12/17/2013

| |

கிழக்கு மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய பட்டதாரி ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கான விருப்பார்வ நேர்முக பரீட்சை நாளை, நாளை மறுதினம் மற்றும் 19, 23 ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளதாக கிழக்கு மாகாண பொதுசேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அம்பாறையில் நாளையும், நாளை மறுதினம் கல்முனையிலும், 19ஆம் திகதி மட்டக்களப்பிலும், 23ஆம் திகதி திருகோணமலையிலும் நேர்முக பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற கணிதம், விஞ்ஞானம், தகவல் தொழிநுட்பம் மற்றும் உடற்கல்வி பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்கான நேர்முகப் பரீட்சையே இடம்பெறவுள்ளது.