2/28/2014

| |

மீண்டும் வளம் பெறும் குடிசை கைத்தொழில்

 கிழக்குமாகாணம் ‘கிழக்கின் உதயம்’ மற்றும் திவிநெகும எழுச்சிதிட்டம் போன்ற பல்வேறு வேலைத்திட்டங்கள் மூலம் அபிவிருத்தி செய்யப்பட்டுவருகின்றது. மக்களின் வறுமை நிலையை போக்கு வதற்காக வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களை கிராமப்புற மக்களிடம் கொண்டு செல்லும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
அந்தவகையில் நாட்டின் வளர்ச்சியில் கிராமப்புறங்களே முக்கிய பங்களிப்புச் செய்து வருகின்றன. கைத்தொழில் துறையை எடுத்துக்கொண்டாலும் சரி, விவசாயத்துறையை எடுத்துக் கொண்டாலும் சரி தேசிய உற்பத்தியில் கிராமப் புறங்களின் பங்களிப்பு மிக வும் அளப்பரியதாகும். இதன் அவசி யத்தை உணர்ந்து அரசாங்கம் ஒவ்வொரு திட்டத்தையும் முன்வைத்து அப்பிரதேச மக்கள் மேலும் விழிப்படையும் வகை யில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கம் நடத்தும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி மூலம் அந்தந்த மாகாணங்கள், மாவட்டங்களில் குடி சைக்கைத் தொழில் விருத்திக்கு வேண்டிய உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
சமீபகாலமாக மட்டக்களப்பு மாவ ட்டத்தில் குடிசைக் கைத்தொழிலில் ஈடுபடுபவர்களின் வீதம் அதிகரித்துள்ளது. இங்குள்ள கிராமங்களில் மாலை நேரங்களில் ஒருவரது வீட்டு முற்றத்தில் ஒன்று கூடும் பெண்கள் பனையோலை, பிரம்பு போன்றவற்றைக் கொண்டு அழகிய கைவினைப் பொருட்களை உருவாக்கிவருகின்றனர். இவ்வாறு இவர்கள் செய்யும் பொருட்களுக்கு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளிடம் அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் முனைப் பற்று பிரதேச செயலகப் பிரிவிற் குட்பட்ட தாளங்குடா கிராமம் பனை யோலை மாதிரிக் கிராமமாக தெரிவு செய்யப்பட்டு அங்குள்ளவர்களின் பனம்பொருள் கைவினைப் பணிக்கான ஊக்கு விப்புக்களை அரசாங்கம் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாது கிராமிய ரீதியில் குடிசைக் கைத்தொழிலை மேற்கொள் வோர், அதனை பயில விரும்புவோர் ஆகியோரை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளன. இதற்கமைய நவீன இயந்திரங்களை அறிமுகம்செய்து அவற்றை இயக்குவதற் கான பயிற்சிபெறும் வழிவகைகள் மற்றும் சிறியளவில் குடிசைக் கைத் தொழிலை மேற்கொள்பவர்களுக்கு தேவையான இயந்திரம் மற்றும் உத விகளும் வழங்கப்படவுள்ளன. இதன் மூலம் சிறுகைத் தொழிலாளர்கள் நன்மையடையவுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே குடிசைக் கைத்தொழில் காணப்படுகின்றது. இங்கு நவீன தொழில் நுட்பம் மற் றும் சந்தைப்படுத்தல் தொடர்பிலும் போதிய அறிவின்மை காணப்படுவதாக வும் சுட்டிக்காட்டப் படுகின்றது. இதனை மாற்றியமைக்கும் வகையில் அரசாங்கம் திவிநெகும வாழ்வின் எழுச்சி திட்டம் ஊடாக அபிவிருத்தியைக் கட்டியெழுப்ப திட்டமிட்டுள்ளது.
ஒரு காலத்தில் குடிசைக் கைத் தொழிலில் கொடிகட்டிப்பறந்த மட்டக் களப்பு பிரதேசத்தின் கைத்தொழில் துறை மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதே இங்கு வாழும் குடிசைக்கைத்தொழிலாளர்களது எதிர்பார்ப்பாகும்.
»»  (மேலும்)

| |

இலங்கை உயர்மட்ட குழு அடுத்த வாரம் ஜெனீவா பயணம் * ஆதரவு திரட்டும் பேச்சுவார்த்தைகள் மும்முரம்

25ஆவது ஜெனீவா மனித உரிமை பேரவையில் பங்கேற்கும் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தலைமையிலான உயர் மட்டக் குழு அடுத்தவாரம் முதற்பகுதியில் ஜெனீவா பயணமாகிறது. இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க 9ஆம் திகதி தான் அங்கு செல்ல இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வர உள்ள பிரேரணைக்கு எதிராக மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் ஆதரவை பெறுவதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் முதல் ஜெனீவாவில் இடம்பெற இருப்பதாக வெளிவிவகார அமைச்சு கூறியது. இதே வேளை ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வு மார்ச் 3ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை இடம்பெறுகிறது. இலங்கை தொடர்பான விவகாரம் 2 ஆம் திகதி ஆராயப்படவிருப்பதாக மனித உரிமைப் பேரவை நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை இலங்கை குழுவின் தலைவரான அமைச்சர் ஜி. எல் பீரிஸ் எதிர்வரும் 5 ஆம் திகதி மனித உரிமை பேரவையில் உரையாற்ற இருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார். இலங்கை குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ள அங்கத்தவர்கள் குறித்து இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதியின் செயலாளர் வெளிநாட்டில் உள்ளதால் அவர் இந்தக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து தற்போதைக்கு கூற முடியாது என்றும் அவர் கூறினார்.
ஜெனீவா மாநாடு குறித்து கருத்துத் தெரிவித்த குழு உறுப்பினரான அமைச்சர் மஹிந்த அமரசிங்க இலங்கைக்கு அங்கத்துவ நாடுகளின் ஆதரவுகளைத் திரட்டுவதற்கான இறுதிச் சட்ட முன்னெடுப்புகள் இலங்கைக்குழுவினால் ஜெனீவா மாநாட்டின் போது பல்வேறு மட்டங்களில் மேற்கொள்ளப்படும் என்றார். கடந்த வருடத்தை விட இம்முறை இலங்கைக்கு கூடுதலான நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காக இலங்கைக்குழு ஒருமித்த முயற்சியை எடுக்கும் எனவும் இதே வேளை இலங்கைக்கு எதிராக ஆதரவு திரட்டும் முயற்சிகளும் பரந்தளவில் முன்னெடுக் கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் அமுனுகம இந்தியா பயணம்
இதேவேளை அமைச்சர்கள் பலரும் பல்வேறு நாடுகளுக்கு சென்று இலங்கைக்கு ஆதரவு திரட்டுவதற்காக அந்த நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தி வருகின்றனர். சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம, ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக இந்தியாவுக்கும் எதியோப்பியாவுக்கும் விஜயம் செய்தார். எதிர்வரும் 2ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருக்கும் அவர் அந்த நாட்டுத் தலைவர்களை சந்தித்து பேச உள்ளதோடு, அடுத்து அவர் எதியோப்பியா செல்கிறார். அங்கு 5ஆம் திகதி வரை தங்கியிருந்து அந்த நாட்டுத் தலைவர்களை சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இந்திய தலைவர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளரும் பங்கேற்க இருப்பதாக அறிய வருகிறது. அதே வேளை ஜெனீவாவுக்கான இலங்கை குழுவில் அமைச்சர் சரத் அமுனுகமவும் இடம் பெற்றுள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் கூறின. அடுத்த 4ஆம் திகதி மியன்மாரில் ஆரம்பமாகும் பீட்ஸ்டெக் மாநாட்டில் ஜனாதிபதி பங்குபற்ற இருப்பதாகவும் இதன்போது இந்தியா உட்பட பல நாட்டு தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும் ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க கூறினார்.
»»  (மேலும்)

| |

வந்தாறுமூலை மத்திய மாக வித்தியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி

வருடாந்த இல்லங்களுக்கிடையிலான திறனாய்வு போட்டியானது சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் திரு.தி.ரவி தலைமையில் இன்று (26.02.2014) நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்குடா வலய கல்விப்பணிப்பாளர் திரு.எஸ்.ஸ்ரீகிருஸ்ணராஜா கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதியாக ஏறாவூர் பற்று-2 கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.பொ.சிவகுரு அவர்களும் பிரதேச அபிவிருத்திகுழு இணைப்பாளர் திரு.ஆ.தேவராஜா மற்றும் பாடசாலை அதிபர்கள் உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.கே.சுபாஸ்சந்திரன் உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு.ரீ.ரமேஸ் தீப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் வரவேற்க்கப்பட்டு கொடியேற்றல் நிகழ்வுடன் வலயக்கல்விப் பணிப்பாளரினால் விளையாட்டுகள் ஆரம்பிக்கப்பட்துடன் இல்ல மாணவர்களினால் ஒலிம்பிக் தீபமேற்றப்பட்டு அனைத்து விளையாட்டுக்களும் இடம்பெற்றது. விளையாட்டுகளில் திறமைகளை வெளிக்காட்டி வெற்றியீட்டிய வீரர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கப்பட்டது. அதிதிகளுக்கான நினைவு பரிசில்களும் பாடசாலை அதிபரினால் வழங்கி வைக்கப்பட்டது அத்துடன் பாடசாலையின் அதிபர் மற்றும் அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றது. நல்லையா ராமகிருஸ்ணா விவேகானந்தா விபுலானந்தா இல்லங்களுக்கிடையில் அதிகூடிய விளையாட்டுகளில் வெற்றிபெற்ற இல்லங்கள் மற்றும் இல்ல அலங்காரத்துத்தில் வெற்றி பெற்ற இல்லங்களுக்குமான வெற்றி கேடயங்களை வலயக்கலிவ் பணிப்பாளரினால் வீரர்களுக்கு வழங்கப்பட்டது. மழைக்கு மத்தியில் இடம்பெற்ற இறுதி வருடாந்த விளையாட்டுப்போட்டிகள் அனைத்தும் பாடசாலையின் ஆசிரியாகள்; மற்றும் மாணவர்களின் சிறந்த உத்துழைப்புடன் சிறப்பான முறையில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

2/27/2014

| |

நாவிதன்வெளி பிரதேச சபைக் கூட்டம்; கூட்டமைப்பினர் வெளிநடப்பு

நாவிதன்வெளி பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்றுக்கொண்டிருந்த போது, நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டவாறு கூட்டத்தொடர் நடைபெறவில்லை என தெரிவித்து விட்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மூன்று உறுப்பினர்களும் சபை அமர்விலிருந்து வெளிநடப்பு செய்தனர். 

நாவிதன்வெளி பிரதேச சபையின் 34ஆவது மாதந்தக் கூட்டத் தொடர் செவ்வாயன்று பிற்பகல் நாவிதன்வெளி பிரதேச சபையின் உபதவிசாளர் ஏ.ஆனந்தன் தலைமையில் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது தமிழரசுக் கட்சி உறுப்பினர்களான ஏ.பிள்ளையான்தம்பி, எஸ்.குணரெட்ணம், யூ.தேவன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ஐ.தஜாப்;தீன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர் ஏ.சுதர்சன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு  உறுப்பினர் ஏ.கே.அப்துல் சமட் உள்ளிட்ட அனைத்து உறுப்பினரின் பங்கேற்புடன் கூட்டத்தொடர் ஆரம்பமானது.   

நாவிதன்வெளி பிரதேச சபையின் கூட்டத் தொடர் இடம்பெறுகையில் நிகழ்ச்சி நிரலில் சபை உறுப்பினர்களுக்கு கருத்து தெரிவிப்பதற்கான நேரம் ஒதுக்கப்படவில்லை.

இ;ந்நிலையில், நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டவாறு கூட்டத்தொடர் நடைபெறவில்லை எனவும் தெரிவித்து விட்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மூன்று உறுப்பினர்களும் சபை அமர்விலிருந்து வெளிநடப்பு செய்தனர். 
»»  (மேலும்)

2/26/2014

| |

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தென்னாபிரிக்காவினால் நிராகரிப்பு

நாடு கடந்த தமிbழ அரசாங்கத்தை ஏற்குமாறு விஷ்வநாதன் ருத்ரகுமார் விடுத்த கோரிக்கையை தென் ஆபிரிக்கா நிராகரித்துள்ளதோடு, இலங்கையை பிளவுபடுத்தும் எந்த முயற்சிக்கும் தென் ஆபிரிக்கா ஒத்துழைக்காது என தென் ஆபிரிக்க தலைவர்கள் தன்னிடம் உறுதியளித்ததாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
தனது தென் ஆபிரிக்க விஜயத்தின்போது பல தென் ஆபிரிக்க தலைவர்களை சந்தித்ததாக கூறிய அவர், இலங்கை மக்கள் தேசிய நல்லிணக்கத்துடன் செயற்படுவதை காண்பதே தங்களது எதிர்பார்ப்பு என அவர்கள் குறிப்பிட்ட தாகவும் அமைச்சர் கூறினார்.
ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு தென் ஆபிரிக்காவின் ஆதரவை பெறுவதற்காக அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தலைமையிலான குழு தென் ஆபிரிக்கா பயணமானது. நாடு திரும்பியுள்ள அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தனது தென்ஆபிரிக்க விஜயம் குறித்து பெந்தர - எல்பிட்டிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய செயற்குழு கூட்டத்தில் கருத்துத் தெரிவித்தார்.
அன்று ஆயுத பலத்தினால் பெற முயன்ற ஈழத்தை தற்பொழுது தமிழ் டயஸ்போரா உலகம் முழுவதும் சதி செய்து பெற முயல்கின்றனர் என்றும் கூறினார்.
இலங்கை குறித்து தென் ஆபிரிக்காவுக்கு பெரும் கெளரவம் இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், புலிகளின் பிம்பம் சர்வதேச மட்டத்தில் குழப்பி வருகிறது என்றும் கூறினார்.
எமது நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்படுத்தவும் நாம் அடைந்துள்ள பொருளாதார அபிவிருத்தியை குழப்பவும், தமக்கு தேவையானவாறு ஆட்டக்கூடிய பொம்மை அரசாங்கமொன்றை உருவாக்கவுமே மேலைத்தேய நாடுகள் முயல்கின்றன. தேசிய நோக்கின் அடிப்படையில் செயற்படுவதாலே சில சர்வதேச நாடுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விரும்பவில்லை.
மேலைத்தேய நாடுகளின் முன் தலை சாய்ப்பதற்கு அவர் தயாராக இல்லை. சர்வதேச விசாரணை கோருமளவிற்கு எமது நாட்டில் என்ன தவறு நடந்தது? யுத்தத்தின்போது பயங்கரவாதிகளால் படைவீரர்கள் கொல்லப்படுவர். படை வீரர்களினால் பயங்கரவாதிகள் கொல்லப்படுவர். இதில் எதற்கு விசாரணை நடத்துமாறு கோருகின்றனர். எமக்கு எதிராக பிரேரணை கொண்டுவரும் அதே நபர்கள்தான் ஜெனீவாவில் எமக்கு எதிராக விசாரணை நடத்த உள்ளனர். அரசியல் நோக்கமே இதன் பின்னணியில் இருக்கிறது.
பிரபாகரனின் பயங்கரவாத சவாலுக்கு அன்று நாம் ஒன்றிணைந்து ஒரே இனமாக முகம் கொடுத்தோம்.
இந்த சர்வதேச சவாலையும் நாம்ஒரே இனமாக ஒன்றுபட்டு வெற்றி கொள்ள வேண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையாத காரணத்திற்காக மேலைத்தேய சதிகாரர்கள் யுக்ரேனை பழிவாங்குகின்றனர். அந்த நாட்டு எதிர்க் கட்சியை கைக்குள் போட்டுக்கொண்டு மக்களை தூண்டி விடுகின்றனர். இது தான் மனித உரிமை குறித்து எமக்கு கற்பிக்கும் நாடுகளுடைய அரசியல்பாடமாக உள்ளது.
எம்மைப் போன்று சுயமாக எழுந்து நிற்கும் நாட்டையும் அதன் தலைவர்களையும் அழிப்பதற்காக சர்வதேச சக்திகள் நாட்டிற்குள் குழப்பம் செய்கின்றன.
கடந்த தேர்தலைவிட ஒரு வாக்காவது மேலதிகமாக வழங்கி நாட்டு மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இருப்பதை உலகத்திற்கு காண்பிக்க வேண்டும். எம்மை காலால் இடிக்கும் மேலைத்தேய நாடுகளுக்கு இது நல்ல பதிலாக அமையும் என்றார்.
»»  (மேலும்)

2/25/2014

| |

மட்டக்களப்பை தாய்வீடாகக் கருதி மக்களுக்கு பணி புரியவென்றே வாழ்ந்தவர் வெபர் அடிகளார்

இலங்கை மண்ணில் திருகோணமலை மறை மாவட்டம் என்கின்ற பெயரில் புதிய நிர்வாக அலகொன்றினைக் கத்தோலிக்கத் திருச்சபை உருவாக்கியது. 12 ஆம் பத்திநாதர் பாப்பரசர் அதற்கான அங்கீகாரத்தை வழங்கியிருந்தார்.
இந்த புதிய மறை மாவட்டமானது நன்கு அடித்தளமிட்டு ஆரம்பிக்கப்பட வேண்டும் என்கின்ற நோக்கில் பிரான்ஸ் தேசத்தின் ஷம்பெய்ன் மாநில இயேசு சபைத் துறவிகளிடம் அது ஒப்படைக்கப்பட்டது.
அது மட்டுமல்லாது அந்நாட்களில் அந்தப் பொறுப்பினை ஏற்று செயற்படுமளவுக்குப் போதிய குருக்களும் உள்நாட்டில் இருக்கவில்லை. நீண்ட காலமாக தமது கடும் உழைப்பால் புதிய மறை மாவட்டத்தை உருவாக்கி திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை ஆகிய பகுதிகளில் கல்வி முதல் ஆன்மீகம் வரையிலும் முன்கொண்டு சென்ற அந்தத் துறவிகள் இரண்டாம் உலகப் போரின் போது பிரான்ஸ் தேசம் அனுபவித்த கொடிய துன்பத்தின் விளைவாகத் தொடர்ந்தும் சேவையாற்ற போதிய ஆள்பலமும் நிதி வசதியும் அற்றுப் போன நிலை உருவாகவே அமெரிக்க தேசத்தின் நியூ அர்லியன்ஸ் மாகாணத்தின் இயேசு சபைத் துறவிகளின் உதவியை நாடினர்.
தொடக்கத்தில் ஆசையும் ஆர்வமும் எழுந்தாலும் பெரிய அளவில் பலன் இருக்கவில்லை. இருப்பினும் நாளடைவில் அங்கிருந்து புதிய துறவிகள் முன்வந்து தாம் கேட்டிராத கண்டிராத அந்தப் பூமிநோக்கி ‘இறைவனின் திராட்சைத் தோட்ட ஊழியர் நாம்’ என்கின்ற தொண்டு மனப்பான்மையுடன் இலங்கை வந்து சேர்ந்தனர்.
அவர்களது முக்கிய பணித்தளமாக மட்டக்களப்பு, திருகோணமலை, கல்முனை, காலி போன்ற பகுதிகள் அமைந்திருந்தன.
இந்த வகையில் 1947 ஆம் ஆண்டில் சுமார் 36 நாட்கள் கப்பல் பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்து சேர்ந்த துறவிதான் ஹரல்ட் ஜோன் வெபர் என்கின்ற இயேசு சபைக் குரு. மட்டக்களப்பு என்று செய்த தவமோ தெரியவில்லை. அவரை தன்னகத்தே கொண்டிருக்கும் பாக்கியத்தை அது பெற்றிருந்தது.
அவர் முதலில் புனித மிக்கேல் கல்லூரியின் மாணவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். மாணவர்களை நல்வழிப்படுத்தும் பணியோடு தன்னை நிறுத்திக் கொண்டு விடாமல் படிப்படியாக மாணவர்களது விளையாட்டுத் திறனை விருத்தி செய்யும் பணியிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அதனால் சுவடுகள போட்டிகளுள் அவர் வந்த இரண்டு வருட காலத்துக்குள்ளேயே தேசிய மட்டத்தில் முதல் தரத்துக்கு புனித மிக்கேல் கல்லூரி மாணவர்களைக் கொண்டு சென்ற பெருமை அவரையே சாரும்.
கிரிக்கெட் துறையைப் பொறுத்த வரையிலும் மாணவர் மத்தியில் இருந்த அடிப்படையான திறனை மெருகுபடுத்தி அதை மென்மேலும் பிரகாசிக்கச் செய்தவர் அருட் தந்தை வெபர் அடிகள்.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியானது கூடைப் பந்தாட்டத்திற்குப் பெயர் போனது. அதுவரை கால்பந்தாட்ம், கரப்பந்தாட்டம், கிரிக்கெட் மற்றும் சுவடுகள் போட்டிகள் என்ற அளவிலே மட்டுப்படுத்தப்பட்டிருந்த மாணவர் திறனுக்கு தீனியாக இங்கு வந்த அமெரிக்கா இயேசு சபைத் துறவிகள் அறிமுகப்படுத்திய கூடைப்பந்தாட்டத்தில் முழு இலங்கைத் தீவுக்குமே முன்மாதிரியாக அந்தக் கல்லூரி விளங்கிய காலகட்டம் ஒன்று இருந்தது.
அதற்கு உதவியாக ஒரு அதிசிறந்த கூடைப் பந்தாட்டத் திடலை உருவாக்கி அதில் தண்டவாளங்களில் பாவிக்கப்படும் இரும்புச் சட்டங்களைக் கொண்டு தொழில்நுட்ப அறிவு கொண்ட அருட் தந்தை ரீமன் அவர்களின் உதவியுடன் விளைத்தெடுத்து அற்புதமான கூடைதாங்கி இரண்டை இரு பக்கங்களிலும் நிறுவினார். அந்நாளைய நியமங்களின்படி இத்தகைய பணியொன்றை உள்ளூரில் செய்து முடிப்பதென்பது ஒருமலைப்பான காரியமேயாகும்.
அறுபதாம் ஆண்டு வரை மட்டக்களப்பில் சொல்லத்தக்கதாக ஒரு விளையாட்டுத் திடல் இருந்ததில்லை. கோட்டையை அண்டியும், வின்சன்ட் மகளிர் கல்லூரிக்கு முன்னராகவும் ஒரு பழைய சேமக்காலை இருந்து வந்தது. தனது சொந்த முயற்சியால் அந்த சேமக்காலையை அப்புறப்படுத்தி இடம் மாற்றிவிட்டு, கல்லோயா திட்டத்திற்கென பயன்பட்ட கனரக இயந்திரங்களை வாடகைக்கு அமர்த்தி கொண்டு திடலாக்கி அதை சமப்படுத்தி ஒரு முற்றவெளியை அவர் அமைத்துக் கொடுத்தார்.
அவரது முயற்சியின் காரணமாக அதில் பார்வையாளர் அரங்கொன்றையும் அமைக்கப் பண்ணினார். அது இற்றைநாள் வரை அவர் பெயரிலேயே வெபர் விளையாட்டரங்கு என்று மட்டக்களப்பு மாநகர சபையால் பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த மைதானம் அவருக்கோர் நினைவுச் சின்னம்.
அந்த மைதானத்தை புனித மிக்கேல் கல்லூரியின் பாவனைக்கென்று மட்டும் அவர் உருவாக்கவில்லை. ஏனைய சுற்றயல் பாடசாலைகளும், விளையாட்டு பிரியர்களும் பயன்படுத்தவே உருவாக்கினார். தினமும் காலை, மதியம், பிற்பகல் என்றில்லாமல் தோளில் ஒரு பையையும் தொங்கவிட்டுக் கொண்டு மைதானத்துக்குள் இறங்கி விடுவார்.
தன் கைகளால் கல் பொறுக்கி முள்பொறுக்கி பைக்குள் போட்டுக் கொண்டு ஒதுக்குப் புறமாக அவற்றை அப்புறப்படுத்தி விடுவார். இதனால் அவரைச் சுற்றிலும் இளையோர் கூட்டம் மொய்த்திருக்கும். அவர்களும் கல், முள் பொறுக்கி அவருடைய பையில் போட்டு விடுவதைக் காணக் கூடியதாக இருக்கும்.
கல்லூரியில் பெண்களும் படித்த காலத்தில் வலைப்பந்தாட்டம் மற்றும் கூடைபந்தாட்ட அணிகளை உருவாக்கி அவர்கள் ஆண்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்களல்ல என்பதை நிரூபிக்கப் பண்ணினார். அவர் எல்லா விளையாட்டுக்களையும் அத்துப்படியாக அவற்றின் விதிமுறைகளோடு அறிந்து வைத்திருந்தார்.
விளையாட்டில் அவர் ஒன்றும் பெரும் வீரனாக இருந்திருக்கவில்லை. விளையாட்டின் வழியே இளைஞர்களை உருவாக்கும் தனது ஆசையை நிறைவேற்றவே அவர் தம்மை முற்று முழுதாக அந்தத் துறையில் ஈடுபடுத்திக் கொண்டார். பல விளையாட்டு அமைப்புக்களை மட்டக்களப்பில் உருவாக்கினார். அவற்றை தலைமை தாங்கி வழிநடத்தவும் செய்தார். அவரில்லாத விளையாட்டுத்துறை மட்டக்களப்பில் இருந்தது கிடையாது. மட்டக்களப்பு மண்ணின் விளையாட்டுச் சின்னமாக அவர் இருந்தார்.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் அவருக்குப் பெரும் செல்வாக்கு இருந்தது. அவரை வாயால் செல்லமாக அழைக்கப்பட ஏங்கி நின்ற மாணவர் ஏராளம். ஒவ்வொரு மாணவனையும் தனித்தனியாக அழைப்பித்து அவர்களுடைய எதிர்காலம் குறித்து அவர்க ளுடைய நடைமுறைகள் குறித்து கேட்டறிவார். நல்லவர்களாக அவர்கள் வாழ அறிவுரை பகர்வார்.
சாதி, மத, இன பேதமெல்லாம் கடந்த மனிதராக அவர் இருந்தார். மாணவர்களின் ஆன்மீகத்தை வளம்படுத்த சிறுபராயம் முதல் நற்கருணை வீரர் சபை, மாதா சபை போன்ற பல அமைப்புகளில் அவர்களை ஈடுபடுத்தி நல்வழிசெல்ல உதவினார். உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு சமயம் படிப்பிக்கும் போதெல்லாம் குடும்பம் ஒன்றின் உயர் பெறுமானங்களை எடுத்துச் சொல்லி அவற்றை மதித்து வாழச்சொல்லிக் கொடுப்பார். வருடாந்த தியானங்கள், சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதெல்லாம் திருப்பலி என்று மாணவர்களை அருள் வழியில் நடக்கப் பண்ணிய ஞானத் தந்தை அந்த அருட் தந்தை வெபர் அடிகளார்.
பிரச்சினைக்குரிய காலப் பகுதியில் துடிப்பான மாணவர்களை தெருக்களில் சுற்றித்திரிந்து ஆபத்துக்களில் மாட்டிக் கொள்ளாது காப்பதற்காக தங்கள் இயேசு சபை இல்லத்தில் ஒரு சிறுபடக் கொட்டகை அமைத்து நல்ல பெறுமானங்களைக் வெளிப்படுத்த கூடிய சிறியவர்களுக்கு ஆர்வத்தை கொடுக்கவல்ல கார்ட்டூன் படங்களை வீடியோவில் போட்டுக் காட்டி பாதுகாத்துக் கொடுத்தவர்.
அவருக்கு இலங்கை தமிழர்களுடைய வார்த்தை உச்சரிப்பு மிகவும் பிடித்தமானது. ‘நீங்கள் தமிழை உச்சரிக்கும் போது நெஞ்சின் அடியிலிருந்து அதன் நாதம் பிறந்து வருகிறது. மேகம் என்று சொல்லிப்பார். அதன் ஒலி எங்கிருந்து வருகிறது? இதனால் தான் உங்களுடைய உறவும் நெஞ்சில் அடித்தளத்தினின்றும் வருகிறது என்று நான் முற்றிலும் ஏற்கிறேன்’ என்பார் அவர். அவர் எந்த அளவுக்கு எங்களையும் இந்த மண்ணையும் நேசித்தார் என்பதற்கு ஒரு நல்ல சம்பவம் இருக்கிறது.
வெபர் அடிகள் பேசினால் இடி முழங்குவது போலிருக்கும். பாடசாலை மாணவர் மத்தியில் அவர் பேசவரும் போது ஒலி வாங்கியை அலாக்காகத் தூக்கி ஒரு பக்கமாக வைத்து விட்டுத்தான் பேசத் தொடங்குவார். அவர் பேசினால் அதை அயல் தெருவால் போகிறவர்கள் தெளிவாகக் கேட்கக் கூடியதாகவிருக்கும்.
துரதிஷ்டவசமாக அவரது தொண்டையில் புற்று நோய் ஏற்பட்டது. அதிர்ச்சியில் கல்லூரியே உறைந்து போனது. அதற்கான சத்திர சிகிச்சைக்காக அவரது நண்பர்கள், உறவினர்கள் கேட்டதற்கிணங்க அமெரிக்க சென்றார்.
சத்திர சிகிச்சை முடிந்த கையோடு பெற வேண்டிய தொடர் சிகிச்சைகளையும் பெற்றுக் கொண்டு மட்டக்களப்பிற்கு வந்து விட்டார் மனிதர்.
வந்த மறுநாளே மாணவர்கள் மத்தியில் பேசவந்தார். ஒலி வாங்கியை தூக்கி ஒரு பக்கம் வைக்கவில்லை. தொண்டையிலிருந்து சத்தம்வரவில்லை. அழுதார். அவர் கண்ணீர் விட்டு அழுதார். ஒருவாறாக அடைத்த குரலின் எங்களுக்கெல்லாம் நன்றி சொல்லி விட்டு, எங்களைப் பார்க்கத் திரும்பவும் ஓடி வந்ததாகச் சொன்ன போது ஈரமில்லாக் கண்கள் ஒன்றும் அங்கிருக்கவில்லை.
தொடர்ந்து தமது பணியில் ஈடுபட்டுத் தனது பயிற்சிகளின் மூலம் குரல் வளத்தை மீட்டுக் கொண்டு வரும்வேளையில் இரண்டாவது தடவையாகவும் அதே இடத்தில் புற்றுநோய். தாய் நாடு சென்றார்.
சிகிச்சை முடிந்ததும் அவரது வைத்தியர்கள், உறவினர்கள், நண்பர்கள், இயேசு சபையினர் அவரை அமெரிக்காவிலேயே தங்கிவிடும்படி வற்புறுத்தியிருக்கிறார்கள். தொடர்ந்த கண்காணிப்புக்கு அவர் உட்பட வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள். நான் இறப்பதாக இருந்தாலும் மட்டக்களப்பு மண்ணிலேயே அது இடம்பெற வேண்டும் என்று கூறி இங்கு ஓடோடி வந்து விட்டார். அதை எங்களுடன் பகிர்ந்து கொண்டு ‘நான் உங்களோடு இருக்கவே விரும்புகின்றேன்’ என்று சொன்னார். அவர் சொன்னபடி இறுதி மட்டும் எங்களோடே வாழ்ந்தார்.
1998 இல் அவர் தன்னை இறைவனிடம் ஒப்படைத்துக் கொண்டார். அவரைப் பிரிய விரும்பாத அவரது பிள்ளைகள் நாங்கள். அவரது பூதவுடலைத் தக்க மரியாதையுடன் கல்லூரி வளாகத்லேயே சமாதி செய்தோம்.
அவரது நூறாவது பிறந்தநாள் நிகழ்வுகள் மட்டக்களப்பில் நடைபெற்றன. இந்த நேரத்தில் வரவுள்ள ஆண்டு முழுவதும் அவரை கனம் பண்ணத்தக்கதாக நடைபெறவுள்ள நிகழ்வுகளில் பங்களாளர்களாக அமைவதோடு தன்னை ஒறுத்து தன் நாட்டை விடுத்து உறவுகளின் பாசத்தை ஒதுக்கி, புகுந்த மண்ணைத் தன் தாய் மண்ணாகக் கருதி நம் அனைவருக்காகவும் வாழ்ந்து நின்ற அவரை நினைவிற் கொள்வோம். அவர் எமக்காகச் செய்த எண்ணிறைந்த பணிகளை மனதிற் கொள்வோம். அவருக்கான சம்பாவனையை மறுவாழ்வில் நிறையவே வழங்கியருள இறைவனை இறைஞ்சுவோம்.
»»  (மேலும்)

2/24/2014

| |

முஸ்லிம் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடாதுவது மிகவும் கீழ்த்தரமான் செயலாகும் - காத்தான்குடி மீடியா போரம்

KKY Mediaஇலங்கை நாட்டில் முஸ்லிம்கள் மாடு அறுப்பதற்குத் தடைவிதிக்கக்கோரி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் கடந்த 18.02.2014 அன்று செவ்வாய்க்கிழமை சிங்கள ராவய என்னும் அமைப்பினர் நடாத்திய ஆர்ப்பாட்டத்தில் செய்திகளை சேகரிப்பதற்காகச் சென்றிருந்த இரண்டு முஸ்லிம் ஊடகவியலாளர்கள் அவ்வார்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டமைக்கெதிராக காத்தான்குடி மீடியா போரம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துகொள்கிறது.

இது தொடர்பாக காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.நூர்தீன்,செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா ஆகியோர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பொதுவாக ஊடகவியலாளர்கள் என்பவர்கள் இன, மத, மொழி பேதங்களுக்கப்பால் நாட்டின் நிகழ்வுகள உரிய முறையில் உண்மைத்தன்மையோடு மக்களுக்கு அறிவிக்கவேண்டும் என்னும் நோக்கில் தன்னலம் பாராது தொண்டாற்றும் சேவகர்கள்.
ஆனால் சிங்கள ராவய போன்ற கடும்போக்குவாதிகள் தங்களின் ஆர்ப்பாட்ட களத்தில் முஸ்லிம் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடாத்தி அவர்களிடம் இருந்த மிகவும் பெறுமதிவாய்ந்த வீடியோ கமராக்கள் மற்றும் தொலைபேசிகள் போன்றவற்றை அபகரிப்பது மிகவும் கீழ்த்தரமான செயலாகும்.

இவ்விடயம் தொடர்பில் இதுவரைக்கும் இவ்விடயத்தில் தொடர்புபட்ட யாரும் கைது செய்யப்படாமலும் சட்ட நடவடிக்கைகளுக்குட்படுத்தப்படாமலும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே இதுபோன்ற ஊடகவியலாளர்களுக்கு எதிரான இனரீதியான வன்முறைகள் இனியும் இடம்பெறாவண்ணம் உரிய முறையில் சகல பாதுகாப்புத் தரப்பினரும் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் எனவும் காத்தான்குடி மீடியா போரம் கோரிக்கை விடுக்கிறது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

| |

எழுத்தாளர் ஜெயகாந்தன் கவலைக்கிடம்

சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரிதாரப் பூச்சு இன்றி நேரடியாகச் சொல்லும் ஆண்மையாளன் என்று சொல்லப்படும் 80 வயது எழுத்தாளர் ஜெயகாந்தன், கடந்த மூன்று மாத காலமாகவே நினைவாற்றல் பாதிப்பால் அவதியுற்று வந்தார். மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்த அவரது நிலைமை தற்போது மோசமடைந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
1950-ல் தனது இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கிய ஜெயகாந்தன், மத்திய அரசின் இலக்கியத்துக்கான மிக உயரிதாகக் கருதப்படும் ஞான பீட விருதைப் பெற்றவர்.
»»  (மேலும்)

2/23/2014

| |

அக்குறானை பாரதி வித்தியாலய கட்டிட திறப்பு விழாவும் 1-வது மெய்வல்லுனர் விளையாட்டு விழாவும்

கிரான் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட அக்குறானை பாரதி வித்தியாலய கட்டிட திறப்பு விழாவும், 1-வது இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு விழாவும் பாடசாலை அதிபர் சி.சிவனேசராஜா தலைமையில் 21.02.2014அன்று நடாத்தப்பட்டது. 1.06.2011ம் வருடம் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட அக்குறானை பாடசாலையின் புதிய கட்டிட திறப்பு விழாவும் 1-வது இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு விழாவுமே இன்று நடைபெற்றது. மிக நீண்ட தூரம் பயணித்து அக்குறானை பிரதேச மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலையிலையே 1999ம் ஆண்டு தொடக்கம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் புதிய பாடசாலை திறப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றிருக்கவில்லை. பின் முன்னாள் முதலமைச்சரின் முயற்சியின் பலனாக 2011ம் வருடம் இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்று பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் முதலமைச்சரும், ஜனாதிபதியின் ஆலோசகருமாக சி.சந்திரகாந்தன அவர்களும்;, கௌரவ அதிதியாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் ஸ்ரீ கிருஸ்ணராஜா, பிரதி கல்வி பணிப்பாளர் திருமதி.குலேந்திரராஜா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கோட்டக் கல்வி பணிப்பாளர், ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.
»»  (மேலும்)

2/18/2014

| |

ராஜிவ் கொலையாளிகள் தூக்கு ரத்து ! மரணக்கயிற்றில் இருந்து தப்பினர் !

புதுடில்லி: ராஜிவ் கொலையாளிகள் 3 பேர் தங்களுக்குரிய தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கோரி தாக்கல் செய்த மனு தொடர்பான இறுதி முடிவை சுப்ரீம் கோர்ட் அறிவித்தது.

கடந்த 1991ல் முன்னாள் பிரதமர் ராஜிவ் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் அருகே புலிகளால் மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் புலி ஆதரவு அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்தன. தூக்கு தண்டனையை குறைக்க கூடாது என்று மற்றொரு தரப்பினர் வலியுறுத்தினர். 

இதற்கிடையில் மூன்று பேரும், கடந்த, 2000ல், ஜனாதிபதியிடம் கருணை மனுக்கள் அளித்தனர். இந்த மனுக்கள், 11 ஆண்டு தாமதத்துக்கு பின், 2011ல், ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டன. தங்களின் கருணை மனுக்கள், தாமதமாக பரிசீலிக்கப்பட்டடு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் சிறையில் கூடுதல் காலம் அனுபவித்து விட்டோம். சிறையில் எங்களின் மன நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே எங்களின் தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இவர்களின் தண்டனை குறைக்க கூடாது என்றும், இந்த வழக்கு நடத்தும் சூழலுக்கு தமிழகம் ஏற்றதல்ல. இதனால் தமிழகத்தில் இல்லாமல் வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் காங்., கட்சியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்ற நீதிபதிகள் இந்த கொலையாளிகள் மனுவை இனி சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்கும் எனஅறிவித்தனர். 

கொடூர குற்றவாளிகள் : இதன்படி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. குற்றவாளிகள் தரப்பில் ராம்ஜெத்மலானி ஆஜராகி வாதாடினார். ஒரு நாட்டின் பிரதமரை கொன்ற குற்றவாளிகளை விடுவிப்பது முறையல்ல. இவர்கள் சிறையில் எவ்வித கவலையும் பட்டதில்லை என்றும் மத்திய அரசில் வாதிடப்பட்டது. மேலும் ஜனாதிபதி, ஆட்சி மாற்றம் காரணமாக இது போன்று தாமதம் ஏற்பட்டது. இதனை ஏற்று கொடூர குற்றவாளிகள் தண்டனையை குறைக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு மீதான தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது. 

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கருணை மனு மீதான அறிவிப்பு தாமதம் ஏற்று சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகளான மீசைமாதையன், பிலவேந்திரன், சைமன், உள்பட 15 பேர் தூக்கு ஆயுளாக குறைக்கப்பட்டது. இது போன்றே ராஜிவ் குற்றவாளிகள் தண்டனையையும் குறைக்கப்படும் என்று புலி ஆதரவு அமைப்பினர் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். 

ஆனால் ஒரு தேச பிரதமரை கொலை செய்த கொடூர குற்றவாளிகளுக்கு இந்திய சட்டப்படி பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் தூக்கு வழங்கப்பட்டதை மறு பரிசீலனை செய்யக்கூடாது என்றும், விடுவித்தால் நாட்டில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்றும் , இது இந்திய நீதி மன்றங்கள் மீதான நம்பிக்கையை குலைத்து விடும் என்றும் தேச பற்றாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சாமானிய மக்கள் ஒரு கொடூரத்தினால் பாதிக்கப்பட்டால் அவனுக்கும், அவனை சார்ந்த குடும்பத்தினருக்கும் எப்படி நீதி கிடைக்கும் என்ற கேள்வி எழத்துவங்கியுள்ளது.

தீர்ப்பில் கூறப்பட்டிருப்பது என்ன ? தலைமை நீதிபதி சதாசிவம், ரஞ்சன்கோகை, சிவகீர்த்தி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தங்களது உத்தரவில்; மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வாதத்தை ஏற்க முடியாது. இவர்களின் துயரத்தை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. தூக்கு தண்டனை பெற்றவர்கள் மனநிலை அனைவருக்கும் தெரியும். குற்றவாளிகள் கருணை மனு மீதான நடவடிக்கையில் காலதாமதம் ஏற்கப்படுகிறது. இது போன்ற காலதாமதத்தை எதிர்காலத்தில் இல்லாமல் இருக்க போதிய சட்டநடைமுறைகள் வகுக்கப்பட வேண்டும். இனியும் காலதாமதம் ஏற்படாது என நம்புகிறோம். மத்திய அரசு ஜனாதிபதியிடம் கருணை மனு மீதான முடிவு எடுப்பதில் காலக்கெடு விதிக்க வேண்டும். இந்த 3பேர்களின் தூக்கை ஆயுளாக குறைக்கின்றோம். தேவைப்பட்டால் 3 குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை எவ்வளவு காலம் என்று தீர்மானித்து இவர்களை விடுதலை செய்வது குறித்தும் மத்திய , மாநில அரசுகள் குற்றவியல் நடைமுறை சட்டம் செக்ஷன் 432 படி முடிவு எடுத்து கொள்ளலாம். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

விடுதலையானால் இரட்டிப்பு மகிழ்ச்சி: இது குறித்து தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறுகையில், 'சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்தானது மகிழ்ச்சி அளிக்கிறது. தி.முக., காலத்தில் எடுத்த நடவடிக்கை காரணமாக தியாகு, நளினி, கலியபெருமாள் விடுவிக்கப்பட்டனர். தற்போது இந்த 3 பேருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ஏற்கனவே இந்த 3 பேரும் அநுபவித்த சிறைத்தண்டனையை கருத்தில் கொண்டு அவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மூன்று பேரையும் மத்திய, மாநில அரசுகள் விடுதலை செய்தால், மகிழ்ச்சி இரட்டிப்பாகும்,' என்றார்.

நல்ல உள்ளங்களுக்கு நன்றி: பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், எனது மகனுக்காக நான் வீதி, வீதியாக அலைந்திருக்கிறேன். பல நாள் தீர்ப்புகளால் நான் ஏமாந்து போயிருக்கிறேன்.இந்த கொலைக்கும் எனது மகனுக்கும் சம்பந்தம் கிடையாது. நான் காலை முதல் இந்த தீர்ப்புக்காக பட, படப்புடன் காத்திருந்தேன், எந்த குற்றமும் செய்யாமல் தண்டனை அனுபவித்து வருகிறான் எனது மகன். இவனது தண்டனை குறைப்புக்கு உறுதுணையாக இருந்தவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மரணத்தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் அனைவருக்கும் நன்றி. எங்களுக்கு எப்போதும் ஆதரவு அளிக்கும் முதல்வர் ஜெ., அம்மா எனது மகனை விடுதலை செய்வார் என நம்புகிறேன். இவ்வாறு அற்புதம் கூறினார்.

நிரபராதிகளை விடுதலை செய்யுங்கள்: வைகோ : இந்த தீர்ப்பு அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும். எந்த குற்றமும் செய்யாத 3பேரும் பல ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்து வருகின்றனர். சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலின்படி மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி 3 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். வரலாற்று சிறப்பு மிக்க நாள். அளவு கடந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எவ்வித குற்றமும் செய்யாமல் 23 ஆண்டு சிறையில் இருந்து வந்தவர். ராம்ஜெத்மலானியின் வாதம் காரணமாக இந்த வெற்றி கிட்டியுள்ளது. இவருக்கும் நன்றி . மரணத்தண்டனை சட்டம் இருக்கின்ற நாடுகளை விட மரணத்தண்டனை இல்லாத நாட்டில் உள்ள குற்றம் குறைவு என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

»»  (மேலும்)

| |

மோடி வந்தால் நாடு தாங்காது

ஆர்எஸ்எஸ்/பாஜகவின் பசப்பல் வார்த்தைகள்
2014 மக்களவைக்கான பொதுத் தேர்தல்களையொட்டி காங்கிரஸ் அல்லாத, பாஜக
அல்லாத மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்படுவதற்கான ஒத்துழைப்பு மற்றும் உடன்பாடு உருவாகி யிருப்பதன் காரணமாக,  ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களுக்கும் அதன் பிரதமர் வேட்பாளருக்கும் நம்பிக்கை யிழந்த நிலையில் ஏற்பட்டுள்ள விரக்தி மற்றும் வெறுப்பு காரணமாக அவர்கள் வெளிப்படுத்தும் வார்த் தைகள் நாகரிக எல்லையை மீறிச் சென்று கொண்டிருக்கின்றன.  ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களால் அதிலும் குறிப்பாக அவர்களால் அறிவிக்கப்பட்ட பிரதமர் வேட்பாளரால் கட்டவிழ்த்துவிடப்படும்  பண்பாடற்ற சொற்களை பண்புடையவர்கள் எவராலும் நாகரிகமானதாகக் கருத முடியவில்லை.

இந்திய கார்ப்பரேட்டுகளின் ஒரு பிரிவினரும், அவற்றின் மூளையாக செயல் படுபவர்களும், சர்வதே நிதி மூலதனமும் அதே அளவுக்கு நிலை குலைந்து போயுள்ளன.  ஏனெனில் அவை, 1939க்குப் பிந்தைய ஆண்டுகளில் மாபெரும் பொருளாதார மந்தம் ஏற்பட்ட சமயத்தில், பாசிச அடக்குமுறையைக் கட்ட விழ்த்துவிட்டு மக்களின் சுதந்திரத்தை முற்றிலுமாக ஒழித்துக் கட்டியும், மக்கள் மீது சொல்லொண்ணா அளவிற்கு ஏற்றப்பட்ட பொருளாதாரச் சுரண்டலையும் தங்கள் கொள்ளை லாபத்தையும் தொடர்வதற்கு, ஹிட்லரின் பாசிசம் எப்படித் தங்களுக்கு உதவியதோ, அதேபோன்று ஆர்எஸ்எஸ் /பாஜக பரிவாரங்களின் சார்பில் முன்னிறுத்தப்பட்டுள்ள பிரதமர் வேட் பாளரை, தங்கள் சார்பில் சிறந்ததொரு நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதி வந்தன.  நவீன தாராளமய சீர்திருத்தங்களை எவ்வித இடையூறுமின்றி திணித்து மக்கள் மீது மேலும் மேலும் சுமைகளை ஏற்றமுடியும் என்று அவை நம்பிக்கொண்டிருந்தன. ஆனால் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ஒரு மாற்று அணி உருவாகி இருப்பது இவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. “மூன்றாவது அணியின் அரசாங்கம் பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தாமதப்படுத்தலாம்(டைம்ஸ் ஆப் இந்தியா, பிப்ரவரி 12, 2014) என்று சர்வதேச கிரெடிட் ரேட்டிங் ஏஜன்சி ஒன்று குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. மேலும் அந்த ஏஜன்சியின் செய்தியாளர், “தேர்தலுக்குப்பின் இந்தியா வில் துண்டு துண்டு கட்சிகளால் அமையும் கூட்டணி அரசாங்கம் பங்குச் சந்தை வணிகத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக அமைந்திடும்,’’ என்றும் கவலைப்பட்டிருக் கிறார். இதற்கும் மேல் ஏதேனும் சொல்லவேண்டுமா,  என்ன?
கார்ப்பரேட்டுகள் கனவு காண்பதுபோல் 2014தேர்தல்களில் ஆர்எஸ்எஸ் /பாஜக பரிவாரங்கள் வெற்றிபெற்று மோடியின் ஆட்சி அமைந்தால் இந்தியா மற்றும் மக்களின் நிலை என்னவாகும்? மதவெறித் தீ மேலும் கூர்மையான முறையில் விசிறிவிடப்படும் என்பதோடு, நாட்டு மக்களில் பெரும்பான்மையோருடைய  பொரு ளாதாரச் சுமைகள் மேலும் அதிகரித்திடும்.

தங்களுடைய இந்த அச்சத்தை மறைக்கக் கூடிய விதத்தில், ஆர்எஸ்எஸ் நாட்டு மக்கள் மீது புதியதொரு சொல் விளையாட்டைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. அதனுடைய வெளிப்படையான பிரச்சாரம், நாட்டின் வளர்ச்சி குறித்தும் வளமை குறித்தும் இருக் கிறது. ஆனால், அதன் உண்மையான இலக்கு என்பது தன்னுடைய வெறிபிடித்த சகிப்புத் தன்மையற்ற பாசிச `இந்து ராஷ்ட்ரம்’ என்னும் நிகழ்ச்சிநிரலை மேலும் கூர்மைப்படுத்தி முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதே யாகும்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல்நாளன்றே, பாஜக, நாடாளுமன்றத்தில் வகுப்புவாத வன்முறை தடைச் சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்பட்டதை வெற்றிகரமான முறையில் வரவிடாமல் செய்ததைப் பார்த்தோம். இதற்கு அது கூறிய காரணம் என்ன? அது நம் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சத்தையே-கூட்டாட்சித்தத்துவத்தையே-மீறுகிறதாம்.  நாட்டின் தற்போதைய கூட் டாட்சிக் கட்ட மைப்புக்கு பாஜக வக்காலத்து வாங்குவது வெறும் கண்துடைப்பேயாகும். ஏனெனில், இந்திய அரசியலமைப்புச்  சட்டத்தைப் பொறுத்தவரை ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அடிப்படை நிலைப்பாடுகளே வேறாகும்.

ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களின் குருஜி என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்ட எம்எஸ் கோல்வால்கர்,  அளித்துள்ள `இந்து ராஷ்ட்ரம்’ என்கிற தத்துவார்த்தக் கட்டுமானமும் (We, Or Our Nationhood Defined, 1939, Fourth Edition, 1947) மற்றும் இக்குறிக்கோளை எய்துவதற்கு,  `சங் பரிவாரம்’ ஏற்படுத்தியுள்ள ஸ்தாபனக் கட்டமைப்பும் பல ஆண்டுகளுக்கு முன்பே, நம் அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள கூட் டாட்சிக் கட்டமைப்பை குழிதோண்டிப் புதைத்திட வேண்டும் என்று கூறி யிருக்கின் றன.  தற்போதுள்ள அனைத்து `சுயாட்சி’ மற்றும் `அரை சுயாட்சி’ மாநிலங்கள் அனைத்தையும் முற்றிலுமாக அழித்து ஒழித்துவிட்டு, `பாரதம்’ என்கிற ஒரே மாநிலமாக மாற்ற வேண்டும் என்றும், `ஒரே நாடு, ஒரே மாநிலம், ஒரே நாடாளுமன்றம், ஒரே அரசாங்கம்’ ... எனப் பிரகடனம் செய்திட வேண்டும் என்றும், நாடு மாநிலங்களாகக் கூறுபடுத்தப்படாத ஒரே வடிவ அரசாங்கம் நிறுவப்படக்கூடிய விதத்தில் தற்போதைய அரசியலமைப்புச் சட்டம் மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, மீளவும் எழுதப்படவேண்டும். என்றும்   அவை தெளிவாகவே தெரிவித் திருக்கின்றன.

ஒருபக்கத்தில் பாஜக, ஜார்கண்ட், சட்டீஸ்கர், உத்தரகாண்ட் மாநிலங்களைத் தாங்கள்தான் உருவாக்கினோம் என்று பீற்றிக்கொள்ளும் அதே சமயத்தில், தெலுங்கானா மாநிலம் தொடர்பாக இரட்டை நாக்குடன் பேசிக்கொண்டிருக்கிறது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படக்கூடாது என்று எவ்விதப் பிசிறுமின்றி கூறிவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போலல் லாமல், ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் `ஒரே நாடு,. ஒரே மக்கள், ஒரே தேசம்’ என்று தொடர்ந்து பேசி வருகின்றன. எனவேதான், ஆர்எஸ்எஸ்/பாஜக-வைப் பொறுத்தவரை, கூட்டாட்சித் தத்துவம் என்பது இந்தியாவில் உள்ள பல்வேறு பண்பாடுகளை, மொழிகளை, பன்முகத்தன்மைகளை அங்கீகரிக்கும் ஒன்றாகப் பொருள்கொள்ளவில்லை. மாறாக,  அவர்களைப் பொறுத்தவரை கூட் டாட்சித்தத்துவம் என்பது நாட்டை பல நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும் என்பதும், அது மக்களின் பல்வகையான மொழி, இனம், பண்பாடு முதலியவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதேயாகும். அனைத்து மாநில நிர்வாகங்களும் மத்திய அரசின் கருணையின்கீழ்தான் இயங்கிட வேண்டும் என்பதே அவர்கள் கோருவதாகும்.  துரதிர்ஷ்டவசமாக, நம் நாட்டில் உள்ள மிகச்

சிறிய மாநிலங்களின், குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களின்,  அனுபவம் இதுதான்.  உதாரணமாக, தற்போது உத்தரப் பிரதேசத்தின் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் ஒரே குரலில் ஒரு நிலைப் பாட்டை மேற்கொள்கையில், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை எந்தவொரு அரசாங்கமும் உதாசீனம் செய்திட முடியாது. சற்றே கற்பனை செய்து பாருங்கள், இதே மாநிலம் நான்கு அல்லது பல துண்டுகளாக உடையுமானால், ஒவ்வொன்றும் தன் வல்லமையை இழந்து, மத்திய அரசின் கருணை யின் கீழ் இருக்க வேண்டிய நிலை உருவாகி விடும், இல்லையா?

இதேபோன்றுதான் `குஜராத் மாடல்’ வளர்ச்சி என்று  ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் மேற்கொள்ளும் பிரச்சாரமும் ஆகும்.  திட்டக் கமிஷன் வெளியிட்டுள்ள பல்வேறு விவரங்கள் அது நிகர மாநில உள்நாட்டு உற்பத்தியாக இருந்தாலும் சரி மற்றும் அந்நிய நேரடி முதலீடு வரவாக இருந்தாலும் சரி, குஜராத் ஒடிசா, சட்டீஊகர் போன்று தொழில்துறையில் பின்தங்கியுள்ள மாநிலங்களுக்கும் பின்னால்தான் குஜராத் இருக் கிறது என்று தக்க ஆதாரங்களுடன் மெய்ப் பித்திருக்கிறது. தனி நபர் வருமானத்திலும், நாட்டிலுள்ள பெரிய மாநிலங்களுக்கு மத்தியில் அது ஆறாவதாக இருக்கிறது. வறுமை மட்டத்தில் ஐந்தாவதாகவும், நீண்ட காலம் உயிர் வாழ்வோர் நிலையில் எட்டாவது இடத்திலும் இருக்கிறது. மனித வள வளர்ச்சி அட்டவணையிலும்கூட அது நாட்டிலுள்ள பெரிய

மாநிலங்களின் வரிசையில் பத்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.  மக்களின் சுகாதாரம் மற்றும் கல்வி அட்டவணையில் அது ஆறாவது இடத்தை வகிக்கிறது.  குஜராத் மாநிலத்தில் வாழும் குழந்தைகளில் 80 சதவீதத்தினரும், பெண்களில் 55 சதவீதத்தினரும் ரத்த சோகை நோயால் பீடிக்கப்பட்டுள்ளார்கள்.  இதுதான் அதன் `வளர்ச்சி மாடல்’ ஆகும்.  எதார்த்தநிலை இவ்வாறிருந்த போதிலும், `குஜராத் வளர்ச் சிக் கதையை’ இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் ஊடகங்கள் மக்கள் மத்தியில் அளந்து கொண்டுதான் இருக்கின்றன.

கேரவன்  ஏட்டின் இந்துத்துவா பயங்கர வாதத் தாக்குதல்களில் தொடர்புடைய முக்கிய நபர்களில் ஒருவரான ஆசீமானாந்த் குறித்த சமீபத்திய அட்டைப்படக் கட்டுரையானது இந்துத்துவா பயங்கரவாத வலைப் பின்னலை தோலுரித்துக் காட்டுகிறது. 2007 பிப்ரவரியில் நடைபெற்ற சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டது, 2007 மே மெக்கா  மசூதி வெடிகுண்டுத் தாக்குதல்கள், 2007 அக்டோபர் ஆஜ்மீர் தர்காவில் நடை

பெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் அனைத்திலும் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரான ஆசீமானாந்த் தற்போது காவல் துறையினரின் சிறைக்காவலில் இருக்கிறார். 2006 செப்டம்பர் மற்றும் 2008ல் மாலே கானில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களிலும் இவரின் பங்கு உண்டு என்று பெயரிருந்தபோதிலும், இன்னமும் இவர்மீது குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இந்த நபர் கூறுகிறார்: தான் மேற்கொண்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் அனைத்திற்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் உயர்மட்ட அள வில் அனுமதி பெறப்பட்டது. அதாவது தற்போது ஆர்எஸ்எஸ் தலைவராக இருக்கக் கூடிய மோகன் பகவத் வரை தெரியும் என்று கூறியிருக்கிறார்.  மோகன் பகவத், ஆசீமானந்திடம், “இது நிறைவேற்றப்பட வேண்டியது மிக முக்கியம். ஆனால் நீங்கள் இதனை சங் அமைப்புடன் இணைத் திடக்கூடாது,’’ என்று சொன்னதாகக் கூறப்பட்டிருக்கிறது.  மேலும் ஆசிமானந்த் அளித்துள்ள ஒப்புதல்வாக்குமூலமானது, “ஆசீமானந்த் மேற்படி குற்றங்களைச் செய்கையில் அவருக்கு உடந்தையாக இருந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த சுனில் ஜோஷி என்பவன்தான் நாட்டின் பல பகுதி களிலும் நடைபெற்ற சதித்திட்டங்கள் அனைத்திற்கும், அந்த இடங்களில் அணி திரண்டவர்களுக்கும் மற்றும் வெடி குண்டுகளை விதைத்தவர்களுக்கும் இடையே இணைப்புச் சங்கிலியாக இருந் திருக்கிறான். இவன் 2007 டிசம்பரில் மிகவும் மர்மமான முறையில் கொல்லப்பட்டான்.’’ என்கிற அளவிற்கு மிகவும் விபரமாக உள்ளன.

இந்துக்களுக்கு ஆயுதத் தீவிரவாதப் பயிற்சி அளிப்பது என்பதை ஆர்எஸ்எஸ் இயக்கம் மேற்கொண்டு வருவதற்கு நீண்ட வரலாறு உண்டு. வி.டி. சாவர்கர்தான், “அனைத்து அரசியலையும் இந்துமதமாக்கு. இந்துக்கள் அனைவரையும் ராணுவமய மாக்கு’’ என்ற கோஷத்தை முதலில் முன் மொழிந்தவர்.  இவற்றால் உத்வேகமடைந்து, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நிறுவனரை வழிகாட்டியாகக் கொண்ட டாக்டர் பி.எஸ். மூஞ்சே, பாசிஸ்ட் சர்வாதிகாரி, முசோலினி யைச் சந்திப்பதற்காக இத்தாலிக்குப் பயணம் சென்றார். இந்தியா திரும்பியபின், டாக்டர் மூஞ்சே 1935ல் நாசிக்கில் மத்திய மிலிட்டரி கல்வி சொசைட்டியை நிறுவினார். இதுதான் 1937ல் நிறுவப்பட்டதும், இந்துத்துவா பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளித்து வருவதாகத் தற்போது குற்றஞ் சாட்டப்பட்டுள்ள போன்சாலா மிலிட்டரிப் பள்ளியின் முன்னோடியாகும்.

1939ல் கோல்வால்கர் நாஜி பாசிசத்தின் கீழ் யூதர்களைக் கொன்று குவித்த ஹிட்லரை வெகுவாகப் பாராட்டியதுடன், “இவரது நடவடிக்கைகள் இந்துஸ்தானில் உள்ள நம் அனைவருக்கும் கற்றுக்கொள்வதற்கும் ஆதாயம் அடைவதற்கும் நல்லதொரு படிப் பினையாகும்,’’ என்று கூறியிருக்கிறார். இதன்பின்னர் மிகவும் காலம் கடந்து 1970இல்தான் அவர், “பொதுவாகக் கூறுமிடத்து, தீய சக்திகளால் (இந்த இடத்தில் இந்துக்கள் அல்லாத வர்கள் என்று வாசித்துக்கொள்க) நம்முடைய சித்தாந்தத்தைப் புரிந்து கொள்ள முடியாது.  அவர்களை வலுக்கட்டாயமாகத்தான் கட்டுப் படுத்தப்பட வேண்டும் என்பதே நமக்குக் கிடைத்துள்ள பொதுவான அனுபவமாகும்,’’ என்று கூறுகிறார்.

ஆர்எஸ்எஸ் இயக்கம் எப்போதுமே, தன்னுடைய ஆட்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் சிக்கிக்கொண்டால், அவர் களுடைய பயங்கரவாத நடவடிக்கைகள் வெளிச்சத்திற்கு வந்தால், தங்களுக்கு அதனுடன் எவ்விதமான சம்பந்தமும் இல்லை என்று மறுத்தே வந்திருக்கிறது. உதாரணமாக,  மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேயை ஆர்எஸ்எஸ் இயக்கம் அவர் தங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவரல்ல என்று எப்போதும் மறுத்தே வந்திருக்கிறது. ஆனால் இக்கூற்றை நாதுராம் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சே இன்றளவும் மறுத்து வருகிறார். இதுதொடர்பாக கோபால் கோட்சே ஊடகங்களுக்குத் தெரி

விக்கையில், “சகோதரர்களாகிய நாங்கள் அனைவருமே ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான். நாதுராம், தத்தாத்ரேயா, நான் மற்றும் கோவிந்த் அனைவருமே ஆர்எஸ்எஸ்-தான். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் நாங்கள் எங்கள் வீட் டில் வளர்ந்ததைவிட ஆர்எஸ்எஸ்-ல் வளர்ந்ததுதான் அதிகம். எங்களுக்கு அதுதான் குடும்பம் போன்று இருந்தது. நாதுராம் ஒரு அறிவுஜீவியாக செயல்பட்டான். அவன் தன்னுடைய வாக்கு மூலத்தில் தான் ஆர்எஸ்எஸ் இயக்கத்திலிருந்து விலகிவிட்டதாகக் குறிப்பிட் டிருக்கிறான். இதற்குக் காரணம், கோல்வால்கரும் ஆர்எஸ்எஸ்-உம் காந்தி கொலைக்குப்பின்னர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டார்கள். ஆனால், அவன் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைவிட்டுச் சென்றிடவில்லை. (ப்ரண்ட்லைன், ஜனவரி 28, 1994).

இந்தப் பின்னணியில்  வல்லபாய் பட்டேலை ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் தங்கள் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டிருப்பவரால் தூக்கி நிறுத்தப்படு வது தொடர்பாக வரலாற்றின் பக்கங்களைத் திருப்பிப்பார்ப்பது அவசியமாகும். மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டவுடன் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தடை செய்தது இதே பட்டேல்தான். பட்டேல் அவர்களால் தயார் செய்யப்பட்ட 1948 பிப்ரவரி 4 தேதியிட்ட அரசு செய்தியானது, “சங் பரிவாரத்தின் ஆட் சேபனைக்குரிய மற்றும் தீங்குபயத்திடும் நட வடிக்கைகள்  எவ்விதத் தடைகளும் இன்றித் தொடர்ந்திருக்கின்றன. சங் பரிவாரத்தால் ஊட்டி வளர்க்கப்பட்ட வன்முறைக் கலாச்சாரம் பல அப்பாவி உயிர்களைப் பலிவாங்கி யிருக்கிறது. இதில் கடைசியாகப் பலியான விலைமதிக்க முடியாத உயிர் காந்திஜியாகும்.’’ என்று கூறுகிறது.

மேலும், ஆர்எஸ்எஸ்/பாஜக தற்போது, 2002ஆம் ஆண்டில் கோத்ரா மதவெறிப் படுகொலைகள் சம்பவத்தின்போது குஜராத் மாநில அரசின் முதல்வராக இருந்து மோடி ஆற்றிய பங்களிப்புகளிலிருந்து அவரை விடுவித்து, நீதித்துறை மூலமாகவும்  அவரை “சுத்தவாளி’’  (clean chit) என்று முத்திரை குத்த முயன்று கொண்டிருக்கிறது.  2012 பிப்ரவரியில் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) இது தொடர்பாக தான் மேற்கொண்ட விசாரணையை முடித்து தாக்கல் செய்த அறிக்கையை இதற்கு சாட்சியமாக அது முன்வைக்கிறது.  இது உண்மைக்கு நேர் மாறான ஒன்று. சிறப்புப் புலனாய்வுக் குழு வானது, 2006 ஜூன் மாதத்தில் அகமதாபாத், குல்பர்கா சொசைட்டி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஜாகியா ஜாப்ரியின் முறையீட்டு அடிப்படையில் ஏராளமான சாட்சியங்கள் இருக்கும் அதே சமயத்தில், ஆயினும் மோடிக்கு எதிராக வழக்கு விசாரணை தொடர்வதற்கு அவை போதுமானதல்ல என்றுதான் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது. மேலும், இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் சார்பாக நியமிக்கப்பட்ட வழக்குரைஞர், குஜராத் முதல்வர் இந்திய தண்டனைச் சட்டம் 153(அ) (வகுப்புகளிடையே பகைமையை வளர்த்தல்), 153(ஆ)(தேசிய ஒருமைப்பாட்டிற்குக் குந்தக மாக பழிசுமத்துதல்) மற்றும் 166 (சட்டத்தின் உத்தரவினை பொது ஊழியர் மீறுதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் விசாரணைக்கு உட் படுத்தப்பட வேண்டியவர் என்று தெளிவாக அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார். 2002 முஸ்லீம் மக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு சம்பந்தமாக இறுதித் தீர்ப்பை பொறுத்தவரை, இன்னமும் ஏராளமான மனுக்கள் உயர்நீதிமன்றத்திலும் மற்றும் உச்சநீதிமன்றத்திலும் நிலுவையில் இருக்கின்றன.எனவே எப்படிப்பார்த்தாலும் இவர் “சுத்த வாளி’’யாக முடியாது.

2002இல் நடந்ததையெல்லாம் மறந்துவிடுங்கள், மோடியின் தலைமையில் வளமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்போம் என்கிறார்கள். மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசுக்கும் நம் மக்களுக்கும் 2002 குஜராத் முஸ்லீம் மக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்குகளில் இதுவரை நீதி மறுக்கப்பட்டு வருவது தொடர்கிறது. அப்போது முஸ்லீம் மக்களுக்கு ஏற்பட்ட காயங்கள் இன்னமும் ஆறிடவில்லை. இவ்வழக்குகள் அனைத்திலும் நீதி வழங்கப் படும்போது மட்டும்தான், நம் குடியரசு களங்கமில்லாததாகவும் வலுவானதாகவும்  இருக்கும். இவ்வழக்குகளில் நீதி வழங்குவது மேலும் தாமதிக்கப்படுமானால் அது நீதி மறுக்கப்பட்டதாகவே கருதப்படும்.

2014ல் நாட்டிற்குத் தேவை என்னவெனில், காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் மாற்றாக, நாட்டில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கக்கூடியதும், அதன் மூலம் நம் குடியரசை வலுப்படுத்திடவும், நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு சிறந்ததோர் வாழ்க்கையை அளிக்கக் கூடிய விதத்தில் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றிடவும் கூடிய ஒரு வலுவான அரசியல் மாற்றை அளிப்பதுதான்.

- தமிழில்: ச.வீரமணி


நன்றி தேனீ 
»»  (மேலும்)

2/16/2014

| |

மாநில ஆட்சியா, மாகாண ஆட்சியா, கூட்டாட்சியா? எதுவானாலும்

தெரிவுக்குழுவிலேயே இறுதித் தீர்வு இந்தியாவின் நிலைப்பாடும் இதுவே

அமைச்சர் பசில் திட்டவட்டம்

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன் நிபந்தனைகள் எதனையும் விதிக்காமல் பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு வந்தால் மட்டுமே அதிகாரங்கள் குறித்து கலந்துரையாட முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஷபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சென்னையில் தெரிவித்துள்ள கருத்துக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் பசில் ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.
சென்னை அடையாறில் இந்திய தெற்காசிய ஆய்வு மையத்தில் இடம்பெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் இலங்கையின் இன்றைய போக்கு என்ற தலைப்பில் உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு எவ்வாறான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதோ அதுபோன்ற அதிகாரங்களையே இலங்கையிலும் எதிர்பார்க்கிறோம். இலங்கையில் வட கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களுக்கு உரிமையை வழங்கும் வகையில் அரசியலமைப்பின் 13 ஆவது சட்டத்திருத்தத்தை அமுல்படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டது. ஆனால், இலங்கை அரசாங்கம் அந்தச் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவில்லை என்றார்.
இரா. சம்பந்தன் சென்னையில் தெரிவித்த கருத்து குறித்து அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறுகையில், இந்தியாவில் மாநிலங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு கோருகின்றது. ஏனைய கட்சிகள் வேறுவிதமான யோசனையை முன்வைக்கின்றன. அனைத்து விடயங்கள் குறித்தும் பாராளு மன்றத் தெரிவுக்குழுவிலேயே பேச முடியும்.
இந்தியாவில் மாநிலங் களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களோ அல்லது எவ்வாறான அதிகாரங்கள் குறித்தும் கலந்துரையாட முடியும். எனவே தெரிவுக் குழுவுக்கு வாருங்கள், நாங்கள் இதுபற்றி அங்கு கலந்துரையாடுவோம்.
எனவே அனைத்து கோரிக்கைகள் மற்றும் யோசனைகள் தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக் குழுவிலேயே கலந்துரை யாடி தீர்மானம் ஒன்றை எடுக்க முடியும். எனவே தமிழ்க் கூட்டமைப்பினர் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இணைந்துகொண்டு தமது நிலைப்பாட்டையும் யோசனையையும் முன்வைக்க முடியும்.
எனினும் முன் நிபந்தனை விதிக்காமல் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தமிழ்க் கூட்டமைப்பு வர வேண்டும். முன் நிபந்தனைகளின் விதிப்பானது சிக்கலை ஏற்படுத்திவிடும். எனவே முன்நிபந்தனை விதிக்காமல் கூட்டமைப்பு தெரிவுக் குழுவுக்கு வரவேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் பஷில் ராஜபக்ஷ குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமக்கு தேவையான அதிகாரங்கள் தொடர்பாக வெளியில் இருந்து கூறிக்கொண்டிருப்பதைவிட பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு வந்து கூறுவதே பொருத்தமானதாக அமையும் என்றார்.
»»  (மேலும்)

| |

சம்பந்தன் எதேச்சதிகாரமாம்: மாவை பதவி துறப்பு முயற்சி!

பாராளுமன்ற கூட்டங்களின் போதும் கூட்டமைப்புக்குள் அங்கத்துவம் வகிக்கும் கட்சிக ளின் தலைவர்கள் சந்திப்பின் போதும், சம்பந்தனுக்கும், மாவைக்கும் இடையே அடிக்கடி கருத்து முரண் பாடுகள், மோதல்கள் வருவதுண்டு.
அப்போதெல்லாம் மாவை, நான் உங்களோட நிறைய பேசவேணும், இதில் பேச விரும்பவில்லை என்று சொல்லிக் கொண்டே வந்தார். மாவையின் இந்த பேச்சின் அர்த்தம், அதன் உள்நோக்கம் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கும் ஏனையவர்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் மாவை மட்டும் ஒரே ஒரு வாய்ப்புக்காக ஏறத்தாழ ஆறு மாதங்களாக காத்திருந்தார். அப்படி என்ன வாய்ப்பு? அது தான் கடந்த 26.01.2014 அன்று கூடிய இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவின் சந்திப்பு!
சந்திப்பு தொடங்கியதும் நீறுபூத்து நீத்துப்போக விடாமல், ஏறத்தாழ ஆறு மாதங்களாக பார்த்துப் பார்த்து தகதகவென தகிக்க வைத்துக்கொண்டிருந்த மாவையின் கோபத்தீ, முகடுடைத்து குமுறி கொப்பளித்தது. அந்த நீதித்தீயின் கொப்பளிப்பிலிருந்து சூடு ஆறாத சில பல சிதறல்கள்! இதோ.
முதலமைச்சர் வேட்பாளராக நிற்க எனக்கு தகுதி இல்லை என்று சொல்லி யார் முடிவெடுத்தது. இது ஒரு சிலர் மட்டும் எடுத்த முடிவு. மற்ற கட்சிகள் எல்லாமே எனக்கு முழு ஆதரவு தெரிவிச்சது. அவர்கள் எனக்கு ஒருபோதும் இடைஞ்சலா, எதிரா நிற்கேல்ல.
18 வயசில இருந்து இளைஞர் அணி, அப்படி இப்படி என்று சொல்லி 43 வருசமா கட்சிக்காக பாடுபட்டிருக்கிறன்.
சிறைக்கு போய் வந்திருக்கிறன். எனக்கு தகுதி இல்லை. என்னில் நம்பிக்கை இல்லை என்று சொன்னா பிறகு ஏன் நான் கட்சியில் இருப்பான்? இன்றைக்கு கூட்டியிருக்கிற இந்த கூட்டத்த அன்றைக்கு கூட்டி முடிவெடுத்திருக்க வேண்டும்.
ஒரு சிலர் மட்டும் தனிச்சு முடிவெடுக் கிறதெண்டால், பிறகு என்னத்துக்கு இந்த கட்சி, மத்தியகுழு எல்லாம். கலைத்து விட்டுப் போங்கோ.
நான் என்ற பதவியை றிசைன் பண்றன் என்று குமுறி வெடித்து, மாவை தனது இருக்கையை விட்டு எழும்பி வெளியே செல்ல ஆயத்தமாக, உடனே மற்ற உறுப்பினர்கள் அவரது கையை இழுத்துப் பிடித்து வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தி, தோளில் தட்டிக்கொடுத்து ஆசுவாசப்படுத்தி அமர வைத்தனர்.
பின்னர், மாவையின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து எல்லோரும் தமது ஆதங்கங்களை, விமர்சனங்களை கொட்டித் தீர்த்துகொண் டிருந்தனர். இப்படியே ஆளாளுக்கு பேசிக்கொண்டிருந்த பேச்சுக்களும், ஏச்சுக்களும் அப்படியே கிழக்கு மாகாணம் நோக்கி நகர்ந்து விட்டது.
»»  (மேலும்)

| |

தமிழ் சினிமாத்துறையின் தனித்துவமான கலைஞன் பாலு மகேந்திரா----சில நினைவுகள்

- இராஜேஸ்வரி பாலசுப்பிரமயணியம்.
இந்தியாவின் சினிமாத்துறையில் தனித்துவமான, ஒரு கௌரவமான தளத்தைக் கொண்டவர் பாலு மகேந்திரா.
balumahendraசினிமாத் தயாரிப்பின் பன்முகத் தன்மையுடன் தன்கலையார்வார்த்தை இணையற இணைத்துக்கொண்டவர் பாலு.. ஓளிப்பதிவாளனாக, இயக்குனராக, திரைக்கதையாசிரியராக, எடிட்டராக, கடைசிக்காலத்தில் நடிகராகவும் திரையுலகின் பல துறைகளிலும் பளிச்சிட்ட கலைஞர்; பாலு மகேந்திரா எனப்படும், மீன்பாடும் தேனாடாம், மட்டக்களப்பில், அமிர்தகழி என்ற அழகிய கிராமத்தில் பிறந்த, பாலநாதன் பென்ஞமின் மகேந்திரன் என்ற மனிதன்.
 நான் அவருடன் பழகியது சில வருடங்கள். ஆனால் அவருடன் பழகிய அந்த நாட்கள் இனிமையானவை. சினிமாத்துறை பற்றிய உரையாடல்கள் உள்ளத்தை உருக்குபவை. வர்த்தக மயமான இந்திய சினிமா உலகில் தன்சுயமையை முடியுமட்டும் பாதுகாக்க அவர்பட்ட அனுபவங்ளை; பல படிப்பினையைத் தருபவை.  லண்டன் திரைப்படக்கல்லூரி மாணவியாக இருந்தகாலத்தில், எனது படிப்பு சம்பந்தமான ஆராய்ச்சி காரணமாகவும், இந்தியாவிலிருக்கும் தமிழ் அகதிகளைப்பற்றிய விபரங்களைத் திரட்டவும், அவர்கள் பற்றிய புகைப்படக் கண்காட்சியை லண்டனில் நடத்தவும் 1987ம் ஆண்டின் பிற்பகுதியில இந்தியா சென்றிருந்தேன். அந்தக்கால கட்டத்திற்தான் (செப்டம்பர்1987) பாலுவை முதற்தரம் சந்தித்தேன்.
 இந்தியபுராணங்கள், பெண்கள், இந்திய சினிமா' என்ற எனது ஆராய்ச்சிக்குத் தென் இந்திய திரைப்படவுலகில் பெண்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு பழையநடிகையும், இயக்குனரும், தயாரிப்பாளரும், பாடகியும் என்ற பன்முகத் திறமை கொண்ட பானுமதி போன்றவர்களை நேர்காணல் செய்வதும் எனது திட்டங்களில் ஒன்றாகவிருந்தது..
இந்தக்கால கட்டத்தில் பாலு மகேந்திராவைப் பற்றித் தெரிந்திருந்தது சொற்பமே.
1970ம் ஆணடு லண்டனுக்கு வரமுதலே இலங்கையிலிருக்கும்போது தமிழ்ப்படங்கள் பார்த்தது குறைவாக இருந்தது. பெரும்பாலும் வர்த்தக ரீதியாக எடுக்கப்படும் யதார்த்த மயமற்ற பல தமிழ்ப்படங்கள் பரவலாக வந்தகாலமது. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு அப்படியான படங்கள் பிடிக்காததால் தமிழ்ப்படங்கள் பார்ப்பது குறைந்திருந்ததது. கொழும்பில் நடக்கும் அகில உலக படவிழாக்களில் நல்ல திரைப்படம் வந்தால் பார்த்ததுண்டு.
லண்டனுக்கு வந்ததும் எப்போதாவது ஒரு தமிழ்ப் படம் காட்டப்படும். புhலு மகேந்திராவின்; படங்களை லண்டனுக்கு எடுக்கும் ரசனை அப்போது லண்டனில் தமிழ்ப்படத்துடன் தொடர்புள்ளவர்களுக்கு இல்லாமல் இருந்ததோ என்னவோ பாலுவின் படங்களை லண்டனில் பார்க்கவில்லை. ஆனாலும் அவரைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். அவரும் என்னைப்போல் இலங்கையின் கிழக்குப் பிரதேசத்தில் பிறந்தவர். என்னைப் போலவே கமராவில் ஆர்வம் கொண்டவர்´. அவர்.என்னைப் போலவே  திரைப்படவுலகின் பட்டப் படிப்பை முடித்தவர்.
பட்டப் படிப்பு முடிந்ததும் தனது ஒளிப்பதிவுத் திறமையால் பலராலும் தென்னிந்தியச் சினிமாத் துறையில் அறியப்பட்டவர். தெலுங்கு படமான 'நெல்லு' மூலம் பிரபலமானவர். என்றெல்லாம் இந்தியா சென்றதும் அறிந்து கொண்டேன்.
அவரைப்பார்க்க அவரின் வடபழனி வீட்டுக்கு ஆட்டோவில் போய் இறங்கும்போது, ஒரு கூட்டம் அங்குமிங்குமாகத் திரிந்தது. நான் இறங்கியதும், ஏம்மா நீங்க மலையாள நடிகையா' என்று மொய்த்தார்கள்.
தனியாகப் போய் இறங்கிய எனக்கு ஒன்றும் விளங்கவில்லை; பட படவென்று பாலுவின் பிரமாண்டமாக வேலிக் கதவைத் தட்டினேன். யார் நீங்கள்'' என்ற மட்டக்களப்புத் தமிழ்ச்சாயலில் ஒரு குரல் கேட்டது. நான் யார் என்றும் பாலுவைப் பார்க்க அப்பொயிண்ட்மென்ட் வைத்திருப்பதாகவும் சொன்னதும், கதவு மெல்லெனத் திறந்தது.
அது ஒரு அழகிய பின்னேரம், கதவு இடுக்குகளால் பளிச்சிட்ட இந்த அழகிய கண்களுக்கு முன்னால் எந்த மலையாள நடிகையும் முகம் நிமிர்த்த முடியாது என நினைத்துக் கொண்டேன்.
வாங்கோ உள்ளே கதவு நான் உள் நுழையுமளவுக்குத் திறந்தது. ஓரு கறுப்பும் வெள்ளையுமான நாய் கம்பீரமாக என்னைப் பார்த்து முறைத்து விட்டு ஒரு பாட்டம் குலைத்து ஓய்ந்தது. வீட்டுக்குள் நுழைந்ததும் கண்களைக் கவர்ந்தது பல கோணங்களில் எடுக்கப் பட்டிருந்த ஒரு பெண்ணின் படம்தான். அத்துடன் அழகிய ஒரு குழந்தையின் பல கோணப் படங்கள். அவற்றைத் தாண்டியதும் என் கண்களில் மோதியவை பல தரப்பட்ட விருதுகளும். பரிசுப்கோப்பைகளும். படத்தில் இருப்பவர் என் முன்னால் நினிறிருந்ததால் ;;நீங்கள் மிஸஸ் பாலாவா'' என்று கேட்டேன். ஆமாம் என்ற கருத்தில் ஓரு அழகிய புன்னகை, அதுதான் மறுமொழி.
''யு கான் கம் அப்ஸ்ரெயாஸ்'. முதல் நாள் டெலிபோனிற் பேசியிருந்ததால் மேலேயிருந்து வந்த குரல் பாலுவின் குரலென்று தெரிந்தது. மேலே சென்றேன். தலையில் ஒரு தொப்பியுடன பாலு தன்னை அறிமுகம் செய்ததார். மொட்டை மாடியில் கிடுகுகளால் வேயப்பட்ட ஒரு குளிரான அறையில் இருந்து எங்களைப் பற்றி ய தகவல்களைப் பரிமாறக்கொண்டோம். இந்தியத் திரைப் படமும் பெண்களும் பற்றிய எனது ஆராய்ச்சி பற்றிச் சொன்னேன்.
 ஏன் பெண்களைப் பற்றி விசேடமாக ஆய்வு செய்கறீர்கள் என்று அவர் கேட்கவில்லை. சென்னை வாழ் இலங்கையின் பிரபல எழுத்தாளரான செ .கணேசலிங்கம் மூலம், பாலு எனது எழுத்துக்களை முக்கியமாக'' ஒரு கோடை விடுமுறை' நாவலை வாசித்திருக்கிறார் என்று கேள்விப்படடிருந்தேன். எனது பெண்ணியவாதக் கருத்துக்களை அவர் அறிந்திருக்கிறார் என்று என்பது தெரிந்தது.
தென்னாசியாவிலேயே பிரமாண்டமான வாகினி ஸ்ருடியோவுக்குப் போய், தமிழ்ச் சினிமாவின் வளர்ச்சி பற்றிய பழைய விபரங்களைத் திரட்டிய விபரங்களைச் சொன்னேன்.

திரைப்பட மாணவர்கள் பல தரப்பட்ட குறும் படங்களைத் தஙகள் படிப்பு சம்மந்தமாக எடுப்பார்கள், நீங்கள், லண்டனில் படம் என்ன எடுத்தீர்கள்? ஏன்று கேட்டார். அந்தக்கால கட்டத்தில், 80ம் ஆண்டின் நடுப்பகுதியல், உலகில் நடக்கும் பல தரப்பட்ட விடுதலைப் போராட்டங்களும் முற்போக்குக் கொள்கை கொண்ட மாணவர்களின் படைப்புக்களில் பல தாக்கங்களையுண்டாக்கியிருந்தது. பாலஸ்தீன மக்களுக்கெதிராக இஸ்ரேலிய அரசு எடுக்கும் ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கெதிரான பிரச்சினைகள், நெல்ஸன் மண்டேலாவை விடுதலை செய் என்கிற போராட்டங்கள், சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டம், மார்க்கிரட் தச்சரின் வெளிநாட்டு அரசியற் கொள்கைகள் என்பன ஒருசிலவாகும். அவற்றின் கருத்துக்கள் பிரதி பலிக்கப் பல தயாரிப்புக்களில் மாணவர்களுடன் சேர்ந்து ஈடுபட்டதாகச் சொன்னேன்.
ஆனால். இவற்றிற்கும் அப்பால், இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடக்கும் கRajes.B  Cameraொடுமைகளைப் பிரதிபலித்து எஸ்கேப் புறம் ஜெனசைட் என்ற டொக்கியுமென்டரியை எடுத்து தமிழ் மக்களின் நிலையை, பல தரப்பட்ட மனித உரிமை ஸ்தாபனங்கள், இயக்கங்கள், போன்றவர்களுக்கு ஐரோப்பா முழுதும் சுற்றித் திரிந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன்.
அந்தப் படத்தை ஏன் இந்தியாவுக்குக் கொண்டுவரவில்லை என்று கேட்டார்.
இந்தியா போகும் வழியில் இலங்கைக்குப் போனதால், இலங்கை அரசுக்கு எதிரான அந்தப் படத்தைக் கொண்டுவர முடியவில்லை என்று சொன்னேன். தான் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார் அடுத்த தரம் வரும்போது கொண்டுவருகிறேன் என்று சொன்னேன'
தான் நீண்டகாலமாக இலங்கைக்குப் போகவில்லை என்றார்.
இந்தியப் படைகள் இலங்கையில் வந்திருக்கிறார்கள், அரசியல்வாதிகள், போராளிகள் எல்லோரும் மக்கள் பற்றி சிந்தித்தால் தமிழர் படும் துயருக்கு ஒரு முற்றுப்புள்ளி வரும் என்ற எனது நம்பிக்கையைச் சொன்னேன்.

நம்பிக்கைகள்தான் வாழ்க்கையில் ஒளியைக்காட்டிக் கொண்டிருக்கிறது என்றார்
;

அவரின் படங்களைப் பற்றிக் கேட்டேன்.

மூன்றாம் பிறை படத்தை அண்மையில் பார்த்ததாகச் சொன்னேன்.

அதன் பின் அவர் ஒரு படத்தைப் போடடுக் காட்டினார் இது என் மனைவி நடித்தபடம் என்று சொன்னார்.
'உங்ள் மனைவி கீழே இருக்கிறாரே' என்று சொல்ல வாயெடுத்த நான் எனதுmoodupani வாயை அடக்கிக் கொண்டேன். அந்தப்படம, தற்கொலை செய்து இறந்துவிட்ட நடிகை ஷோபா நடித்த படம்.
இந்தப் பெண் அற்புதமான இளம் நடிகை' என்றேன். அவர் அதற்குப் பின் என்ன சொன்னார் என்று ஞாபகம் இல்லை. எனது ஞாபகம் கீழே பார்த்த அவரின் மனைவி அகிலாவின் சாந்தமான, சோகமான முகத்தடன் மோதிக்கொண்டிருந்;தது இன்னும் ஞாபகமிருக்கிறது, அதே மட்டத்தில் பதினேழு வயதான ஷோபா தன்னைத்தானே மாய்த்துக்கொண்ட அதிர்ச்சி நீண்டகாலம் என்னைத் துயர் படுத்தியது..
அதன் பின் 1997ம் ஆண்டு இந்தியா போயிருந்தபோது, பாலுவைப் பார்த்தேன் இருதய அடைப்பு வந்து துன்பப் பட்டதாகச் சொன்னார். திரைப்படத்துறையிலும் அவருக்குப் பெரிய பட வாய்ப்புக்கள் இருக்கவில்லை.
அவரின் மகன் திபை;பட சம்பந்தமாகப் படித்துக்கொண்டிருந்தான்.

 இலங்கையில் பல மாற்றங்கள். அமைதி தருவார்கள் என்று நம்பிய இந்தியப் படை தமிழர் தங்கள் வாழ்நாளில் இலங்கைப் படையால் அடையாத பல கொடுமைகளைச் செய்து விட்டுப் போய்விட்டார்கள் என்று சொன்னேன்'. இலங்கையில் எப்போது அமைதி வரும் என்ற ஏக்கம் அவரிற் தெரிந்தது. அவர் பிறந்த மட்டக்களப்பு, அமிர்தகழிக் கிராமத்தைப் பார்க்காத, மீன்பாடும் தேனாட்டில் கால் பதித்து ஆசை தீர நடந்து திரிய முடியாத துயரை அவரின் பேச்சிற் கண்டேன்.

எனது சினிமாத்துறை பட்டத்தை வைத்துக்கொண்டு,; லண்டன் திரைப்படவுலகில் எனது சீவியத்தை அமைக்க முடியவில்லை என்று நான் துயர்பட்டபோது, சிறுபான்மையினப் பெண்ணான எனக்கு, லண்டனில் ஆளுமை கொண்ட வெள்ளையின மத்திய தரவர்க்கத்துடன் மோதிக்கொள்ள முடியாத பரிதாப நிலையை அவர் உணர்ந்தார்.

அத்துடன், திரைப்படம் சாராத துறையில் முதுகலைப்பட்டம் பெற்று ஒரு நல்ல உத்தியோகம் கிடைத்தது பற்றியும் எனது மகன்கள் உயர்படிப்புகள் படிப்பது பற்றியும், உண்மையான சகோரத்துவ பாசத்துடன் பாராட்டினார்.

அப்போது, அவர் பற்றிய கிசுகிசுப்புக்கள் பல சென்னையில் உலவின.

 நான் ஒரு நாளும் அவை பற்றி அவரிடம் கேட்டது கிடையாது. பாலு ஒரு நல்ல மனிதன், அற்புதமான திரைப்படக் கலைஞர்களில் ஒருத்தர். தனது கமராவால் கவிதை படைக்கும் கவிஞன்; அவர். தென்னாட்டின் சத்யத்ரேய் அவர். நல்ல திரைப்படக்கலைஞர்களை அடையாளம் கண்டவர், அவர்களை திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் உலகத் தமிழர்களின் அற்புத நடிக நாயகனான கமலகாசன், முதற்தரம் சிறந்த நடிகனுக்கான விருதைப்பெற வழிசெய்தவர். வர்த்தக உணர்வில் கவர்ச்சிப் பாத்திரங்களைப் பயன்படுத்தாமல், தமிழ்ப்படத்திற்குத் தமிழ்நாட்டுக்; கறுப்பு நாயகிகளைத் தேடியவர்.

அவரின் எதிர்கால வாரிசுகளாக எத்தனையோ இளம் இயக்குனர்களுக்கு வழிகாட்டியவர், இவைகளுக்கு மேல் அவரைப்பற்றிய தனிப்பட்ட விடயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் ஒரு நாளும் நினைத்தது கிடையாது.

அதன் பின், அடுத்து வருடம்;,1998ல், தமிழ்க்கடவுள் முருகன் பற்றிய ஒரு மகாநாட்டுக்கு சென்னை போயிருந்துபோது,; பாலு வீட்டுக் கதவைத் தட்டியபோது அகிலா அன்புடன் வரவேற்றார். என்னைப் பார்த்து முறுக்குடன் குலைத்து மிரட்டிய அவர்களின் நாய் சுகமில்லாமல் சாக்குக் கட்டிலில படுத்திருந்தது.

பாலு, படப்படிப்பில மிகவும் பிசியாகவிருந்தார். படத் தெருவில் அவர் படம் எடுக்கும்போது மணிக்கணக்காக அவருடன்சேர்ந்து கொண்டு, சென்னைத் தெருக்களில் திரிந்தது ஒரு நல்ல ஞாபகம். பல தடவைகள் எங்கள் சந்திப்பு அவரின் எடிட்டிங் றூமில் நடக்கும்.

 இலங்கை பெற்றெடுத்த அந்த அற்புதக்கலைஞனை லண்டன் திரைப்படவுலகத்திறகுத் தெரியப்படுத்த வேண்டும் என்ற ஆவலை அடிக்கடி சொல்வேன். தான் இன்னும் இலங்கைக்கு மட்டுமல்ல வெளியில் எந்த இடத்திற்கும் போகவில்லை;. அவரின் நிலை வெளியில் பிரயாணம் செய்யத் தடையாயிருக்கிறது என்பது எனக்கு வேதனையைத் தந்தது.
 அதைத் தொடர்ந்து, எனது புத்தகங்களின் வெளியீடுகள் காரணமாக ஒவ்வொரு வருடமும் இந்தியாவுக்குச் சென்றபோது எனது இலக்கிய வேலைகளுக்கு, சென்னையில் நடைபெற்ற எனது அத்தனை புத்தக வெளியீடுகளுக்கும், எனது நண்பர் செ.கணேசலிஙகத்துடன் முன்நின்று உதவியவர் என்னுடன் உடன்பிறவாச் சகோதரன் பாலுவாகும். அத்துடன். லண்டன் திரைப்படத்துறை சம்பந்தமாக நான் எழுதிய நாவலான அவனும் சில வருடங்களும்' என்ற நாவலுக்கு முன்னுரை எழுதி; என்னை ஊக்குவித்தார்.

அந்தச் சந்திப்பின் பின்; கடைசியாக பாலுவைக் கண்டது 2006ம் ஆண்டாகும். திரைப்படத்துறைபற்றிய ஒரு வோர்க்ஷொப்பைத் தொடங்கும் பணியில் இருந்தார். அவரின் கலைத்தாகம் அளப்பரியது. தனித்துவமானது, பன்முகப் பரிமாணங்களைத் தாங்கியது. பூனேயில் தனது திபை;படப் பட்டப்படிப்பை முடித்தகாலத்திலிருந்து அவர் எடுத்த படைப்புக்கள் பல விருதுகளைப் பெற்றிருக்கிருக்கின்றன. கிட்டத்தட்ட 22 படங்கள் எடுத்திருக்கிறார். நான் அத்தனை படங்களையும் பார்த்தது கிடையாது. ஆனால் அவை ஓவ்வொன்றும் ஒவ்வொரு வண்ண ஓவியங்கள் என்பதை மறுக்க முடியாது..

Moondram-Piraiஎந்தக்கலைஞனும், தங்களின் சுய நினைவுகள், காதல் பற்றிய நுணுக்கமான உணர்வுகள், ஆத்மீகத் தேடல்கள், அரசியல் உந்துதல்கள் என்பதைத் தங்களின் படைப்புக்களில் தெரிந்தோ தெரியாமலோ. விரும்பியோ விரும்பாமலோ பதிவு செய்வது தவிர்க்கமுடியாது. அதன்பிரதிபலிப்பின் ஒரு உருவம்;தான் மூன்றாம்பிறை.  அவருக்கும் ஷோபாவுக்கும் இருந்த உறவு, முறிந்த சோகத்தின் பிரதிபலிப்புத்தான் அந்தப்படம். அதை அவர், நீண்டகாலத்தின்பின் ஒரு நேர்காணலில்; மறைக்காமல் சொல்லியிருக்கிறார்.

அவரின் படங்கள் முழுக்க முழுக்க கலைப்படைப்புக்கள் என்று சொல்ல முடியாது, ஏனென்றால் இந்தியத் திரைப்படவுலகில் அப்படிப்படங்கள் எடுக்க எதுவித வசதியோ ஊக்குவிப்போ கிடையாது. வர்த்தக உள்ளீடல், பங்களிப்புக்கள் இல்லாமல் ஒரு படம் எடுக்கும் சந்தர்ப்பம அங்கு பெரிதாகக் கிடையாது. அப்படி எடுக்கப்பட்ட படங்களைப் பெரும்பாலும் வெற்றியுடன் வெளியிடவும் முடியாது. ஆனாலும், தன்னால் முடிந்தமட்டும் தனித்துவம் பேணும் நல்ல பல படங்களை பால மகேந்திரா மக்களுக்குக் கொடுத்திருக்கிறார்

அவரின் 'சந்தியா ராகம்' உலகப் பெயர் பெற்ற வட இந்திய இயக்குனரான சத்தியத்ரேயின் 'பதர் பாஞசாலி'யை ஞாபகப் படுத்துகிறது. கதையின் கரு, வாழ்க்கையின் அந்திம காலத்தில் மற்றவர்களின் தயவுக்கும் உதவிக்கும் தவிக்கும் ஒரு முதிய தலைமுறையின் ஏக்கத்தைப் பிரதிபலித்து,அந்தக் கதையைக் கவிதையாக்கியிருக்கிறது அவரது கமராவின கைவண்ணம்.

ஒவ்வொரு கலைஞனும், தாங்கள் எடுத்த காரியத்தை நோமையாக வெளிப்படுத்தும்போது அந்தப் படைப்பு சாகாவரம் பெறுகிறது. அப்படியான கலைஞர்களில் பாலு மகேந்திராவும் ஒருத்தர். அவரைப் பெற்றெடுத்த அமிர்தகழிக்கிராமமும், தத்தெடுத்த தமிழகத் திரைப்பட உலகும்,, அவரால் வளர்க்கப்பட்ட பல திறமையான இளம் இயக்குனர்களும், அவரின் படங்களை ரசித்து மகிழ்ந்த பல கோடித் தமிழர்களும், அவரின் இரு மனைவிகளும், அன்பு மகனும் அவரின் பிரிவால் படும் துயருக்கு எங்கள் மனமார்ந்த அனுதாபங்களைச் செலுத்துவோம்.
நன்றி தேனீ.கொம் 
»»  (மேலும்)