12/14/2013

| |

இருதயபுரம் சமுர்த்தி வங்கிக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு இருதயபுரம் சமுர்த்தி வங்கிக் கட்டடம் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்p கிரிதரன் தலைமையில் (12.12.2013) இன்று திறந்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் குணரெட்ணம், மாவட்ட சமூர்த்தி உதவி ஒருங்கிணைப்பாளர் மனோராஜ் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர் இங்கு சமுர்த்தி திட்ட பயனாளிகள் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.