1/09/2014

| |

ஏறாவூர்-05ம் குறிச்சியில் இருந்து முதல் முறையாக குறுந்திரைப்படம்

மட்டக்களப்பு ஏறாவூர்-05ம் குறிச்சியில் இருந்து முதல் முறையாக  குறுந்திரைப்படம் ஒன்று  வெளிவரவுள்ளது.
ஏறாவூர் ஐந்தாம் குறிச்சியில் இருந்து வெளிவரும் 'மறுதாக்கம்" என்ற மேற்படி குறுந்திரைப்படமானது கைவிடப்படும் முதியோர்களின் அவலங்களையும் அதனால் ஏற்படும் மறுதாக்கத்தினையும் மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளது.
சக்சஸ் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர் மதனுகண்னாவின் இயக்கத்தில் வெளியாகும் இக் குறும்படத்தில்  நிமல்ராஜ், கிருஷ்னா, மதனுகா, மிதுசாந்த், மதனுகன்னா, கௌரிசாந்த், ஆகியோர் நடித்திருக்கின்றார்கள் இப் படத்தின் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் போன்றவற்றை விகிர்தன் மிகச் சிறப்பாக செய்துள்ளார்.
இத் திரைப்படத்தின் வெளியீடு வெகுவிரைவில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தினால் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வைத்து வெளியிடப்படவுள்ளது.