1/01/2014

| |

மலர்கின்ற புத்தாண்டு வறுமை ஒழிகின்ற புத்தாண்டாக மிளிர வேண்டும்

மலர்கின்ற புதுவருடமானது  வறுமையற்றதோர் ஆண்டாக மிளிர  எனது நல்வாழ்த்துக்கள் என முன்னாள் முதல்வரும், ஜனாதிபதியின்; ஆலோசகரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவனேசதுரை – சந்திரகாந்தன் அவர்கள் தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு மறைந்து 2014 என்னும் புதிய ஆண்டு மலர்கின்றது. இப்புதுவருடத்திலிருந்து எமது நடவடிக்கைகள் வீறுநடைபோட்டு, புதியதோர் வாழ்க்கைத்தரம் உயர்வான ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு நாம் ஒவ்வொருவரும் திடசங்கற்பம் பூணவேண்டும்.
இப்புதுவருடத்தில் எமது நாட்டில் சாந்தியும், சமாதானமும் என்றும் நிலைத்திருக்க நாம் அனைவரும் பிரார்த்திப்பதுடன், மலர்கின்ற புதுவருடமானது அனைவருக்கும் வறுமை நிலை மாற்றமடைந்து இனியதோர் ஆண்டாக மிளிர எனது இதயம்கனிந்த நல்வாழ்த்துக்களைக் கூறிக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
-    சிவனேசதுரை சந்திரகாந்தன் -
(முன்னாள் முதல்வர், ஜனாதிபதியின் ஆலோசகர், மாகாண சபை உறுப்பினர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர்)