5/02/2014

| |

பொதுபல சேனாவை விட தமிழ் தேசியக்கூட்டமைப்பு மோசமானவர்கள்-வை.எல்.எஸ்.ஹமீட்

 இனவாத சேனாக்களுக்கு இம் மக்கள் வில்பத்து காட்டை அழிக்கின்றார்கள் என்ற பொய்யான தகவல்களை வழங்கி அவர்களை உசுப்பேற்றிவிட்டது உங்களை போன்றவர்களின் பின்புறத்தில் இயங்குகின்ற ஒரு வடபுல உயரதிகாரிதான் 

 

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது அண்மையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. வினோதலிங்கம் அவர்கள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் அலுவலகத்திற்குள் பொது பல சேனா காரர்கள் புகுந்தவிடயம் தொடர்பாக பத்திரிகைகளுக்கு விடுத்திருக்கின்ற அறிக்கை தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருக்கின்ற சில இனவாதிகள் பொது பல சோனவை விட மோசமானவர்கள் என்பதற்கு தெளிவான சான்றாகும்.
பொது பல சேனா இன்று சிறுபான்மைகளை இலக்கு வைத்துதான் தாக்குதல்களை தொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். சிறுபான்மைகளுக்குள் என்ன பிரச்சினை இருந்தாலும்இ ஒரு சிறுபான்மை தாக்குதலுக்கு உள்ளாகின்ற போதுஇ அடுத்த சிறுபான்மை ஆகக் குறைந்தது மானசீக ஆதரவையாவது பாதிக்கப்பட்ட சிறுபான்மைக்கு வழங்க வேண்டும். அதற்கு மனமில்லாவிட்டால் மௌனமாகவாவது இருக்க வேண்டும். அதைவிடுத்துஇதனது வக்கிரத்தை இவ்வாறு வெளிப்படுத்துவது வருந்ததக்கதாகும். துரதிஷ்டவசமாக முஸ்லிம் சமூகம் இன்று இரு பக்க இனவாதங்களுக்கு ஒரே நேரத்தில் முகங்கொடுக்க வேண்டியிருக்கின்றது.
திரு. வினோதலிங்கம் அவர்கள் தனது அறிக்கையில் ‘அன்று நீதிமன்ற கட்டிடத்திற்கு கல்லெறிந்து நீதவானுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தி மன்னார் நகரமே எறியப்போகின்றது தீர்ப்பை மாற்றி எழுத…. என சட்டத்திற்கு சவால்விடுத்த அமைச்சர் றிஷாட் பதியுதீன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். நீதி மன்றத்திற்கு கல்லெறிந்ததை திரு. வினோதலிங்கம் பார்த்தாரா? அல்லது நீதி மன்றில் அது நிரூபிக்கப்பட்டதா? நீதிமன்ற சம்பவம் நடைபெற்ற பொழுது அமைச்சர் றிஷாட் பதியுதீன் அந்த இடத்தில் இருந்தாரா? ‘மன்னார் நகரமே எறியப்போகின்றது, தீர்ப்பை மாற்றி எழுது’ என சட்டத்திற்கு அமைச்சர் றிஷாட் பதியுதீன் சவால் விடுத்ததிற்கான ஆதாரம் என்ன? மேலும் தாங்கள் கூறியிருப்பது போல் அவர் சட்டத்தை தவறாக பயன்படுத்தியதற்கான ஆதாரம் என்ன?
ஒரு பொறுப்புள்ள பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் திரு. வினோதலிங்கம் கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பான மேற்படி கேள்விகளுக்கு அவர் கட்டாயம் பதிலளிக்க வேண்டும். அவ்வாறு பதிலளிக்க முடியாவிட்டால் அதற்கான காரணத்தை கூறவேண்டும்.
யுத்தம் முடிவடைந்து 05 ஆண்டுகள் கடந்துவிட்டன 03 இலட்சம் தமிழ் அகதிகளை அன்றைய மீள்குடியேற்ற அமைச்சர் என்ற வகையில் தானே முன்னின்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் மீள்குடியேற்றம் செய்தார். ஆனால் விடுதலைப் புலிகளினால் இரண்டு தசாப்தங்கள் அகதி வாழ்க்கை வாழவேண்டி ஏற்ப்பட்டு மீள்குடியேறச் சென்ற மக்களுக்கு எதிராக தடை கற்களை போட்டு இவ்வளவு தாமதத்திற்கும் காரணமாக இருந்தது திரு. வினோதலிங்கம் அவர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் இருக்கின்ற சில இன வாதிகளும் தான் என்பதை மறுக்கமுடியுமா?
முஸ்லிம்கள் விட்ட தவறு தாங்கள் மீண்டும் திரும்பி வந்த பொழுது தமது நிலங்களையே தாருங்கள் என்று ஒரு போராட்டத்தை ஆரம்பித்திருந்தால் இன்று உங்களுடைய ஆதரவாளர்கள் கையகப்படுத்தியிருக்கின்ற அவர்களின் காணிகளுக்கான போராட்டமாக அப்போராட்டம் வேறு திசையில் சென்றிருக்கும். மாறாக சரியோ பிழையோ கடந்த 20 வருடகாலமாக தமது காணிகளில் குடியிருக்கின்ற அம்மக்களிடம் போய் காணியை தாருங்கள் என்று கேற்பதற்கு பதிலாக சமாதான சகவாழ்வின் அடிப்படையில் மாற்று காணிகளையாவது தாருங்கள் என்று கேட்பதனால் தான் இத்தனை துன்பங்களையும் அம் மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.
பதவிகளை தூக்கி வீசிவிட்டு உங்களுடன் போராட வருமாறு அழைக்கின்றீர்கள் அன்று உங்கள் இயக்கங்களுடன் இணைந்து போராட வந்த முஸ்லிம் வாலிபர்கள் எங்கே அவர்களை திருப்பி தர முடியுமா?
அது போகட்டும் இத்தனை ஆண்டுகள் போராடிய நீங்கள் இதுவரை சாதித்ததை சொல்லமுடியுமா? ஒவ்வொரு தேர்தல்களிலும் வெறும் உணர்ச்சி கோஷங்களை எழுப்பி தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுவிட்டு அம் மக்களுக்காக வெறும் அறிக்கைகளை தவிர நீங்கள் சாதித்தது என்ன? உயிரிழப்புக்கள் உங்கள் சாதனை, சொத்திழப்புக்கள் உங்கள் உணர்ச்சி கோஷத்தின் விளைவுகள். இன்று தன் பிள்ளைகளை காணாமல் தவிக்கும் தாய் மார்களின் கண்ணீர் உங்கள் நாடாளுமன்ற ஆசனத்திற்கான உரம். உங்களுடன் போராட வந்து இதே அனுபவங்களை மற்றவர்களும் பெறவேண்டுமா?
முஸ்லிம்களுக்கு தலைமை தாங்குவதற்கு யாருக்கு தகுதி இருக்கின்றது என்று நீங்கள் தீர்ப்பு சொல்ல வேண்டிய அவசியமில்லை முடியுமானால் இழப்புகளின் எல்லையை தொட்டு தவிக்கின்ற தமிழ் மக்களிடம் பெற்ற வாக்குகளுக்காக அவர்களுக்கு உறுப்படியான தலைமைத்துவத்தை கொடுக்கப் பாருங்கள். பொது பல சேனா உடன் போராடுவதை நாங்கள் பார்த்துக் கொள்ளுகின்றோம்.
அடுத்தவன் வீட்டில் தீப்பிடிக்கும் போது கைகட்டி வேடிக்கை பார்த்த அமைச்சர் தன் வீட்டில் கை வைக்கும் போது துடிக்கின்றார் என்று திரு. வினோதலிங்கம் கூறியுள்ளார். அவ்வாறு யார் வீட்டில் அமைச்சர் கை வைத்ததை வேடிக்கைபார்த்தார் என்று சற்று விளக்கி கூறினாள் பதில் கூறுவது இலகுவாக இருக்கும். ஆயினும் அடுத்தவன் வீட்டில் தீவைக்கும் போது கை கட்டி பார்த்துக்கொண்டிருக்கவில்லை என்பதால் தானே அமைச்சரின் வீட்டின் மீது கைவைக்க முனைந்திருக்கின்றார்கள் என்பதை கூட உங்கள் இனவாத பார்வையால் புரிந்து கொள்ள முடியவில்லை இருப்பினும் அடுத்தவன் வீட்டில் தீப்பிடிக்கும் போது உங்களை போன்று தன் பங்கிற்கும் எண்ணெய் ஊற்றுகின்ற வேலையை நாம் செய்வதில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அமைச்சுப்பதவி நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை தூக்கி வீசிவிட்டு மறிச்சுக்கட்டி மக்களுடன் வீதியிலிரங்கி போராட அழைக்கின்றீர்களே வட புல முஸ்லிம்கள் காடுகளுக்குள் செல்ல வேண்டி ஏற்ப்பட்ட நாம் மேற்கூறிய காரணங்களை மறந்து வீட்டீர்களா?
அதேநேரம் இந்த இனவாத சேனாக்களுக்கு இம் மக்கள் வில்பத்து காட்டை அழிக்கின்றார்கள் என்ற பொய்யான தகவல்களை வழங்கி அவர்களை உசுப்பேற்றிவிட்டது உங்களை போன்றவர்களின் பின்புறத்தில் இயங்குகின்ற ஒரு வடபுல உயரதிகாரிதான் என்ற இரகசியம் எங்களுக்கு உரிய ஆதாரங்களுடன் எத்தி வைக்கப்பட்டுவிட்டது இந்த இரகசியத்தையும் உங்களுக்க கூறிவைக்க விரும்புகின்றோம்.
இந்த பல சேனாக்கள் யாரோ வீசி எறிகின்ற இனிப்புகளுக்காக எகிரி விழுகிறார்கள் ஆனால் நீங்களோ இயற்கையாக இன வாதத்தை கக்குகின்றீர்கள் என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.