1/31/2014

| |

கிழக்கை ஒரு இளைஞன் ஆண்டு காட்டியுள்ளான்.

PhotoPhotoதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் வருடாந்த இளைஞர் அணிக் கூட்டம் 2014
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் அணி கூட்டம் கட்சித் தலைமைக் காரியாலயத்தில் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில்( 26.12.2014ம் திகதி) இடம் பெற்றது.
இதில் மட்டக்களப்பு மாவட்ட அனைத்து பிரதேச தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் அணி இளைஞர்களும் கலந்து கொண்டிருந்தனர். இங்கு உரையாற்றிய கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன கடந்த காலங்களில் இளைஞர்கள் என்றால் வேறுமனே கொடிகள் கட்டுவதற்கும் போஸ்ரர் ஒட்டுவதற்கும் மேடையமைப்பதற்கும் கட்சியின் ஏனைய வேலைகளுக்கு மாத்திரமே பயன்படுத்தி வந்தனர் நாம் அனைவரும் அறிந்த விடயம்;.
கடந்த கால நிலமையினை நாம் இன்று மாற்றியமைக் வேண்டும்; அதற்கு இளைஞர்கள் நீங்கள் முன்வர வேண்டும். நாளைய சமுதாயத்தை சிறந்த பாதையில் இட்டுச் செல்ல வேண்டிய பரிய பொறுப்பு இளைஞர்களாகிய உங்கள் கைகளில் தான் தங்கியுள்ளது எனவே கிழக்கின் இன்றைய அரசியல் நிலைமையினை கருத்தில் கொண்டு ஒன்றிணைந்து ஒரே பாதையில் சென்றால் மாத்திரமே சிறந்த பலனை அடைய முடியும் எனவும் குறிப்பிட்டார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் அவர்கள் உரையாற்றுகையில் இன்றைய இன்றைய தலைவர்கள் இளைஞர்களே இளைஞன் நினைத்தால் எதையும் மாற்ற முடியும் கடந்த 2008ம் ஆண்டு முதன் முறையாக கிழக்கை ஒரு இளைஞன் ஆண்டு காட்டியுள்ளான் இதை விட சிறந்த உதாரணம் எதுவும் நமக்கு தேவையில்லை என்று நினைக்கின்றேன் தற்போது இருக்கின்ற இளைஞர்களை ஒரு தலைமையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற ஒரே நேக்கத்திற்காக இன்று நாம் கூடியுள்ளோம். எனவே இளைஞர்கள் முன்வர வேண்டும் பொறுப்புக்க கையில் எடுத்து சமுக சிந்தனையுடன் அரசியல் பங்குதாரராக வேண்டும் கடந்தகால கசப்பான அனுபவங்களை தட்டிவிட்டு கிழக்கின் விடிவிற்காக ஒன்றிணைவோம் என்று குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் பிரதித் தலைவர் க.யோகவேள் கட்சியின் பொருளாளர் ஆ.தேவராஜ் தேசிய அமைப்பாளர் ப.தவேந்திரராஜா உதவிச் செயலாளர் ஜெ.ஜெயராஜ் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.
 
»»  (மேலும்)

| |

யாழ்ப்பாணத்தில் தண்ணி வசதியில்லை, வடமாகாண சபையை மாங்குளத்தில் வைத்துக்கொள்வோம் -முதல்வர் விக்கி

(முதல்வரின் பேச்சை கவனியுங்கள் வன்னி மக்களின் வசதி கருதி வட மாகாண சபை மாங்குளத்தில் இருப்பதுதான் பொருத்தம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சொல்லவில்லை யாழ்ப்பாணத்தில் தண்ணி வசதியில்லை அதனால்தால் இந்த முடிவு சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்களே அதுதான் இது ) 

வட மாகாண சபை மாங்குளத்தில் இருப்பதுதான் பொருத்தம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று தெரிவித்தார்.

முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட சிலாவத்தை றோமன் தமிழ் கலவன் பாடசாலையில் அவுஸ்திரேலிய நிறுவனத்தினால் புதிதாக நிருமாணிக்கப்பட்ட இருமாடி பாடசாலைக் கட்டடத் திறப்பு விழா நேற்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சரிடம் ஊடகவியளாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிடடார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"வட மாகாண சபை முல்லைத்தீவு, மாங்குளத்தில் இருப்பது தான் எமது விருப்பமாகும். வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கும் மாங்குளம்தான் மத்தியகமாக உள்ளது. என்றாலும் அந்தப் பகுதியில் நிலத்திற்கு கீழ் பாரிய கற்கள் இருப்பதால் அங்கு நீர்ப்பற்றாக்குறை காணப்படுவதாக கூறப்படுகிறது. 

மாங்குளத்தில் நீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்குமானால் வட மாகாண சபை மற்றும் அதனுடன் தொடர்புடைய திணைக்களங்களையும்  யாழப்பாணத்திலிருந்து மாங்குளத்திற்கு கொண்டு வர முடியும். கொரிய நிபுணர்கள் மாங்குளத்தில் நீர் மற்றும் கட்டட நிர்மாணங்கள் பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தமது அய்வினை பூர்த்தி செய்ததும் அது பற்றிய முழுமையான அறிக்கையை இன்னும் ஓரிரு மாதங்களில் என்னிடம் கையளிப்பார்கள்.

அவ்வாறு தென் கொரிய நிபுணர்களினால் கையளிக்கப்படும் அறிக்கையில் மாங்குளத்தில் வட மாகாண சபையை நிர்மாணிப்பதற்குரிய சாதகமான விடயங்கள் தெரிவிக்கப்பட்டால் வட மாகாண சபையை மாங்குளத்திற்கு இடமாற்ற நடவடிக்கையை மேற்கொள்வோம்.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டம் யுத்தத்தினால் கூடுதலான இழப்புக்களை சந்தித்த மாவட்டமாகும். இந்த மாவட்டத்திற்கு மாகாண அமைச்சர் ஒருவரை நியமிக்காவிட்டாலும் பிரதி தவிசாளர் பதவியை இந்த மாவட்டத்திற்கே வழங்கியுள்ளோம்.
வட மாகாண சபை ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

பாடசாலையின் அதிபர் அருட் சகோதரி  ஏ.எம்.ஜே.நீற்றாவின் தலமையில் இடம்பெற்ற நிகழ்வில் அவுஸ்ரேதிலியாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் றொபின் மூடி, யுனிசெபின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மக்கூலி, மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் என்.வேதநாயகம், வட மாகாண சபையின் பிரதி தவிசாளர் அன்றனி ஜெயனாதன், மாகாண சபை உறுப்பினர்களான வீ.கனகசுந்தரம், கு.ரவிகரன், கமலா குணசீலநாதன், மாகாண கல்வி பணிப்பாளர் வீ.செல்வராஜா, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
»»  (மேலும்)

| |

யாழில் 200 சிறிய இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன: அரச அதிபர்

'யாழ். மாவட்டத்தின் கட்டளைத்தளபதியாக உதயபெரேரா பதவி ஏற்ற பின்னர் 200 சிறிய இராணுவ முகாம்கள் யாழ்.மாவட்டத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. அத்துடன், பாதுகாப்பு படையினரின் பாவனையில் இருந்த வீடுகள் மற்றும் காணிகளும்  இராணுவத்தினரால் தற்போது கையளிக்கப்பட்டு வருகின்றன' என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் புதன்கிழமை (29) தெரிவித்தார்.

யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி உதயபெரேராவுடன் மீள்குடியேற்றம் தொடர்பில் விரைவில் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அவரது அலுவலகத்தில் ஊடகவியலாளர்கள் சிலர் புதன்கிழமை சந்தித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.
வலி. வடக்கு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களிலுள்ள 24 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் அடிப்படை வசதிகளின்றி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

அந்தவகையில், வலி. வடக்கு மக்களை மீள்குடியேற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உதயபெரேராவை வலியுறுத்தவுள்ளேன்' என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.  
»»  (மேலும்)

1/30/2014

| |

கூட்டமைப்பின் பாதையில் பிணங்களை வைத்து அரசியல் செய்ய முனைந்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முயற்சி தோல்வி

காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு குறித்த பிரேரணையொன்றை காத்தான்குடி நகரசபையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்களான எம். எச். ஏ . நசீர் மற்றும் ஏ.எல்.ஏ.எம்.சபில் நழீமி ஆகியோர் முன்வைத்தனர்.

இது தொடர்பில் காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ். எச். அஸ்பர், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாதையில் செயல்படுகிறது வெளிநாட்டு புலிகளின் தொடர்புகள் அவர்களுக்கு உண்டு.நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தடைசெய்யப்பட வேண்டும்  என்றார் 
தமது பிரதேசத்திலிருந்து காணாமல் போன முஸ்லிம்கள் தொடர்பாக மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் ஆணைக்குழுவுடன் தொடர்பு கொண்டு தேவையான நடிவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில் இவர்களால் முன் வைக்கப்பட்ட பிரேரணை அரசியல் நோக்கம் கொண்டது எனக் கருதி சபையால் நிராகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.

கூட்டமைப்பின் பாதையில் பிணங்களை வைத்து அரசியல் செய்ய முனைந்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முயற்சி பெரும்பான்மை முஸ்லிம்களால் தோற்கடிக்கப்பட்டது. 
»»  (மேலும்)

1/29/2014

| |

"லிபிய முள்ளிவாய்க்காலில்" குதறப் பட்ட கடாபியின் பெண் போராளிகள்

லங்கா, லிபியா ஆகிய இரண்டு நாடுகளிலும் நடந்த இறுதிப் போர்களின் முடிவு ஒரே மாதிரி அமைந்துள்ளது. போர்க்குற்றங்களும் ஒரே தன்மை கொண்டவையாக உள்ளன. ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகள், போர்க்குற்றங்களுக்கு சிங்களப் இராணுவம் குற்றவாளிகள் என்றால், லிபியாவில் நடந்த இனப்படுகொலை போர்க்குற்றங்களுக்கு, ஸ்ரீலங்கா அரசின் எஜமானர்களான நேட்டோ படைகள் குற்றவாளிகளாக இருந்துள்ளனர். கடாபிக்கு எதிராக போரிட்ட "கிளர்ச்சிக் குழு", உண்மையில் நேட்டோப் படைகளின் கூலிப் படையாக செயற்பட்டது.

இலங்கையில், முள்ளிவாய்க்கால் சுற்றி வளைக்கப் பட்டு, அதற்குள் அகப்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். லிபியாவில் கடாபிக்கு ஆதரவான Sirte சுற்றிவளைக்கப் பட்டு, அதற்குள் அகப்பட்ட மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். ஈழத்தின் இறுதிப் போர் ஒரு கடற்கரைப் பிரதேசமான முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்ததைப் போன்று, லிபியாவின் இறுதிப் போரும்(Battle of Sirte), ஒரு கடற்கரையோரப் பிரதேசமான சிர்ட்டில் நடந்தது.

ஈழத்தில் சரணடையவிருந்த பிரபாகரன் கொலை செய்யப்பட்ட அதே பாணியில், லிபியாவில் சரணடையவிருந்த கடாபி கொல்லப் பட்டார். ஈழத்தில் பெண் போராளிகள், ஸ்ரீலங்கா இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டு படுகொலை செய்யப் பட்டனர். ஒரு ஊடகவியலாளராக பணியாற்றிய இசைப்பிரியாவின் கொலை, போர்க்குற்ற ஆவணமாக உலகை உலுக்கியது. அதே மாதிரி, லிபியாவிலும் நடந்துள்ளது. 


கடாபியின் மெய்ப் பாதுகாவலர்களான பெண் இராணுவ வீரர்கள், நேட்டோப் படையின் கூலிப் படையினரால், கொடூரமாக படுகொலை செய்யப் பட்டனர்.கடாபி பிடிபடுவதற்கு முன்னரே, அவர் தனது பெண் மெய்ப் பாதுகாவலர்களை, எங்காவது தப்பியோடுமாறு கலைத்து விட்டார். ஆனால், "லிபிய முள்ளிவாய்க்கால்" பகுதியில் இருந்தும் யாருமே உயிரோடு தப்ப முடியவில்லை.

கடாபியின் மெய்ப் பாதுகாவலர்களாக தெரிவு செய்யப் பட்ட நானூறு பெண்கள், சிறப்பு இராணுவப் பயிற்சி பெற்றிருந்தனர். உலகில் வேறெந்த நாட்டின் தலைவரும், பெண் மெய்ப்பாதுகாவலர்களை வைத்திருக்கவில்லை. அரபு ஆண்கள், பெண்களை சுடத் தயங்குவார்கள் என்பதாலேயே, கடாபி அவர்களை தெரிவு செய்ததாக சொல்லப் படுகின்றது. அத்துடன், கடாபி தன்னை ஒரு பெண்களுக்கு சம உரிமை கொடுக்கும், பெண்ணியவாதியாக காட்டிக் கொள்ளும் நோக்கமும் இருந்தது. மேலும், கடாபியின் அழகிய மெய்ப்பாதுகாவலர்கள், உலகம் முழுவதும் ஊடகங்களின் விசேட கவனத்தைப் பெற்றனர்.

லிபியப் போர் முடிந்த பின்னர், கடாபியின் பெண் மெய்ப்பாதுகாவலர்களுக்கு என்ன நடந்தது? அது பற்றிய கவலை யாருக்கும் இருக்கவில்லை. ஆனால், லிபியாவின் புதிய ஆட்சியாளர்களும், கடாபியை வெறுக்கும் மேற்கத்திய ஊடகங்களும், பல வதந்திகளை கட்டவிழ்த்து விட்டன. பாலியல் வக்கிரம் கொண்ட வதந்திகளை பரபரப்பான செய்திகளாக வெளியிட்டன. 

கடாபி தனது பெண் மெய்ப்பாதுகாவலர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக, வன்புணர்ச்சி செய்ததாக கதைகளை கட்டி விட்டனர். அநேகமாக, அந்தத் தகவல்கள் எல்லாம், கடாபிக்கு எதிராக போரிட்ட, இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் இருந்தே வந்தன. பொதுவாகவே, பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைக்க விரும்பும் பழமைவாதிகள், கடாபியின் பெண் மெய்ப்பாதுகாவலர்களை எவ்வாறு ஜீரணித்துக் கொள்வார்கள்?

லிபிய இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள், கடாபியின் லிபரல் கலாச்சாரத்தை வெறுத்து வந்தனர். கடாபி தனது மெய்ப்பாதுகாவலர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்வது போன்ற பல கதைகள், அவர்கள் மத்தியில் உலாவின. கடாபி ஆட்சி நடக்கும் பொழுதே, இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் அந்தப் பெண் மெய்பாதுகாவலர்களை, "கடாபியின் விபச்சாரிகள்" என்ற பெயரில் அவமானப் படுத்தி வந்தனர்.

தற்போது, மேற்கத்திய ஊடகவியலாளர்களும்  "கடாபியின் விபச்சாரிகள்"  பற்றிய கதைகளை வாங்கி, சர்வதேச மட்டத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அண்மையில், BBC தொலைக்காட்சி, இன்னும் ஒரு படி மேலே சென்று, பழமைவாதிகளின் பெண்களுக்கு எதிரான அவதூறுகளை தொகுத்து, ஒரு ஆவணப் படமாக தயாரித்துள்ளது. (Mad Dog: Gaddafi's Secret World) இது தான், மேலைத்தேய ஜனநாயக நாடுகளின் "பெண் உரிமை." 


உண்மையில், கடாபியின் பெண் போராளிகளுக்கு என்ன நடந்தது? தனது ஆண் நண்பருடன் தப்பிச் செல்ல முயன்ற ஒருவர், கிளர்ச்சிப் படைகளால் கைது செய்யப் பட்டு, இருவரும் சுட்டுக் கொல்லப் பட்டனர். சில மெய்ப் பாதுகாவர்கள், மாறுவேடம் பூண்டு, மக்களோடு மக்களாக வெளியேற முயன்றார்கள். ஆனால், அவர்களும் அகப்பட்டுக் கொண்டனர். நேட்டோ தலைமையிலான கூலிப் படையினர், அந்த இளம் பெண்களை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி, சித்திரவதை செய்து கொன்றனர். அவர்களது சடலங்கள்,புதர்களுக்குள் வீசப் பட்டு, நாட்கணக்காக அழுகி நாறின.

லிபியாவில், கடாபியின் பெண் மெய்ப்பாதுகாவலர்களுக்கு நடந்த கொடுமை ஒரு அப்பட்டமான போர்க்குற்றம் ஆகும். ஆனால், மேற்குலக நாடுகள், லிபிய போர்க்குற்றங்களை விசாரித்து, போர்க் குற்றவாளிகளை தண்டிப்பதற்குப் பதிலாக, அவர்களை தப்ப வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. "ஆபாசப்படம் பார்த்துகொண்டே சிறுமிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய கடாபி",  "கடாபியின் இரகசிய உலகம் ஆவணப்படத்தால் அதிர்ச்சி" போன்ற உணர்ச்சிவசமான பரபரப்புச் செய்திகளை வெளியிடுவதன் மூலம், லிபிய போர்க்குற்றங்களில் இருந்து, உலக மக்களின் கவனத்தை திசை திருப்புகின்றன.

லிபிய போர்க்குற்றங்கள், சர்வதேச நீதிமன்றம் ஒன்றில் விசாரணைக்கு கொண்டு வரப் பட்டால், நேட்டோ படைகளின் பெயரும் கெட்டுப் போகும். ஏனென்றால், லிபியாவின் இறுதிப் போரில் நடந்த இனப் படுகொலைக்கு, நேட்டோப் படைகளும் பொறுப்பேற்க வேண்டி இருக்கும்..

   நன்றி --kalaiy.blogspot.nl

»»  (மேலும்)

| |

சுவிஸ் நாட்டில் கிழக்கு மகாண மக்களால் நடாத்தப்பட்ட பொங்கல் விழா

கடந்த 26.01.2014 அன்று  சுவிஸ் நாட்டில்  பேர்ண்  மாநகரில்  கிழக்கு மகாண மக்களால் நடாத்தப்பட்ட ஊரும் உறவும்  பொங்கல் விழா மிகவும் சிறப்பாக அனைத்து மக்களின் ஒத்துழைப்புடன் ஊர் கலாச்சார நிகழ்வுகளுடனும் பாரம்பரிய உணவுவகைகளுடனும்; மிக மிக விமர்சியாக இன்னிசை விருந்துடனும் கொண்டாப்பட்டது. இவ்நிகழ்வில் நடைபெற்ற கலைநிகழ்வுகளில்  பெரியோர் முதல் சிறியோர் வரை கலந்து கொண்டு தங்களது ஆக்கங்களை  சிறப்பித்திருந்தனர்.அத்தோடு மட்டுமல்லாது எங்களது உறவுகள்  நீண்ட வருடங்களுக்கு பின்  தங்களது உறவுகளின் அறிமுகங்களையும் கருத்துக்களையும் பரிமாறிக்கொண்டதை அவதானிக்ககூடிதாகவிருந்தது  பொங்கல் விழா வெகு சிறப்பாக  நiபெறுவதற்ககு பொருளாதாரம்  உணவு  சரீர உதவி மற்றும் பல்வேறு உதவிகளையும் புரிந்த அனைத்து உள்ளங்களுக்கும்  ஊரும் உறவும்  பொங்கல் விழா ஏற்பாட்டாளர்கள் தங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றனர் 

»»  (மேலும்)

1/28/2014

| |

மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட நூலகம் மற்றும் கற்றல் வளநிலையம் இன்று மாணவர்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது

நிகழ்வு கல்லூரி முதல்வர் கே.அருணாசலம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தன், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா, பிரதிக்கல்வி பணிப்பாளர்களான திருமதி சுஜாத்தா குலேந்திரகுமார்,  கோட்டகல்வி அதிகாரிகளான பொ.சிவகுரு, ந.குணலிங்கம், கல்லூரின் முன்னாள் அதிபர் வ.கந்தசாமி கிழக்கு மாகாணசபை உறுப்பினர் முன்னாள் பூ.பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
»»  (மேலும்)

| |

ஏறாவூர்ப்பற்று -2 கோட்டக்கல்வி அலுவலகம் திறந்துவைக்கும் நிகழ்வு

செங்கலடி வதுளை வீதியில் அமைந்துள்ள கல்குடா வலயத்திற்குட்பட்ட ஏறாவூர்
பற்று -2 கோட்டக்கல்வி அலுவலகம் திறந்துவைக்கும் நிகழ்வு இன்று (27.01.2014) ஏறாவூர்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.பொ.சிவகுரு தலைமையில் இடம்பெற்றது.  
 
இந்நிகழ்விற்கு ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் முதன்மை விருந்தினராக வரவேற்கப்பட்டு தேசிய கொடியினையேற்றியதைத் தெடர்ந்து ஏறாவூர் பற்று-2 கோட்டக்கல்வி அலுவலகத்துக்குரிய பெயர் பலகையின் திரை நீக்கம் செய்ததுடன் நாடாவெட்டி புதிய அலுவலக கட்டிடத்தை திறந்துவைத்தார். அத்தோடு புதிய அலுவலக வளாகத்தில் தென்னைமரக்கன்று நடும் நிகழ்வும் இடம்பெற்றது.
 
இந்நிகழ்விற்கு கௌரவ விருந்தினராக கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.செ.சிறிகிருஸ்ணராஜா மற்றும் கல்குடா வலய பிரதிக் கல்விப்பணிப்பளர்கள் கோட்டக்கல்விப் பணிப்பாளார்கள் மற்றும் பாடசாலைகளின் அதிபர்களும் கலந்துகொண்டார்கள். 
»»  (மேலும்)

1/27/2014

| |

செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்

மட்டக்களப்பு,செட்டிபாளையம் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் அதிபர் ரி.அருள்ராசா தலைமையில் இடம்பெற்றது.
இப்பாடசாலையில் கல்வி கற்ற பலர் கலந்து கொண்டனர். இங்கு புதிய நிர்வாக சபை தெரிவும் இடம்பெற்றது.
இதன்போது பாடசாலையின் எதிர்கால செயற்பாடுகள்,பாடசாலையின் அபிவிருத்தி,பிரதேசத்தின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இதன்போது பிரதேச மாணவர்களின் நன்மை கருதி பல்வேறு செயற்றிட்டங்கள் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

| |

2ஆம் மொழி தேர்ச்சிக்கு விசேட புள்ளி

தமிழ் அல்லது சிங்கள மொழிகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அந்த மொழியானது அவர்களின் தாய்மொழி அல்லாதவிடத்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் போது மேலதிக புள்ளிகளைப் பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தினை உயர்க்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்கா கோரியுள்ளார். 

அதாவது, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தமிழ் மாணரொருவர் அவருக்கு இரண்டாம் மொழியான சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றாலோ அல்லது சிங்கள மாணவரொருவர் அவருக்கு இரண்டாம் மொழியான தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றாலோ அதற்காக பல்கலைக்கழக நுழைவின் போது அவர்களுக்கு விசேட புள்ளிகள் வழங்கப்படும். 

இதன் பிரகாரம் சாதாரண தரத்தில் இரண்டாம் மொழிக்கு 'ஏ' தரம் பெற்றால் அதற்காக 5 புள்ளிகள் வழங்கப்படும். அத்துடன், 'பீ' தரத்துக்கு 4 புள்ளிகளும் 'சி' தரத்துக்கு 3 புள்ளிகளும் 'எஸ்' தரத்துக்கு 2 புள்ளிகளும் வழங்கப்படும்.  

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கான தேசியத் திட்டத்தின் கீழ், அரச பல்கலைக்கழகங்களில் மும்மொழிகளிலும் கற்பிக்கப்படும் பாடநெறிகளுடன் இன ரீதியாக கலக்கப்பட்ட மாணவர் சமூகத்தை உறுதிப்படுத்தலுக்கு அமைவாக இந்த அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
»»  (மேலும்)

| |

இந்தியாவின் 65ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ். மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரக அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) காலை நடைபெற்ற.போது ----

DSC_0758'வட மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக வட பகுதிக்கான புகையிரதப் பாதைப் பணிகள், இந்திய வீட்டுத்திட்டம், வவுனியா வைத்தியசாலைப் பணிகள் என்பவற்றை குறிப்பிடலாம்' என யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தின் கொன்சியூலேட் ஜெனரல்; வே.மகாலிங்கம் இன்று (26) தெரிவித்தார். 

இந்தியாவின் 65ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ். மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரக அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) காலை நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்து கருத்து தெரிவித்த வே.மகாலிங்கம், 'வட பகுதிக்கான புகையிரதப் பாதைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது பளை வரையிலான பணிகள் நிறைவடைந்துள்ளன. விரைவில் யாழ்ப்பாணம் வரை யாழ்.தேவி புகையிரத சேவை இடம்பெறவுள்ளது.

இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் 2012ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் முன்னோடி செயற்திட்டமாக ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு நிறைவடைந்துள்ளன. அதனைத் தொடர்ந்து 43 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணியின் கீழ் இதுவரையில் 10,250 வீட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

வெகுவிரைவில் இந்தியாவின் உதவியுடன் அச்சுவேலி கைத்தொழிற் பேட்டையில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் கைத்தொழில் முயற்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதேபோன்று வட கடல் வலைத் தொழிற்சாலைக்கான உதவிகள் கட்டம் கட்டமாக வழங்கப்பட்ட நிலையில் அதனுடைய உற்பத்தித்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது' என்றார். 

'கடந்த கால யுத்தம் காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவுப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட சிறு வாணிபம் மற்றும் நடுத்தர வாணிபதாரிகள் 1320 பேருக்கு அவர்களின் தொழில் முயற்சிகளுக்காகவும் நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளன.  அத்துடன், வவுனியா வைத்தியசாலையில் இருநூறு படுக்கைகளுடன் கூடிய  விடுதி, இந்தியா அரசின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலாக யாழ்ப்பாணத்தில் கலாச்சார நிலையம், மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய திருத்தப்பணிகள், யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானம் புனரமைப்புப் பணிகள், மொழியியல் ஆய்வு கூடம், கைவேளை கிராமம் என பல அபிவிருத்தி செயற்திட்டங்களும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ளன' எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 
»»  (மேலும்)

1/26/2014

| |

அரசுக்கு எதிராக வெடிக்க வைத்துக் கொண்டிருக் கும் போராட்டங் களில் கூட்டமைப்பு.

நேற்றைய பத்திரிகைகளில் வெளிவந்த இரண்டு செய்திகள் இலங்கை அரசின் பிரதிநிதிகளாகவும் மற்றும் அரசிடம் நியமனமும் சம்பளமும் பெற்றுக்கொண்டு பணிபுரியும் அரச அதிகாரிகளாகவும் இருப்போருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வந்திருந்தன. வழக்கம்போல மிரட்டல்கள் சவால்கள் எச்சரிக்கைகளுக்குப் பெயர்போன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்தே இந்த மிரட்டல்களும் வெளியாகியுள்ளன.
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து என்பார்களே அதுபோல அரசைக் கடித்து போட்டிக் கட்சிகளைக் கடித்து அயல் சமூகங்களைக் கடித்து கடைசியில் சொந்த சமூகத்திலேயே அரச அதிகாரிகளாகப் பணிபுரிவோரைக் கடிக்கும் நிலைக்கு கூட்டமைப்பு வந்துள்ளது. அவர்களும் என்ன செய்வார்கள்? யாருக்காவது மிரட்டல்கள் சவால்கள் விட்டுக் கொண்டிருக்கா விடின், மக்கள் இவர்களைப் பார்த்து இத்தனை சபைகள் அதிகாரங்களைப் பெற்றுவைத்துக்கொண்டு, மக்கள் ஆணையையும் பல முறை பெற்றுப் பதவிகளையும் எடுத்து வைத்துக்கொண்டு நீங்கள் என்னதான் செய்துகொண்டிருக் கிறீர்கள்? என்று கேட்டுவிடுவார் களல்லவா!
அதனால்தான் முந்திக்கொண்டு, போராட்டங்களை அறிவித்து, முழக்கங்களை வீசி மக்களை உணர்ச்சிவசமான நிலையில் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. என்ன, வழக்கமாக அவர்கள் அரசுக்கு எதிராக வெடிக்க வைத்துக் கொண்டிருக்கும் போராட் டங்களில் சிலதை இப்போது அரச அதிகாரிகளுக்கு எதிராகவும் வெடிக்க வைக்க வேண்டிவரும் என்று எச்சரித்திருக்கிறார்கள், அவ்வளவுதான்!
வடக்கில் ஜனாதிபதி, ஆளுநருக்கு விசுவாசமாகவே அரச அதிகாரிகள் உள்ளனர். ஜனாதிபதிக்கும் ஆளுநருக்கும் தூக்குக்காவடி எடுக்கும் இந்த அதிகாரிகள் அவர்களாகவே ஒதுங்கிக்கொள்ள வேண்டும். இல்லையேல் நாம் இவர்களுக்கெதிராகவும் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிவரும் என தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எச்சரித்துள்ளார்.
வட மாகாண பிரதம செயலாளர், ஆளுநர் ஆகியோரை மாற்றுவதற்கான தீர்மானத்தை எடுக்காவிடின், எதிர்வரும் 27ஆம் திகதி வட மாகாண சபை போர்க்களமாக மாறும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங் கம் எச்சரித்துள்ளார். இந்த நாட்டின் இனப்பிரச்சினையின் தீர்வுக்காக போராடியது போய் இப்போது அரச அதிகாரிகளுக்கு எதிராகப் போராட்டத்தை நடத்தும் நிலைக்கு முன்னாள் போராளிகள் வந்திருக்கிறார்கள்.
மக்களை உணர்ச்சிகரமாக வைத்திருக்க ஏதாவது போராட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்க வேண்டும் அல்லவா? தீர்வுக் கான முயற்சிகளைத்தான் எப்பவோ கைவிட்டாயிற்றே! எனவே தான் இந்த அதிகாரிகளுக்கெதிரான போராட்டம்! அதிகாரிகள் யாரும் வடக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக் கோ மாகாண முன்னேற்றத்திற்கோ எதிரானவர்களல்ல. வடக்கு மாகாணசபை என்பதும் ஒன்றும் தனிநாட்டு அரசல்ல. இலங்கை அரசின் கீழேயே அரச அதிகாரிகளும் வட மாகாண சபையும் வரு வதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அறியாதவர்களுமல்ல.
வடமாகாணத்திற்கென எவ்வளவோ செய்யக்கூடிய மாகாண சபையை எடுத்து வைத்துக்கொண்டு, மக்களுக்கு எதையும் செய் யாமல் இருப்பதை-இனியும் செய்யாமல் விடப்போவதை- மறைக்கவே இந்த அரச அதிகாரிகளுக்கெதிரான போர்! அரசின் ஒத்துழைப்பு இல்லாததால்தான் மாகாண சபையை நடத்த முடியவில்லை என்று சொல்லிப் பார்த்தார்கள். அதற்கு, அரசுடன் பேசி அதைத் தீர்த்துக்கொள்ள வேண்டியதுதானே! என்று மக்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அதனால்தான் இப்போது, அதிகாரிகள் எல்லாரையும் மாற்றினால்தான் மாகாண சபையை நடத்த முடியும் என்ற போரைக்கையில் எடுத்திருக்கிறார்கள். மக்களுக்குப் போராட்டத்தைக் காட்டிக் கொண்டிருப்பதும் ஆச்சு மாகாண சபையைக்கிடப்பில் போடு வதும் ஆச்சு!
நன்றி. தினமுரசு
»»  (மேலும்)

1/25/2014

| |

தொப்புள் கொடி உறவும் - தகிக்கும் யதார்த்தங்களும்

 சுகு-ஸ்ரீதரன்
periyarஇன்று தமிழ் -தமிழன்- உலகத்தமிழர் ஒற்றுமை -தனிக்குணம் -பழமை உலகில் அனைத்து மொழிகளிலும் தொன்மையானது என்றெல்லாம் சொல்லப்படுக்கிறது. ஆனால் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து விதிவிலக்குகளை விடுவோம். ஈ.வே.ரா அவர்கள் தென்னிந்தியா- தமிழகத்தில் தீண்டாமை பெண் அடிமைத்தனம,; சமயம் பற்றிய அறக் கோட்பாடுகளை முன்வைத்துச் செயற்பட்டார் .
ஆனால் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் ஒரு தீவிர மறுமலர்ச்சி சீhதிருத்த இயக்கத்தை அவர் நடாத்தினார் ஆனால் அதன் பின்புலத்திலேயே தமிழகத்தின் இரண்டு திராவிட கட்சிகளும் உருவாயின. இவற்றைவிட வேறுபல இந்தப்பாரம்பரியத்தில் வந்த இயக்கங்கள் இருக்கின்றன.
பெரியாரின் கொள்கைகளை நடைமுறைகளை தலைகீழாகப் புரட்டிப்போடும் நடைமுறைகள் பரவலாக இருக்கின்றன. ஆனால் இவை எல்லாவற்றையும் கடந்து சாதியம் ,பெண்ணடிமைத்தனம் மதச்சீர்திருத்தங்கள் பற்றிய அக்கறைகளை நாம் தவிர்த்து விட முடியாது.
கலைஞரிடம் இன்று உலகில் வாழுழ் தலைவர்களில் தனக்கு பிடித்தவர்கள் யார் என்று கேட்டால்  அவர் பிடலைத்தான் சொல்லுவார். பெரியாருக்கு ஸ்டாலினைப் பிடிக்கும். இன்று தமிழ் நாட்டில் பல ஸ்டாலின் பெயர்கள் பெரியாரால் சூட்டப்பட்டவையே. இடதுசாரிக் கட்சிகளும் தேர்தல் என்று வரும்போது  இந்த பிரபல திராவிட கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொள்வார்கள்.
அமெரிக்கா கடுமையான பொருளாதாரத்தடை விதித்த நாட்களில் கியூபாவிற்கு உணவுப்பொருள் சேர்த்தனுப்பும் இந்திய மார்க்சிஸ்ட கட்சியின் முயற்சிக்கு மக்கள் பல்வேறு கட்சிகள் கலைஞர்கள் ஒத்துழைப்பு வழங்கினர். மண்டெல் கமிசன் பரிந்துரைகள் ஏகோபித்த முறையில் தமிழக அரசியல் கட்சிகளால் வரவேற்க்கப்பட்டன. பின் தங்கிய சமூகங்களுக்கான இட ஒதுக்கீடுகள் பற்றிய அக்கறைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் மீதான அத்து மீறல்களை பொலிஸ்நிலையங்களில் முறையிடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதற்காக பெண்களுக்கோ சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள்- தலித்துக்களுக்கோ பிரச்சனைகள் இல்லையென்றில்லை.
ஆனால் தமிழகத்தில் இன்று இடதுசாரி இயக்கம் பெரியாரின் இயக்கம் அம்பேத்கர் இயக்கம் தோழர் ஜீவா காமராஜர் பாரம்பரியத்தின் செல்வாக்கு இருக்கிறது. பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம், கண்ணதாசனின் பாடல்களிலும் எம்ஜிஆர்- சிவாஜி படங்களிலும் கலைஞரின் வசனங்களிலும் சீர்திருத்த-பகுத்தறிவுக்கருத்துக்கள் இழையோடும்.
ஆனால் யாழ்மைய அரசியல் பொதுவாக வலதுசாரி வகைப்பட்டது. விதிவிலக்குகள் இருக்கின்றன. அதற்கு பெரியாரோ ,அம்பேத்கரோ ,காமராஜரோ, ஜீவாவோ உவப்பானவர்கள் அல்ல. தொப்புள் கொடி உறவு பற்றிப் பேசுபவர்கள் சமகால சமூக பொருளாதார மாற்றங்கள் அதனூடாக எழுந்த இந்திய தமிழக சமூக விழுமியங்களுடன்  ஈழத்தமிழர் அரசியல் நெருக்கமானதல்ல. அப்படிப்பார்த்தால் இலங்கையின் இடதுசாரி அரசியலும் ஈழ முற்போக்கு அரசியலும் மாத்திரமே தமிழகத்திற்கு நெருக்கமானவை.
வெள்ளைக்காரர்கள் எல்லாவற்றையும் செய்து தருவார்கள். மற்றவர்கள்  தம்மை விட தரம்தாழ்ந்தவர்கள் என்ற மன நிலையே பிரதானமாக வடக்கு யாழ்ப்பாண மைய அரசியலின் சாரம்சமாகும். அது பொதுவாக தமிழக அறம் சார் இலக்கியவாதிகளுடயோ அல்லது சமூகப்பிரக்ஞைகொண்ட எழுத்தாளர்களுடனோ தொடர்புபட்டதில்லை. விதி விலக்குகள் இருக்கின்றன. ஜனரஞ்சக சஞ்சிகைகள் வர்த்தக ஜனரஞ்சக  சினிமா போன்ற ஊடகங்கள் அதற்கு விதிவிலக்கு.
தமிழகத்தில் அக்கறைக்குரிய அறங்கள் எல்லாம்  ஈழத்தமிழர் ஆதிக்க அரசியலில் அக்கறைக்குரியவை அல்ல. அதே மாதிரியான பிரச்சனைகள் இங்கும் இருக்கின்றன. ஆனால் அவை பற்றிய அக்கறைகள் இங்கு முற்போக்காளர்களுக்கு மாத்திரம் உரியவை. இது முதலில் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். ஈழத்தமிழர் ஆதிக்க அரசியல் தனது சொந்த நலன்களுக்காகவே 'வெறும்' மொழி- பொருளாதார நலன்களையும் வைத்து  மாத்திரம் கொண்டு தொப்புள் கொடி உறவு பற்றிப் பேசுகிறது. புலம்பெயர் வியாபாரமும் நுகர்வும் பெருமளவு தமிழகம் சார்ந்தது.
ஆனால் யாழ்மையவாதம்  இந்தியர்களை- தென்னிந்தியத் தமிழர்களை விட தாம் ஒரு படி உயர்ந்தவர்களாகவே  நோக்குவது. வெள்ளைக்காரர்கள் தான் தமக்கு சமதையானவர்கள் என்ற ஆதிக்கத்திமிர் மனோநிலையைக் கொண்டது. ஒருவித அடிமை மன நிலையும் கூட. மற்றப்படி சிங்களவர்களோ, ஆபிரிக்கர்களோ இதர மக்கள் குழுவினரோ தமக்கு நிகரானவர்கள் இல்லை என்ற இறுமாப்பும் இருக்கிறது. மேற்போனால் இஸ்ரேல்காரர்களும் தாமும் ஒன்று என்ற மனோநிலையும் இருக்கிறது.
இதனை ஒரு தொற்று வியாதியாக இப்போது சிங்கள ஆளும் வர்க்கத்தினருக்கும் பரப்பியிருக்கிறார்கள். தமிழகத்தின் சில அரசியல் பிரிவினருக்கு இது தெரியாதது. விளங்கிக்கொள்ளமுடியாததென்றும் இல்லை. ஆனால் அவர்களுடைய பொருளாதார நலன்களுக்கும் நாட்டின் தேர்தல் அரசியலுக்கும் பயன்படுகிறதென்றால் மெருகேற்றி பயன் படுத்துவார்கள்.
ஆனால் ஈழத்தமிழர் பற்றிய அறிவிலும் பிரச்சனை இருக்கிறது.
கிழக்கு-மலையகத் தமிழர் ,முஸ்லீம் மக்கள் ,சிங்களவர்கள் பற்றிய அறிவு அல்லது இலங்கை சமூகங்களின் வரலாறு பற்றிய அறிவும் குறைவாகவே காணப்படுகிறது. ஈழப் போராட்ட வரலாறு ஜனநாயக மறுப்பு இனப்பிரச்சனையின் தாற்பரியம் பற்றிய மேம்போக்கான ஒரு திரிந்த அறிவே காணப்படுகிறது.
சிங்களவர்கள் என்றால் உலகில் மிக மோசமான மனிதர்கள் என்று சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆட்சியாளர்களுக்கும் சாதாரண மக்களுக்குமிடையே தெளிவான வேறுபாடுகள் இல்லை. பௌத்த சிங்கள பேரினவாதம் போல் யாழ்மையவாதம் எவ்வளவு மோசமான நச்சு அரசியல் என்பதும் தெரியாது. அது தமிழகம் மீதும் வெறுப்பை உமிழ்வது அருவருப்பது என்பதும் புரியாது.
உதாரணத்திற்கு தமிழக மக்களுக்கு ஈழத்தமிழர் நிலை ஏற்பட்டு இங்கு நிலைமை சுமுகமாக இருந்து அங்கிருந்து மக்கள் அகதிகளாக யாழ்ப்பாணம் வந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை கற்பனை பண்ணிப்பாருங்கள். இங்கு சுயபச்சாத்தாபம் மாத்திரம் தான் இருக்கிறது.
எங்களைவிட உலகில் எவரும் கஸ்டப்படவில்லை என்ற கபடத்தனம் தான் செல்வாக்குச் செலுத்துகிறது. புத்திசாலிகள். ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் வாழும் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட தமிழர்கள் சிறந்ததொருசௌகரியமான புலம் பெயர்வாழ்வை அமைத்துள்ளார்கள். ஆனால் இன்னுமெரு பிரிவினர் 30 ஆண்டு போர் அனுபவங்ளை முள்ளிவாய்கால்வரை பெற்று செத்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்  இந்த இழப்புக்களும் மரணங்களும் தான் வட அமெரிக்க ஐரோப்பிய வாழ்க்கையை ஸ்தாபித்தது.
அதனை இயக்கும் சத்தியாக இருந்தது யாழ்மையவாதமே.
இன்று யாழ்மையவாத சர்வதேச அரசியல் இங்கு ஈழத்தமிழர்களுக்கு நல்வாழ்வைப் பெற்றுக் கொடுப்பதற்கென்று கருதினால் அது அடி முட்டாள்தனமானதாகும்
அது பிரக்ஞை பூர்வமாகவே ஐரோப்பாவிலும் வட அமெரக்காவிலும் தனது சௌகரியமான இருப்புக்காக உள்ள10ர் தமிழர்களின் பிரச்சனைகளை மூலதனமாக்கியருக்கிறது. நாடு கடந்த தமிழீழம் என்பதும் அதுதான். இங்கு பிரச்சனை தீராமல் இருப்பதையே யாழ்மையவாதிகள் விரும்புகிறார்கள்.
இப்போது பிரச்சனை எல்லாம் இங்கு வாழ்க்கையை கட்டியமைக்கமுடியுமா என்பதே. இலங்கையின் ஜே.ஆர் - மகிந்த வரை யாழ்ப்பாண மன நிலையின் குணம் குறிகளை நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். காலப்போக்கில் வடக்கு- கிழக்கு வெறிச்சோடி விடும் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியும்.
அந்த இடைவெளியில் சிங்களவர்களை குடியேற்றத்தையும், இராணுவ மயமாக்கலையும் ,கலாச்சார ஆக்கிரமிப்பு கெடுபிடிகளையும் அதிகரித்துச் செல்வார்கள். 1980களில் ஆட்கள் வெளியேறிச்செல்வதை ஊக்குவித்தது போலவே யுத்தம் முடிந்த கையோடு சரமாரியாக ஆட்கள் வெளியேறுவதை இலங்கை அரசு ஊக்குவித்தது. அண்மைய அவுஸ்திரேலிய கடல் பயணங்களில் எத்தனை பேர் கடலில் மாண்டார்கள் என்று தெரியாது. மனிதர்கள் இவ்வாறு வெளியேறுவது தேசிய எல்லைகள் என்று சொல்லப்படுவதை கடப்பது பிரிச்சனை என்று கூறவரவில்லை.
மனிதகுலவரலாறு ழுமுவதும் இது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் ஒரு சமூகத்தின் இருப்பை நிராகரிக்கும்  அரசின் போக்கும் அதனை மானசீகமாக ஏற்றுக் கொண்டு பகிரங்கத்தில் பாசாங்காக வார்த்தைகளை உதிர்க்கும் போலித்தனமும் தான் பிரச்சனை. இந்த நிலத்தில் கௌரவமாக மரியாதையுடன் வாழ்வதற்கு எத்தனை பேருக்கு விருப்பம் என்பதுதான் முக்கிய கேள்வி.
சுகு-ஸ்ரீதரன்  நன்றி தேனீ 
»»  (மேலும்)

| |

ஓரின சேர்க்கைக்கு அழைத்ததன் காரணமாகவே தனது மகன் மரணதண்டனைக்கு ஆளாகவேண்டிய நிலையேற்பட்டது –தாயார் கதறல்

தன்னுடைய மகனை ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்த முனைந்ததன் காரணமாகவே கொலையாளியாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளான் என டூபாயில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிருஸ்பிள்ளையின் தாயார் தெரிவித்தார்.

தனது மகனை காப்பாற்ற யாரும் முன்வராத நிலை தொடர்பிலும் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
2006ஆம் ஆண்டு காரினால் ஒருவரை மோதி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 21ஆம் திகதி அதிகாலை சுட்டுக்கொலைசெய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட கொம்மாதுறையினை சேர்ந்த கிருஸ்ணபிள்ளை ரவீந்திரன் நிரபராதியென அவரது தாயார் நாகரெட்னம் தெரிவித்தார்.
முட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொம்மாதுறையானது மட்டக்களப்பு வாழைச்சேனை –மட்டக்களப்பு பிரதான வீதியில் வந்தாறுமூலையில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு அடுத்ததாகவுள்ள கிராமமாகும்.
மிகவும் வறிய மக்கள் வாழும் கிராமமான இங்கிருந்து அதிகளவான இளைஞர் யுவதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்புரிந்துவருகின்றனர்.
இங்கு கிருஸ்ணபிள்ளை-நாகரெட்னம் தம்பதியினரின் மூன்றாவது பிள்ளையாக ரவீந்திரன் இருந்துவருகின்றார்.இவர்கள் குடும்பத்தில் 11 பிள்ளைகள்.இவர்களில் ஒருவர் 1988ஆம் ஆண்டு காலப்பகுதியில் இப்பகுதியில் செயற்பட்ட ஆயுதக்குழுவினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மூத்த பெண் மத்திய கிழக்கு நாடொன்றில் 1990ஆம் ஆண்டு கடமையாற்றிவந்த நிலையில் வீட்டில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்துள்ளார்.
துங்களது வீட்டின் வறுமை நிலைமை காரணமாகவே தங்களது பிள்ளைகளை வெளிநாடு அனுப்பினோம்.ஆனால் அவர்கள் பிணங்களாக திரும்பியமை தமக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக உயிரிழந்தவரின் தாயார் தெரிவித்தார்.
தனது மூத்த மகள் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வீட்டு பணிப்பெண்ணாக கடமையாற்றிய வேளையில் அந்த வீட்டில் இருந்து கஸ் சிலின்டர் வெடித்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.அவரது சாம்பலைக்கூட நாங்கள் காணவில்லை.அவரை இழந்து நின்ற நாங்கள் இன்று எமது மகனையும் இழந்து அவரின் சடலத்தினையும் காணமுடியாதது வேறு எந்த தாய்க்கும் ஏற்படாத நிலையெனவும் தெரிவித்தார்.
கடந்த ஐந்தாம் திகதி டூபாய் சென்று சிறையில் தனது மகனை சந்தித்தபோது தான் நிரபராதியெனவும் தன்னைக்காப்பாற்றும்படியும் எங்களிடம் மன்றாடினார்.தன்னை தனது எஜமானாரும் வேறு மூவரும் இணைந்து பாலைவனப்பகுதிக்கு அழைத்துச்சென்று அங்கு அவர்கள் மது அருந்திக்கொண்டிருந்தபோது தன்னை ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாகவும் அவர்களிடம் இருந்து தப்புவதற்காக காரை எடுத்து ஓட முயன்றபோது இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்ததாகவும் தெரிவித்தார்.
அவரை கைதுசெய்த பொலிஸாரிடமும் இதனை தெரிவித்துள்ளார்.ஆனால் இவருக்கு பத்து வருடங்கள் சிறைத்தண்டனை என்றே தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அவை திடிரென மாற்றப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யாரோ தொலைபேசி அழைப்பு மூலம் வழங்கிய அழைப்பின் மூலமே தனக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக தனது மகன் தெரிவித்ததாகவும் தாயார் தெரிவித்தார்.
இதேவேளை சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரை சந்தித்து மன்னிப்புக்கோரி தனது சகோதரனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தலாம் என்று உயிரிழந்தவரின் குடும்பத்தினரை சந்திக்க முயற்சிசெய்தபோதும் நாங்கள் ஏமாற்றப்பட்டோம் என மரண தண்டனை விதிக்கப்பட்டு உயிரிழந்த ரவீந்திரனின் சகோதரியான கோமளாவதி என்பவர் தெரிவித்தார்.
எனது சகோதரன் எமது குடும்ப நிலைமை காரணமாகவே வெளிநாட்டுக்காக தொழிலுக்காக சென்றார்.இன்று அவரது மனைவியினைக்கூட அவரது சடலத்தினை பார்க்க அனுமதிக்கவில்லை.இந்த கொலையில் எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் பல்வேறு தரப்பினரிமும் முறையிட்டும் எமக்கு நீதி கிடைக்கவில்லை.
ஏங்களது சகோதரனின் உடலையாவது இங்கு கொண்டுவர நடவடிக்கையெடுக்கவேண்டும்.இது தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமும் முறையிட்டுள்ளோம்.ஆனால் எதுவித சாதகமான பதில்களும் கிடைக்கவில்லை.எங்கள் சகோதரனின் முகத்தினை கடைசி ஒரு தடவையாவது பார்க்க ஏற்பாடுகளை செய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
»»  (மேலும்)

1/22/2014

| |

ஐக்கிய அரபு இராட்சியத்தில் இலங்கையருக்கு மரண தண்டனை.

கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன்இலங்கையின் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு குடும்பத்தருக்கு ஐக்கிய அரபு இராட்சியத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒருவரை வாகனத்தால் மோதிக் கொன்றதாக அவர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.
மட்டக்களப்பு கொம்மாதுறையைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன் என்பவருக்கே இந்த மரண தண்டனை கிடைத்துள்ளது.
இறுதி நேரத்தில் தனது தம்பியைப் மீட்க, அரபு இராட்சியத்துக்கு சென்ற அவரது சகோதரியின் முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது.
இவை குறித்து மட்டக்களப்புச் செய்தியாளர் உதயகுமார் வழங்கும் ஒலிக்குறிப்பை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
»»  (மேலும்)

| |

அரசடித்தீவு சிறுவர் பூங்கா திறப்பு விழா
மண்முனை தென் மேற்கு பிரதேசத்திற்கான சிறுவர் பூங்கா 21.01.2014பட்டிப்பளை பிரதேச சபை செயலாளர் கிருஸ்ணப்பிள்ளை 

தலைமையில் முன்னாள்கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை

சந்திரகாந்தனின் பிரதான பங்குபற்றலுடன் மக்கள் பாவனைக்காக
சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த சிவநேசதுரை சந்திரகாந்தன்> பிறரிடம்
கையேந்தும் நிலைமையினை மாற்றி தம்மையும்> தமது சமுகத்தினையும்
வலுவாக்கும் சக்தியாக தமிழ் பேசும் சமுகம் மாற்றமடைய வேண்டும். இன்றொரு
பேச்சு> நாளையொரு பேச்சு என்று நாளுக்கு நாள் தங்களது கொள்கைகளை மாற்றிக்
கொண்டு வெறும் பத்திரிகை அரசியல் செய்வதால் மாத்திரம் தமிழ் சமுகத்திற்கு
எதுவும் கிடைக்கப்போவதில்லை. நாம் கிழக்கு மாகாணத்தை 2008ம் வருடம்
பொறுப்பெடுத்து 2012 வரை பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தோம்.
ஏனைய மாகாணங்கள் உற்றுப்பார்க்குமளவிற்கு கிழக்கு மாகாணத்தில் இன
ஐக்கியத்துடனான நல்லாட்சியினை நடத்திக்காட்டினோம்.
இந்த நிலையில்
கிழக்கின் யதார்த்தம் உணராமல் மாகாண சபை ஆட்சியினை எந்தவித
முன்வைப்புக்களும் இல்லாமல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு
ஆட்சியமைப்பதற்கு துணை நிற்பதாகக் குறிப்பிட்டு> முதலமைச்சு உட்பட
அனைத்து அமைச்சுக்களையும் நீங்களே நிர்வகியுங்கள் என குறிப்பிட்டவர்கள்
இன்று கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக முஸ்லிம் ஒருவர்
நியமிக்கப்பட்டதற்கு இனத்துரோகமிளைத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு
மாகாண ஆளுனருக்கு மகஜர்களை அனுப்பிவைத்துள்ளனர். பின்பு அது
முஸ்லிம்களுக்கு எதிரான கோரிக்கையல்ல எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு
அறிக்கை விடுத்துள்ளது.

கட்சிக்குள்ளேயே நிலையான கோட்பாடு இல்லாது மாற்றுக்கருத்துக்களுடன்
பயணிப்பவர்கள் எவ்வாறு எமது மக்களை வழிநடத்தப் போகின்றனர் என கேள்வி
எழுப்பினார்.

இந் நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், ,முன்னாள் பிரதேச சகைத் தவிசாளர் பேரின்பராஜா(ரகு)
உள்ளுராட்சி உதவி ஆணையாளர் க.சித்திரவேல் மற்றும் பொது மக்கள் உட்பட பலர்
கலந்து கொண்டனர்.
 
»»  (மேலும்)

1/21/2014

| |

உணர்வுபூர்வமாக சிந்திக்காது அறிவு பூர்வமாக சிந்தியுங்கள் -முன்னாள் முதல்வர்

தற்போதைய காலகட்டத்தில் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் அனைவரும் தேசியம் என்ற மாயையின் ஊற்றுக்கண்ணான உணர்வு என்ற பதத்தின் பால் தங்களது சிந்தனைகளை சிதறவிடாமல் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அறிவின் பால் சிந்திக்கின்றவர்களாக நாம் அனைவரும் மாற வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண முதல் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் கிழக்கு மாகாணத்தின் விசேட விவகாரங்களுக்கான ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் குறிப்பிட்டார்.
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயக் கட்டிடம் மற்றும் பிளான் (Pடயn) அமைப்பின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட குறிஞ்சாமுனை அ.த.க.பாடசாலையின்  பாடசாலைக் கட்டிடத் தொகுதி என்பன இன்று திறந்து வைக்கும் நிகழ்வு வலயக் கல்வி பணிப்பாளர் பாஸ்கரன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் சி.சந்திரகாந்தன், இன்றைய காலகட்டத்தில் கிழக்குவாழ் தமிழ் மக்கள் அனைவரும் அரசியல் அனாதைகளாக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அம்மக்களே தற்போது நன்கு உணர்ந்துள்ளார்கள். இதற்கு உண்மையான காரணம் தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகள்தான் என்பதனையும் அம்மக்கள் உணராமலும் இல்லை. உண்மையில் கூறப்போனால் தேசியம் என்றால் என்ன? என்று தெரியாதவர்கள்தான்; அதிகம் தேசியம் பற்றி பேசுகின்றார்கள். ஏன் நான் இதனைக் குறிப்பிடுகின்றேன் என்றால் அன்று வட்டுக்கோட்டைத் தீர்மானம் எடுக்கின்றபோது தேசியத்தின் பால் ஈர்க்கப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த பலர் அதாவது கையை கீறி இரத்த திலகம் இட்டவர்கள் எல்லாம் இன்று எங்கே சென்றார்கள். அவர்களின் தற்போதைய நிலைதான் என்ன? ஆனால் அந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு முன்னின்றவர்களில் வடக்கைச் சேர்;ந்தவர்கள் பெரும்பாலானவர்களின் குடும்பங்கள் அனைத்துமே ஐரோப்பிய நாடுகளில் உல்லாச வாழ்க்கை வாழ்கின்றார்கள். நமது மாகாணத்தவரின் நிலை என்ன? என்பதனை சற்று சிந்தியுங்கள்.
அதாவது வட்டுக்கோட்டடைத் தீர்மானம் நிறைவேற்றுகின்றபோது மேடையின் முன்னாள் அமர்ந்து இருந்து உணர்ச்சிவசப்பட்டு கையைக் கீறி இரத்த திலகம் இட்ட மட்டக்களப்பானுக்கு கிடைத்த பரிசு தியாகிகள் மற்றும் மாவீரர்கள் என்ற சொற்பதங்கள் மாத்திரம்தான். ஆனால் எமது மாவட்ட மக்களை எல்லாம் உசுப்பேற்றி உணர்ச்சிவசப்படுத்தி அழிவிற்கான அடித்தளம் அத் தீர்மானம் என்று முன் கூட்டியே அறிந்து இருந்தும் கூட தங்களது அரசியல் அதிகாரங்களை அதாவது அவர்கள் வகித்த பதவிகளுக்கான கதிரைகளை பாதுகாப்பதற்கான ஓர் கபட நாடகத்தை நிறைவேற்றிய வடபுல யாழ் மேலாதிக்க வாதிகளுக்கு கிடைத்த பரிசு தங்களது குடும்பம் பிள்ளைகளுடனான வெளிநாட்டிலே அதாவது ஐரோப்பிய நாடுகளிலே உல்லாச வாழ்க்கை மற்றும் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்கள். இன்றும் கூட சம்பந்தன் மற்றும் மாவை இது போன்று இன்னும் பலர் தற்போது அரசியல் செய்கின்றவர்களின் பிள்ளைகள்கூட ; வெளிநாட்டிலே வைத்தியர்களாக தொழில் புரிகின்றார்கள். இது எல்லாம் எமது சாதாரண மக்களுக்கு தெரிவதில்லை. தெரிவிக்க வேண்டும் என்பதற்காக என்னைப் போன்றவர்கள் பேசினாலும் அதனை எமது ஊடகங்கள்; பிரசுரிப்பதும் இல்லை. எனவே மக்களே தற்போதைய நிலையிலாவது நீங்களே உங்களை கேள்வி கேட்டு ஏனைய சமூகங்களுன் அரசியல் ரீதியில் ஒப்பிட்டு வாழ வேண்டும்.
தேசியம் பேசியவர்கள மற்றும்; தற்போது அதுபற்றி பேசிக் கொண்டிருக்கின்றவர்களின் ஒரே ஒரு ஆயுதம் கோசம்தான். அதாவது தேசியம் பேசிப் பேசி எமது பிரதேசத்தையே நாசமாக்கி சுடுகாடாக்கினார்கள். அத்தோடு நின்றுவிடாது கோசம் எழுப்பி எழுப்பி எம்மை எல்லாம் விசமாக்கி நாசமாக்கினார்களே தவிர, வேற எதனையுமே சாதிக்கவில்லை. அதனால்தான் நான் தற்போது கூறுகின்றேன் கடந்தகாலங்களில் நாம் விட்ட தவறை இனிவரும் காலங்களில் நிச்சயம் விடக் கூடாது.
இனிவருகின்ற காலங்களில் கிழக்கு தமிழ் மக்கள் யாரிடமும் ஏமாறக் கூடாது.எம்மை யாரும் ஏமாற்றக் கூடாது என்கின்ற சிந்தனை மாற்றத்திற்கு கல்வி அவசியம் என்பதனை உணர்ந்துதான் கல்வி அபிவிருத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டடு வருகின்றேன்.
இன்று திறக்கப்பட்டிருக்கின்ற படுவான்கரைக்கு சொந்தமான மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் ஊடாக பல கல்வி புரட்சியை ஏற்படுத்தி அறிவுபூர்வமாக சிந்தித்து செயற்படுகின்ற ஆரோக்கியமான ஓர் சமூகத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஏன் என்றால்; இந்த பழுத்த தமிழ் தேசிய வாத அரசியல் நடாத்துகின்ற கூட்டத்தினர் படுவான்கரை மக்களைத்தான் பகடக்காயாக பயன்படுத்திவிட்டு அவர்களை கணக்கெடுக்காது சென்று விடுகின்றார்கள். அதற்கு காரணம் கல்வி அறிவிலே சற்று பன்தங்கியவர்களாக எம்மை கருதி அவர்கள் இலகுவாக எமது பிரதேச மக்களை ஏமாற்றி விடுகின்றார்கள். இவ்வாறான ஏமாற்றங்கள் இனிவருகின்ற காலங்களில் இடம் பெறக் கூடாது என்பதற்கு இந்த கல்வி வலயமும் பெரும் பங்காற்றும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.எனவே நாங்கள் அனைவரும் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எமது எதிர்கால சந்ததியினர்க்கு ஓர் நல்ல களம் அமைத்தக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் தனதுரையிலே குறிப்பிட்டார்.

»»  (மேலும்)