11/30/2014

| |

கல்லடியில் வாழ்வின் எழுச்சி நிவாரணம் வளங்கும் நிகழ்வு

பொருளாதார அபிவிருத்தியமைச்சின் வாழ்வின் எழுச்சி நிவாரணம் பெறுபவர்களுக்கு செழிப்பான இல்லம் திட்டத்தின்கீழ்  வீடுகளைத் திருத்துவதற்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு ஞயிற்றுக்கிழமை (30.11.2014) நொச்சிமுனை மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், திவிநெகும திணைக்களத்தின் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் வி. குணரெத்தினம், திவிநெகும திணைக்களத்தின் மட்டக்களப்பு வலய இணைப்பாளர் ஜே.எப்.மனோகிதராஜ், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் மற்றும் திவிநெகும திணைக்கள முகாமையாளர்கள் கலந்து கொண்டு கொடுப்பனவுகளை வழங்கி வைத்தனர்.
»»  (மேலும்)

| |

தமிழர்களுக்கு அதிக தீங்கிழைத்தது ஐக்கியதேசிய கட்சியே

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியில் தலைவர்கள் எல்லாம் தமிழர்களை ஏமாற்றி வந்துள்ளார்கள் இது வரலாறு இப்படி இருக்கையில் எப்படி ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்த கூட்டுக் கட்சியினர் எமது  பிரச்சினைகளை தீர்க்க உதவுவார்கள் என கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.பொருளாதார அபிவிருத்தியமைச்சின் வாழ்வின் எழுற்சி நிவாரணம் பெறுபவர்களுக்கு செழிப்பான இல்லம் திட்டத்தின்கீழ்  வீடுகளைத் திருத்துவதற்கான பணக் கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு  சனிக்கிழமை (29) இருதயபுரம் திரு இருதயநாதர் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு அவர் மேலும் கூறுகையில்
1968 இல் டட்லி – தந்தை செல்வா ஒப்பந்தத்தில் அதிகாரம் பிராந்திய முறையிலிருந்து மாவட்ட முறைக்கு வந்தது இறுதியில் எதுவும் இல்லாமல் போய்விட்டது. பின்பு அரசியலில் நரியாக இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனா 2/3 பலத்தோடு இருந்தும் தமிழர்களுக்கு இந்திய அரசுடன் செய்து கொண்ட 13 ஆவது ஒப்பந்தத்தின் படி மாகாண சபைக்கான அதிகாரங்களை வடகிழக்கு மாகாண சபைக்கு வழங்கவில்லை. அதற்காக மஹிந்த ராஜபக்ஸ எமக்கு அள்ளிக் கொட்டிவிட்டார் என்று கூறவில்லை, மாகாணங்களுக்கு அதிகாரங்களை ஓரளவுக்கேனும் வழங்கி இருந்தார். எடுத்த எடுப்பில் எல்லாவற்றையும் பெற முடியாது பதிலாக படிப்படியாகத்தான் நாம் எமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்.

2009 இன் பின்னர் நாட்டில் அமைதி நிலவுகின்றது இராணுவம், பொலிஸ் பரிசோதனை என்றில்லாமல் யார் எந்த இடத்திற்கும் என்நேரமும் செல்லலாம். இந்நிலையை நாம் பாதுகாக்க வேண்டும். தமிழர்களாகிய எமக்கு சந்தர்ப்பம் தரப்பட்டுள்ளது நாம் படிப்படியாக முன்னேறுவோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு குழுக்களுடன் பேசுதல், கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்கல் என்று பல்வேறு பிரச்சினைகளைப் பேசுகின்றார்கள் அவர்கள் பெரிய தேசியப் பிரச்சினைகளைக் கண்டு கொள்வதில்லை.மஹிந்த ராஜபக்ஸவின் தீக்க தரிசனமிக்க செயல் அவரது 2015 ஆம் அண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களைக் காண்பிக்கின்றது. அதை விடுத்து எல்லாம் கொள்ளை, குடும்ப ஆட்சி என்று ஒட்டு மொத்த பொய்களைக் வாய் கூசாமல் கூறாமல் நல்ல விடயங்களை நல்லது என்றே கூற வேண்டும். மஹிந்த சிந்தனை வேலைத்திட்டம் வந்த பிறகு கிராம புறப் பாடசாலைகளில் விஞ்ஞான ஆய்வு கூடங்கள் வந்தன இதனால் கிராமப் புறமாணவர்கள் 5 ஆம் அண்டு புலமைப்பரிசில் முதல் பல்கலைக்கழகம் வரை சென்றுள்ளார்கள்;. மட்டக்களப்பிற்கு நிறைய அபிவிருத்தி வந்துள்ளது. இவைகள் அபிவிருத்தி இல்லையா அதை விடுத்து பொய்யான பிரசாரங்களை நம்பி ஏமாறாமல் உளரீதியாக ஏற்று சிறந்த சிந்தனை மாற்றத்தோடு செயல்படுங்கள்.சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைச் செயலாளராக இருந்து ஆட்சி புரிந்து வந்த  மைத்திரிபால சிறிசேனா பொன்சேகா போல் விழுந்து நொருங்கப் போகின்றார் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அவர் 100 நாட்களில் நிறைவேற்று ஜனதிபதி ஆட்சி முறையை ஒழித்தல் போன்ற பல்வேறு நடைமுறைக்கப் பொருந்தாத பொய்யான பிரசாரங்களை பேசி வருகின்றார். இவற்றை நம்பாமல் எமக்குள்ள பிரச்சினைகளை எமது சிறார்களுக்கு இட்டுச் செல்லாது உரிமைகளைப் பெற சிறந்த சிந்தனை மாற்றத்தோடு தீர்க்க தரிசனமிக்க ஜனாதிபதி மஹிந்தவுக்கு வாக்களித்து தமிழர்களாகிய எமக்குள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முற்படுவோம் என்றார்.
»»  (மேலும்)

| |

தமிழ் மக்களுக்கு எந்த வாக்குறுதியும் வழங்காத மைத்திரியின் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பொது எதிரணிகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் அரசியல் கட்சிகள், சிவில் குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களென 35 அமைப்புகள் கையெழுத்திடவுள்ளன. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடவுள்ள 35 அமைப்புகளில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (சந்திரிகா பிரிவு), ஜனநாயக மக்கள் முன்னணி, ஜனநாயக கட்சி, புதிய சிஹல உறுமய, மௌபிம ஜனதா பெரமுன, தேசிய ஐக்கிய முன்னணி உட்பட 20 கட்சிகள் அடங்குகின்றன. இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் நாளை திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் மாதுளுவாவே சோபித தேரர், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க மற்றும் பொது வேட்பாளர் மைத்திரிபால  சிறிசேன ஆகியோர் உரையாற்றவுள்ளனர். உடன்படிக்கையில், மாதுளுவாவே சோபித தேரர், கிராம்பே ஆனந்த தேரர், அத்துரலியே ரத்ன தேரர், தீனியாவெல  பாலித தேரர், ரீ செல்டன் பெர்னாண்டோ, ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா குமாரதுங்க, சரத் பொன்சேகா, மனோ கணேசன், சரத் மனமேந்திர, ஹேமகுமார நாணயக்கார, அர்ஜுன ரணதுங்க, அசாத் சாலி, ஹமால் நிலங்க, ஆரியவன்ஸ திஸாநாயக்க, சாமிலா பெரேரா, அருண சொய்ஸா, லால் விஜயநாயக்க ,ராஜ உஸ்வெட்ட கெய்யா, ஸ்ரீமஸ்ரீ கப்பு ஆராய்ச்சி, சமன் ரத்னபிரிய, சுசின் ஜயசேகர, எல்மோ பெரேரா, நிர்மல் ரஞ்ஜித் தேவசிறி, நந்தன குணதிலக்க, சந்திரசேன விஜயசிங்க ஜே.எஸ். குருப்பு, தாம் விமலசேன, நஜாம் முகம்மட், கெமுனு விஜயரட்ண, பேர்சி விக்ரமசேகர, சிரால் லக்திலக ஆகியோர் கையெழுத்திடவுள்ளதாக தெரியவருகின்றது. 
»»  (மேலும்)

| |

ஹொஸ்னி முபாரக் விடுதலை - காணொளி

அரபு வசந்தத்தின் போது 2011இல் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை கொன்றமை குறித்த வழக்கின் மீள் விசாரணையில் இருந்து எகிப்திய நீதிமன்றம் ஒன்று அந்த நாட்டின் முன்னாள் அதிபர் ஹொஸ்னி முபாரக்குக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நீக்கியிருக்கிறது.
முபாரக்கின் மூத்த பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பலர் மீதான வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இரு வருடங்களுக்கு முன்னதாக இந்த வழக்கில் முன்னாள் அதிபர் முபாரக்குக்கு நீதிமன்றம் ஒன்று ஆயுள் சிறை விதித்தது.
ஆனால், வழக்கு நடத்தப்பட்ட முறையில் உள்ள குறைபாடுகள் காரணமாக அது மீள்விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
முபாரக் மற்றும் அவரது மகன்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஊழல் குறித்த இன்னுமொரு வழக்கில் இன்னும் சில மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருப்பதால், அவர் இப்போதைக்கு விடுதலையாக மாட்டார்.
»»  (மேலும்)

| |

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினை ஒருபோதும் வீழ்த்த முடியாது என்பதை வரவுசெலவுத்திட்ட வாக்கெடுப்பு நிரூபித்துள்ளது

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினை ஒருபோதும்  வீழ்த்த முடியாது என்பதை வரவுசெலவுத்திட்ட வாக்கெடுப்பு நிரூபித்துள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.இன்னும் பத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியை விட்டுச்சென்றாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எதிர்கட்சிகளால் இல்லாமல் செய்யமுடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட இருதயபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்தேவைக்கட்டிடத்தின் திறப்பு விழா  நடைபெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஜதிஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உபதலைவர் செவ்வேள்,பொருளாளர் தேவராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.மகிந்த சிந்தனையின் கீழான கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஒதுக்கீடுசெய்த பத்து இலட்சம் ரூபா செலவில் இந்த பல்தேவைக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேச மக்கள் நீண்டகாலமாக ஒன்றுகூடுவதற்கான மண்டபம் இல்லாமையினால் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவந்தனர்.இந்த பல்நோக்கு மண்டபம் அமைக்கப்பட்டதன் மூலம் அந்த குறைபாடுகள் நீக்கப்பட்டுள்ளன.அத்துடன் இங்கு அமைக்கப்பட்டுள்ள குடிநீர் திட்டத்தினையும் மாகாணசபை உறுப்பினர் ஆரம்பத்துவைத்ததுடன் மரநடுகை திட்டத்தினையும் ஆரம்பித்துவைத்தார்
»»  (மேலும்)

11/29/2014

| |

ஜனாதிபதியால் வெபர் மைதானம் 16ஆம் திகதிதிறக்கப்படும்

ஜனாதிபதியால் எதிர்வரும் 16ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ள 165 மில்லியன் ரூபா செலவில் நவீனமுறையில் புனரமைக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தின் நிர்மாண வேலைகளை துரிதப்படுத்துமாறு மீள்குடியேற்றப்பிரதி அமைச்சர் வி.முரளிதரன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தின் நிர்மாண வேலைகளை பார்வையிட்டபோதே மீள்குடியேற்றப்பிரதி அமைச்சர் வி.முரளிதரன் இந்தப் பணிப்புரையை விடுத்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே இன்றைய தினம் வெபர் விளையாட:டு மைதான வேலைகளைப் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதும் அவர் தவிர்க்க முடியாத காரணங்களால் வருகை தரவில்லை என அறிவிக்கப்பட்டது.
விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி ரஞ்சினி ஜெயகெதர, மாகாண விளையாட்டு மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார்,  மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் என் மதிவண்ணன் உள்ளிட்ட பல அதிகாரிகள் வெபர் விளையாட்டு மைதானத்திற்கு வருகை தந்து நடபெற்று வரும் வேலைகளைப் பார்வையிட்டனர்.
மைதானத்தின் நிர்மாண வேலைகள் குறித்து பொறியியலாளர்களான எம்.மங்களேஸ்வரன், ஆர்.ரகுராமன், ஒப்பந்தகாரரான பி.சசிகுமார், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரன் உள்ளிட்டோருடன் கலந்துரையாடினார்.
அத்துடன், மைதானத்தின் வேலைகளை விரைவுபடுத்துமாறும் அதற்கான தேவைகள் ஆலோசனைகள் தொடர்பிலும் அதிகாரிகளுக்கு பணிப்புரைகளை விடுத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே மிகவும் புராதன முக்கியத்துவம் வாய்ந்த ஓர் விளையாட்டு மைதானமாக இவ் விளையாட்டு மைதானம் விளங்குகின்றது.
வெபர் விளையாட்டு மைதானம், சுமார் 10 ஏக்கர் விசாலமான காணியில் உள்ளக அரங்கு, வெளி அரங்கு கொண்ட சகல வசதிகளும் அமைந்த நவீன விளையாட்டு அரங்காக நிர்மாணிக்கப்பட வுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
புதிதாக அமைக்கப்பட்டு வரும் வெபர் விளையாட்டு மைதானத்தில், 400 மீற்றர் ஓடு தளம், கூடைப்பந்தாட் டக்கூடம், உதைபந்தாட்ட மைதானம், நீச்சல் தடாகம், கரப்பந்தாட்ட கூடம், பட்மின்ரன் தளம் என அனைத்து விதமான விளையாட்டுத் தளங்களும் அமைக்கப்படவுள்ளன.
வெபர் விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி வேலைகளை 2012ஆம் ஆண்டு செப்ரம்பரில்  ஜனாதிபதி ஆரம்பித்து வைத்ததிருந்தார்.
யேசு சபையின் துறவியான அருட் தந்தை ஹரல்ட் ஜோன் வெபர், மட்டக்களப்பு கோட்டைக்கு அண்மித்தாக, அங்கிலிக்கன் மி~ன் கோயில் மற்றும் வின்சன்ட் மகளிர் பாடசாலை, மெதடிஸ்த மத்திய கல்லூரி ஆகியவற்றுக்கு முன்னாக சதுப்பு நிலமாகக் கிடந்த ஒல்லாந்தர் காலத்தில் சேமக்காலையாக இருந்த இடத்தினை  1960 களின் ஆரம்பத்தில் கல்லோயா நீர்த்தேக்க நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த நிறுவனத்தாரின் உதவியுடன் கனரக எந்திரங்களின் ஆதரவுடன் சுமார் 9 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கி வெபர் மைதானத்தினை உருவாக்கினார் என்பது வரலாறாகும். இவருடைய பெயரிலேயே  மட்டக்கள ப்பு நகரின் பிரபல விளையாட்டு மைதானமான வெபர் மிளிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வெபர் விளையாட்டு மைதானத்தை மட்டக்களப்பு நகரிலுள்ள வின்சன்ற் மகளிர் தேசியப்பாடசாலை, புனித மிக்கேல் கல்லூரி, மெதடிஸ்த மத்திய கல்லூரி, புனித சிசிலியா பெண்கள் கல்லூரி என அனைத்து பாடசாலைகளும் விளையாட்டுத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வந்தன. இந்த நிலையில் இந்த மைதானம் நவீன மயப்படுத்தப்பட்ட பின்னர் மட்டக்களப்பு மாநகர சபையிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
»»  (மேலும்)

| |

தேர்தல் விஞ்ஞாபனம் டிசம்பர்10இல் வெளிவரும்

"பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனம் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. இதில் பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கைச்சாத்திடுவர்." என அரசிலிருந்து எதிரணியில் இணைந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல், நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறும் ஆட்சிமுறையை உருவாக்குதல்,தேர்தல் முறைகளில் மாற்றம் ஏற்படுத்தல் என்பன உள்ளிட்ட மேலும் பல முக்கிய விடயங்கள் இந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூறும் அமைச்சரவையையும், அமைச்சரவைக்குப் பொறுப்புக்கூறும் பிரதமரையும் உருவாக்குவதுடன், அமைச்சரவையின் பிரதானியாக பிரதமர் செயற்படுவார். இதனூடாக புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்கவுள்ளோம்" - என்றார்.
»»  (மேலும்)

| |

எஸ்.பொவின் இறுதி ஊர்வலம் நேரடியாக பார்வையிடலாம்

எஸ்.பொவின் இறுதி ஊர்வலம் நேரடியாக பார்வையிடலாம் 
எஸ் .பொ அவர்களின் இறுதிச் சடங்கை கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்வதன் மூலம் அவுஸ்ரேலிய நேரம் சனி -காலை (8.30-10.30) வரையும் , மத்திய ஐரோப்பிய நேரம் வெள்ளி இரவு 10.30 க்கும் பார்வையிடலாம்
»»  (மேலும்)

| |

யாழ்.கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் மக்கள் மேம்பாட்டுப்பணியில் ஒரு வீதத்தையேனும் தமிழ்தேசியக் கூட்டமைப்பினரால் மேற்கொள்ளமுடியவில்லை

ஒரு அமைச்சராலும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களாலும் இரண்டு மாகாணசபை உறுப்பினர்களும் யாழ்.கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் மக்கள் மேம்பாட்டுப்பணியில் ஒரு வீதத்தையேனும் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களையும் மற்றும் பல அமைச்சர்கள் உட்பட 30 மாகாணசபை உறுப்பினர்களையும் கொண்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பினரால் மேற்கொள்ளமுடியவில்லை என ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று இராமநாதபுரத்தில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், மக்களின் அதிக வாக்குகளைப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களால் மேடைகளில் ஆக்ரோசமாக பேசவும் பாராளுமன்றத்தில் உணர்ச்சி பொங்க உரையாற்றுவதற்கும் மட்டுமே முடியும் அவர்களால் மக்களின் மேம்பாட்டுக்காகவும் பாதிக்கப்பட்ட மக்களை அப்பாதிப்பிலிருந்து மீட்டெடுப்பதற்காகவும் எதையுமே; செய்ய முடியாது. ஏனெனில் அதற்கான முயற்சியும் ஊக்கமும் செய்ய வேண்டும் என்ற மன உணர்வும் அவர்களிடம் இல்லை. இன்று வட்டக்கச்சியில் மூன்று பிரதேச சபை உறுப்பினர்கள் இணைந்து பொது நூலகம் ஒன்றை அமைத்து வருகின்றார்கள் அந்த செயற்பாட்டை நாம் வரவேற்கின்றோம்.
ஆனால் வட்டக்கச்சியை வசிப்பிடமாகக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினரால் இப்பிரதேச மக்களுக்கு எதையுமே செய்யமுடியவில்லை. அந்த அளவுக்குத்தான் மக்கள் மீதான பற்றும் தேசப்பற்றும் அவரிடம் உள்ளது எனக் குறிப்பிட்ட வை.தவநாதன் அவர்கள்,
யாழ்.கிளிநொச்சி மாவட்டங்களில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஒரு அமைச்சரும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் இரண்டு மாகாணசபை உறுப்பினர்களும் இணைந்து மேற்கொண்டு வரும் மக்களுக்கான வேலைத்திட்டங்களில் ஒரு விகிதத்தையேனும் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களையும் முப்பது மாகாணசபை உறுப்பினர்களையும் கொண்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பினரால் செய்யமுடியவில்லை.
இந்நிலையில் மிகத்தந்திரோபாயமான அரசியல் முன்னெடுப்புக்களுக்கூடாகவே எமது பிரதேசங்களுக்கான அபிவிருத்தி மற்றும் மக்கள் நலத்திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம். நாம் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சி என்பதற்காக அரசாங்கம் இலகுவாக பணத்தை தந்து விடுவதில்லை எம்மிடமுள்ள மிகக்குறைந்த பட்ச அரசியல் பலத்தைப் பிரயோகித்தே நாம் இப்பகுதிக்கான நிதியீட்டங்களை பெற்று வருகின்றோம். அதனூடாகவே எமது பிரதேசங்களில் பாரிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் வட்டக்கச்சி இராமநாதபுரம் போன்ற பகுதிகளில்கூட மீள்குடியேற்றத்திற்கு பின் பல அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன வீதிகள் புனரமைப்பு பாலங்கள் மதகுகள் கட்டுமானம் மற்றும் பொதுநோக்குமண்டபங்கள் அமைத்தல் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கான்பதற்கான செயற்திட்டங்கள் வறுமைக்கோட்டுக்குட்பட்ட மக்களுக்காகன வாழ்வாதார உதவிகள் பாடசாலைகளுக்கான கட்டடவளங்கள் மற்றும் ஏனைய தொழில்நுட்ப பௌதீகவளங்கள் உள்ளிட்ட பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன இவற்றோடு இப்பிரதேசத்திற்கான மின்சார விநியோகமும் மேற்கொள்ளப்பட்டுள்து தொடர்ந்தும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன. அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்களுக்கான விசேட நிதியதுக்கீட்டிலிருந்தும் எனது மாகாண சபை உறுப்பினருக்கான நிதி ஒதுக்கீட்டிலிருந்தும் இப்பகுதியில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக நிதிகளை ஒதுக்கீடு செய்துள்ளோம். எனவும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் அவர்கள் மேலும் தெரிவித்தார்.
இன்று வட்டக்கச்சி இராமநாதபுரம் கிராமத்தில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் அவர்களால் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் ஆரம்பித்துவைக்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்களுக்கான விசேட நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள இராமநாதபுரம் வெற்றிப்பாதை சனசமூக நிலையத்திற்கான கட்டட கட்டுமாணப்பணியை காலை 9.30 மணிக்கு அடிக்கல் நாட்டி ஆரம்பித்துவைத்த அவர் காலை 10.30 மணிக்கு இராமநாதபுரம் கலைச்சுடர் சனசமூக நிலைய வளாகத்தில் பொதுக்கிணறு ஒன்றினை அமைப்பதற்கான பணியையும் ஆரம்பித்துவைத்தார். தொடர்ந்து வை. தவநாதன் அவர்களின் மாகாணசபை உறுப்பினருக்குரிய பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சுமார் மூன்று இலட்சம் ரூபா ஒதுக்கீட்டில் இராமநாதபுரம் குளக்கட்டுப் பாதையை புனரமைப்பதற்காண பணியையும் அவர் ஆரம்பித்துவைத்தார்.
இந்நிகழ்வுகளில் இராமநாதபுரம் தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் வன்னியர்சிங்கம் வெற்றிப்பாதை சனசமூக நிலையத்தலைவர் சீலன் அதன் பொருளாளர் கருணாநிதி உபசெயலாளர் தங்கேஸ்வரி மற்றும் கலைச்சுடர் சனசமூகநிலைய செயலாளர் கோமதி அதன் உபதலைவர் கதிர்காமநாதன் அதன் பொருளாளர் சுபாஸ்கரன் மற்றும் இராமநாதபுரம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவி சறோஜாதேவி கிராம அபிவிருத்திச்சங்க செயலாளர் சின்னத்தம்பி ஆகியோரும் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் மக்களும் கலந்துகொண்டனர்.
»»  (மேலும்)

11/27/2014

| |

15 ஏக்கர் காணியை இலவசமாக பகிர்ந்தளித்த புலம்பெயர் ஆஸி.தமிழர்

புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கைத் தமிழரான சுரேஷ் மேத்தர் தனக்குச் சொந்தமான 15 ஏக்கர் காணியை இயக்கச்சி; பனிக்கையடி மக்களுக்கு இலவசமாக பகிர்ந்தளித்துள்ளார்.
ஈ. பி. டி. பி. பாராளுமன்ற உறுப் பினரும், குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் புலம்பெயர் தமிழரான சுரேஷ் மேத்தரிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க 15 ஏக்கர் காணியையும் 57 குடும்பங்களுக்கு பகிர்ந்தளித்தார். இயக்கச்சி பகுதியில் இருப்பிடம் இன்றி தவித்த மக்கள் மேற்படி காணிகளிலே குடியிருந்தனர்.
அவர்கள் குடியிருந்த காணிகளிலேயே ஒவ்வொரு குடும்பத்துக்கும் 4 பரப்பு நிலம் வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் காணி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு முருகேசு சந்திரகுமார் பேசும் போது, பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காணியை உடைமையாகக் கொண்டுள்ளவர்கள் ஒரு அடி நிலத்திற்காகவே சண்டையிட்டு வருகின்ற இன்றைய காலத்தில் 15 ஏக்கர் நிலத்தை மக்களுக்காக மனமுவந்து சுரேஷ் மேத்தர் கொடையாக வழங்கியமை வரவேற்புக்குரியது.
பளைப் பிரதேசத்திலேயே பெரும் நிலப் பரப்பை உடைமையாகக் கொண்ட முன்னாள் அரசியல்வாதிகள் உள்ளனர். அவர்களின் வாரிசுகள் இன்றும் அரசியலில் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் வராத உணர்வு திரு. சுரேஷ் மேத்தருக்கு வந்துள்ளது. இது அவரின் மனிதத் தன்மையை வெளிப்படுத்தி நிற்கின்றது எனவும் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த காணியை கொடையாக வழங்கிய சுரேஷ் மேத்தரின் தந்தையார் வில்லியம் மேத்தரின் பெயரை இக்குடியிருப்பிற்கு சூட்டுவது பொருத்தமானது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் மேலும் தெரிவித்தார். இந்நிகழ்வில் சுரேஷ் மேத்தர் தனது காணியை வழங்கிய 57 குடும்பங்களுக்குமான காணி உறுதிப் பத்திரங்களிலும் கையொப்பமிட்டார். தொடர்ந்து காணி உறுதிப் பத்திரங்களை பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் அவர்கள் வழங்கினார்.
»»  (மேலும்)

| |

தமிழிலக்கியத்தின் வாழ்நாள் ஊழியன் எங்கள் எஸ்.போவை இனி எப்போ காண்போம்?

நற்போக்கு இலக்கியத்தின் பிதாமகர், ஈழத்து இலக்கியத்தின் கம்பீரம், புகலிட இலக்கியத்தின் போசகன், தமிழிலக்கியத்தின் வாழ்நாள் ஊழியன் எங்கள் எஸ்.போவை  இனி எப்போ காண்போம்?
»»  (மேலும்)

11/26/2014

| |

பின்கதவு வழியாக பிரதமர் பதவியை பெற ரணில் முயற்சிக்கிறார்'

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை உடைத்து பின்கதவு வழியாக பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க முயற்சிக்கின்றார் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இதனால், தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர் கூறினார். 

மட்டக்களப்பு, கல்லடி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட பலநோக்கு மண்டபத்தை  திங்கட்கிழமை (24) மாலை  திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 

'நூறு நாட்களில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கமுடியாது. ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது எங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாகவும் அமையப்போவதில்லை. 

தமிழர் ஒருவர் ஜனாதிபதியாவது எட்டாக்கனியாகும்.  நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச்செய்ய மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் நாடாளுமன்றத்தில் அவசியமாகும். அதை எதிரணியால் செய்யமுடியாது.

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். இவற்றை இல்லாமல் செய்யாமல், நிறைவேற்று அதிகாரத்தை நூறு நாட்களில் இல்லாமல் செய்யமுடியாது. 

தற்போது நாட்டில் நிலவுகின்ற அரசியல் சூழ்நிலை, சிங்களத் தலைவர்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டியாகும்' எனவும் கூறினார்.  

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பி.பிரசாந்தன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஏ.தவராசா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
»»  (மேலும்)

| |

கிழக்கு மாகாணசபையில் அ.இ.ம.கா. உறுப்பினர்கள் தனித்து இயங்க தீர்மானம்

கிழக்கு மாகாணசபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர்கள்,  தனிக்குழுவாக இயங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.

அமைச்சர் ரிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் உயர்பீடக் கூட்டம் கொழும்பில் திங்கட்கிழமை  (24)  இரவு நடைபெற்றது. இதன்போதே இந்தத் தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் கூறினார். 

கிழக்கு மாகாணசபையில் உறுப்பினர்களாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, எம்.எஸ்.சுபைர், சிப்லி பாறூக் ஆகியோர் உள்ளனர்.

இதில் முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில், கிழக்கு மாகாணசபையில் இக்குழு தனித்து இயங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபையில் கொண்டுவரப்படும் பிரேரணைகள் மற்றும் வேலைத்திட்டங்களை பொறுத்து, தமது கட்சியைச் சேர்ந்த மூன்று மாகாணசபை உறுப்பினர்களும் அவ்வப்போது முடிவெடுத்து, அதற்கேற்ப செயற்படுவதற்கு மேற்படி கூட்டத்தில் அவர்களுக்கு அங்கிகாரமளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.  

கிழக்கு மாகாணசபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த மேற்படி மூன்று உறுப்பினர்களும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு, அதில் வெற்றி பெற்று உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டனர். அத்துடன், கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளராக எம்.எஸ்.சுபைர் மற்றும் உறுப்பினர்களாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, சிப்லி பாறூக் ஆகியோர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.  
»»  (மேலும்)

11/24/2014

| |

அனர்த்த முகாமைத்துவப்பிரிவும் கிரான் இராணுவப் பிரிவினரும் இணைந்து நடத்தும் படகுச் சேவை

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவருகின்ற கடும் மழை காரணமாக கிரான்புல் ஆற்றுநீர் உயர்வடைந்ததைத் தொடர்ந்து, கிரான் பாலம் ஊடான தரைவழிப் போக்குவரத்து இரண்டு நாட்களாக தடைப்பட்டுள்ளது.

கிரான் தெற்கு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பேருளாவெளி, கோராவெளி, புலாக்காடு, முறுத்தாணை, குலாவாடி போன்ற கிராம  அலுவலகர்  பிரிவுகளில் வசிக்கும் மக்களின் தரைவழி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. 

இந்தப் பாலத்தின் மேலாக வெள்ளநீர் செல்கின்றமையால், படகுச் சேவையை  ஞாயிற்றுக்கிழமையிலிருந்து (23)  கிரான் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவப்பிரிவும் கிரான் இராணுவப் பிரிவினரும் நடத்துகின்றனர். 

இதேவேளை, சந்தனமடு ஆற்று நீர்மட்டம் உயர்வடைந்தமையால், சித்தாண்டியை அண்மித்த வயல்வெளி பிரதேசத்தில்; முற்றாக வெள்ளநீர் நிரம்பிக் காணப்படுகிறது.
»»  (மேலும்)

| |

பொது வேட்பாளர் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைப்பு

பொது வேட்பாளர் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைப்புகொழும்பில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில், பொது வேட்பாளர் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன
“இது எவ்வித திட்டங்களும் அற்ற ஓர் அமைப்பாகும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து, நிறைவேற்று பிரதமர் நாற்காலியில் ரணில் விக்ரமசிங்கவை அமர வைக்க போகின்றனராம். அப்படியென்றால், மைத்திரிபால சிறிசேனவின் நாற்காலி என்ன? நாற்காலி பிரச்சினையொன்றும்உள்ளது. இந்த திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்வது மிகவும் சிரமமான விடயமாகும். கிராமங்களிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களும் இன்று நிர்கதி நிலைக்குள்ளாகியுள்ளனர்.”
அமைச்சர் பவித்திரா வன்னிஆரச்சியும் அங்கு கருத்து வெளியிட்டார்.
“மைத்திரிபால சிறிசேன என்ற நபர், ரணில் விக்ரமசிங்கவை அதிகாரத்திற்கு கொண்டு
வருவதற்கான ஓர் காய் மாத்திரமே. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை காட்டிக் கொடுத்து, எமது கட்சியிலுள்ள
எந்தவொரு நபரும் எதிர்வரும் காலத்தில், அவர்களின் பக்கம் செல்ல மாட்டார்கள் என்பதனை
அமைச்சரவையிலுள்ள அமைச்சர் என்ற ரீதியில் நான் உறுதியாக கூறிக் கொள்கின்றேன்.”
மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றினார்.
“கட்சி தொடர்பில் இதுவரை ஓர் வேலைத்திட்டம் கிடையாது. ஜனாதிபதித் தேர்தல் என்பது
இலகுவான ஓர் விடயமல்ல. ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டு மூன்று வருடங்களுக்கு
முன்பிருந்தே தயாராக வேண்டும். ஆனால் தேர்தல் ஒன்றுக்கு தயாராவதற்கு
சுமார் 46 நாட்கள் மாத்திரமே  அவர்களுக்கு  இருக்கின்றது.  இது இலகுவான விடயமல்ல.”
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கருத்து வெளியிடுகையில்.
“கடந்த காலங்களில் சந்திரிகா, அதிகாலை வேளையில் தூதரகங்களுடன் தொலைபேசியில்
உரையாடியதை எங்களால் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. பொது வேட்பாளர் என்பது இந்த
நாட்டுக்ேக புரியாத புதிராக காணப்பட்டது. தூதுவர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாகவே
இந்த பொது வேட்பாளர் தெரிவு செய்யப்படுகின்றார் என்பதனை நாங்கள் அறிந்திருந்தோம். 40
பேர் வருவதாக கூறினார்கள். முதலில் 20 பேரின், பெயரை வெளிப்படுத்துவதாக கூறினார்கள்.
அதிகாலையிலிருந்து தொலைபேசியூடாக அழைப்புக்களை மேற்கொண்டார்கள். யாரும் வரவில்லை.
மிக சிரமத்திற்கு மத்தியில் 6 பேரை தமது கட்சியுடன் இணைத்துக் கொண்டார்கள். அவ்வாறு
சென்ற 6 பேரில் இருவர், மீண்டும் இந்த பக்கம் வந்து அமர்ந்துக் கொண்டால், ஆச்சரியப்படுவதற்கு
ஒன்றும் கிடையாது. அந்த பக்கம் சென்றவர்கள் தற்போது கவலையடைந்துள்ளனர்.”


»»  (மேலும்)

| |

இந்து பயங்கரவாதிகளுடன் கைகோர்க்கும் விக்கி


CV-Talaelama 
உலக இந்து காங்கிரசின், மூன்று நாள் அனைத்துலக இந்து மாநாடு நேற்று புதுடெல்லியில் ஆரம்பமானது.
இந்த மாநாட்டை திபெத் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா, விஸ்வ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்கல், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பக்வத்,வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து, மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தனர்.
இந்தியாவை ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் மீது செல்வாக்குச் செலுத்தும், ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிசத் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் பங்குபற்றும் இந்த மாநாட்டில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோர் உரையாற்றினர்.
நேற்று நடந்த அரசியல் அமர்வு ஒன்றுக்குத் தலைமையேற்று உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறிலங்காவில் 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னரும் கூட, அங்குள்ள இந்துக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் முடிவுக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா, விஸ்வ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்கல், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பக்வத் ஆகியோரும் நேற்று உரையாற்றினர்.
இந்த மாநாட்டில் உலகின் 40 நாடுகளைச் சேர்ந்த 1800 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளதாக, அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
»»  (மேலும்)

11/23/2014

| |

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி சந்தாப்பணத்தில் கூலித்தொழிலாளிக்கு வீடு


புதூரைச் சேர்ர்ந்த கூலித்தொழிலாளியான மோகன் தனது சுகவீனம் உற்ற மனைவி மற்றும் இரண்டு வயதுக்கு வந்த பிள்ளைகளுடன் வாழ்க்கைச்செலவினைப் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் சீலையினால் அமைக்கப்பட்ட வீட்டுக்குள் குடும்பம் நடாத்தி வருவதனை இட்டு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.இதன்பலனாக புதிய வீடு கட்டி பாரம் கொடுக்கப்பட்டது. இப் பாரம் கொடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் குறிப்பிடுகையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் தமது கட்சி நிதியில் இருந்து கட்டிக்கொடுத்த முதலாவது வீடு இது எனவும் எத்தனையோ வீடுகள் மலசலகூடங்கள்,பாதைகள்,பாடசாலைகள்,பாலங்கள் என பல கோடிக்கணக்கான ரூபாய்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முதலமைச்சராக இருந்தபோதும் இன்றும் செய்து கொண்டிருக்கின்றோம்.அப்போதேல்லாம் நாம் அடைந்த திருப்தியை விட நாம் இப்போது மட்டற்ற திருப்தி கொள்கிறோம்.
இது எந்த அரச நிதியிலேயே அல்லது வெளிநாட்டு உதவியாளர்களின் நிதியிலேயே அமைக்கப்படாமல் எமது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்களினால் மாதாமாதம் சேர்க்கப்படும் சந்தாப்பணத்திலிருந்தே இவ்வீடு அமைக்கப்பட்டுள்ளது.எமது கட்சி பாரிய நிதி வளத்தினைக்கொண்டுள்ள கட்சியல்ல வைத்தியர்கள்,பொறியலாளர்கள்,மீனவர்,கூலித்தொழிலாளிகள்,மேசன் என பல தொழில்களில் ஈடுபடும் எமது கட்சியின் உறுப்பினர்கள் மாதாமாதம் தாம் உழைக்கும் சம்பளத்தில்  கட்சியின் வளர்ச்சிக்காக சந்தாப்பணமாக செலுத்துவார்கள் இவ்வாறு வியர்வை சிந்தி உழைத்த கட்சியின் சந்தாப்பணத்தில் இருந்து கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் அவர்களின் சிந்தனையில் சுமார் 5,75,000ரூபா பெறுமதி செலவில் முதலாவது வீடு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. எனக்கு பெரும் மகிழ்ச்சி இது போன்று இத்திட்டம் தொடரும் என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் முன்னாள் கிழக்குமாகாணசபை உறுப்பினரும்,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் ஆகிய பூ.பிரசாந்தன் முன்னாள் மாநகர பிரதி மேயர் ஜோர்ஜ்பிள்ளை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவி திருமதி. செல்வி மனோகர் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களும்,கிராம உத்தியோகஸ்தரும் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
»»  (மேலும்)

11/22/2014

| |

பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகத்திற்கு எதிராகமனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தன்னை வேண்டுமென்றே தொடர்ச்சியாக பழிதீர்ப்பதாகக் கூறி வலயக்கல்விப்பணிப்பாளர் மீது ஓர் ஆசிரியர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இம்முறைப்பாடு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்தியக்கிளையில் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
மண்டுர் மகா வித்தியாயலயத்தில் கற்பிக்கும் சுப்பிரமணியம் கமலேஸ்வரன் என்ற ஆசிரியரே பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகத்திற்கு எதிராக இம்முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளார்.
இது தொடர்பாக தமக்கு எழுத்துமூலம் விளக்கமளிக்குமாறு ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் அசீஸ் வலயக்கல்விப்பணிப்பாளருக்கு விளக்கம் கோரும் கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.
விளக்கம் கிடைத்தபிற்பாடு விசாரணை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
»»  (மேலும்)

11/21/2014

| |

ஜனவரி மாதம் 8 ம் திகதி ஜனாதிபதி தேர்தல் - தேர்தல்கள் செயலகம் அறிவிப்பு

எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது
»»  (மேலும்)

11/20/2014

| |

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரகடனத்தில் கையொப்பமிட்டார் ஜனாதிபதி மஹிந்த!

ஜனாதிபதித் தேர்தல் நடத்துவது தொடர்பான உத்தியோகபூர்வ பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையொப்பமிட்டுள்ளார். 
ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதி புதல்வர் யோசித்த ராஜபக்ஷ ஆகியோர் அருகில் இருக்க அலரி மாளிகையில் ஜனாதிபதி பிரகடனத்தில் கையொப்பம் இட்டுள்ளார். 

அதன்படி, 4 வருட பதவிகாலம் முடிந்துள்ளதால் தேர்தல் ஒன்றை கோருவதோடு போட்டியிடவும் தயார் என தெரிவித்தும் தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் தேர்தல்கள் ஆணையாளரிடம் ஜனாதிபதி கோரியுள்ளார். ஜனாதிபதியால் கைச்சாத்திடப்பட்ட பிரகடனம் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

| |

வருடாந்தம் ஒரு இலட்சம் மெற்றிக்தொன் உப்பை உற்பத்தி செய்யும் பாரிய இலக்கு

வருடாந்தம் ஒரு இலட்சம் மெற்றிக்தொன் உப்பை உற்பத்தி செய்யும் பாரிய இலக்கு

ஆனையிறவு உப்பளம் 1938ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை சிறப்பாக இயங்கி வந்ததுடன் அதன் மூலம் நாட்டின் வீட்டு நுகர்வுக்கும் கைத்தொழில் பயன்பாட்டுக்குமான உப்புத் தேவையில் பெரும் பகுதி உற்பத்தி செய்யப்பட்டது. 1990 ம் ஆண்டுக்கு முன்னர் ஆனையிறவு உப்பளத்தின் வருடாந்த உப்பு உற்பத்தி 60,000 தொடக்கம், 80,000 வரையான மெற்றிக் தொன்னாகக் காணப்பட்டது.
அக்காலத்தில் நாட்டின் மொத்த உப்புத் தேவையில் 30 முதல் 40 சதவீதமான பகுதி ஆனையிறவு உப்பளத்தின் மூலம் பூர்த்தி செய்யப்பட்டது. ஆனையிறவு உப்பளம் மொத்தமாக 1946 ஏக்கர் பரப்பைக் கொண்டதாகும். அதில் 1169 ஏக்கர் நிலம் வட பகுதியிலுள்ள குறிஞ்சா தீவில் அமைந்துள்ளது. மீதி 777 ஏக்கர்களும் பொதுவாக ஆனையிறவு பகுதியில் அமைந் துள்ளன.
இந்த இரு உப்பளங்களும் பரந்தனுக்கும் இயக்கச்சிக்கும் இடையிலுள்ள கடற்கரைப்பகுதியில் அமைந்துள்ளன. அதனால் இந்த இரண்டு இடங்களும் கிளிநொச்சி மாவட்டத்திலேயே அமைந்துள்ளன. ‘ஆனையிறவு உப்பளம்’ என அழை க்கப்படும் பகுதி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிலும், குறி ஞ்சாதீவு என அழைக்கப்படும் வடக் குப் பகுதி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிலும் அமைந்துள்ளன.
1990 ம் ஆண்டுக்கு முன்னர் இந்த உப்பளம் உயர் தரத்திலான தூய வெள்ளை உப்பை உற்பத்தி செய்தது. ஆனையிறவு பிரதேசத்தில் நிலவும் அதிக சூரிய ஒளி, குறைந்த மழை வீழ்ச்சி, அதிக வெப்பநிலை, அதிக ரித்த காற்றின் வேகம், குறைந்த அமுக்கம், உலர் காற்று என்பன போன்ற இயற்கையான இயல்பான சூழல் இந்த உப்பளத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.
1938ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஆனையிறவு உப்பளம் உயர் தரத்திலான தூய வெண்ணிற உப்பை மிகவும் வெற்றிகரமான முறையில் உற்பத்தி செய்து வந்ததாக பாரம்பரியக் கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி கூறுகின்றார். எவ்வாறாயினும், யுத்த சூழ்நிலையின் காரணமாக உப்பளத்தின் தொழிற்பாடுகள் 1990 ம் ஆண்டில் கைவிடப்பட்டு கடந்த 23 வருடங்களாக மூடப்பட்டிருந்தது.
தற்போது இலங்கைக்கு வருடாந்தம் 150,000 மெற்றிக் தொன் உப்பு தேவை ப்படுகிறது. இதில் 80 சதவீதம் வீட்டு நுகர்வுக்கும் மீதமுள்ள பகுதி கைத்தொழில் தேவைகளுக்கும் பயன் படுத்தப்படுகின்றன. இக்கேள்வியில் 97 சத வீதம் தற்போதைய உப் பளங்கள் மூலம் பூர்த்தி செய்யப் படுகின்றது. மொத்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தூய உலர் காற்று தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுத்தி கரிக்கப்பட்ட 4500 மெற் றிக் தொன் உப்பு வரு டாந்தம் இறக்குமதி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் 500 பில்லியன் ரூபா பெறுமதி வாய்ந்த 65 மில்லியன் மெற்றிக் தொன் உயர் தரத்திலான உப்பு, உலக சந்தைக்கு குறிப்பாக ஐக்கிய அமெரிக்க, ஜப்பான், சீனா, தென்கொரியா மற்றும் ஏனைய நாடுகளுக்குத் தேவைப்படுகின்றது. மஹிந்த சிந்தனை தேசிய அபிவிருத்தி வரைபுக்கு அமைய ‘வடக்கின் வசந்தம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆனையிறவு உப்பளத்தை மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தது.
பாரம்பரியக் கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வேண்டுகோளின் பேரில் ஆனையிறவு உப்பளத்தின் புனரமைப்பு வேலைகளை ஆரம்பிப்பதற்காக 2014ம் ஆண்டு மே மாதத்தில் பொரு ளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் 100 மில்லியன் ரூபா நிதியினை வழங்கினார்.
இந்த ஆரம்ப நிதி ஒதுக்கீடு, கட் டம் 1 இன் புனரமைப்பு பணிக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என பாரம்பரியக் கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி கூறுகின்றார். கட்டம் 1 மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் வருடாந்தம் 20,000 - 25,000 மெற்றிக் தொன் உப்பினை உற்பத்தி செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வகையில் 15 நீராவியாக்கல் பாத்திகள், 267 உற்பத்தி பாத்திகள், கடல் நீர் உள்வாங்கல் கால்வாய்கள், வான்வழிகள், கால்வாய்த் தொகுதி, வெள்ளத் தடுப்பு அணைகள், நீர்த்தேக்கத்திற்கான கற்குவியல் பாதுகாப்பு, அணைகள், 30 உப்பள மேடைகள், நுழை பாதை, மின்சாரம், கட்டடங்கள் மற்றும் வசதிகள் உள்ளிட்ட தொடர்புடைய உட்கட்ட மைப்பு வசதிகள் என்பன மீள்நிர்மாணம் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.
ஆனையிறவு உப்பளச் செயற்திட் டத்தை மீள ஆரம்பிக்கும் செயற் திட்டத்தின் கீழ் கடல் நீர் உள்வாங்கல் கால்வாய், நீர்த்தேக்க வெளி நில அணைகளுக்கான புதுப்பித்தல் வேலைகள், நீர்த்தேக்கத்திற்கான கற்குவியல் பாதுகாப்பு, வெள்ளத் தடுப்பு நில அணைகளின் திருத்த வேலைகள், வான்வழிகளின் நிர்மாணம், மின்னி ணைப்பு வழங்கல், கட்டடங்களைப் புதுப்பித்தல், உளவு இயந்திரங்கள், டிரெய்லர்கள், கருவிகள், துணைப் பாகங்கள் என்பவற்றின் கொள்வனவு பணிகள் நடைபெற்று வருகின்றன.
யுத்தம் நிலவிய பிரதேசத்தின் நடுப் பகுதியில் இந்த இடம் அமைந்திருந் தமையினால் ஆனையிறவு உப்பளப் பிரதேசத்தில் பெருமளவிலான கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. உப்பளத்தில் கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகள் அவுஸ்திரேலிய அரசாங் கத்தின் உதவியுடன் சமூக நல்லி ணக்கத்திற்கான டெல்வொன் உதவி (DASH) நிறுவனத்தினால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. DASH நிறுவனம் கண்ணிவெடி அகற்றல் விடுவிப்புச் சான்றிதழை பாரம்பரியக் கைத் தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சிடம் 2011 ம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் உத்தியோகபூர்வமாகக் கையளித்ததாக அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி கூறுகின்றார்.
உப்பளத்தின் உட்கட்டமைப்பு அபி விருத்திச் செயற்பாடுகளின் அமுலாக்கப் பணிகளில் கிளிநொச்சி மாவட்ட மக் களையும் சங்கங்களையும் செயலூக் கத்துடன் பங்கேற்கச் செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்கிணங்க, கிளிநொச்சி மாவட்ட செயலகம் பல் வேறுபட்ட ஒப்பந்தப் பொதிகளுக்கான விலைமனுக்களை அப்பிரதேசத்திலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கங்களிடமிருந் தும் மகளிர் கிராம அபிவிருத்திச் சங் கங்களிடமிருந்தும் கோரியது.
தட்டுவான்கொட்டி கிராம அபிவி ருத்திச் சங்கம், குமரபுரம் மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கம், பரந்தன் மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கம், திருவையாறு பலநோக்குக் கூட்டுற வுச் சங்கம், கரச்சி வடக்கு கடற் றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், குமரபுரம் கிராம அபிவிருத்திச் சங் கம், இயக்கச்சி மகளிர் கிராம அபி விருத்திச் சங்கம், MASAR, இரத்தினபுரம் மகளிர் குழு, இயக்கச்சி கிராம அபி விருத்திச் சங்கம் என்பன உள்ளிட்ட கிராம அபிவிருத்திச் சங்கங்களும், மகளிர் அபிவிருத்திச் சங்கங்களும் உட்கட் டமைப்பு அபிவிருத்திப் பணிகளில் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றன.
இச்செயற்திட்டத்தை கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 10 கிராமிய அபி விருத்திச் சங்கங்கள், மகளிர் கிராமிய அபிவிருத்திச் சங்கங்கள் பொறுப்பேற்று நடைமுறைப்படுத்துகின்றமை விசேட அம்சமாகும் என சிவஞானசோதி கூறுகின்றார். சங்கங்களின் 300 இற்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் புனரமைப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதனால், கிளிநொச்சி மாவட்ட மக்கள் இப்புனரமைப்புப் பணிகளில் பாரியளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் இச் செயற்திட்டத்தின் அமுலாக்கத்தின் போது அவர்கள் அதிகம் பயனடைவர். இச்செயற்திட்டத்தின் திட்டமிடல் மற்றும் அமுலாக்கல் கட்டங்களில் உறுதியான உரிமையையும் சமூக ஈடுபாட்டையும் கட்டியெழுப்பியுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 300-400 தொழிலாளர்கள் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளனர். கருவிகள் மற்றும் துணைப் பாகங் களின் கொள்வனவு உள்ளிட்ட அனை த்து உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைகளும் இவ்வருட இறுதிக்குள் பூர்த்தி செய்யப்பட்டு 1 ம் கட்டத்தின் தொழிற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. கட்டம் 1 பூர்த்தியாக்கப்பட்ட பின்னர் வருடாந்தம் 20,000 - 25,000 மெற்றிக் தொன் உப்பினை உற்பத்தி செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனையிறவு உப்பளத்தின் 447 ஏக்கர் கொண்ட இரண்டாம் கட்டத்தின் செயற்பாடுகள் 2015ஆம் ஆண்டில் திறைசேரியின் நிதியைப் பயன்படுத்தி ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன் மூலம் 30,000 மெற்றிக் தொன் உப்பை மேலதிகமாக உற்பத்தி செய்ய முடியும் என்றும் 3000 இற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புக்களை உருவாக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது. உட்கட்ட மைப்பு அபிவிருத்தி வேலைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டதன் பின்னர் வருடாந்தம் 70,000 - 100,000 மெற்றிக் தொன் உப்பினை உற்பத்தி செய்ய முடியும் என்று எதிர்பார்க் கப்படுகின்றது.
அயடீன் சேர்த்தல், உப்பை பொதி செய்தல், உப்பு விநியோகம், தொட ர்புடைய இரசாயனங்களை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில்களின் உருவா க்கம். சூழல்சார் சுற்றுலாத் துறை அபிவிருத்தி என்ப வற்றை உள்ளடக்கக் கூடிய வகையில் ஆனையி றவு உப்பள அபிவிருத்திச் செயற்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. தூய வெண் ணிற உயர் தரத்திலான உப்பினைக் கொள்வனவு செய்வதற்கு வெளிநாட்டுக் கொள்வனவாளர்களும் விருப்பம் தெரி வித்துள்ளனர். இத்தகைய தொடர்புடை செயற்பாடுகள் மூலம் ஆனையிறவுப் பிரதேசத்தை உள்ளடக்கிய விதத்தில் ‘உப்பு தொழில் முயற்சி நகரம்’ அபிவிருத்தி செய்யப்படும்.
»»  (மேலும்)