிடக்கும் மிகப்பெரும் களப்பணியை நினைவூட்டுவதாக எண்ணுகிறேன்.
  • நீங்கள் எப்படி எழுத்துலகுக்கு வந்தீர்கள்?
பொதுவாகவே அனுபவங்களையும், தகவல் களையும் சேகரித்து சிறு சிறு குறிப்புகளாக பதிவு செய்யும் வழக்கம் என்னிடம் உண்டு. ஆனால் அதனை ஒரு இலக்கியமாக பதிவு செய்வேன் என்று ஒரு நாளும் எண்ணியதில்லை. தமிழினி பதிப்பகத்தின் வசந்தகுமாருடன் எனது கடல் சார் வாழ்க்கையின் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட காலத்தில் அவர்தான் என்னை எழுதுங்களேன் என்று முதலில் கூறினார். அதனைத் தொடர்ந்து நான் எழுதிய நாவல்தான் 'ஆழி சூழ் உலகு' என்ற பெயரில் அவர் பதிப்பகத்திலிருந்து வெளிவந்தது. ஆக, வசந்தகுமாருடன் நான் நிகழ்த்திய உரையாடல்களின் நீட்சி தான் எனது எழுத்து.
  • மிகப்பெரும் வணிக நிறுவன த்தில் தலைமைப் பொறுப்பில் உள்ள உங்களால் எப்படி நேரம் ஒதுக்கி எழுத முடிகிறது?
நான் அலுவலகத்தில் எதுவும் எழுதுவதில்லை. வீட்டுக்கு திரும்பிய பிறகுதான் எழுதுவேன். நான் மிகவும் தனிமை விரும்பி. இதனை புரிந்து கொண்ட மையால் வீட்டில் நான் தனிமையில் இருக்கும் நேரத்தில் என் மனைவி அதில் குறுக்கீடு செய்ய மாட்டார். அவரது இந்த ஒத்துழைப்புதான் நான் படிப்பதற்கும், எழுதுவதற்கும் பெரும் உதவியாக உள்ளது.
  • உங்களைப் பற்றிய உங்கள் மனைவியின் ஆசை...?
"ஏன் இப்படியே இருக்கீங்க, ஒரு நாளைக்காவது சிரிங்களேன்" என்று எனது மனைவி அடிக்கடி கூறுவார். நான் சிரிக்க வேண்டும், அதுவும் மனம் விட்டு சிரிக்க வேண்டும் என்பது எனது மனைவியின் ஆசை. ஆனால் அப்படி சிரிப்பதற்கான சூழல் இதுவரை எனக்கு அமைய வில்லை.
  • உங்களுடைய அடுத்த நாவல் பற்றி.?
முதல் நாவல் கட்டுமரத்தை மையப்படுத்தியது. இரண்டாவது நாவல் பாய்மரக் கப்பலோடு தொடர்புடையது. அடுத்து நான் பெரிய கப்பலில் பயணிக்க விரும்பு கிறேன். குறிப்பாக என் தொழில் சார்ந்த வணிகக் கப்பல்கள் மற்றும் அவைகளுடன் தொடர்புடைய மனிதர்களைப் பற்றியதாக அது இருக்கும்.
»»  (மேலும்)