5/08/2014

| |

தென் ஆபிரிக்காவில் தேர்தல்

தென் ஆபிரிக்காவில் இன்று புதன்கிழமை பொதுத் தேர்தல்  நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில்,  சுமார் 25 மில்லியன் மக்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக அந்த நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

பாடசாலைகள்,  மதஸ்தலங்கள், பழங்குடிப் பகுதிகள், வைத்தியசாலைகள் ஆகியவற்றில் சுமார் 22,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, பின்தங்கிய பகுதிகளில் நடமாடும் வாக்குச் சாவடிகளாக வாகனங்கள் இயங்கும் எனவும் அந்த நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.  

தென் ஆபிரிக்காவில் 20 வருடங்களுக்கு முன்னர் நிறவெறி முடிக்கு கொண்டுவரப்பட்ட பின்னர்  நடைபெறும் 05ஆவது பொதுத் தேர்தல் இதுவாகும். 

இந்தத் தேர்தலில் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி ஜகோப் ஷுமா பதவிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

எவ்வாறாயினும், அங்கு நிலவும் அதிகளவிலான வேலைவாய்ப்பின்மை மற்றும் ஊழல் ஆகியவற்றால் செல்வாக்கு குறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.  

மேற்படி தேர்தல் முடிவுகள் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.