12/21/2013

| |

பாவம் விக்கி உண்மையை பேசுகிறார்

 வடமாகாண உள்ளூராட்சி மன்றங்கள் மன நிறைவு தருவதாக இல்லை – விக்னேஸ்வரன்வடமாகாண உள்ளூராட்சி மன்றங்களின் இன்றைய நிலை மன நிறைவு தருவதாக இல்லை என மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த  வட மாகாண  உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கான விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே முதலமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
யாழ். பொதுநூலக  கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
அங்கு கருத்து வெளியிட்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்து -
“வடமாகாண உள்ளூராட்சி மன்றங்களின் இன்றைய நிலை மன நிறைவு தருவதாக அமையவில்லை. முதன் முதலாக தொடங்கப்பட்ட வட மாகாண சபை என்பதால், பல பூர்வாங்க விடயங்களில் என் கவனம் உள் நுழைந்து இருந்ததால் முழுமையான கவனத்தை  உள்ளூராட்சி மன்றங்களின் மீது செலுத்த முடியவில்லை. உள்ளூராட்சி உறுப்பினர்களின் சுயநலம் கட்டுக்கடங்காமல் செல்வதை நான் அவதானித்துள்ளேன்”