1/16/2014

| |

களுதாவளையில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மண்டபம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட களுதாவளையில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மண்டபம் உத்தியோகபூர்வமாக மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வும் கௌரவிப்பு மற்றும் பரிசளிப்பு நிகழ்வும் இன்று சிறப்பாக நடைபெற்றது.
களுவதாவளை பிரதேசத்தில் நீண்டகாலமாக கலாசார மண்டபம் இல்லாத குறை இதன் மூலம் தீர்த்துவைக்கப்பட்டுள்ளது.
இதனை உத்தியோகபூர்வமாக பொதுமக்களின் பாவனைக்கு வழங்கும் நிகழ்வு சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய தலைவர் வேல்வேந்தன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மாவட்ட பொறியியலாளர் எம்.மங்களேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் கலந்துகொண்டார்.
இதன்போது சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்களினால் ஆசியுரை வழங்கப்பட்டதுடன் பல்வேறு மட்டங்களில் சாதனைகள் படைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இதுபோன்று கிராமத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களும் கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.