11/05/2014

| |

அமெரிக்கா: 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக வர்த்தக மையம்

அமெரிக்காவில் அல்-காய்தா பயங்கரவாதிகளால் கடந்த 2001-ஆம் ஆண்டு தரைமட்டமாக்கப்பட்டு, மீண்டும் எழுப்பப்பட்டுள்ள உலக வர்த்தக மையம், 13 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கள்கிழமை செயல்படத் தொடங்கியது.
அந்த 104 மாடிக் கட்டடத்தின் 25 அடுக்குகளைக் குத்தகைக்கு எடுத்துள்ள "காண்டி நாஸ்ட்' பதிப்பக நிறுவனத்தின் 175 பணியாளர்கள், அந்தக் கட்டடத்தில் தங்கள் பணியைத் தொடங்கினர்.
"ஒன் வேர்ல்டு டிரேட் சென்டர்' என்றழைக்கப்படும் இந்த வர்த்தக மையம், 390 கோடி டாலர்கள் (சுமார் ரூ.23,932 கோடி) செலவில் கட்டப்பட்டுள்ளது.
1,776 அடி (541 மீட்டர்) உயரத்தில், இது அமெரிக்காவின் மிக உயர்ந்த கட்டடமாகும்.
உலக அளவில், நான்காவது மிக உயர்ந்த கட்டடம் இது.
2001-ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதியில் நிகழ்த்தப்பட்ட இரட்டை கோபுரத் தாக்குலில் 2,700-க்கும் அதிகமானோர் பலியான அதே இடத்தில் இந்தக் கட்டடம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.