3/05/2014

| |

80 கோடி மக்கள் ஓட்டளிக்க உரிமை பெற்றுள்ள 16வது லோக்சபா தேர்தல்

2014 லோக்சபா தேர்தலுக்கான தேதியை தேர்தல் கமிஷன் இன்று காலை வெளியிடுகிறது.
15வது லோக்சபா வரும் ஜூன் 1ம் தேதி நிறைவடையவுள்ளதையடுத்து, 16வது லோக்சபா தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்கவுள்ளது. இதற்கான தேதியை இன்று காலை 10.30 மணியளவில் தேர்தல் கமிஷன் வெளியிடுகிறது. இதுவரை இல்லாத வகையில், 7 கட்டங்களாக நடக்கவுள்ள இந்த தேர்தல், இந்திய வரலாற்றில் அதிக காலம் எடுத்துக்கொண்ட தேர்தல் என்ற பெயரைப்பெறும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வரும். இதனால், அரசுகள் கொள்கை ரீதியான அறிவிப்புகள் எதையும் வெளியிட முடியாது. இந்த லோக்சபா தேர்தலில், முதன்முறையாக நோட்டோ எனப்படும் யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை என்ற புதிய முறை அமலுக்கு வருகிறது. முன்னதாக, நேற்று டில்லியில் நடந்த கூட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்த லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இந்த தேர்தலில் 80 கோடி மக்கள் ஓட்டளிக்க உரிமை பெற்றுள்ளனர். ஜூன் 1ம் தேதி தற்போதைய லோக்சபா நிறைவடையவுள்ள நிலையில், புதிய லோக்சபா மே 31ம் தேதிக்குள் அமைக்கப்படும்.