1/28/2014

| |

ஏறாவூர்ப்பற்று -2 கோட்டக்கல்வி அலுவலகம் திறந்துவைக்கும் நிகழ்வு

செங்கலடி வதுளை வீதியில் அமைந்துள்ள கல்குடா வலயத்திற்குட்பட்ட ஏறாவூர்
பற்று -2 கோட்டக்கல்வி அலுவலகம் திறந்துவைக்கும் நிகழ்வு இன்று (27.01.2014) ஏறாவூர்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.பொ.சிவகுரு தலைமையில் இடம்பெற்றது.  
 
இந்நிகழ்விற்கு ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் முதன்மை விருந்தினராக வரவேற்கப்பட்டு தேசிய கொடியினையேற்றியதைத் தெடர்ந்து ஏறாவூர் பற்று-2 கோட்டக்கல்வி அலுவலகத்துக்குரிய பெயர் பலகையின் திரை நீக்கம் செய்ததுடன் நாடாவெட்டி புதிய அலுவலக கட்டிடத்தை திறந்துவைத்தார். அத்தோடு புதிய அலுவலக வளாகத்தில் தென்னைமரக்கன்று நடும் நிகழ்வும் இடம்பெற்றது.
 
இந்நிகழ்விற்கு கௌரவ விருந்தினராக கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.செ.சிறிகிருஸ்ணராஜா மற்றும் கல்குடா வலய பிரதிக் கல்விப்பணிப்பளர்கள் கோட்டக்கல்விப் பணிப்பாளார்கள் மற்றும் பாடசாலைகளின் அதிபர்களும் கலந்துகொண்டார்கள்.