4/14/2014

| |

நிம்மதியானதொரு சூழல் ஏற்பட்டுத்துகின்ற ஆண்டாக அமைய

நிம்மதியானதொரு சூழல் ஏற்பட்டுத்துகின்ற ஆண்டாக அமைய வேண்டும்
முன்னாள் முதல்வரின் சித்திரைப் புதுவருட வாழ்த்துச் செய்தி*********


மலர்ந்திருக்கும் இனிய தமிழ் சிங்களப் ஜயவருடமானது அனைத்து மக்கள் மத்தியிலும் மகிழ்ச்சியையும், பொருளாதாரத்தில் முன்னேறிய நிலையும் ஏற்படுத்திக்கொள்வதாகவும் அமையவேண்டும்.2014 ஆம் ஆண்டு மலரும் இப்புதுவருடத்தில் இலங்கையில் வாழ்கின்ற அனைவரும் சகோதர மனப்பாங்குடன், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதுடன், வேறுபாடுகளைக் கழைந்து ஒற்றுமையாக வாழவேண்டும்.
இலங்கைத் தீவில் மூன்றினங்களும் இலங்கையர் என்ற ஓருமை தோற்றம் பெற்றிருக்கின்ற வேளையில் அதனைக் குழப்பி அந்தக் குழப்பத்தின்மூலம் இலங்கையில் உருவாகின்ற வன்முறை மற்றும் நிம்மிதியின்மையில் குளிர்காய்வதற்கு பல தீய சக்திகள் முனைந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக கடந்த காலங்களைப் போலல்லாது தற்போது கிழக்கு மாகாணத்தில் சமாதான காற்றை சுவாசிக்கின்ற நிம்மதியானதொரு சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையினைக் கருத்திற்கொண்டு தமது பொருளாதாரத்தையும், கல்வியையும் கட்டியெழுப்புகின்ற செயற்பாட்டினை மேற்கொண்டு வருகின்ற எமது தமிழ் மக்களை மீண்டும் நெருக்குதலுக்குள்ளாக்கக்கூடிய நிலையில் சில புலம்பெயர்ந்த சக்திகள் அதாவது கடந்தகாலங்களில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளுக்கு நிதிசேகரிப்பில் ஈடுபட்ட குழுவினர் செயற்பட்டு வருகின்றனர்.
இக் குழுவினர் தமது இருப்பிற்கும் சொகுசு வாழ்க்கைக்கும் பங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இலங்கையில் குறிப்பாக கிழக்கு மற்றும் வட மாகாணங்களில் மீண்டும் புலிப்பயங்கரவாதத்தினை கட்டியெழுப்புவது போன்ற செயற்hடுகளுக்கு புத்துயிர் அளிக்கின்ற செயற்hடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்கள். இச் செயற்hடுகள் முற்றுமுழுதாக எமது மக்களின் வாழ்க்கையை அஸ்த்தமனமாக்குகின்ற செயற்பாடாகும். கடந்தகாலங்களில் போராட்டத்தின் பயனால் எமது மக்கள் அடைந்த இன்னல்கள் போதும். இனிமேலும் அதுபோன்றதொரு கொடியநிலை எம்மக்களுக்கு இனிமேல் நேரக்கூடாது.
இலங்கையில் தொடர்ந்து பிரச்சினை இருப்பதாக காட்டிக்கொண்டு வெளிநாட்டில் இருக்கும் முன்னாள் வெளிநாட்டு பயங்கரவாத செயற்பாட்டாளர்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். எனவே தமிழ் மக்கள் விழிப்படைவதுடன், இதனையெல்லாம் கருத்திற்கொள்ளாது, தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்குமுரிய வழிமுறைகள் பற்றியே சிந்திக்கவேண்டும். அதனை நாம் இன்று மலர்ந்திருக்கின்ற தமிழ் சிங்கள புத்தாண்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்வதுடன், மலர்ந்திருக்கின்ற புதுவருடத்தில் அனைவரினது மனதிலும் புத்துயிரளிக்கக்கூடிய ஆக்கபூர்வமான சிந்தனையும் செயற்பாடுகளும் நிலைப்பெற வேண்டும் என இந் நன்நாளிலே வாழ்த்தி புத்தாண்டை கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
- சிவனேசதுரை – சந்திரகாந்தன் -
ஜாதிபதியின் ஆலோசகர், முன்னாள் முதல்வர்