12/18/2013

| |

மட்டக்களப்பில் பௌர்ணமி விழா

மட்டக்களப்பில் 3வது (16.12.2013) மாலை பௌர்ணமி விழா
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மாவட்ட உதவி செயலாளருமான நவஞ்ரசன் தலைமையில் இந்த விழா நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் பிரதி மாதமும் பௌர்ணமியன்று நடத்தி வருகின்ற இந்த பௌர்னமி கலை விழாவின் 3வது மாத பௌர்னமி விழா நடைபெற்றது.
இதில் மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் சுசுதர்சினி மட்டக்களப்பு கலாசார உத்தியோகத்தர் மலர்செல்வன் கலந்துகொண்டனர்.
இந்த பௌர்ணமி கலைவிழாவில் கொக்குவில் கலைஞர்களின் கரகாட்டம் மற்றும் சூரியா பெண்கள் அமைப்பினால் நாடகம் மற்றும் பேகர்மத கலைஞர்களின் நடனம் ;என்பன நடைபெற்றன.
ஒவ்வொரு மாதமும் நடைபெறும் இந்த பௌர்னமி கலைவிழாவில் மட்டக்களப்பு பாரம்பரிய கலை நிகழ்வுகள் இடம் பெற்றுவருகின்றன