2/11/2014

| |

கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கான விஷேட பிரதேசஅபிவிருத்திக் குழுக் கூட்டம்

மட்டக்களப்புமாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கான விஷேட பிரதேசஅபிவிருத்திக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை (07.02.2014)பிரதேசசெயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்குமாகாண சபை உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதேசசெயலாளர் திருமதி ரீ.தினேஸ்,பிரதேசசெயலகத்தின் பிரதிதிட்டப் பணிப்பாளர் திருமதி.பிரணவசோதி, உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன்,கோறளைப்பற்றுபிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், மட்டக்களப்பு மாவட்டச் செயலகதிட்டமிடல் பிரிவு உதவித் திட்டப் பணிப்பாளர் ஏ.சுதாகரன் மற்றும் பிரதேசதிணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்டபலரும் கலந்துகொண்டனர்.
 
இதன் போதுகிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்திற்கு 12மில்லின் ரூபாவும், திவிநெகும வேலைத்திட்டத்திற்கு 2.77மில்லியன் ரூபாவும்,கிராமியவீதிகள் மற்றும்பாலம் 4.15மில்லின் ரூபாவும், கிராமியபாடசாலைகள் மற்றும் சுகாதாரத்திற்கு 0.83மில்லியன் ரூபாவுமாகமொத்தம் 19.75மில்லின் ரூபாவுக்கான வேலைத்திட்டங்கள் முன்மொழியப்பட்டு அது தொடர்பாக ஆரயப்பட்டதாக கோறளைப்பற்று பிரதேசசெயலக உதவித்திட்டப் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன் தெரிவித்தார்.