3/04/2014

| |

திருமலை துறைமுகம் 4.5 பில். டொலர் செலவில் அபிவிருத்தி செய்ய திட்டம்

திருகோணமலை துறைமுகத்தை 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இது சம்பந்தமாக சாத்திய வளப்பாடுகளை பார்வையிடுவதற்கு கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, மீன்பிடித்துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் சவூதி அரேபிய தூதுக் குழுவினர் நேற்று திருகோணமலைக்கு விஜயம் செய்து திருகோணமலை அஷ்ரப் இறங்குதுறையை பார்வையிட்டனர்.
சவூதி அரேபியாவின் சர்வதேச புகழ்பெற்ற கட்டட நிர்மாண கம்பனியான சம்மோடி நிறுவனக் குழுவே இதனை பார்வையிட்டது. இக்குழுவினர், சர்வதேச ரீதியில் புகழ்வாய்ந்த கட்டடங்கள், உல்லாச விடுதிகள், துறைமுகங்கள், சவூதி அரேபியா மக்காவில் ஹரம் உட்பட பல்வேறு புகழ்வாய்ந்த கட்டட நிர்மாணங்களை மேற்கொண்டுள்ளனர்.
தற்போது உலகிலேயே அதி உயரமாக பெயரிடப்பட உள்ள 1.6 கி. மீ- உயரமுடைய கட்டடத்தை சவூதி அரேபியா ஜித்தாவில் நிர்மாணித்து வருவது குறிப்பிடத்தக்கது.