10/11/2014

| |

உலகின் பொருளாதார வல்லரசு: அமெரிக்காவை முந்தியது சீனா

உலகின் மிகப்பெரிய பொரு ளாதாரமான அமெரிக்காவின் கௌரவத்தை சீனா நூற்றாண் டுக்கு பின்னர் முதல்முறை வீழ்த்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத் தின் (ஐ.எம்.எப்.) புதிய தரவுக ளின்படி சீன பொருளாதாரத் தின் மதிப்பு 17.61 டிரில்லியன் டொலர்களாக இருப்பதோடு அமெரிக்காவின் பொருளாதார மதிப்பு 17.4 டிரில்லியன் டொலர்களாக வீழ்ச்சி கண் டுள்ளது.
அமெரிக்கா 1872 ஆம் ஆண்டு பிரிட்டனை பின்தள்ளி பொருளாதார வல்லரசாக மாறிய பின் அது பின்தள்ளப் பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.
கடந்த தசாப்தத்தில் வேகமான பொருளாதார வளர்ச்சியை பெற்றுவரும் சீனாவின் பொருளாதார மதிப்பு 2019 ஆம் ஆண்டாகும்போது 26.98 டிரில்லியன் டொலர்களாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. இந்த காலப் பிரிவாகும்போது அமெரிக்க பொருளாதாரத்தை விடவும் இது 20 வீதம் அதிகமாகும். அதாவது குறித்த காலத்தில் அமெரிக்க பொருளாதார மதிப்பு 22.3 டிரில்லியன் டொலர்களாக இருக்கும்.
நுகரும் திறன் குறியீட்டின் அடிப்படையிலேயே இந்த தரவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த குறியீட்டை தவிர்த்து சீன பொருளாதாரம் அமெரிக் காவை விடவும் கீழ் நிலையிலேயே இருப்பதாக பொரு ளாதார வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் அமெரிக்காவின் பொருளாதாரத்தை ஏதோ ஒரு வகையில் பின்தள்ளி இருப்பது உலக பொருளாதாரத்தின் திருப்புமுனையாக அமைவதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.