11/16/2014

| |

2014 இல் வடமாகாணசபைக்கு மக்கள் நலத்திட்டத்திற்காக வழங்கிய நிதி மீளவும் திறைசேரிக்கு செல்லவுள்ளது2014 இல் வடமாகாணசபைக்கு மக்கள் நலத்திட்டத்திற்காக வழங்கிய நிதி மீளவும் திறைசேரிக்கு செல்லவுள்ளது- ஈ.பி.டி.பி பாராளுமனற உறுப்பினர் சந்திரகுமார். 16.11.2014 - ஞாயிற்றுக்கிழமை வடக்கு மாகாண சபைக்கு 2014 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் மக்கள் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கிய 58 ஆயிரம் இலட்சம் வரையான நிதியில் 31 விகிதமான நிதியே 31.10.2014 ஆம் திகதி வரையான காலம் வரை செலவிடப்பட்டுள்ளது மிகுதித்தொகை இன்றுவரை பயன்படுத்தப்படவில்லை. 

இந்நிலையில் 31.12.2014 இற்குப் பின்னர் இந்நிதி திறைசேரிக்கு திரும்பிச்சென்றுவிடும் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதித்தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று கச்சார்வெளி செல்வபுரம் கிராமத்திற்கான மின் விநியோகத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில். வடக்கு மாகாணசபைக்கு 2014 ஆம் ஆண்டு அரசாங்கம் மக்கள் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கிய 58 ஆயிரம் இலட்சம் வரையான நிதியில் 31 விகிதமான நிதியே 31.10.2014 வரையான காலம் வரை செலவிடப்பட்டுள்ளது இன்னும் பெருந்தொகையான நிதி பயன்படுத்தப்படவில்லை. இந்நிலையில் 31.12.2014 இற்குப்பின்னர் இந்நிதி திறைசேரிக்கு திரும்பிச்சென்றுவிடும். எனவே மக்களின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வடக்கு மாகாணசபையினர் பயன்படுத்தாது மீளவும் அரசாங்கத்திற்கு வழங்க காத்திருக்கின்றார்கள். 

இந்நிலையில் ஆண்டு இறுதிக்குள் அந்நிதி செலவு செய்யப்பட்டு விடும் எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் நிர்வாக செயற்பாட்டு நடைமுறைகளுக்கமைவாக அப் பெருந்தொகையான நிதியை ஓரிரு வாரங்களுக்குள் பயன்படுத்துவதென்பது சாத்தியமற்றது. எனவே மக்களை ஏமாற்றும் வகையான கருத்துக்களையே அவர்கள் வெளியிட்டு வருகின்றனர்.இந்நிலையில் வடக்கு மாகாணசபைக்கு அரசாங்கம் நிதி வழங்கவில்லை என்ற பொய்ப்பிரச்சாரத்தினைக் கூட கடந்த காலங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் முன்னெடுத்து வந்தனர் ஆனால் இப்போது குறித்த சில வாரங்களுக்குள் மிகுதியாக உள்ள நிதியை செலவு செய்து விடுவதாக பாராளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இவர்கள் வெளியிடும் கருத்துக்கள் உண்மைக்குப்புறம்பானது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும் எனக் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள். வடக்கு மாகாணசபையில் கடந்த 18 அமர்வுகளில் 160 வரையான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ள போதும் அந்த பிரேரணைகளை செயற்படுத்துவதற்காக உழைப்பதற்கு எவரும் தயாரில்லை. அவை பத்திரிகை விளம்பரத்திற்காக வெளியிடப்படும் கருத்துக்களாக மட்டுமே அமைந்துவிடுகின்றன இவ்வாறான நிலைமைகள் எமது மக்கள் துர் அதிஸ்ரவசமானவர்கள் என்பதைதே நினைவுபடுத்துகின்றன எனவும் குறிப்பிட்டார்.

மேலும் வடக்கு மாகாண சபைக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை அதாவது 13வது திருத்தச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு முமுமையாக வழங்கப்பட வேண்டும் என நாம் தொடர்ந்தும் அரசை வலியுறுத்தி வருகின்றோம் அதில் தமிழ்தேசியக் கூட்டமைப்பிற்கும் எமக்கும் இடையில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. அதுமட்டுமல்ல இன்றிலிருந்து பல தசாப்தங்களுக்கு முன்னரே தென்னிலங்கையும் சிங்கள அரசியல் தளமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல் தீர்வாக இந்த 13 வது திருத்தச்சட்டமே அமைந்துள்ளது என்ற தீர்க்கதரிசனமான கருத்தை நாம் அன்று தெரிவித்ததன் காரணமாகவே குறைந்த அதிகாரங்களைக் கொண்ட தீர்வுக்கு வலியுறுத்துகின்றார்கள் என்று எம்மீது விமர்சனங்களையும் சேறு பூசல்களையும் முன்வைத்தார்கள்.ஆனால் இன்று தமிழ்தேசியக்கூட்டமைப்பினரே நடைமுறையில் இந்த தீர்வே சாத்தியமானதென குறிப்பிடுகின்றனர் அத்தோடு இந்தத் தீர்வை முமுமையாக தரும்படியே இன்று கேட்கின்றார்கள். இந்திய இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கூடாக கொண்டு வரப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தில் அடங்கியுள்ள மாகாணசபைக்குரிய அதிகாரங்களை முழுமையாக பெற்றுத்தருமாறு அவர்கள் இந்திய அரசாங்கத்திடமும்; வலியுறுத்தியுள்ளனர். இதையே நாம் கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் குறிப்பிட்டோம் அதிலும் இது எமக்கான நிரந்தர தீர்வு அல்ல ஆரம்ப படியாக ஏற்றுக்கொண்டு அதிலிருந்து நிரந்தர தீரவை நோக்கி மக்களுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்தாத அரசியல் வழிமுறைகளுக்கூடாக முன்னேறுவோம் என்றே குறிப்பிட்டிருந்தோம். இதை அன்றே அனைவரும் ஏற்றிருந்தால் எமது மக்கள் பாரிய அவலங்களுக்கு முகம் கொடுத்திருக்க மாட்டார்கள். எனவும் குறிப்பிட்டார். அத்தோடு துர்திஸ்ரவசமான யுத்தம் எமது பிரதேசங்களில் நிகழ்ந்திருக்காது விடின் பல ஆண்டுகளுக்கு முன்பே எமது பகுதிகளும் அபிவிருத்தி அடைந்திருக்கும் அன்றே மின்சாரம் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஆனால் யுத்தம் காரணமாக பல தசாப்தகால பின்னடைவை எமது சமூகம் எதிர்கொள்ள நேர்ந்துள்ளது இந்த 21 ஆம் நூற்றாண்டில் கூட மின்சாரத்தினைப் பெறுவதற்காக ஏக்கத்தோடு காத்திருக்கும் சமூகமாக எமது மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். எனினும் இந்தக்காலப்பகுதியிலேனும் மின்சாரம் கிடைக்கப் பெறுவதையெண்ணி நாம் பெருமையடைகின்றோம். கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்ற காலத்தில் மின்சார செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான எவ்வித ஆரம்பத்தளமும் இருக்கவில்லை (பூச்சியம்) என்ற நிலையிலிருந்தே நாம் மாவட்டத்திற்கான மின்விநியோகச் செயற்பாடுகளை ஆரம்பித்தோம் ஆனால் இன்று வரையான காலப்பகுதிக்குள் மாவட்டத்தின் 85 விகிதமான பகுதிகளுக்கு மின்சாரத்தினை வழங்கியிருக்கின்றோம். இன்னும் சில பகுதிகளில் இவ்வருட இறுதிக்குள் முழுமைபெறக்கூடிய வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் குறித்த சில பகுதிகளுக்கு மட்டுமே மின்சாரம் வழங்க வேண்டியுள்ளது அந்நத இடங்களுக்கும் மிகக்குறுகிய காலத்திற்கு மின்சாரத்தினை வழங்குவற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளுக்கும் வழங்கப்பட்டு விட்டால் வடக்கில் 100விகித மின்சாரத்தினை பெற்ற பிரதேச செயலர் பிரிவு பச்சிலைப்பள்ளி என்ற பெருமை மிக்க வரலாறு இங்கு பதியப்படும். என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்கள்.பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் அபிவிருத்தியில் நாம் பெரும் பங்காற்றியிருக்கின்றோம் மீள்குடியேற்றத்தை தொடர்ந்து நாம் செல்வபுரம் கச்சார் வெளிபகுதிகளுக்கு செல்லும்போது வீதிகளே அற்ற நிலைகாணப்பட்டது ஆனால் இன்று வீதிகள் செப்பனிடப்பட்டு போக்குவரத்து இலகுபடுத்தப்பட்டிருக்கின்றது. பொதுமண்டபங்கள் மக்களுக்கான நிரந்தர வீடுகள் என அனைத்தும் அமைக்கப்பட்டிருக்கின்றன வடிகாலமைப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன அத்தோடு இன்று கோவிலுக்கான குளம் கூட புனரமைக்கப்பட்டிருக்கின்றது ஆனால் இன்னமும் மக்களின் தேவைகள் முமுமையாக நிறைவு செய்யப்பட வில்லை. இந்த நிலையில் இரண்டுக்கும் குறைந்த அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கும் பாரிய முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம். இவ்வாறு பெருந்தொகையான நிதிகளை செலவு செய்யப்பட்டு பல முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. நாம் எமது அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் அரசாங்கத்துடன் பேசியே மக்களுக்கான மேம்பாட்டுத்திட்டங்களை பெற்றுவருகின்றோம் பாராளுமன்றத்திலும் ஏனைய சந்தர்ப்பங்களிலும் மக்களின் தேவைகள் தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றோம் இவற்றை நாம் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற காரணத்தினாலேயே நிறைவேற்றி வருகின்றோம். ஏனெனில் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் எவரின் கருத்துக்களுக்கும் அரசாங்கம் கவனத்தில் கொள்வதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.இன்று செல்வபுரம் கச்சார் வெளி ஆகிய கிராமங்களுக்கு சுமார் 180 இலட்சம் ரூபா செலவில் வடக்கின் வசந்தம் மின்விநியோகத்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களின் படி மின்சாரம் வழங்கப்பட்டது. அத்தோடு சுமார் 120 இலட்சம் ரூபா செலவில் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்ட இத்தாவில் கிராமத்திற்கான மின் விநியோகத்தினையும் இன்று பாராளுமன்றஉறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்கள் ஆரம்பித்துவைத்தார். இந்நிகழ்வுகளில் ஈ.பி.டி.பி வடக்கு மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் வடக்கின் வசந்தம் மின் விநியோகத்திட்ட முகாமையாளர் குணசீலன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் திருமதி பரமோதயன் ஆகியோரும் மற்றும் மின்சாரசபையின் உயர் அதிகாரிகளும் மின் அத்தியட்சகர்களும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பெரும் திரளான பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்
2014 இல் வடமாகாணசபைக்கு மக்கள் நலத்திட்டத்திற்காக வழங்கிய நிதி மீளவும் திறைசேரிக்கு செல்லவுள்ளது- ஈ.பி.டி.பி பாராளுமனற உறுப்பினர் சந்திரகுமார். 16.11.2014 - ஞாயிற்றுக்கிழமை வடக்கு மாகாண சபைக்கு 2014 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் மக்கள் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கிய 58 ஆயிரம் இலட்சம் வரையான நிதியில் 31 விகிதமான நிதியே 31.10.2014 ஆம் திகதி வரையான காலம் வரை செலவிடப்பட்டுள்ளது மிகுதித்தொகை இன்றுவரை பயன்படுத்தப்படவில்லை. இந்நிலையில் 31.12.2014 இற்குப் பின்னர் இந்நிதி திறைசேரிக்கு திரும்பிச்சென்றுவிடும் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதித்தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று கச்சார்வெளி செல்வபுரம் கிராமத்திற்கான மின் விநியோகத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில். வடக்கு மாகாணசபைக்கு 2014 ஆம் ஆண்டு அரசாங்கம் மக்கள் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கிய 58 ஆயிரம் இலட்சம் வரையான நிதியில் 31 விகிதமான நிதியே 31.10.2014 வரையான காலம் வரை செலவிடப்பட்டுள்ளது இன்னும் பெருந்தொகையான நிதி பயன்படுத்தப்படவில்லை. இந்நிலையில் 31.12.2014 இற்குப்பின்னர் இந்நிதி திறைசேரிக்கு திரும்பிச்சென்றுவிடும். எனவே மக்களின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வடக்கு மாகாணசபையினர் பயன்படுத்தாது மீளவும் அரசாங்கத்திற்கு வழங்க காத்திருக்கின்றார்கள். இந்நிலையில் ஆண்டு இறுதிக்குள் அந்நிதி செலவு செய்யப்பட்டு விடும் எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் நிர்வாக செயற்பாட்டு நடைமுறைகளுக்கமைவாக அப் பெருந்தொகையான நிதியை ஓரிரு வாரங்களுக்குள் பயன்படுத்துவதென்பது சாத்தியமற்றது. எனவே மக்களை ஏமாற்றும் வகையான கருத்துக்களையே அவர்கள் வெளியிட்டு வருகின்றனர்.இந்நிலையில் வடக்கு மாகாணசபைக்கு அரசாங்கம் நிதி வழங்கவில்லை என்ற பொய்ப்பிரச்சாரத்தினைக் கூட கடந்த காலங்களில் தமிழ்த்தேசியக் கூட்;டமைப்பினர் முன்னெடுத்து வந்தனர் ஆனால் இப்போது குறித்த சில வாரங்களுக்குள் மிகுதியாக உள்ள நிதியை செலவு செய்து விடுவதாக பாராளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இவர்கள் வெளியிடும் கருத்துக்கள் உண்மைக்குப்புறம்பானது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும் எனக் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள். வடக்கு மாகாணசபையில் கடந்த 18 அமர்வுகளில் 160 வரையான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ள போதும் அந்த பிரேரணைகளை செயற்படுத்துவதற்காக உழைப்பதற்கு எவரும் தயாரில்லை. அவை பத்திரிகை விளம்பரத்திற்காக வெளியிடப்படும் கருத்துக்களாக மட்டுமே அமைந்துவிடுகின்றன இவ்வாறான நிலைமைகள் எமது மக்கள் துர் அதிஸ்ரவசமானவர்கள் என்பதைதே நினைவுபடுத்துகின்றன எனவும் குறிப்பிட்டார்.மேலும் வடக்கு மாகாண சபைக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை அதாவது 13வது திருத்தச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு முமுமையாக வழங்கப்பட வேண்டும் என நாம் தொடர்ந்தும் அரசை வலியுறுத்தி வருகின்றோம் அதில் தமிழ்தேசியக் கூட்டமைப்பிற்கும் எமக்கும் இடையில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. அதுமட்டுமல்ல இன்றிலிருந்து பல தசாப்தங்களுக்கு முன்னரே தென்னிலங்கையும் சிங்கள அரசியல் தளமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல் தீர்வாக இந்த 13 வது திருத்தச்சட்டமே அமைந்துள்ளது என்ற தீர்க்கதரிசனமான கருத்தை நாம் அன்று தெரிவித்ததன் காரணமாகவே குறைந்த அதிகாரங்களைக் கொண்ட தீர்வுக்கு வலியுறுத்துகின்றார்கள் என்று எம்மீது விமர்சனங்களையும் சேறு பூசல்களையும் முன்வைத்தார்கள்.ஆனால் இன்று தமிழ்தேசியக்கூட்டமைப்பினரே நடைமுறையில் இந்த தீர்வே சாத்தியமானதென குறிப்பிடுகின்றனர் அத்தோடு இந்தத் தீர்வை முமுமையாக தரும்படியே இன்று கேட்கின்றார்கள். இந்திய இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கூடாக கொண்டு வரப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தில் அடங்கியுள்ள மாகாணசபைக்குரிய அதிகாரங்களை முழுமையாக பெற்றுத்தருமாறு அவர்கள் இந்திய அரசாங்கத்திடமும்; வலியுறுத்தியுள்ளனர். இதையே நாம் கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் குறிப்பிட்டோம் அதிலும் இது எமக்கான நிரந்தர தீர்வு அல்ல ஆரம்ப படியாக ஏற்றுக்கொண்டு அதிலிருந்து நிரந்தர தீரவை நோக்கி மக்களுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்தாத அரசியல் வழிமுறைகளுக்கூடாக முன்னேறுவோம் என்றே குறிப்பிட்டிருந்தோம். இதை அன்றே அனைவரும் ஏற்றிருந்தால் எமது மக்கள் பாரிய அவலங்களுக்கு முகம் கொடுத்திருக்க மாட்டார்கள். எனவும் குறிப்பிட்டார். அத்தோடு துர்திஸ்ரவசமான யுத்தம் எமது பிரதேசங்களில் நிகழ்ந்திருக்காது விடின் பல ஆண்டுகளுக்கு முன்பே எமது பகுதிகளும் அபிவிருத்தி அடைந்திருக்கும் அன்றே மின்சாரம் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஆனால் யுத்தம் காரணமாக பல தசாப்தகால பின்னடைவை எமது சமூகம் எதிர்கொள்ள நேர்ந்துள்ளது இந்த 21 ஆம் நூற்றாண்டில் கூட மின்சாரத்தினைப் பெறுவதற்காக ஏக்கத்தோடு காத்திருக்கும் சமூகமாக எமது மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். எனினும் இந்தக்காலப்பகுதியிலேனும் மின்சாரம் கிடைக்கப் பெறுவதையெண்ணி நாம் பெருமையடைகின்றோம். கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்ற காலத்தில் மின்சார செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான எவ்வித ஆரம்பத்தளமும் இருக்கவில்லை (பூச்சியம்) என்ற நிலையிலிருந்தே நாம் மாவட்டத்திற்கான மின்விநியோகச் செயற்பாடுகளை ஆரம்பித்தோம் ஆனால் இன்று வரையான காலப்பகுதிக்குள் மாவட்டத்தின் 85 விகிதமான பகுதிகளுக்கு மின்சாரத்தினை வழங்கியிருக்கின்றோம். இன்னும் சில பகுதிகளில் இவ்வருட இறுதிக்குள் முழுமைபெறக்கூடிய வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் குறித்த சில பகுதிகளுக்கு மட்டுமே மின்சாரம் வழங்க வேண்டியுள்ளது அந்நத இடங்களுக்கும் மிகக்குறுகிய காலத்திற்கு மின்சாரத்தினை வழங்குவற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளுக்கும் வழங்கப்பட்டு விட்டால் வடக்கில் 100விகித மின்சாரத்தினை பெற்ற பிரதேச செயலர் பிரிவு பச்சிலைப்பள்ளி என்ற பெருமை மிக்க வரலாறு இங்கு பதியப்படும். என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்கள்.பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் அபிவிருத்தியில் நாம் பெரும் பங்காற்றியிருக்கின்றோம் மீள்குடியேற்றத்தை தொடர்ந்து நாம் செல்வபுரம் கச்சார் வெளிபகுதிகளுக்கு செல்லும்போது வீதிகளே அற்ற நிலைகாணப்பட்டது ஆனால் இன்று வீதிகள் செப்பனிடப்பட்டு போக்குவரத்து இலகுபடுத்தப்பட்டிருக்கின்றது. பொதுமண்டபங்கள் மக்களுக்கான நிரந்தர வீடுகள் என அனைத்தும் அமைக்கப்பட்டிருக்கின்றன வடிகாலமைப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன அத்தோடு இன்று கோவிலுக்கான குளம் கூட புனரமைக்கப்பட்டிருக்கின்றது ஆனால் இன்னமும் மக்களின் தேவைகள் முமுமையாக நிறைவு செய்யப்பட வில்லை. இந்த நிலையில் இரண்டுக்கும் குறைந்த அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கும் பாரிய முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம். இவ்வாறு பெருந்தொகையான நிதிகளை செலவு செய்யப்பட்டு பல முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. நாம் எமது அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் அரசாங்கத்துடன் பேசியே மக்களுக்கான மேம்பாட்டுத்திட்டங்களை பெற்றுவருகின்றோம் பாராளுமன்றத்திலும் ஏனைய சந்தர்ப்பங்களிலும் மக்களின் தேவைகள் தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றோம் இவற்றை நாம் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற காரணத்தினாலேயே நிறைவேற்றி வருகின்றோம். ஏனெனில் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் எவரின் கருத்துக்களுக்கும் அரசாங்கம் கவனத்தில் கொள்வதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.இன்று செல்வபுரம் கச்சார் வெளி ஆகிய கிராமங்களுக்கு சுமார் 180 இலட்சம் ரூபா செலவில் வடக்கின் வசந்தம் மின்விநியோகத்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களின் படி மின்சாரம் வழங்கப்பட்டது. அத்தோடு சுமார் 120 இலட்சம் ரூபா செலவில் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்ட இத்தாவில் கிராமத்திற்கான மின் விநியோகத்தினையும் இன்று பாராளுமன்றஉறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்கள் ஆரம்பித்துவைத்தார். இந்நிகழ்வுகளில் ஈ.பி.டி.பி வடக்கு மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் வடக்கின் வசந்தம் மின் விநியோகத்திட்ட முகாமையாளர் குணசீலன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் திருமதி பரமோதயன் ஆகியோரும் மற்றும் மின்சாரசபையின் உயர் அதிகாரிகளும் மின் அத்தியட்சகர்களும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பெரும் திரளான பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.