4/30/2014

| |

தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் மே தின நிகழ்வுகள் படுவான்கரை மண்ணில்

Photoஉலகத் தொழிலாளர் தினம் 2014

உலகத் தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன ஊர்திப் பேரணி நிகழ்வு எதிர்வரும் 01.05.2014ம் திகதி பி.ப 01.30 மணிக்கு மட்டக்களப்பு லேக் வீதியில்; அமைந்துள்ள தலைமைச் செயலகத்தில் இருந்து ஆரம்பமாகி மண்முனைப் பாலத்தினூடாக மகிழடித்தீவுச் சந்தியைச் சென்றடைந்து. அங்கு உழைக்கும் வர்க்கத்தின் நலன் காக்கும் தலைவர் சி.சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் தமிழரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க  படுவான்கரை மண்ணின்; மகிழடித்தீவுச் சந்தியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி நடத்தும் மாபெரும் மேதின நிகழ்வு பெறவுள்ளது.
 
»»  (மேலும்)

4/28/2014

| |

மட்டு. அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதி கையளிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 618 மில்லியன் ரூபா நிதிக்கான ஆவணத்தை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸிடம் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்  மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் திங்கட்கிழமை (28) கையளித்தார்.
இதனைத் தொடர்ந்து பட்டிருப்புத்தொகுதிக்கான ஆவணத்தை  மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி  முரளிதரனிடமும் மட்டக்களப்பு பிரதேசத்திற்கான ஆவணத்தை ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனிடமும்  கல்குடாத்தொகுதிக்கான ஆவணத்தை அமைச்சர் பசீர் சேகுதாவூதின் இணைப்பாளர் எம்.முஸ்த்தபாவிடமும்  எம்.எல்ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கையளித்தார்.
இதன்போது, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும்; அறிவுரைகள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலானந்தர் அழகியல்; கற்கைகள் நிறுவக மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்,   கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக்,  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.சாந்தன பண்டார, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஐ.ஏ.வகாப்தீன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிறிதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மாவட்ட சமுர்த்தி பிரதிப் பணிப்பாளர் பி.குணரட்னம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின்  தலைமையில் நடைபெற்றது.
»»  (மேலும்)

| |

பொழுது போக்கு தளமாக மாறிய மண்முனைப்பாலம்

மட்டக்களப்பு மண்முனைப் பாலத்தின் இரு முனைகளும் உள்ளூர் வாசிகளை கவரும் இடமாக மாற்றம் பெற்று வருகின்றது.
படுவான் கரையில் உள்ள மக்களைவிட வெளியிடங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமானோர் பொழுதுபோக்கு தளமாக பாலத்தின் இரு முனைகளையும் பயன்படுத்துவதைக் காணமுடிகின்றது.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சிங்கள மக்களும் பொழுது போக்குக்காக இப்பாலத்தைப் பயன்படுத்துகின்றனர்.
சிறுவர்களின் விளையாட்டுக் பொருட்கள் முதல் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் , ஐஸ் கிறீம்  விற்கும் வியாபாரிகளும் அதிகமாகக் காணப்படுகின்றனர்.
இது பற்றி ஒரு வயோதிபர் கருத்துத் தெரிவிக்கையில்
மட்டக்களப்பு-கொழும்பு; புகையிரத சேவை மீள ஆரம்பிக்கப்பட்ட போது அதிகளவானோர் ரயிலில் பிரயாணம் செய்யும் அவாவில் மட்டக்களப்பிலிருந்து ஏறாவூருக்கான பயணச்சீட்டைப் பெற்று போவதும் வருவதுமாக இருந்தார்கள்.
இதனால் தூர இடங்களுக்கான போக்குவரத்தை மேற்கொள்வோர் பெரும் அசௌகரியத்துக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது இரண்டு மாதங்களின் பின்பு ரயிலில் பிரயாணம் செய்யும் ஆவா தீர்ந்ததும்; தூர இடங்களுக்கான பிரயாணத்தை மேற்கொள்வோர் மட்டும் ரயிலைப் பயன் படுத்தியதனால் சௌகரியமாக பிரயாணத்தை மேற்கொண்டனர்.
இதே போன்ற நிலைதான் மிக விரைவில் இப்பாலத்திற்கும் நடக்கும் என அவர்  புன்னகையோடு தெரிவித்தார்.
»»  (மேலும்)

| |

வீடுகள் கையளிக்கும் நிகழ்வு

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசத்தில் கடந்த கால யுத்தத்தினால் பெரிதும்  பாதிக்கப்பட்ட 18 கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த மக்களுக்களுக்கு வீடுகளை கையளிக்கும் நிகழ்வு நேற்று(25) வெள்ளிக்கிழமை  ஈரளகுளம் கிராமசேவகர் பிரிவில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டார்.
ஜரேப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 117 புதிய வீடுகளும் புனரமைக்கப்பட்ட  57 வீடுகளுமாக மொத்தமாக 174 வீடுகள் மக்களிடம் கையளிக்கப்பட்டன.
»»  (மேலும்)

4/27/2014

| |

மதுரையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திருநங்கை

வேட்புமனு தாக்கல் செய்யும் திருநங்கை பாரதி கண்ணம்மாஇந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் மதுரை தொகுதியில் திருநங்கை ஒருவர் தேர்தலில் போட்டியிடுகிறார்.
53 வயதாகும் பாரதி கண்ணம்மா, இந்திய நாடாளுமன்றத்தின் முதல் திருநங்கை உறுப்பினராக வர வேண்டும் என்ற விருப்பத்துடன் நடக்கவுள்ள தேர்தலில் சுயேச்சையாக களம் நிற்கிறார்.
முதுகலைப் பட்டம் படித்து பிரபல தனியார் வங்கி ஒன்றில் வேலைபார்த்துவந்த இவர், தற்போது முழுநேர சமூக ஆர்வலராகவும், திருநங்கையர் நலத்துக்காக குரல்கொடுப்பவராகவும் இருந்துவருகிறார்.
இந்தியாவில் சமூக ரீதியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்ற திருநங்கையர் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என இந்திய உச்சநீதிமன்றம் மிக அண்மையில்தான் தீர்ப்பளித்திருந்தது.
»»  (மேலும்)

4/26/2014

| |

42 வது இலக்கியச்சந்திப்பு* பேர்ளின்

புகலிட இலக்கிய சந்திப்பின் 42 வது அமர்வுஎதிர் வரும்  மே மாதம்  பெர்லின் நகரில் இடம்பெறவுள்ளது.

42 வது இலக்கியச்சந்திப்பு பேர்ளின்

26 avril 2014, 11:21
             
    நிகழ்ச்சி நிரல்
                    மே மாதம் 17 திகதி   2014  சனிக்கிழமை
    இடம் : Werkstatt der Kulturen Wissmannstr  32
                              12049   BERLIN
   
9:00 சுயஅறிமுகம்

9:30 என் கே ரகுநாதனின் “பனஞ்சோலைக்கிராமத்தின் எழுச்சி“ அறிமுகமும் விமர்சனமும்.  :-ஷோபாசக்தி

10:30 தெணியானின் "இன்னும்சொல்லாதவை " வாழுவனுபவங்கள் : சந்துஸ்

11:00 சாதியமும் சுயவிசாரணையும் : -  ஜீவமுரளி

11:30 "தலித்விடுதலையில் சாதியச்சாடல்கள்" அருந்ததியார் சமூகத்தை முன்வைத்து  :-என் சரவணன்
        நெறிப்படுத்தல் :- ராகவன்

13:00 மத்தியானச்சாப்பாடு

14:00 ”இடைநிலை”    :- விஜயன் விஜயதாசன்
    திட்டமிடப்படாத உடலியல் செயற்பாட்டு அரங்க அளிக்கை

15:00  பாலியல் அரசியல்  :-  லிவிங் ஸ்மைல் வித்யா
      நெறிப்படுத்தல் :- ஹரி  ராஜலட்சுமி

16:00 மலையகம் : “இருள்வெளிப்பயணம்!  :- மு. நித்தியானந்தன்
      ;.
17:00 2009 பின் இலங்கையில் சிறுபான்மையினர் : ரவுஃப் முகமட் காசிம்  Rauf Mohamed Cassim
நெறிப்படுத்தல்: என் சரவணன்

18:00 சுமதியின் “இங்கிருந்து”  திரையிடலும் விமர்சனமும்


                        மே 18 ம் திகிதி 2014 ஞாயிறு

10:00  போரின் பின் பெண்கள் முகம் கொடுக்கும் சவால்கள் ( ஆய்வு அறிக்கையும் முன்மொழிவுகளும் : நளினி ரத்னராஜா - பால் நிலை சமத்துவ செயற்பாட்டாளர்

 நெறிப்படுத்தல்:- உமா

13:00 மத்தியானச்சாப்பாடு

14:00   நவதாரளவாதமும் புனரமைப்பும் மீளிணக்கமும் :- நிர்மலா ராஜசிங்கம்
             மகாணசபைகளும் சிறுபான்மை இனங்களின் எதிர்காலமும் :-  எம் ஆர் ஸ்ராலின்
             நெறிப்படுத்தல் :-தேவாதாஸ்

16:00 லீனா மணிமேகலையின் ” வெள்ளைவான் கதைகள்”
     திரையிடலும் விமர்சனமும்


வாசுகனின்  “அடையாளம்”  ஓவியக்கண்காட்சியும்                     தமயந்தியின் புகைப்படக்கண்காட்சியும்இடம்பெறும்

தொடர்புகளுக்கு
 42ndillakkiyasanthippu@gmail.com
தொலைபேசி

0049 15212861262
00493061617808
»»  (மேலும்)

| |

ஆரையம்பதி வைத்தியசாலை தளவைத்தியசாலை ஆக்கப்படவேண்டும் - ஜனாதிபதியிடம் மனு கையளிப்பு.

 

மக்களின் வைத்திய தேவையினை பூர்த்தி செய்து வருகின்றது யுத்தம், சுனாமி அனர்த்த காலங்களில் குறைந்த அளவான வளத்தின கொண்டு சேவை புரிந்து வந்த இவ் வைத்தியசாலை இன்றும் வீதி விபத்துக்கள் உள்ளிட்ட அனைத்து அவசர வைத்திய சேவைகளையும் இவ் வைத்தியசாலை மேற்கொண்டுவருகின்ற போதும் இன்றுவரை அரசியல் சூழ்நிலை காரணமாக தளவைத்திய சாலை அந்தஸ்த்து வழங்கப்படாது உள்ளது.
தள வைத்தியசாலை எனும் நாமம் இல்லாது தரம் உயர்த்ப்படாத போதும் தளவைத்தியசாலைக்கு ஈடான வைத்திய சேவையினை வழங்கிவரும் இவ் வைத்தியசாலையினை தள வைத்தியசாலையாக தரம் உயர்த்த வேண்டும் என பல முறை கோரப்பட்டு வந்ததது. மகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் அவர்களினால் கிழக்கு மகாண அமைச்சரவை அனுமதிக்காக முன் வைக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களிடம் ஆரையம்பதி வைத்திய அதிகாரி திருமதி மோகனாவதி மற்றும் ஆரையம்பதி வை;தியசாலை அபிவிருத்திக்குழுவின் தீர்மானங்கள் அடங்கிய கோரிக்கை மனுவினை மன்னாள் மாகாண சபை உறுப்பினரும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு தலைவருமான பூ.பிரசாந்தன் கையளித்து சுட்டிக்காட்டப்பட்டபோதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.
»»  (மேலும்)

| |

மதவாத, இனவாத அமைப்புக்களை தகர்த்தெறிய புதுச் சட்டம் கொணர்வேன்! - வாசு

மதவாத, இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு பிளவுகளை ஏற்படுத்தும் அமைப்புக்களுக்கு தண்டனை வழங்குவதற்காக புதிய சட்டம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக அமைச்சரவையில் மகஜர் ஒன்றை சமர்ப்பிக்கப் போவதாக தேசிய மொழிக் கல்வி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிடுகிறார்.

பொதுபல சேனா போன்ற இனவாத, மதவாத அமைப்புக்களின், மக்களுக்குத் திருப்தியற்ற செயற்பாடுகளை இல்லாதொழிப்பதற்கான காலம் உருவாகியுள்ளதெனவும், பிரச்சினைகள் ஏற்படும்போது அதற்கு பலாத்காரமாக முடிவு எடுப்பது மதகுருமாருக்கு உசிதமானது அல்ல எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

வில்பத்துவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் பொதுபல சேனாவினர் செயற்படுவது சாதாரண ஒரு விடயம் என்றாலும், இனவாத்த்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒருக்காலும் இடமளிக்க முடியாது என்று குறிப்பிடுகின்ற அவர், துவேஷத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்ற ஜனநாயக எதிர்ப்புத் தெரிவிக்கின்ற, மதவாத மற்றும் இனவாதத்தை ஏற்படுத்துகின்ற எந்தவொரு அமைப்பையும் இச்சட்டத்தின் மூலம் தண்டிக்க முடியும் எனவும் குறிப்பிடுகிறார்.
»»  (மேலும்)

| |

ஏறாவூர்பற்று- ஈரளக்குள கிராமசேவகர் பிரிவில் நடைபெற்ற நடமாடும்சேவை

நிறைவான இல்லம் வளமான தாயகம் 'கிராமம் கிராமமாக வீடு வீடாக' தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் - 2014 மக்களை வலுவூட்டும் நடமாடும் சேவை மட்டக்களப்பு மாவட்டம் எனும் தொணிப்பொருளில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் ஏறாவூர்பற்று பிரதேச ஒருங்கிணைப்பு தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் வழிகாட்டலின் கீழ் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் தலைமையில் இன்று (25.04.2014) ஈரளக்குள அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. நடமாடும்சேவை ஆரம்ப நிகழ்வில் அதிதிகள் வரவேற்க்கப்பட்டு தேசிய கொடியேற்றபட்டதை தொடர்ந்து நடைபெறவிருக்கும் நடமாடும் சேவை அதனால் பொதுமக்கள் அடையவிருக்கும் நன்மைகள் கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டன. நடைபெற்ற நடமாடும்சேவையினூடாக பிறப்பு சான்றிதழ்கள், இறப்பு சான்றிதழ்கள் திருமணப்பதிவு மற்றும் தேசிய அடையாளட்டை போன்ற பதிவுகளுக்காக ஆட்பதிவு திணைக்களத்தின் ஊடாக அதிகமான பதிவுகள் மேற்கொள்ளப்பட்துடன் காலம் கடந்த திருமணப்பதிவுகளும் உடன்பெற்றுக்கொள்ளும் வகையில் தங்களின் சேவையை வழங்கியிருந்தனர். அத்துடன் சமூகசேவை திணைக்களம், காணி அபிவிருத்தி திணைக்களம், சுகாதார திணைக்களம், சிறுகைத்தொழில் அபிவிருத்தி திணைக்களம், கால்நடை திணைக்களம், கமநல திணைக்களம்,பெண்கள் சிறுவர் அபிவிருத்தி திணைக்களங்கள் வருகைதந்து சேவையை வழங்கினர். மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களம் யானையிலிந்து மக்களை பாதுகாத்துகொள்வதற்காக யானைவெடிகளையும் வழங்கினர். மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்ற நடமாடும்சேவை ஊடாக ஈரளக்குள கிராம சேவகர் பிரிவிலுள்ள பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டு அவர்களின் தேவைகளை காலடியில் பெற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. போக்குவரத்து வசதிகள் குறைந்த இப்பிரதேசத்தில் நடமாடும் சேவைக்கு என பொதுமக்களுக்கான விசேட போக்குவரத்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஏறாவூர்பற்று பிரதேச ஒருங்கிணைப்பு தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பிரிவு திரு.இரா.நெடும்செழியன் ஆகியோரினால் காலம்கடந்த திருமணப்பதிவு காணி உறுதிப்பத்திரங்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டன.
»»  (மேலும்)

4/23/2014

| |

இப்போதாவது புத்தி வந்ததே

 வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இணைத்தலைமையாகப் பங்குபற்றும் முதலாவது யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் திங்கட்கிழமை (21) யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்று வருகின்றது. 

வடமாகாண சபை தெரிவு செய்யப்பட்ட பின்னர் முதலமைச்சர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பங்குபற்றும் முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. 

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண முதலமைச்சர் ஆகியோரின் இணைத் தலைமையில் இந்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடைபெறுகின்றது. 

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சிவஞானம் சிறிதரன், மதியாபரணம் சுமந்திரன், வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண மீன்பிடி உள்ளூராட்சி அமைச்சர் பா.டெனீஸ்வரன், பொலிஸார், இராணுவத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
»»  (மேலும்)

4/22/2014

| |

கொக்கட்டிச்சோலையிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ்சேவை ஆரம்பம்

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையிலிருந்து புதிதாக திறக்கப்பட்ட மண்முனை பாலத்தினூடாக கொழும்புக்கான நேரடி பஸ் சேவையை இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு டிப்போ ஆரம்பித்துள்ளது.
கொக்கட்டிச்சோலை நுழைவாயிலிலிருந்து குறித்த பஸ்சேவையானது திங்கட்கிழமை(21) 6.15 மணிக்கு ஆரம்பமாகியது.
இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு டிப்போ முகாமையாளர் கே.மனோகரன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப வைபத்தில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, இலங்கை போக்குவரத்துச்சபை கிழக்கு மாகாண செயலாற்று முகாமையாளர் எஸ்.கனகசிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மாலை 6.15 மணிக்கும் காலை 11.00 மணிக்கும் கொக்கட்டிச்சோலையிலிருந்து இரு பஸ்சேவைகள் தினமும் இடம்பெறவுள்ளதாக டிப்போ முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.
கொக்கட்டிச்சோலை மக்கள் பல மைல் தூரத்திலுள்ள காத்தான்குடி அல்லது களுவாஞ்சிக்குடிக்கு சென்றே கொழும்புக்கான பயணத்தை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கொக்கட்டிச்சோலையில் இருந்து மட்டக்களப்புக்கு மண்முனை பாலம் ஊடாக அரச மற்றும் தனியார் பஸ் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை (20)  ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இச்சேவையூடாக இதுவரை காலமும் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் நீர் வழியூடாக போக்குவரத்து செய்த மக்களுக்கு குறித்த நேரத்தில் இலகுவாக தங்களுடைய போக்குவரத்தினை மேற்கொள்ள கூடிய வசதி கிடைக்கப்பெற்றுள்ளன.
அத்துடன் கொக்கட்டிச்சோலையில் இருந்து தாந்தாமலைக்கு தனியார் போக்குவரத்து ஒன்று ஞாயிற்றுக்கிழமை (20) ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
»»  (மேலும்)

4/19/2014

| |

மண்முனைத்துறை வாவியில் அகாலமரணமடைந்தவர்கள் இன்று நினைவுகூரப்படுகின்றனர்

மண்முனைத்துறைக்கான  போக்குவரத்துப்பாலம் இன்று திறக்கப்படும் வேளையில் இவ்வாவியில் அகாலமரணமடைந்தவர்கள் இன்று நினைவுகூரப்படுகின்றனர்.இவ்வாயில் போக்குவரத்து காரணமாக மக்கள் தங்கள் உயிர்களை இழக்கும் சம்பவங்களுக்கு இன்றுடன் முற்றுப்புள்ளி வைக்கப்படுகின்றது. 1973ம்ஆண்டு தொடக்கம் மரணமடைந்தவர்கள் சிலரின் பெயர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
மண்முனை துறையை கடக்கும் போது அகால மரணம் அடைந்தவர்கள்
01.நல்லதம்பி தில்லையம்மா(முனைக்காடு) காவு கொள்ளப்பட்ட நாள் – 12.09.1973
02.சாமித்தம்பி சின்னப்பிள்ளை (முனைக்காடு) காவு கொள்ளப்பட்ட நாள் – 12.09.1973
03.சாமித்தம்பி தருமராசா (முனைக்காடு) காவு கொள்ளப்பட்ட நாள் – 12.09.1973
04.நல்லதம்பி சின்னத்துரை(எழுதுவினைஞர்-மகிழடித்தீவு) காவு கொள்ளப்பட்ட நாள் – 26.12.1985
05.கனகசபை ஜயதரன்(உதவி அரசங்க அதிபர்-பட்டிப்பளை) காவு கொள்ளப்பட்ட நாள் – 17.01.1992
06.மாணிக்கப்போடி கங்கேஸ்வரி(ஆசிரியை முனைக்காடு) காவு கொள்ளப்பட்ட நாள் – 17.01.1992
07.கதிர்காமப்போடி ஆறுமுகம்(பட்டிப்பளை)காவு கொள்ளப்பட்ட நாள் – 17.01.1992
08.செல்லத்தம்பி தங்கராசா(அரசடித்தீவு)காவு கொள்ளப்பட்ட நாள் – 17.01.1992
09.குமாரசிங்கம் வள்ளியமை(கொக்கட்டிசோலை)காவு கொள்ளப்பட்ட நாள் – 24.05.1992
10.வேலுப்பிள்ளை சந்திரகுமார்(முதலைக்குடா)காவு கொள்ளப்பட்ட நாள் – 24.05.1992
11.பாலிப்போடி கெதராஜ்(கொக்கட்டிசோலை)காவு கொள்ளப்பட்ட நாள் – 24.05.1992
12.குமாரசிங்கம் கமலா
(கொக்கட்டிசோலை)காவு கொள்ளப்பட்ட நாள் – 24.05.1992
13.வைரமுத்து அரன்கனதன்(கொக்கட்டிசோலை)காவு கொள்ளப்பட்ட நாள் – 24.05.1992
14.விஜயலிங்கம் சுகந்தினி(கொக்கட்டிசோலை)காவு கொள்ளப்பட்ட நாள் – 24.05.1992
15.விஜயலிங்கம் ஜெயந்தினி(கொக்கட்டிசோலை)காவு கொள்ளப்பட்ட நாள் ௨4.05.1992
இவர்களுடன் மேலும் சிலர்
படுவான்கரை மக்களின் பல நாள் கனவு மண்முனை வாவிக்கு ஓர் பாலம் வேண்டுமென்பது . அவ் ஆசை இன்றையதினம் நிறைவேறப் போகின்றது. 30 வருடங்களாக பலத்த இன்னல்க்ளின் மத்தியில் படகு மூலம் பயணித்த இம் மக்களுக்கு நாளைய நாள் வாழ்வில் மறக்க முடியாத உன்னத்த நாளாக அமையப்போகின்றது. பலத்த உயிர்களை பலிகொண்ட இவ் வாவியின் பசிக்கு இனி எந்த உயிரும் இரையாகப்போவதில்லை. மறக்க முடியாத படகு பயணம் நாம் நினைத்தாலும் இனி வராது. புதிய புதிய உறவுகளுக்கும் , தகவல் பரிமாற்றத்துக்கும் கேந்திர நிலையமாக இருந்த படகை இனி நாம் எப்போது காண்போம்!!!!!!!! பாதை பயணங்களும், அரட்டைகளும் சுகமான நினைவுகளாக எம் வாழ் நாளில் எப்போதும் இருக்கும்.
»»  (மேலும்)

| |

மண்முனைப் பாலத்தினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று திறந்து வைத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான்கரையினையும் படுவான்கரையினையும் இணைக்கும் மண்முனைப் பாலத்தினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று திறந்து வைத்துள்ளார்.
மட்டக்களப்பு வாவி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து நிற்பதால் வாவியின் கிழக்குப் பகுதி எழுவான்கரை என்றும் மேற்குப் பகுதி படுவான்கரை எனவும் பெயர் பெறலாயிற்று.
இந்தப் படுவான்கரைக்கும் எழுவான்கரைக்கும் இடையிலான தொடர்பு மட்டக்களப்பு மண்முனை வாவி ஊடாகவே நடைபெற்று வந்தது. இதற்காக பாதை எனப்படும் பெரிய இயந்திரப்படகு இப்போது வரை பாவிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு முற்றுப் புள்ளி வைக்கவும், மக்கள் எதிர் கொண்டு வரும் பெருமளவான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட மண்முனைப் பாலம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், ஜப்பானியத் தூதுவர் நொபகிடோ ஹோபோ கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜித், சிறுவர் மற்றும் மகளிர் விவகாரப் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்டோரும் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மண்முனைப் பாலத்திற்கு செல்லையா இராசதுரை பிரதேச அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டதுடன், கருங்கற்களும் அங்கு கொண்டுவரப்பட்டிருந்தன. ஆனால் 1983ஆம் ஆண்டுக்கு பின் பாதுகாப்பு அமைச்சு இந்த பாலம் கட்டுமான பணிக்கு அனுமதி வழங்காததையடுத்து இது நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளதால் படுவான்கரையில் உள்ள பல கிராமங்கள் நன்மை அடைய உள்ளன.
2010ஆம் ஆண்டு தேசிய நல்லிணக்க அமைச்சராக விநாயகமூர்த்தி முரளிதரன் பொறுப்பேற்றதை தொடர்ந்து ஜப்பான் தூதுவரை சந்தித்து மண்முனைத்துறை பாலம் அமைப்பதற்கு உதவுமாறு கோரியிருந்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையையும், எழுவான்கரையையும் இணைக்கும் முக்கிய போக்குவரத்துப் பாதையான மண்முனை ஆற்றுக்கு மேலாக இப்பாலம் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் 2012ஆம் ஆண்டு ஜுலை மாதம் வீதி அபிவிருத்தி அதிகார சபையினருக்கும் ஜெய்க்கா நிறுவனத்திற்குமிடையில் ஜப்பானில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
தற்போது அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு 2012 செப்ரம்பர் 04ஆம் திகதி பட்டிப்பளை அபிவிருத்திக்குழு தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
பாலத்தின் நிர்மாண பணிகள் 33 மாதங்களில் நிறைவடையும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 2012ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 16ஆம் திகதி வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்று மண்முனைப் பாலம் 210 மீற்றர் ஆகவும், இரு பக்கங்களிலும் 500 மீற்றர் அளவான மதகாகவும் (கோஸ்வே) மொத்தமாக 1210 மீற்றரில் அமைக்கப்பட்டுள்ளது.
மண்முனைத்துறை பாலத்துக்கான வேலைத்திட்ட அங்குரார்ப்பணம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான அமைச்சர் பஷில் ராஜபக்சவினால் ஜப்பானியத் தூதுவர் நொபுகிரோ றோபோ கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜித், சிறுவர் மற்றும் மகளிர் விவகாரப் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மீளகுடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்டோரின் பங்குபற்றலுடன் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

| |

இலங்கையில் ஈ பறந்தாலும் விமர்சனம் செய்யும் யாழ்ப்பாண ஆயர் ஏன் ஒழிந்தோடினார்?

 இரண்டு பாதிரியார்களின் பாலியல் தொல்லைகளை பொறுக்க முடியாமல் 22 வயதான கொன்சலீற்றா என்ற யுவதி தற்கொலை செய்ததால் எழுந்த பதற்ற நிலை தொடர்ந்து நீடித்து வருகின்றது. 


மறைக்கல்வி நிலையத்தில் கல்வி கற்க சென்ற சமயத்தில் அங்கு பணியாற்றிய இரண்டு சில்மிசக்கார பாதிரிகளே இவரது மரணத்திற்கு காரணம் என கொன்சலீற்றாவின் உறவினர்களினால் குற்றம்சாட்டப்பட்டு, அதற்கு ஆதாரமாக பாதிரிகள் அனுப்பிய ஆபாச குறுஞ்செய்திகளை காவல்த்துறையிடம் வழங்கியுள்ளனர்.

இவரது மரணத்தையடுத்து கிறிஸ்தவ மக்கள் செறிந்தவாழும் கரையோர பிரதேசமக்கள் பெரும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன், காமுகர்களான இரண்டு பாதிரியார்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

பிரேதபரிசோதனைகளின் பின்னர் நேற்று கொன்சலீற்றாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைகக்பட்டது. குடும்பத்தினர், உறவினர்கள், அயலவர்கள் என பெரும் திரளான மக்கள் கொன்சலீற்றாவின் உடலையும் எடுத்துக் கொண்டு நீதிகோரி வீதிவீதியாக கதறியழுதது பார்ப்பவர்களின் நெஞ்சையுருக்கும் காட்சியாக இருந்தது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, யாழ்ப்பாண ஆயர் இல்லத்தின் முன்பாக கொன்சலீற்றாவின் உடலை வைத்து மக்கள் கதறியழுது போராட்டம் நடத்தினார்கள். இந்த காட்சியை பார்த்த வீதியால் சென்றவர்கள், அந்த பகுதியில் நின்றவர்கள், வீதிஒழுங்கை கவனித்த காவல்த்துறையினர் என அனைவருமே கண்ணீர்விட்டு அழுதபோதும், யாழ்ப்பாண ஆயர் இல்ல கதவுகள் மட்டும் திறக்கவேயில்லை. கதறியழுத்த மக்களின் பிரச்சனைகளை கேட்கவோ ஆறுதல் சொல்லவோ ஆயரோ, வேறு ஒரு பாதிரியோ வெளியில் வராமல் உள்ளே ஒழிந்திருந்தனர். இந்த செயலால் மக்கள் மேலும் கொதித்துப் போயுள்ளனர்.
»»  (மேலும்)

| |

வரலாற்று நூல் ஆய்வாளர் முஹம்மது சமீம் காலமானர்

 வரலாற்று நூல் ஆய்வாளர்  முஹம்மது சமீம் நேற்று இரவு கொழும்பில் காலமானர். முகம்மது சமீம் பதுளையை பிறப்பிடமாகக் கொண்டவர்.
கம்பளை, கொழும்பு சாஹிராக் கல்லூரிகளின் அதிபராகவும் பணியாற்றிய இவர் கல்விச் சமூகத்திற்கு சிறந்த கல்விச் சேவைகளைச் செய்தார். 
இவர் கிழக்கு மாகாணத்தில் கல்விப்பணிப்பாளாரகவும் நீண்டகாலம் சேவையாற்றினார். கிழக்கு மாகாணத்தில் புதிய பாடசாலைகள், ஆசிரியர் நியமனங்களை வழங்கி கிழக்கில் கல்வி மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கும் அளப்பரிய சேவையை ஆற்றினார். இவர் பல ஆய்வு நூல்களையும் வரலாற்று நூல்களையும் தமிழ் ஆங்கில மொழிகளில் எழுதியுள்ளார்.
. இலங்கைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுச் சிறப்புப் பட்டதாரியான இவர், கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் ஆசிரியராகவும், அதிபராகவும் மட்டுமின்றி பிற்காலத்தில் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் இஸ்லாமிய கலாசாரம், இலங்கை முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள், ஒரு சிறுபான்மைச் சமூகத்தின் பிரச்சினைகள், முதலான பல நூல்களை எழுதியுள்ளார்.


»»  (மேலும்)

4/17/2014

| |

மறைக்கல்வி போதித்த பாதிரியரால் பாலியல் தொல்லை, இளம் பெண் தற்கொலை.

kondalesa_1அடப்பன் வீதி, குருநகர் பகுதியைச் சேர்ந்த ஜெரோன் ஜெயரோமி கொன்சலிட்டா(22) என்ற இளம் பெண் நேற்று முன்தினம் (13.04.2014) அன்று காணாமல் போன நிலையில் நேற்றைய தினம்(15.04.2014) குறித்த பெண்ணின் வீட்டருகில் உள்ள கிணற்றில் இருந்து கொன்சலிட்டாவின் சடலம் மீட்கப்பட்டது.
இப் பெண் தற்கொலை செய்து கொண்டதாக ஆரம்பத்தில் பலரும் கருதிய போதும் அதன் பின் இடம்பெற்ற விசாரணைகளில் இப் பெண்ணின் மரணம் தொடர்பாக பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் மரணமடைந்த பெண்ணின் தாயான ஜெரோன் மேரி புஸ்பராணி என்பவர் தெரிவிக்கையில், “எனது மகள் படித்துவிட்டு வீட்டில் இருந்த நிலையில் அருகில் இருந்த பெரிய கோவில் சபையினுடைய இரு பாதிரிமார் எனது மகளை மறைக் கல்வி போதிக்க அனுப்புமாறு கோரினர். வீட்டில் சும்மதா தானே இருக்கிறாள் போய் மறைக் கல்வி கற்பிப்பது நல்லம் தானே என நானும் ஒம் என்று விட்டுட்டேன். ஆனால் மறைக்கல்வி போதிக்கச் சென்ற எனது மகளை அங்கிருந்த பிரதான பாதிரியாரின் உதவியாளர்கள்; தொடர்ச்சியாக எனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தனர்.
அங்கிருந்து வந்ததும் எனது மகள் ஒரே சோகமாய் அமர்ந்திருப்பாள். அவளது தொலைபேசிக்கு ஒரே அழைப்பு வரும். அதை அவள் கட் பண்ணுவாள். இந் நிலையில் அவளிடம் நடந்தவற்றை விசாரித்தேன். அப்போது தான் அவள் கூறிய கருத்துக்கள் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கிருந்த உதவிப் பாதிரியார் தன்னை காதலிக்குமாறு எனது மகளை கேட்டுள்ளார். அதற்கு அவள் மறுப்புத் தெரிவிக்க எங்க போனாலும் என்னை மறக்க கூடாது என்னுடன் தொடர்பில இருக்கணும் எனக் கூறியதுடன் மேலே உள்ள தனது றூமுக்கும் வருமாறு உதவிப் பாதிரியார்  வற்புறுத்தியுள்ளார். “இதனை வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது, சொன்னால் உன்னைப்பற்றி கூடாமல் சொல்லுவன்” என மிரட்டியுள்ளார்.
அதன் பின் எனது பிள்ளை வெளியில் போறதே குறைவு. ஒரே பயந்து போய் இருபபாள். அவளுடைய தொலைபேசிக்கு பலதடவைகள் கோல் வந்துள்ளது. அதன் பின் தான் அவள் சென்றுள்ளாள். ஆகவே எனது மகள் இறப்பதற்கு இந்த நாசம் கெட்ட உதவிப் பாதிரியாரே காரணம்” என அழுது புலம்பினார்.
மரணமடைந்த கொண்சலிட்டா என்ற இளம்பெண்ணின் மரணசடங்கில் கலந்து கொண்ட பொதுமக்கள் இச்சம்பவம் தொடர்பில் தமக்கு சந்தேகம் உள்ளதாக பெண்ணின் தாயாரிடம் தெரிவித்ததை அடுத்து இக்கொலையின் மர்ம முடிச்சு அவிழ்ந்துள்ளது.


»»  (மேலும்)

| |

வாழைச்சேனை கறுவாக்கேணியில் ஐஸ் உற்பத்தி நிலையம்

மட்டக்களப்பு, வாழைச்சேனை, கறுவாக்கேணியில் ஐஸ் உற்பத்தி நிலையம் ஒன்றினை கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன வைபவரீதியாக புதன்கிழமை திறந்து வைத்தார்.
கூல் மேன் ஐஸ் உற்பத்தி நிலையம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நிலையத்தின் திறப்பு விழா நிகழ்வானது, தொழில் அதிபரும் மேற்படி நிறுவனத்தின் உரிமையாளருமான ஆசிரி திபுது பெரேரா தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சின் செயலாளர் டாக்டர் திசாநாயக்க, மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரி டொமின்கோ ஜோர்ஜ், வாழைச்சேனை மீன்பிடி துறைமுக முகாமையாளர் எஸ்.எஸ்.கெட்டிகே மற்றும் வாழைச்சேனை பிரதேச சபைச்செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஐஸ் உற்பத்தி நிலையம் மூலம் நாளொன்றிக்கு 34 மென்றிக் தொன் ஐஸ் உற்பத்தி செய்யமுடியும் என்று மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரி டொமின்கோ ஜோர்ஜ் தேரிவித்தார்.
»»  (மேலும்)

4/16/2014

| |

முற்போக்கு தமிழ் தேசிய கட்சி உதயம்

vijayakanthயாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந்த் முற்போக்கு தமிழ் தேசிய கட்சி என்ற புதிய கட்சி ஒன்றினை ஆரம்பித்துள்ளார்.
இக்கட்சி அங்குரார்ப்பண நிகழ்வு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சனிக்கிழமை (12); யாழ்.குருநகர் சுவர்க்கா விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. இதன்போது, கட்சி சின்னம் மற்றும் கட்சியின் யாப்புக்கள் வெளியிடப்பட்டன. 

இக்கட்சி வடமாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இக்கட்சியின் செயலாளர் நாயகமாக சுதர்சிங் விஜயகாந்த் செயற்படவுள்ளதுடன், பிரதித் தலைவர் உட்பட 12 உறுப்பினர்கள் இக்கட்சியில் உள்ளனர். 

இந்தக் கட்சித் பற்றி செயலாளர் நாயகம் கருத்துத் தெரிவிக்கையில்,  

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்;ப்பதற்காக இக்கட்சி புதிதாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.  நிறைகுடம் சின்னத்துடன், ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சியின் கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நீலம் ஆகிய நிறங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 
அதில் சிவப்பு அர்ப்பணிப்பினையும், மஞ்சள் ஒழுக்கத்தினையும், நீலம் ஒற்றுமையினையும் எடுத்துக் காட்டுகின்றது. 

தமிழ் மக்களின் நிலம், கலாசாரம், பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றினை மேம்படுத்தும் நோக்கத்துடனும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்படவேண்டுமென்றும் என்ற நோக்குடனும் இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  அந்தவகையில், தனி தமிழம் இனி வரும் காலங்களில் கிடைக்கப்போவதில்லை. அவ்வாறு தனி தமிழீழம் கிடைக்குமென்றால், மத்திய அரசாங்கத்துடன், இணைந்து செயற்பட தாம் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

முற்போக்கு சிந்தனையாளர்கள் என்ற அடிப்படையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமிழ் கட்சிகள் தம்முடன், ஒன்றிணைந்தால், தமது கொள்கைகளுக்கும், தமிழ் கட்சிகளின் கொள்கைளுக்கும் அமைவாக ஏற்று நடக்க தாம் தயார் என்றும் அவர் கூறினார். 

இம்மாதம் இறுதி வாரத்தில் பொதுச்சபைக் கூட்டத்தினை கூட்டி பொதுச்சபை உறுப்பினர்களின் ஆலோசனையுடன், தேர்தல் ஆணையாளரிடம் கட்சியைப் பதிவு செய்து விட்டு, எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களில் போட்டியிட தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
»»  (மேலும்)

| |

கனடா நிதியை இடைநிறுத்தியிருப்பது நல்லிணக்கப்பாட்டு முயற்சிகளுக்கு எதிரான செயற்பாடாகும்

வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் கண்டனம்
கனடா அரசாங்கம் தனது விருப்பத்தின் பேரில் பொதுநலவாய அமைப்புக்கு வழங்கும் நிதியை இடைநிறுத்துவதென்று விடுத்த அறிவித்தல் எமக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் நேற்றுத் தெரிவித்தார்.
2013ல் கொழும்பில் நடைபெற்ற சோகம் மகாநாட்டில் கனேடிய பிரதம மந்திரி கலந்து கொள்வதில்லை என்று அறிவித்த போதே இந்த நிதி வழங்கும் செயற்பாடு இடை நிறுத்தப்படும் என்பதை நாம் அறிந்திருந்தோம் என்றும் அவர் கூறினார்.
இலங்கையில் கனேடிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் ஓராண்டுக்கு முன்னர் நாம் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது கனடா, பொதுநலவாய அமைப்பு உட்பட சர்வதேச அமைப்புகளுக்கு வழங்கும் நிதியை நிறுத்துவது பற்றி ஆராய்ந்து வருவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது என்றும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அறிவித்தார்.
இவ்விதம் சில நாடுகள் பொதுநலவாய அமைப்புக்கு நிதியை வழங்கி தங்கள் செல்வாக்கை பிரயோகிக்க நினைப்பது பற்றி பல அங்கத்துவ நாடுகள் ஏற்கனவே அவதானத்தை செலுத்தி வந்ததாகவும் கனடாவின் இன்றைய தீர்மானம் அதற்கு ஒரு சிறந்த ஆதாரமாக விளங்குகிறதென்றும் கூறினார்.
கனேடிய அரசாங்கம் தன்னிச்சையாக வழங்கும் நிதியை அரசியல் ஆதாயமாகப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டில் தமக்கு இருக்கும் வாக்குப் பலத்தை அடிப்படையாக வைத்து செயற்படுவதாகவும் அவர் கூறினார். தனது வாக்காளர்களை திருப்திப்படுத் துவதற்காக கனடா பொதுநலவாய அமைப்பை இவ்விதம் துன்புறுத்துவது தவறு என்றும் கூறினார். கனேடிய அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் இலங்கையின் நல்லிணக்க செயற்பாட்டை உதாசீனம் செய்வதாக அமைந்திருக்கிற தென்றும் அவர் கூறினார்.
இலங்கை அரசாங்கம் யதார்த்தபூர்வமான கால எல்லைக்குள் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட தீர்வையே எங்கள் நாட்டுப் பிரச்சினைக்கு தீர்வினை ஏற்படுத்துவதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளதாக அவர் கூறினார்.
»»  (மேலும்)

| |

திருநங்கைகள் நாட்டின் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என கூறி இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ஆண், பெண் என குறிப்பிடப்படும் பாலினங்களைப் போல, திருநங்கைகள் நாட்டின் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என கூறி இந்திய உச்சநீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.
திமுக ஆட்சியில் 15-4-2008ல் தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம் தொடங்கப்பட்டு, 3,878 அரவாணிகள் கணக்கெடுக்கப்பட்டு, 2,328 அரவாணிகளுக்கு அடையாள அட்டைகளும், 1,238 பேருக்குக் குடும்ப அட்டைகளும், 133 பேருக்குத் தொகுப்பு வீடுகளும், 100 பேருக்குத் தையல் இயந்திரங்களும், 482 பேருக்கு வீட்டு மனைப் பட்டாக்களும், 585 பேருக்கு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவ அட்டைகளும் வழங்கப்பட்டன.

திருநங்கைகளுக்கும் சமத்துவம் அளிக்கும் வகையில் வழிவகை செய்யக் கோரி இந்திய உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணையில், நீதிபதி ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை இன்று அளித்துள்ளது.இது தொடர்பில் தேவையான சட்டதிருத்தங்களை ஏற்படுத்தக் கூறியுள்ள அந்த அமர்வு, மத்திய ,மாநில அரசுகள் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.
பின்னர் அவர்கள் ஆறு மாதகாலத்தில், இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும் தங்களது அறிக்கையை சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் கோரியுள்ளது.
மேலும் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்கப்படும் திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் உரிய உரிமையை பெறுவதற்கு தேவையான வழிமுறைகளை பின்பற்ற நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அத்தோடு திருநங்கைகளுக்கான சிறப்பு இடஒதுக்கீடு அளிக்கவும், பொருளாதாரம் மற்றும் சமுகரீதியில் அவர்களை பின்தங்கியவர்களாக அங்கீகரிக்கவும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
தேசிய சட்ட உதவி மையத்தின் உறுதுணையுடன் தொடரப்பட்ட இந்த வழக்கின் விசாரணையில், நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு இன்று தங்களுக்கு நீதி கிடைத்துள்ளதாக திருநங்கைகளின் ஆதரவு அமைப்புகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.
“இந்திய திருநங்கைகளுக்கு இன்று ஒரு திருநாள்”
இந்தியாவில் திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு இந்தியாவில் வாழும் பல லட்சம் திருநங்கைகள் சுயமரியாதையுடனும் சுயசார்புடனும் வாழ்வதற்கான துவக்கமாக அமையும் 
»»  (மேலும்)

4/15/2014

| |

மாக்ஸீய மனிதநேயவாதி கணேசலிங்கன் மணிவிழாவையும் பவளவிழாவையும் புறக்கணித்து அயராமல் இயங்கும் படைப்பாளி

- முருகபூபதி
 பொன்னாடையோ - பூமாலையோ - பாராட்டுகளோ - வெண்கல - வெள்ளித்தகடுGANESALINGANவிருதுகளோ - விசேட பட்டங்களோ    வேண்டாம் எனச்சொல்லும்    ஒரு   ஆக்க    இலக்கியப்படைப்பாளி   எமது  தமிழ் சமூகத்தில்   எண்பத்தியைந்து  வயது   கடந்தபின்பும்   அயராமல்  எழுதியவாறு   இயங்கிக்கொண்டிருக்கிறார்   என்றால்   அவர் தமிழகத்தில்    வாழ்ந்துகொண்டிருக்கும்    இலங்கையின்   மூத்த எழுத்தாளர்    செ. கணேசலிங்கன்தான்  என்று உறுதியாகப்பதிவுசெய்யமுடியும்.
2008 ஆம்  ஆண்டு  என  நினைக்கின்றேன்.   தமிழ்நாடு  - சென்னையிலிருந்து   ஒரு   இலக்கிய  அமைப்பிடமிருந்து  கடிதம் வந்தது.   அதில்   தமிழகத்தில்   வதியும்    மூத்த   எழுத்தாளர் செ.கணேசலிங்கன்  அவர்களுக்கு  75  வயது   பிறந்துவிட்டது.   அதனை முன்னிட்டு   இலக்கிய   நண்பர்கள்   இணைந்து   அவருக்கு   பவளவிழா  நடத்தவிருக்கின்றோம்.    அந்த   விழாவில்   வெளியிடுவதற்கு  ஒரு  மலரைத்தயாரிக்கின்றோம்.   நீங்களும்   கணேசலிங்கன்  பற்றிய கட்டுரை   ஒன்றை   எழுதி   அனுப்பவேண்டும்.   விரைவில் எதிர்பார்க்கின்றோம். -  என்று   அக்கடிதத்தில்   குறிப்பிடப்பட்டிருந்தது.
நானும்   தாமதிக்காமல்   ஒரு   கட்டுரையை   எழுதி  தபாலில் அனுப்பிவைத்தேன்.   மாதங்கள்   பல   கடந்தும்   பவளவிழா  நடந்த செய்தியோ   மலர்  வெளியான   தகவலோ   எனக்குக்கிடைக்கவில்லை.
ஒரு நாள்  கணேசலிங்கனுடன்  தொலைபேசியில்   தொடர்புகொண்டு என்ன   நடந்தது?  எனக்கேட்டேன்.
பிறப்பதும்   இறப்பதும் - வயதுகள்   கடப்பதும்  இயற்கை  -  ஆனால்  - வாழ்வை   அர்த்தமுடன்   கடப்பதுதானே   உன்னதம்.   எதுவுமே வேண்டாம்    உங்கள்   அனைவரதும்   அன்பு   மாத்திரம்   போதும்  எனச்சொல்லி   அன்புக்கட்டளை   இட்டேன்.  -  என்று இரத்தினச்சுருக்கமாக  பதில்   தந்தார். 
 கணேசலிங்கனுக்கு  75   வயது  பிறந்ததும்   பவளவிழாக்காலத்தை முன்னிட்டு   சென்னையிலிருக்கும்  சில  இலக்கிய  நண்பர்கள் இணைந்து  -   இவருக்காக   பவளவிழா   மலரையும்   தயாரித்து விழாவும்   கொண்டாட  முனைந்தனர்.
 மலருக்கான    கட்டுரைகளையும்   கணேசலிங்கனுக்குத் தெரியாமலேயே    சேகரிக்கவும்   தொடங்கினர்.    எப்படியோ இத்தகவலை   அறிந்துகொண்ட   இவர்   மறுத்துவிட்டார்    இந்த வித்தியாசமான   மனிதர்.
இந்த   நூற்றாண்டில்   இப்படியும்   மனிதர்கள்   இருக்கிறார்கள்.
 கருத்தை   இலக்கியத்தோடு   மட்டும்   வைத்துக்கொண்டு முற்போக்கு -  பிற்போக்கு   பேதமற்ற   நட்புறவைச் சகல எழுத்தாளர்களோடும்   கொண்டுள்ள   ஒரு -   சிலவேளை   ஒரே  ஒரு ஈழத்து   எழுத்தாளர்   கணேசலிங்கன் -   என்று    இலக்கு -   என்னும்   இதழ்  1996   ஆம்   ஆண்டு    இவரைப்பற்றிக்குறிப்பிட்டிருக்கிறது.
 கணேசலிங்கனின்   குமரன்   இதழ்களைப்படித்தே   அரசியல் அறிவுபெற்றேன்  -    என்று   ஒருசந்தர்ப்பத்தில்  கவிஞரும்   இலக்கிய ஆர்வலருமான   முஸ்லிம்   காங்கிரஸின்    தலைவர்   மறைந்த   அஷ்ரப்    குறிப்பிட்டிருக்கிறார்.
எனக்கு  நல்லதொரு   நண்பராக   மாத்திரமன்றி  மூத்த சகோதரனாகவும்   இருப்பவர்   கணேசலிங்கன் -   என்று  ஒரு நேர்காணலில்   பதில்சொல்கிறார்   இயக்குநர்   பாலுமகேந்திரா.
இன்றும்   இலக்கிய   உலகில்   பேசப்படும்    சரஸ்வதி    இதழின் ஆசிரியர்    விஜயபாஸ்கரன்  -  கணேசலிங்கனின்   திருமணத்திற்காக இலங்கை   வந்து   வாழ்த்தினார்.   அவரது    வருகையின்மூலம் இலங்கை - தமிழக   எழுத்தாளர்கள்   மத்தியில்   ஆரோக்கியமான உறவு மலர்ந்தது -   என்று   சொன்னார்   எஸ்.பொன்னுத்துரை.PabloNeruda
காலம்   காலமாக   ஆங்கிலம்   கற்றோரிடமும்   அரசியல் ஆய்வாளர்களிடமுமே    மறைத்துவைக்கப்பட்டிருந்த சொத்துப்போலிருந்த   கருத்துக்கள்   மிகவும்   எளிமையான   தமிழில்  - கருத்துப்பேதமோ  சேதமோ  இன்றி   மக்கள் மத்தியில் பரவலாக    எடுத்துச்செல்லும்   பணியில்   கணேசலிங்கன் வெளியிட்ட   குமரன்   இதழ்கள்   முனைப்புடன்   செயற்பட்டது. - என்று   ஆய்வு   செய்தார்   தெளிவத்தை  ஜோசப்  ( தினகரன் வாரமஞ்சரி -2002 )
   தஞ்சாவூருக்கு   மருத்துவ   சிகிச்சைக்காக  வந்தவிடத்தில்   எதிர்பாராத விதமாக   மரணமடைந்த   டானியலின்   மறைவுச்செய்தி அறிந்தவுடன்    சென்னையிலிருந்து    ஓடோடிவந்து   சகல வேலைகளையும்    பொறுப்பேற்று    முன்னின்று   செய்தார் கணேசலிங்கன். -  என்று   தற்போது  பிரான்ஸில்   வாழும் எழுத்தாளரும்   டானியலின்   சகாவுமான   இளங்கோவன்   கூறுகிறார்.
 செ.யோகநாதன்    சென்னையில்   இருதய   நோயால் பாதிக்கப்பட்டபோது    சொந்தச்சகோதரனைப்   பராமரிப்பது  போன்று அக்கறையுடன்   கவனித்துக்கொண்டவர்   தோழர்  கணேசலிங்கன் - என்று   சொன்னார்   தாமரை   இதழின்   ஆசிரியரும்  தமிழ்நாடு   மாநில  கம்யூனிஸ்ட்  கட்சியின்   துணைச்செயலாளருமான மகேந்திரன்.
இலங்கையின்    மூத்த   எழுத்தாளரும்    இலங்கை  முற்போக்கு  எழுத்தாளர்   சங்கத்தின்   கீதத்தை    இயற்றியவருமான  அ. ந. கந்தசாமி கொழும்பில்   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவேளையில்   அவரைப்  பராமரித்தவர்களில் குறிப்பிடத்தகுந்த  ஒருவர்   கணேசலிங்கன் .  மற்றவர்    கலைஞர் லடீஸ்  வீரமணி  -  என்பது    இலங்கை   இலக்கிய வட்டாரத்தில் உலாவும்   தகவல்.
  இந்த   அரிய   தகவல்கள்   ஒருபுறம்   இருக்கட்டும்  -  மல்லிகை  ஜீவா சொல்கின்ற   செய்தி   உண்மையிலேயே   எம்மையெல்லாம் நெகிழச்செய்யும்.   வியப்பூட்டும்.
 அப்பொழுது   ஜீவா    யாழ். கஸ்தூரியார்   வீதியில்   ஜோஸப் சலூனை நடத்திக்கொண்டிருந்த  காலம்.   யாழ். பரமேஸ்வராக்கல்லூரியில் அக்காலப்பகுதியில்   படித்துக்கொண்டிருந்த   கணேசலிங்கன் (இக்காலப்பகுதியில்   இருவருமே   இலக்கிய   ஈடுபாடு   கொண்ட நண்பர்கள்)    மாலை   வேளையில்   அங்கே   வருவாராம்.   ஜீவாவுடன் உரையாடிக்கொண்டே    தரையில்    சிந்திக்கிடக்கும் தலைமயிர்க்குவியல்களை   தும்புத்தடியினால்   கூட்டிப்பெருக்கி அவ்விடத்தை   சுத்தம்    செய்வாராம்.
 பாட்டாளிவர்க்க    சர்வதேசியத்தை    எழுத்திலும்    மேடையிலும் மாத்திரம்   சொல்லாமல்    இதயசுத்தியோடு    வாழ்ந்தும்   காட்டியவர் இந்த   எண்பது  வயதும்   கடந்துள்ள    மனிதநேய வாதி.
  கார்ல்  மார்க்ஸ்  நுற்றாண்டு   விழா  கொழும்பில்   கொண்டாடப்பட்ட   காலகட்டத்தில்   அதன்   அமைப்புக்குழுவில் இணைந்து   இயங்கியவர்   கணேசலிங்கன்.    விழாச்செலவுகளுக்கு பணம்    தேவைப்பட்டபோது   ஒருவர்  முகத்தை  ஒருவர்   பார்த்து யோசித்துக்கொண்டிருக்கையில்   பல    ரூபாய்    நாணயத்தாள்களை  எடுத்துக்கொடுத்து   செலவுக்கு   வைத்துக்கொள்ளுங்கள்.   மேலும் தேவைப்பட்டால்    சொல்லுங்கள்    என்றாராம்   கணேசலிங்கன்.
அவர்  அன்று  வழங்கிய   நன்கொடையில்   ஆயிரம்ரூபாவுக்கும் மேலிருக்குமாம்   எneenadapayanamன்று   எனது   நண்பரும்   தற்போதைய   தினக்குரல் பிரதம   ஆசிரியருமான   தனபாலசிங்கம்  ஒரு  தடவை  சொன்னார்.
   இச்சம்பவத்தினால்   சற்று   அதிர்ந்துபோன   தோழர்   என். சண்முகதாஸன் -   என்னிடம்   இருந்திருந்தால் கூட    அப்படி தூக்கிக்கொடுத்திருக்கமாட்டேன்  -  என்று  சக  தோழர்களிடம் சொன்னாராம்.
கம்யூனிஸம்  -  மார்க்ஸிஸம்   பேசுபவர்கள்  சரியான நெஞ்சழுத்தக்காரர்கள்.   கடினமான   போக்குக்கொண்டவர்கள் என்பதுதான்    பொதுவான    அபிப்பிராயம்.
இந்தப்பதிவை   எழுதும்    எனக்கும்   ஒரு  கால  கட்டம்வரையில்   அந்த அபிப்பிராயத்தில்   உடன்பாடு   இருந்தது.
  பேராசிரியர்   கைலாசபதியின்   மறைவின்போதுதான் கணேசலிங்கனின்   மென்மையான  -  நாமெல்லோருமே நெகிழ்ந்துபோகும்   உள்ளத்தை   புரிந்துகொள்ள முடிந்தது. பேராசிரியரின்   எதிர்பாராத  மறைவினால்   நாம் உறைந்துபோயிருந்தபோது   கணேசலிங்கன்   மாத்திரம்   கதறிக்கதறி அழுதுகொண்டிருந்தார்.
  மரணச்சடங்கிற்கு   முதல்   நாளிரவு   இலங்கை   வானோலியில் ஒலிபரப்பான   விசேட   இரங்கல்  நிகழ்ச்சியில்   நுஃமானுடன்  சேர்ந்து அஞ்சலி   உரை நிகழ்த்திய   கணேசலிங்கன்  -  வானொலிக்கலையகம் என்றும்   பாராமல்  வானலைகளில்   கருத்துக்கள்  பரவுகின்றன என்ற   பிரக்ஞையுமில்லாமல்   அழுது   அரற்றிக்கொண்டே உரையாற்றியது   இன்றும்  எமது  நினைவுகளில்  சஞ்சரிக்கிறது.
 சுமார்    ஐம்பதிற்கும்   மேற்பட்ட   நாவல்கள்  பல  சிறுகதை  -  கட்டுரை -  விமர்சன   நூல்கள்  -  சிறுவர்   இலக்கியம்   -   பயண   இலக்கியம்  என தொண்ணூறுக்கும்   மேற்பட்ட   நூல்களை   தமிழ்  இலக்கிய உலகிற்குத்தந்துள்ள   கணேசலிங்கனின்   தற்போதைய   வயதிலிருந்து கணக்குப்பார்த்தாலும்   வருடத்துக்கு   ஒரு   புத்தகம்   என  பிறந்தது முதல்   இன்று   வரையில்   அதிகம்  புத்தகங்கள்   எழுதியிருக்கின்றார்   இந்த   அமைதியும்  தன்னடக்கமும்  மிக்க சாதனையாளர்    என்ற   முடிவுக்கு   வரமுடியும்.
மூத்த   அறிஞர்  மு.வரதராசனும்   (மு.வ)   இவரது   நெருங்கிய   நண்பர். மு.வ.   மறைந்தபின்பு   அவரது   நினைவாகவும்   ஒரு  நூலை எழுதியிருக்கின்றார்.
  அச்சிலே   வெளிவந்த   இத்தனை  நூல்களும்   எத்தனை   ஆயிரம் பக்கங்களைக்கொண்டவை   என்ற   ஆராய்ச்சியில்   நாம் ஈடுபடத்தேவையில்லை.pennadimai theera
 2007  ஆம்   ஆண்டு   இந்தியாவில்  சாகித்திய   அகடமி விருது பெற்ற நீலபத்மநாபனைப்பற்றிய  தகவல்களைப்  பதிவு  செய்து   அவரது நேர்காணலை   வெளியிட்ட    குமுதம் - தீராநதி  -  நீலபத்மநாபன் எழுதி   அச்சில்   வெளிவந்த    பக்கங்கள்   மொத்தம்   6467   என்று  பதிவு  செய்கின்றது.
 கணேசலிங்கன்   இச்சாதனையை   முறியடித்திருப்பார்   என நிச்சயமாகச் சொல்ல முடியும்.
இவரது  நீண்ட பயணம்  நாவல்  குறிப்பிடத்தகுந்ததொன்று.  ஈழத்து தமிழ்நாவல்   இலக்கிய   வளர்ச்சியில்   இந்நாவலே   முதன்மையிடம் பெறுகின்றது   எனச்சொல்கிறார்   கலாநிதி செ. யோகராசா.
இக்கருத்து   விமர்சனத்துக்கும்   விவாதத்திற்குமுரியது. என்றபோதிலும்  கூட   செ.க.வின்   நீண்டபயணம்   நாவல்   அவரது எழுத்துலக   நீண்டபயணத்தின்   தொடக்கத்தில்   ஆழமாகப்பதியப்பட்ட ஒரு   மைல்கல்  என்பதில்  அபிப்பிராய  பேதமிருக்காது.
  செவ்வானம்    நாவல்   கைலாசபதியின்   முன்னுரையுடன் வெளியானது.   குறிப்பிட்ட  நீண்ட   முன்னுரையே  பின்னாளில்   தமிழ்  நாவல்  இலக்கியம்  என்ற  விரிவான  நூலாகியது. இந்நூல்குறித்து   வெங்கட்சாமிநாதன்   மாக்ஸின் கல்லறையிலிருந்து   ஒரு  குரல்   என்ற  சிறு நூலை  எதிர்வினையாக எழுதினார்.  1973   இல்   பூரணி   காலாண்டிதழ்   இதனை மறுபிரசுரம் செய்தது.   நுஃமான்   இதற்கு   எதிர்வினையாக   நீண்ட கட்டுரைத்தொடரை   மல்லிகையில்   எழுதினார்.    அதற்கு மு.பொன்னம்பலம்   மல்லிகையிலேயே    எதிர்வினை   எழுதினார்.       இவ்வாறு    ஆரோக்கியமான   விமர்சன   கருத்துப்பரிமாறல்களுக்கு வழிகோலிய   மூலவர்   செவ்வானம்   படைத்த   கணேசலிங்கன் என்பது  இலக்கிய  உலகின்   பழையசெய்திதான்.   எனினும்   இப்படியும் எமது   தமிழ்   இலக்கியப்பரப்பில்   நிகழ்ந்திருக்கிறது   என்ற தகவலையும்    இச்சந்தர்ப்பத்தில்  -   புதிதாக    எழுதவந்துள்ள   இளம் ஆக்க இலக்கிய வாதிகளுக்கும்   இளம்    விமர்சகர்களுக்கும் தெரிவிக்கின்றேன்.
பேராசிரியர்   கைலாசபதி   யாழ்ப்பாணம்   பல்கலைக்கழகத்தில்   நாவல்   நூற்றாண்டு   ஆய்வரங்கை   நடத்தியபொழுது   சமர்ப்பிக்கப்பட்ட   பல  கட்டுரைகளில்   கணேசலிங்கனின் நாவல்கள்தான்   அதிகம்   பேசுபொருளாக   இருந்தன.
ஆய்வரங்கு   நிறைவுபெற்றதும்  நண்பர்   டானியல்  தமது   இல்லத்தில்  அனைவருக்கும்  இராப்போசன  விருந்து  வழங்கினார்.
இந்த   நாவல்  நூற்றாண்டு  ஆய்வரங்கில்   கணேசலிங்கனும் கலந்துகொண்டிருந்தால்  மிகவும்   சிறப்பாகவிருந்திருக்கும்   என்று கைலாசபதியிடம்   அந்த   விருந்தின்போது   குறிப்பிட்டேன்.
உண்மைதான்.  அவரது   செவ்வானம்  நாவலிற்குத்தான்  நான்  நீண்ட முன்னுரை   எழுதினேன்.   அவர்   இங்கு   வரக்கூடிய   சூழ்நிலை இல்லை.   அதனால்   வரவில்லை.   எனினும்   அவர்பற்றி  நாம்  இங்கு நிறையப்பேசுகின்றோம்.   அந்தவகையில்   அவர்   மிகுந்த கவனிப்புக்குள்ளான   நாவலாசிரியர்   என்று  கைலாஸ்   சொன்னார்.
       சர்வதேசப்புகழ்பெற்ற   கவிஞர்    பாப்லோ நெருடா  (இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றவர்)   இலங்கை   வந்த சமயம்  அவரை   வரவேற்கும்   எழுத்தாளர்களின்  கூட்டத்திற்கு தலைமைதாங்கிச்சிறப்பித்த  பெருமையும்  கணேசலிங்கனுக்குண்டு.
 கமல்ஹாஸன்   நடித்து   பாலுமகேந்திராவின்  இயக்கத்தில் வெளியான  கோகிலா (கன்னடம்)   திரைப்படத்தின்   தயாரிப்பு நிர்வாகியாகவும்   இயங்கியிருக்கும்   கணேசலிங்கன் -  தமிழக  சினிமா உலகின்   கோலங்களை   தமது    கவர்ச்சிக்கலையின்   மறுபக்கம்   என்ற   நாவலில்   சித்திரித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில்   பல்கலைக்கழகப்பிரவேசப்   பரீட்சைக்கு தமிழும்   ஒரு பாடம்.
தமிழ்மொழிப்பாடப்  பரீட்சைக்கு  தோற்றும்   பல  மாணவர்களுக்கு பெண்கள்   தொடர்பாக   வரும்   நேர்முக - எழுத்துப்பரீட்சைகளுக்கு கணேசலிங்கனின்     பெண்ணடிமை  தீர    என்ற   நூல் உசாத்துணையாகப்பயன்பட்டது   என்ற   புதிய   தகவலையும்  இங்கு பதிவு  செய்யவிரும்புகிறேன்.
நாவல்   சிறுகதை    கட்டுரை     விமர்சனம்  திறனாய்வு     மொழிபெயர்ப்பு பயண  இலக்கியம்   சிறுவர்  இலக்கியம்  முதலான   துறைகளில்  பல நூல்களை    எழுதியிருக்கும்   கணேசலிங்கனின்   எழுத்துக்களை   சமூகவியல்  பெண்ணியம்   மாக்சீயம்  தத்துவம்  முதலான கண்ணோட்டங்களிலேயே   வாசிப்பு   அனுபவங்களை   நாம் பெற்றுக்கொள்ளமுடியும்.  
கவர்ச்சிக்கலையின்  மறுபக்கம்   என்ற   நாவலின்   தலைப்பு  ஒரு  கட்டுரை நூலுக்கான   தலைப்பாக  இருந்தபோதிலும்  -   தமிழ்   சினிமாவில்  வெளி உலகத்தால்    கண்டுகொள்ளப்படாத    துணை  நடிகர்கள்  மற்றும்  காதல் பாடல்  காட்சிகளில்  நாயகன்   நாயகிக்குப்பின்னால்   உடலை  வருத்தி ஆடும்   துணை   நடிகைகளின்   தீனமான   அவலக்குரல்   அந்த  நாவலில்  கேட்கிறது.
இவருடைய   செவ்வானம்  நாவல்   சென்னைப் பல்கலைக்கழகத்தில்   தமிழ்  எம்.ஏ.  பட்டப்படிப்பிற்கு   இலக்கிய பாட  நூலாக   தெரிவாகியுள்ளது. நீண்ட பயணம்   நாவல்  இலங்கையில்   தேசிய  சாகித்திய விருதைப்பெற்றது.  மரணத்தின்   நிழலில்  நாவல்  தமிழக அரசின் பரிசுபெற்றுள்ளது.
மகாகவி  பாரதி   தொடர்பாக   நிறைய   ஆய்வுகளை மேற்கொண்டவர்கள்   கைKumaran Thohuppuலாசபதி  -  தொ.மு.சிதம்பர ரகுநாதன் ஆகியோர்.   எனினும்   அவர்களுடன்   பாரதிவிடயத்தில்   நிரம்பவும் கருத்து  ரீதியாக  முரண்பட்டு   எழுதியவர்    கணேசலிங்கன்.
ஆயினும்  -   அவர்களிடத்தில்    துளியளவும்   பகைமை   பாராட்டாமல் அவர்கள்   வாழ்ந்தபோதும்   மறைந்தபோதும்   உணர்வுபூர்வமாகவும் அதேசமயம்   ஆக்கபூர்வமாகவும்    செயற்பட்டவர்   கணேசலிங்கன்.
    கொழும்பு   கனத்தை   மயானத்தில்   கைலாசின்   பூதவுடல் தகனத்திற்காக     இருக்கிறது.   பலரும்   அடுத்தடுத்து   அஞ்சலி உரையாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
கணேசலிங்கன்   கைலாசின்   உருவப்படம்   பதிந்த  அஞ்சலி பிரசுரங்களை   அழுதழுது   விநியோகித்துக்கொண்டிருக்கிறார். கைலாஸ்   மறைந்து   சில   நாட்களில்   அதாவது    1982 டிசம்பர் 15 ஆம் திகதிய   குமரன்   இதழில்   கைலாஸின்   படத்தை   அட்டையில் பிரசுரித்து   சிறப்பிதழ்   வெளியிட்டார்.
கைலாஸ்   மறைந்து   ஒரு    மாத   காலத்திற்குள்    கைலாஸின்    சில கட்டுரைகளைத்தேடித்திரட்டி   இலக்கியச்சிந்தனை   என்ற  நூலை வெளியிட்டார்.   பின்னர்   பாரதி   தொடர்பாக   கைலாஸ்   எழுதிய   பல    கட்டுரைகளைத்தொகுத்து   பாரதி  ஆய்வுகள்  என்னும்  நூலை பதிப்பித்தார்.
தொ.மு.சி.ரகுநாதன்    இறந்தவுடன்   ஃபுரன்ட்லைன்    இதழில்   விரிவான   கட்டுரை   எழுதியதுடன்   நில்லாமல்   பொன்னீலன்   எழுதிய   ரகுநாதன்   வாழ்வும்  பணியும்   என்ற  நூலை தூரதேசங்களிலும்   வாழும்   இலக்கிய   ஆர்வலர்க்கு கிடைக்கச்செய்தார்.
இந்தத்தகவல்களை    இங்கு  பதிவு   செய்வதற்கு   காரணங்கள் பலவுண்டு.
கருத்து   முரண்பாடு   வந்தவுடனேயே   பகைமையை வளர்த்துக்கொண்டு   முகம்கொடுத்தும்   பேசாமல்   ஆணவ மனப்பான்மையுடன்   நடமாடும்   எம்மவர்   பலருக்கு    இந்த  முதிய வயதிலும்   தளராது   இயங்கிக்கொண்டு  சகோதரவாஞ்சையுடன் மாற்றுக்கருத்துக்கொண்டோரையும்   அரவணைக்கும்   பண்பு கொண்ட கணேசலிங்கன்     மிகச்சிறந்த   முன்னுதாரணம்.
கருத்து   முரண்பாடுகள்   எனச்சொல்லிக்கொண்டு   முதுகிலே   குத்துபவர்கள் பல்கிப்பெருகியுள்ள   கலை   இலக்கிய   அரசியல்   உலகிலே  எது கருத்துமுரண்பாடு ?   எது   துரோகம் ?   என்பதை   எவ்வாறு  அடையாளம் காண்பது?   என்ற    கேள்வியும்   எழுவது    தவிர்க்கமுடியாதது.
இக்கேள்விக்குரிய   பதில்கள் -    உளப்பாதிப்பு  ஏற்படுத்துபவர்களினதும் -பாதிக்கப்பட்டவர்களினதும்    மனச்சாட்சியிலேயே  கிடைக்கப்பெறும்.   ஆனால்  -  அந்தப்பதில்களும்   மௌன  மொழியில்    கரைந்துவிடும்.
 கணேசலிங்கன்    1971  முதல்  1983  வரையில்   கொழும்பு   புறக்கோட்டையில்  டாம் வீதியில்  அமைந்த   தமது   குமரன்   அச்சகத்திலிருந்து   குமரன்  இதழை   வெளியிட்டார்.   அத்துடன்   பல   எழுத்தாளர்களின்  நூல்களையும்   பதிப்பித்தார்.
குமரன்   இதழில்தான்    வரதபாக்கியான்  என்ற  புனைபெயரில் முன்னர்   கவிதைகள்    எழுதிய   புதுவை  ரத்தினதுரை  எமக்கு  அறிமுகமானார்.  அச்சமயம்   புதுவை   ரத்தினதுரை  தீவிர   சீனச்சார்ப்பு இலக்கியவாதியாக  இருந்தார்.   அவரின்   பெரும்பாலான   கவிதைகள் சர்வதேச    பாட்டாளிவர்க்கத்தின்   குரலாகவே    காணப்பட்டது.
குமரன்   இதழ்களில்   புதுக்கவிதைகள்   வெளிவந்துகொண்டிருந்த காலம்  பற்றி  கணேசலிங்கன்   இவ்வாறு   குறிப்பிடுகிறார்: -
புதுக்கவிதை   எழுதி   குமரனில்   வெளிவரவிரும்புபவர்கள்   மட்டும் பெருந்தொகையினராக  இருந்தனர்.  எடிற் செய்து - தேர்ந்து - திரட்டி வெளியிடுவதிலும்   சிரமமிருந்தது.   கவிதைத்துறையில் என்னைக்கவர்ந்தவர்கள்    இருவரே.   முதலாவதாக   புதுவை ரத்தினதுரையைக்   கூறவேண்டும்.   வரதபாக்கியான்   என்ற   பெயரிலும்   அவர்   எழுதிவந்தார்.   அவர்   குமரன்   இதழுக்காக எழுதிய    கவிதைகள்   யாவும்   எழுதியபடியே   வெளிவந்தன. மணிமேகலை    என்ற    பெயரிலும்   கவிதை   வெளிவந்தது. சமூக விழிப்புணர்வும்    எழுச்சியும்    கொண்ட   கவிதைகள்.   கவிதைக்குரிய ஓசைநயத்தையும்   அவர்   விட்டுவிடவில்லை.
மற்றவர்   சாருமதி.    புரட்சி   அரசியலே  அவரது கோட்பாடு.  ஓசை நயம்  பற்றி  அவர்  கவலைப்படவில்லை.   சமூகப்புரட்சியை  வேண்டிய  அரசியல் சார்ந்த  கோட்பாட்டை   அவர்   என்றும்  விட்டுவிடவில்லை.
குமரன்  இதழ்கள்   யாவும்   தொகுக்கப்பட்டு  933  பக்கங்களில் வெளியான   பெரியதொரு   தொகுப்பினை   தமிழகத்தில் கணேசலிங்கனை   சந்தித்தபொழுது   எனக்குத்தந்தார்.
 எனது   சில  நூல்களை   அவரது   சென்னை  குமரன்  பதிப்பகம்தான் வெளியிட்டிருக்கிறது.   அவர்   எனக்கு  பெரும்பாலும் ஏரோகிராமில்தான்   கடிதங்கள்   எழுதுவார்.   எனக்கு    அதிகம்   கடிதம் எழுதியவர்களின்    வரிசையில்   அவரும்    இணைந்துள்ளார்.   அவரது கடிதங்கள்    யாவற்றையும்    ஒரு    தனிக்கோவையில்   பாதுகாத்து வைத்துள்ளேன்.
கணேசலிங்கனுக்கு  75   வயது பிறந்த  2008  காலப்பகுதியில் இலங்கையில்    வெளியாகும்   ஞானம்   இதழில்   அட்டைப்பட   அதிதி கட்டுரையை    எழுதியிருக்கின்றேன்.    அத்துடன்    மல்லிகையிலும் ஒரு   கட்டுரையை   எழுதினேன்.   தினக்குரல்   இதழும் கணேசலிங்கன்   பற்றி   நான்   எழுதிய   கட்டுரையை   மறுபிரசுரம் செய்திருக்கிறது.
ஒரு   மனிதனின்    இயல்புகள்தான்   அவனது    விதியைத்தீர்மானிக்கும்  என்று  வட   இந்திய   எழுத்தாளர்  அருண்ஷோரி   என்பவர்   ஒரு சந்தர்ப்பத்தில்    குறிப்பிட்டுள்ளார்.    எங்கள்  செ.க.   என்ற  கணேசலிங்கனுக்கும்    மிகச்சிறந்த   குண இயல்புகள்    இருக்கின்றன. கலை   இலக்கிய   அரசியலில்  மாற்றுக்கருத்துக்களுக்கு    அப்பாலும்   அவர் படைப்பிலக்கியவாதிகளினாலும்   விமர்சகர்களினாலும்    வாசகர்களினாலும்   நேசிக்கப்படுவதற்கு    அவரது    இயல்புகள்தான் காரணம்.
letchumananm@gmail.com     நன்றி தேனீ 
»»  (மேலும்)