1/30/2015

| |

கிழக்கு மாகாண முதலமைச்சரை தீர்மானிக்கும் அதிகாரம் ரவூப் ஹக்கீமிடம

கிழக்கு மாகாண முதலமைச்சரை தீர்மானிக்கும் அதிகாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் வழங்கப்பட்டுள்ளது என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை தொடர்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் அனுமதி வழங்கியுள்ளனர்.
குறித்த ஒப்பந்தத்திற்கமைய முதலைமைச்சர் பதவியினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு குறித்த இருவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை குழுக் கூட்டம் இன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.
சுமார் 30 நிமிடங்கள் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டனர். இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு முதலமைச்சர் பதவியினை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
இதனால் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான நீங்கள் அனைவரும் இணைந்து ஒருவரின் பெயரினை முதலமைச்சர் பதவிக்கு சிபாரிசு செய்யுமாறு கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சந்தித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், முதலமைச்சர் பதவியினை யாருக்கு வழங்குவது தொடர்பான இறுதி முடிவினை மேற்கொள்ளும் அதிகாரத்தினை தலைவருக்கு வழங்குவது என தெரிவித்தனர்.
பின்னர் அமைச்சர் ஹக்கீமை கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் குறித்த தீர்மானத்தினை கட்சித் தலைவரிடம் தெரிவித்தனர்.
இதனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் அமைச்சர் ஹக்கீம் தனித் தனியாக சந்தித்து முதலமைச்சர் பதவி தொடர்பில் கருத்துக்களை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


»»  (மேலும்)

1/29/2015

| |

JVP NEWS (Jaffna velippilai prapakaran) இணையத்தளத்தின் பொய்யான செய்தி அம்பலம்

இன்றைய இணைய உலகில் சில இணையத்தளங்கள் தாம் நினைத்த எதனையும் எழுதலாம். மக்கள் தாம்
எழுதும் எதனையும் நம்பிவிடுவார்கள் என்று தாம் நினைத்தவைகளையும் கட்டுக்கதைகளையும் எழுதி மக்களை குழப்படையச் செய்து வயிறு வளர்த்துக் கொண்டிருக்கின்றன.

வாசகர்களைக் கவரவேண்டும் அதன் மூலம் தாம் வயிறு வளர்க்க வேண்டும் என்பதற்காக அப்பட்டமான பொய்களையும் மக்கள் மத்தியிலே குழப்பங்களை ஏற்படுத்தும் செய்திகளையும் சில இணையத்தளங்கள் வெளியிட்டு வருவதனை நாம் அவ்வப்போது சுட்டிக்காட்டி வருகின்றோம்.
அந்த வகையில்தான் தமிழீம் என்றும் புலிகள் என்றும் தாமே தமிழினத்தின் விடிவிற்காக குரல்கொடுப்பதாக காட்டிக்கொண்ட சில இணையத்தளங்களும் இவ்வாறான கைங்கரியங்களை செய்து வருவதுடன் திரை மறைவில் பல கலாசார சீர்கேடுகளையும் தமிழ் மக்கள் மத்தியில் செய்து வருகின்றனர்.

லங்கா ஶ்ரீ இணையத்தளமும் அதனோடு சேர்ந்த இணையத்தளங்களும் தாம் உழைப்பதற்காக எதனையும் செய்யலாம் என்ற நிலைக்கு வந்திருக்கின்றன. 

சிறந்த ஒரு ஊடகமானது பக்கச் சார்பற்று மக்களை குழப்பமடையச் செய்யாது உண்மையான செய்திகளை நேர்மையான முறையில் மக்களுக்கு வழங்க வேண்டும்.

ஆனால் லங்கா ஶ்ரீ இணையத்தளமும் அதனோடு சேர்ந்த இணையத்தளமும் பல பொய்யான செய்திகளை மக்களுக்கு வழங்கி வயிறு வளர்த்து வரகின்றனர். 

லங்கா ஶ்ரீ இணையத்தள உரிமையாளர் பல சுத்துமாத்துக்களை செய்து வருகின்றார். நேர்மையாக செயற்படுவதாக பீத்திக்கொள்ளும் இவர்கள் எங்கே நேர்மையாக செயற்படுகின்றனர். கட்சிகளின் பெயரில் இணையத்தளங்களை உருவாக்கி கட்சியின் இணையத்தளம்போல் செய்திகளை வெளியிட்டு கட்சிக்கும் கட்சி சார்ந்தவர்களுக்கும் அவப்பெயரினை உருவாக்கி வருகின்றனர்.

இவர்களால் நடாத்தப்படுகின்ற JVP NEWS இணையத்தளம் ஒரு கட்சியின் பெயரை வைத்துக்கொண்டு கட்சி அந்த இணையத்தளத்தினை நடாத்துவது போன்று காட்டிக்கொண்டு பொய்களை மக்கள் மத்தியில் விதைத்து கட்சியின் பெயரை கெடுத்துக் கொண்டிருக்கின்றனர். 

இவ்வாறான சுத்து மாத்துக்களை ஒரு ஊடகம் செய்யலாமா? இதுதான் ஊடக தர்மமா?  

JVP NEWS ல இணையத்தளம் தொடர்ந்தும் பல பொய்களை எழுதி வருகின்றது. இல்லாத பொல்லாத பொய் புழுகு மூட்டைகளை அவ்வப்போது அவிழ்த்துவிடுகிறது இந்த இணையத்தளம். இதற்கு இவர்கள்  பிரசுரித்திருந்த ” பெண்ணை பலாத்காரம் செய்தாரா பிள்ளையான்..?? அதிர்ச்சித் தகவல்கள்” என்ற செய்தி யை பிரசுரித்து இருக்கின்றது. இது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.இதே போன்றொரு செய்தியினை 18 July 2013 அன்று இதே புகைப்படத்துடன் வேறு ஒரு தலைப்பில் பிரசுரித்திருந்தனர். அன்றைய செய்தி

»»  (மேலும்)

1/28/2015

| |

அசாத் சாலி என்னை மிரட்டினார்: பிரதம நீதியரசர் !

mohan_peiris_cjதேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினருமான அசாத் சாலி தன்னை மிரட்டியதாக பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய வீட்டுக்குள் நேற்றிரவு பலவந்தமாக நுழைந்தே தன்னை அச்சுறுத்தியதாக பிரதம நீதியரசர் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
»»  (மேலும்)

1/27/2015

| |

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

புதிய அரசாங்கத்தின் 100நாள் வேலைத்திட்டத்தில் தங்களது பிரச்சினைகளையும் உள்ளீர்க்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தினால் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளதுடன் கவன ஈர்ப்பு பேரணியும் நடாத்தப்பட்டது.மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஒன்றுகூடிய வேலையற்ற பட்டதாரிகள் மணிக்கூண்டு கோபுரத்துக்கு அருகில் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.2011ஆம் ஆண்டு பட்டதாரிகள் நியமனத்தில் உள்ளீர்க்கப்படாதவர்கள் மற்றும் 2012,13,14ஆம் ஆண்டு பட்டப்படிப்பனை நிறைவுசெய்தவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.“ஏமாற்றாதே,ஏமாற்றாதே”,”புதிய பிரதமரே வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச நியமனத்தினை பெற்றுத்தாருங்கள”;,”பட்டதாரிகள் நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதிபெற்றுத்தாருங்கள”; போன்ற பல்வேறு வாசகங்கள் பொறிக்க பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர்.மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் உ.உதயவேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் 500க்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.
»»  (மேலும்)

| |

இந்தியாவின் 66 வது குடியரசு தின விழா இன்று: சிறப்பு விருந்தினராக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 66வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்றுக் காலை 9.43 க்கு தனி விமானம் மூலம் டில்லி வந்தார்.
இந்திய குடியரசு தின விழாவில் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டைச் சேர்ந்த தலைவர் ஒருவர் சிறப்பு விருந்தி னராக அழைக்கப்படுவது மரபாக உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அழைக்கப்பட்டார்.
இந்த அழைப்பை ஏற்று 3 நாள் பயணமாக டெல்லி பாலம் விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார். அப்போது அவரை கட்டித்தழுவி மோடி தனது மகிழ்ச் சியை வெளிப்படுத்தினார்
நேற்றுக் காலை டில்லி வந்த அமெரிக்க ஜனாதிபதி; ஒபாமாவுக்கு ஜனாதிபதி மாளிகை ராஷ்ட்டிரபதி பவனில் முப்படை வீரர்கள் அணிவகுக்க பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
குதிரைப்படை வீரர்கள் அணிவகுத்து நிற்க ஜனாதிபதி ஒபாமா அழைத்து வரப்பட்டார். மு.ப. 11.55 மணிக்கு ஒபாமா ஜனாதிபதி மாளிகை வந்தார்.
அவரை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜp, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ் நாத்சிங், வெளி யுறவு துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் , வெங்கையாநாயடு ஆகியோர் வரவேற் றனர்.இதையடுத்து ஒபாமாவும் அவரது மனைவியும் அமெரிக்காவில் இருந்து வர வழைக்கப்பட்ட பிரத்தியேக வாகனமான பீஸ்ட் காரில் மவுரியா ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஓட்டல் மவுரியாவில் இருந்து ராஷ்ட் டிரபதி பவன் வந்த ஒபாமாவுக்கு வழிநெடுகிலும் மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு ஜனாதிபதி மாளிகையில் 21 குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அமெரிக்க குழுவினரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.
தொடர்ந்து, 12.30 மணிக்கு, ராஜ் காட் காந்தி சமாதியில் ஒபாமா அஞ்சலி செலுததினார்;. பின்னர் டில்லி ஐதராபாத் இல்லத்தில் மோடி, ஒபாமா சந்திப்பு நடந்தது.
அமெரிக்க ஜனாதிபதி; ஒருவர் இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை யாகும்.
வெளிநாட்டின் தேசிய விழா ஒன்றில் கலந்து கொள்வது ஒபாமாவிற்கும் இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் ஒபாமா வேறு எந்த ஒரு நாட்டின் தேசிய விழாவிலுல் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா வந்த 6வது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆவார். இவர் ஏற்கனவே 2010ல் இந்தியா வந்திருக்கிறார். தற்போது 2வது முறையாக இந்தியா வந்திருக்கிறார்.
1959 டிசம்பரில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டிவைட் ஈசென்ஹவர் முதன் முதலாக இந்தியா வந்தார். இந்திய பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார். இதன் பின் 10 ஆண்டுகள் கழித்து 1969 ஜ_லையில் அமெரிக்க ஜனாதிபதி ரிக்'ர்ட் நிக்சன் இந்தியா வந்தார். இவர் ஜனாதிபதியாக பதவியேற்ற 6 மாதங்களில் இந்தியா வந்தார். வியட்நாம் நிலவரம் மற்றும் ஆசியாவின் பங்கு பற்றி பேசினார்.
ஒன்பது ஆண்டுகள் கழித்து மூன்றாவது ஜனாதிபதியாக 1978ல் ஜpம்மி கார்டர் இந்தியா வந்தார். 3 நாள் பயணமாக இந்தியா வந்த அவர், அணு ஆயத தயாரிப்பு குறிக்கோள் பற்றி பேசினார். அரியானாவின் தல்தாபு+ர் கிராமத்துக்கும் அவர் பயணம் செய்தார். ஏனெனில் அங்கு அவரது தாய் பணியாற்றியுள்ளார்.
22 ஆண்டுகள் கழித்து 2000 மார்ச்சில் ஐந்து நாள் பயணமாக ஜனாதிபதி பில் கிளின்டன் இந்தியா வந்தார். அவரது மகள் n'ல்சா கிளின்டனும் உடன் வந்தார். டில்லி மட்டுமல்லாமல் ஆக்ரா, nஜய்ப்பு+ர், ஐதராபாத், மும்பை ஆகிய நகரங்களுக்கும் பயணம் மேற்கொண்டார். நீண்டநாள் பயணம் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமை பெற்றார்.
6 ஆண்டுகளுக்குப் பின் 2006ல் ஐந்தாவது ஜனாதி பதியாக ஜோர்ஜ் டபிள்யு+ புஷ் இந்தியா வந்தார். இவர் டில்லியை தவிர ஐதராபாத்தில் உள்ள பல் கலைக்கழகம் ஒன்றிலும் நிகழ்ச் சியில் பங்கேற்றார்.
இவரது பயணத்தில் தான் இந்தியா - அமெரிக்கா இடையே வரலாற்று சிறப்பு மிக்க அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.
பின் நான்கு ஆண்டு இடை வெளியில் ஆறாவது ஜனாதிபதி யாக ஒபாமா 2010 நவம்பரில் இந்தியா வந்தார். இந்தியா பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை யாற்றினார்.
தற்போது நான்காண்டு இடை வெளியில் நேற்று ஜனாதிபதி ஒபாமா மீண்டும் இந்தியா வந்துள்ளார்.
இம்முறை இன்று இந்தியாவில் நடை பெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்கிறார்.
இந்த ஆண்டு இந்திய குடியரசு தின சிறப்பு விருந்தி னராக இவர் கலந்து கொள்கிறார். 2010க்குப் பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக இந்தியா வந்துள்ளார்;. இதில் இன்னொரு விசே'ம், குடியரசு தின விருந்தினராக ஒரு அமெரிக்க ஜனாதிபதி வந்துள்ளது இதுவே முதன் முறை. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அதிகரித்து வரும் நட்பையே இது காட்டுகிறது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.
ஒரு அமெரிக்க ஜனாதிபதி வந்தார் என்றால் ஏகப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடு களையும் பார்க்க வேண்டி வரும். அவர் வந்து மீண்டும் செலலும் வரை அரசுக்கு பதற்றம் தான். அந்த அளவுக்கு ஒவ்வொரு வி'யத்தையும் பார்த்து பார்த்து செய்ய வேண்டும். ஒபாமாவின் பாதுகாப்பு படை யினர் மட்டும் ஒபாமா வருவதற்கு முன்பே ஆறு விமானங் களில் இந்தியா வந்துள்ளார்கள்.
அமெரிக்க ஜனாதிபதி பாது காப்பு தொடர்பானவர்கள் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை 30. இந்த படையின் நடுவில் தான் ஜனாதி பதியின் "கெடிலாக்" கார் செல்லும். உலகில் உள்ள அதிநவீன கார்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

| |

மலையகத்திற்கான தனியான பல்கலைக்கழகமும் எதிர்கால தேவையும்இன்று மலையகத்தில் புதிய மாற்றங்களை உள்வாங்கவும், உருவாக்கவும் மலையக சமூகம் தயாராகியுள்ளது. மக்களின் வாழ்வியல் புத்தெழுச்சி பெறவேண்டும் என்றும், புதிய எதிர்பார்ப்புகளும், தேவைகளும் அதிகளவு இனங்காணப்பட்டு வருகின்றன
அந்த வகையில் காணி மற்றும் வீட்டு உரிமை பிரச்சினைக்கான தீர்வை பெற வேண்டும் என்றும் 200 வருட லயன் வாழ்கைக்கான முடிவை பெற வேண்டும் என மலையக சமூகம் புரண்டெழுந்துள்ளது.
இவை மட்டும் மலைய மக்களின் பிரச்சினை அல்ல. முதலில் அவர்களுக்கு அரசியல் ரீதியான உரிமையை வென்றெடுத்தல், மற்றும் கல்வி, சுகாதாரம், தொழில் ரீதியான உரிமை, கலை கலாசார, பண்பாட்டு உரிமை, பொருளாதார வருவாய்களை அதிகரித்து கொள்வதற்கான உரிமைகள் என்று பட்டியல் நீண்டு கொண்டு செல்கின்றது.
இத்தகைதொரு சூழலில் கல்விரீதியான உரிமைகளை வென்றெடுப்பது ஒரு சமூகத்தின் எதிர்கால இருப்புக்கு ஏதுவானதும், நிகழ்கால வாழ்வியலை மேம்படுத்தி, அறிவு சார் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு பிரதான பாத்திரமாகின்றது.
அந்த வகையில் தற்போதைய இலங்கையின் ஆட்சி மாற்றம் மலையக கல்வி வளர்ச்சியை மேம்படுத்தி கொள்ள சாதகமான சூழ்நிiலை தோற்றுவித்துள்ளது. காரணம் மாற்றத்தை நோக்கி புதிய சிந்தனையுடன் பயணிக்கும் அரசாங்கத்தில் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தம் ஒருவருக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் பதவி கிடைத்துள்ளமை ஆகும்.
இச்சூழ்நிலையில் குறிப்பாக 1940 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் இலவசகல்வி அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் மலையக மக்களை பொறுத்த வரை வரலாற்று காலம் தொடக்கம் முதல் வஞ்சிக்கப்பட்ட வரலாறாகவும், அவை அரசியல், பொருளாதார, சமூக பண்பாடு என்ற சகல விடயங்களிலும் அவர்களின் கனவுகள் எடடாக்கனியாகவே உள்ளது.
இங்கு மலையகத்தவர்கள் கல்வி ரீதியாகவும் வஞ்சிக்கப்பட்டார்கள் என்பது மறுப்பதற்கு இல்லை, குறிப்பாக இலங்கையில் தோட்டப்புற பாடசாலைகள் எந்தவகையான அபிவிருத்திகளையும், வளர்ச்சியினையும் கல்வியில் உயர் மட்டத்தையும் பெற்றுக்கொள்ள முடியாத வகையில் சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளனர்.
பின்னர் அந்நிலையில் ஓரளவு தளர்வு ஏற்பட்ட இத்தோட்டப்புற பாடசாலைகள் அரசாங்கத்தின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளாக மாற்றம் பெற்றிருக்கின்றன.
இம்மாற்றத்தினைத் தவிர அவை கல்வி ரீதியான முழுமையான அடைவு மட்டத்தை இதுவரையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
பாடசாலை கல்வி நிலை இவ்வாறானதொரு நிலையிலிருக்க மலையக மாணவர்களின் உயர்கல்வி என்றதொரு அம்சம் இன்று ஒரு பிரச்சினையாக தலைத்தூக்கியுள்ளது.
உயர்தரத்தின் பின்பு இன்று அதிகளவான மலையக மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியினை பெற்று வருவதும், இலங்கையின் தேசிய பல்கலைக்கழகங்;களிலும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலும் தமது உயர்கல்வியை பெற்று வருகின்றனர்.
உயர்தரத்தில் பல்கலைக்கழகத்திற்கான அனுமதித்தகைமையைப் பெற்றிருக்கின்ற போதிலும் ஒரு குறிப்பிட்டத்தொகையான மலையக மாணவர்கள் மாத்திரமே இலங்கை தேசிய பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுகின்றனர். இதற்கு இலங்கையின் பல்கலைக்கழக தர நிர்ணயங்களும் காரணமாகின்றன.
அத்தோடு பல்கலைக்கழக அனுமதிக்கு உள்வாங்கப்படாத ஏனைய மாணவர்களின் நிலை வெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. இச்சூழ்நிலையகளில் மலையகத்திற்குகென ஒரு தனியான பல்கலைக்கழகத்திற்கான அவசியம் மலையக புத்திஜீவிகள் உட்பட அனைவர் மத்தியிலும் எழுந்துனள்ளது.
அதற்கான முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் அவை இதுவரைக்கும் வெற்றியளிக்கவில்லை. இலங்கையின் 15 தேசிய பல்கலைக்கழகத்துக்குள் மலையகத்துக்கான பல்கலைக்கழகமும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை. ஆயினும் இத் தேசிய பல்கலைக்கழகங்களுக்குள் அதிகளவான மாணவர்களும் தமது உயர்கல்வியை பெற்று வருகின்றனர்.
 என்றாலும் மலையக தமிழர்களின் சதவீதத்தை ஒப்பிடும் போது மிகவும் குறைவானதாகவே உள்ளது. இதற்கான மாற்று ஏற்பாடாக “மலையக மாணவர்கள் அனைவருக்கம் உயர்கல்வி” என்ற கோட்பாட்டுக்க ஒரு தனியான மலையக பல்கலைக்கழகம் என்ற அம்சமே பொருத்தப்பாடுடையதாகும்.
குறிப்பாக வட மாகாணத்தை பொறுத்தவரையில் அவர்களின் பல்கலைக்கழக அனுமதி வீதத்தை யாழ்ப்பல்கலைக்கழகமும், கிழக்கு மாகணத்தைப் பொருத்தவரையில் கிழக்கு பல்கலைக்கழகமும், கிழக்கு முஸ்லிம்களை பொருத்தவரையில் தென்கிழக்கு பல்கலைக்கழகமும் உள்வாங்கிக்கொள்கின்றது.
ஆனால் மலையக மாணவர்களை பொருத்தவரையில் வரையறுக்கப்பட்ட பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் அதேவேளை தனியான மலையக தேசிய பல்கலைக்கழகம் இவ்வாறான காரணத்தினால் அதிகளவான மாணவர்களை உள்வாங்க முடியாதுள்ளது. இந்நிலை மலையக மாணவர்களை பொறுத்தவரை ஒரு எட்டாக்கனியாகவே உள்ளது.
இந்த கனவினை நினைவாக்க வேண்டுமென்றால் மலையகத்துக்கான பல்கலைக்கழகமொன்றினை உருவாக்குவது அவசியமாகும். தென்கிழக்கை பொறுத்தவரையில் முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் ஒரு சிறுபான்மை சமூகத்தின் பேரம்பேசும் சக்தியாக இருந்து அவ்வினத்திற்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தைப் பெற்றுக்கொடுத்திருந்தார்.
ஆனால் நம் மலையக தலைமைகள் இதுவரைக்காலமும் பேரம்பேசும் சக்தியாக இருந்து ஒரு தேசிய பாடசாலையைக்கூட பெற்றுத்தரமுடியாத ஒரு துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பது அவலம்.
ஆனால் அதற்கான சந்தர்ப்பவாத சூழ்நிலையும், தகுந்த அரசியல் களமும் கைகூடியுள்ள நிலையில் மலையக தலைமைகள் மலையக தேசிய பல்கலைக்கழகமொன்றை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அதற்கான சட்டமூலமொன்றை தகுந்த முறையில் உருவாக்கி சமர்ப்பிப்பதன் ஊடாக நம் உரிமைகளை வென்றெடுக்க முடியும்.
அவ்வாறான பல்கலைக்கழகம் உடனடியாக எவ்வாறு உருவாக்கலாம் என்றால் இன்று மலையகத்தில் மூடப்பட்டுள்ள சகல தொழிற்சாலைகளையும் மாணவர்கள் தங்கும் விடுதிகளாகவும், பசறையில் கலாசார பீடத்தினையும், காவத்தையில் பெருந்தோட்ட உற்பத்தி உறவுகளுக்கான கற்கை நிலையத்தையும், உடபுஸல்லாவையில் சமூக உளவியல், மானுடவியல் தொழிற்சார் நோயியல் ஆய்வு பீடத்தை உருவாக்குதல் வேண்டும்.
அத்தோடு மாத்தளை, கேகாலை, பதுளை ஆகிய இடங்களில் கல்வியல் பீடம், மானுடவியல் பீட வளாகங்களையும் அமைத்தல் வேண்டும். அத்தோடு 10 மலையக மாவட்டங்களிலும் காலி மற்றும் மாத்தறையில் விஞ்ஞான கணித சிறப்பு பாடசாலைகளை அமைக்கப்பட வேண்டும்.
மேலும் மாத்தளையில் அனைத்து மொழியியற் பீடம் அமைத்தலும் குறிப்பாக சிங்களம், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சீனம், ருஸ்யன், பிரேஞ் மொழிகளை பாடமாக்குதல் வேண்டும்.
இக்கல்வி பீடங்களின் நிர்வாக தொகுதி பத்தனை கல்வியற் கல்லூரியிலும், கால்நடை விவசாய பீடம் கேம்பிறீட்ச் கல்லுரியிலும், கொட்டக்கலை பண்ணைத்தொகுதி வணிக பீடத்துக்காகவும், காங்கிரஸ் தலைமையகம் அமைந்துள்ள பகுதியில் கல்வியல் நிறுவனங்களாகவும், தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் தகவல் தொழிநுட்ப பீடமாகவும், பொகவந்தலாவ சென்மேரிஸ் மத்திய கல்லூரி, மற்றும் பசறை கலைப்பீடத்தையும், நுவரெலியாவில் தொழிநுட்ப கல்லூரியில் விஞ்ஞான பீடத்தையும், இரம்பொட தொண்டமான் கலாசார நிலையத்தை நுண்கலைத்துறை மற்றும் அழகியல் கற்கைப்பீடத்தையும், பலாங்கொடையில் பட்டப்பின் படிப்பு கற்கை நிலையத்தையும் உருவாக்க முடியும்.
இவ்வாறு மலைகயத்தின் பல பாகங்களில் தேசிய பல்கலைக்கலகத்திற்கான பீடங்களை உருவாக்கப்படும் போது அவை ஒன்றிணைக்கப்பட்ட ஒரு தேசிய பல்கலைக்கழகமாக மாற்றிக்கொள்ளலாம்.
மேலும் இவ்வாறு உருவாக்கப்படும் பீடங்களுக்கான பேராசிரியர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள், மற்றும் ஏனைய விரிவுரையாளர்களை இலங்கை அரசாங்கம் 10 ஆண்டுகால ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்தியாவில் இருந்து கொண்டுவர வேண்டும். அதேவேளை மலையக பேராசிரியர்களையும் இதில் உள்வாங்குவது சாலச்சிறந்ததாகும்.
இப்பல்கலைக்கழகத்திற்கான நிதித் தேவைகளை உயர்கல்வியமைச்சின் நேரடி ஒதுக்கீடு செய்ய விதந்துரைக்க வேண்டும் இவ்வாறானதொரு ஆரம்ப அடித்தளத்தை மலையக பல்கலைக்கழகத்திற்கு இடுவோமானால் எதிர்காலத்தில் அவைகளின் வளர்ச்சியில் மிக பெரிய தேசிய பல்கலைக்கழகத்தை நாம் பெற்றுக்கொள்வோம் என்பது திண்ணம்.
மலையக மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பல்துரைசார் அறிவு சமூகத்தை இவ்வாறானதொரு மலையக பல்கலைக்கழக உருவாக்கத்தின் மூலம் நாம் பெறலாம்.
இத்திட்டங்களை இவ்வரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் முன்வைத்து அவற்றைப்பெற்றுக்கொள்ள மலையக தலைமைகள் முன்வர வேண்டும். “மலையக மாணவர்கள் அனைருக்கும் உயர்கல்வி” என்ற இலட்சிய நோக்கை அடைந்து கொள்ள சமூக மட்டத்தில் அனைவரும் ஒன்று திரள வேண்டும்.
இளம் சமூக விஞ்ஞானிகள் கழகம்
மலையகம்
»»  (மேலும்)

1/23/2015

| |

டெலிகொம் தலைவராக ஜனாதிபதியின் சகோதரர் நியமனம்

டெலிகொம் தலைவராக ஜனாதிபதியின் சகோதரர் நியமனம்
ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு புதிய தலைவராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் குமாரசிங்க சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார். தகுதி அடிப்படையில் மிகமூத்த அதிகாரியான குமாரசிங்க சிறிசேன, டெலிகொம் நிறுவனத்தின் தலைமைக்கு பொருத்தமானவர் என்ற காரணத்தினாலேயே இப்பதவி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களை அரச நியமனங்களுக்கு பயன்படுத்தமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன - தேர்தல் காலத்தில் தெரிவித்திருந்த நிலையில், அவரது சகோதரருக்கு ஸ்ரீ லங்கா டெலிக்கொம் தலைவர் பதவி வழங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 2006ஆம் ஆண்டிலிருந்து கடந்த வருடம் டிசெம்பர் வரை, அரசாங்க மரக்கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் பொது முகாமையாளராகவும் குமாரசிங்க சிறிசேன கடமையாற்றியிருந்தார். அரசாங்கத்திலிருந்து வெளியேறி பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறங்கியதன் பின்னர் குமாரசிங்க சிறிசேனவின் பதவி பறிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/138269#sthash.0XxVyfVi.dpuf
»»  (மேலும்)

1/22/2015

| |

பொங்கல் விழா 18.01.2014 சுவிஸ் வாழ் கிழக்கு மக்களின் ஊரும் ஊறவும்

ஞாயிறு கிழக்குவாழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட " ஊரும் உறவும்" பொங்கல் விழா நிகழ்ச்சி பல நூற்றுக்கணக்கான வட இ கிழக்கு மக்கள் ஒன்றினைந்து மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது சிறுவர்களின் நடனங்கள் இ பேச்சு இ பாட்டு இ மற்றும் பல சுவாரஸ்யமான கலைநிகழ்ச்சிகளும் இடம் பெற்றது. " இளையராகங்கள்  குழுவின் இன்னிசை இசை நிகழ்ச்சி நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

1/21/2015

| |

கிழக்கு மாகாணசபை 10ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

கிழக்கு மாகாணசபை அமர்வு எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது 

இன்று செவ்வாய்க்கிழமை காலை கட்சி தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமையவே சபை அமர்வு எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது 
இன்று காலை 8.30மணி தொடக்கம் 9.30மணிவரை நடைபெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தில் எந்தவி தீர்மானங்களும் எடுக்கப்படாத நிலையில் கிழக்கு மாகாணசபை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது 

தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பதற்கான கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

| |

கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்ர இராஜினாமா

கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்ர, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அறியவருகின்றது. அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தொலைநகல் மூலமாக அனுப்பிவைத்துள்ளதாக ஆளுநரின் பதில் செயலாளர் எச்.ரி.எம்.டப்ளியு ஜி. திஸாநாயக்க தெரிவித்தார். 
»»  (மேலும்)

1/20/2015

| |

கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கத்தயார் - தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி-

கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கத்தயார்
- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி-
கிழக்குமாகாண சபையின் சமீபகால அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை தொடர்பிலும், அம்மாகாணத்தின் முதலமைச்சர் பதவிக்கான முரண்பாட்டு நிலை தொடர்பிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மிக ஆழ்ந்த கவனத்துடன் உற்றுநோக்கி வருகிறது. கிழக்குமாகாணத்தை முதற்தடவையாக ஆட்சிசெய்த கட்சி என்ற வகையிலும், தமிழ் மக்களின் கணிசமான ஆதரவைப்பெற்ற பொறுப்புமிக்க அரசியல் கட்சி என்ற வகையிலும் மக்கள் சார்ந்து எம்மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புக்களை நாம் ஒரு போதும் தட்டிக்கழிக்கப் போவதில்லை.
தேசிய அரசியல் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதாக கூறிக்கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் கிழக்குமாகாண ஆட்சி தொடர்பில் முரண்பட்டுக்கொள்வது வேதனையானது. மாகாணசபை முறைமையானது தமிழ் மக்களின் பெறுமதிமிக்க ஆயுதப்போராட்டத்தின் விலைப்பாடாக கிடைக்கப்பெற்றது என்பதிலும் அதில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள், அரசியல் உரிமைகள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் எமது கட்சி உறுதியாக இருந்து வருகின்றது.
கிழக்குமாகாண சபையில் தமிழர் ஒருவர் முதலமைச்சராவதற்கு யாருடனும் எத்தகைய விட்டுக் கொடுப்புடனும் செயற்பட நாம் தயாராக இருக்கின்றோம். கடந்த மாகாணசபைத் தேர்தலில் தமிழர்களின் கையிலிருந்த ஆட்சி அதிகாரத்தை எம்மவரே பிடுங்கி எடுத்த நயவஞ்சக அரசியலுக்கு இரையாகாமல் தூரநோக்குடன் செயற்பட நாம் தயாராக உள்ளோம்.
தற்போதைய கிழக்குமாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமையில் ஆட்சி அமைப்பதற்கும் அக்கட்சி சார்பான ஒருவர் முதலமைச்சராவதற்கும் எமதுகட்சி நிபந்தனையற்ற ஆதரவு வழங்க தயாராக உள்ளது.
தற்போதைய கிழக்குமாகாண ஆசனப்பங்கீடுகள் அடிப்படையில் த.தே.கூ 11ம், ஐ.தே.க 04ம், தமிழர் ஒருவர் முதலமைச்சராவதற்கு ஆதரவு தெரிவிக்கின்ற ஏனையசில மாகாணசபை உறுப்பினர்களது ஆதரவுடனும் எமது கட்சியின் இரண்டு உறுப்பினர்களது ஒத்துழைப்புடனும் கிழக்குமாகாண சபையில் தமிழ் தேசிய கூட்மைப்பினால் புதிய ஆட்சியை அமைக்க முடியும். இதனூடாக த.தே.கூட்டமைப்பு முதலமைச்சர்பதவி மாத்திரமின்றி நான்கு அமைச்சுக்களில் இரண்டு அமைச்சுப்பதவிகளையும் பெற்றுக் கொள்ளமுடியும். ஏனைய அமைச்சுப்பதவிகளையும் தவிசாளர் பதவியினையும் ஐ.தே.க க்கும் ஏனைய கட்சி உறுப்பினர்களுக்கும் பகிர்ந்தளிக்க முடியும். எமது  கட்சி அமைச்சுப் பதவிகளிலோ அல்லது ஏனைய பதவிகளிலோ இடம் பெறப்போவதில்லை.
எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு எஞ்சி இருக்கின்ற இரண்டரை வருடகாலப்பகுதியில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பு கூறுகின்ற நியாயமான அரசியல் தீர்வினையும், அபிவிருத்தியினையும் பெற்றுக் கொடுக்க முடியும் என நாம் எதிர்பாக்கின்றோம்.
பூ.பிரசாந்தன்
பொதுச்செயலாளர்
தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி
»»  (மேலும்)

| |

சமூக விடுதலைப் போராளியின் மரணம்

Click on the photo to enlargeபொதுவுடமைக் கட்சியாளரும், சமூக விடுதலைப் போராளியும், சிறுபான்மைத் தமிழர் மகாசபை, தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் போன்ற மக்கள் அமைப்புகளின் தீவிர களப்பணியாளரும், யாழ்.கரவெட்டி ஸ்ரீ நாரதா மகாவித்தியாலய ஸ்தாபகரில் ஒருவருமானகன்பொல்லை தவம் (முத்தன் தவராசா) இன்று 19-01-2015இல் காலமாகி விட்டார் என்ற தகவலை தோழர்கள், நண்பர்கள் உறவினர்களுக்கு அறியத் தருகின்றேன்.

»»  (மேலும்)

| |

கி.மா.சபை ஊழியர்களுக்கு மீண்டுவரும் செலவீனத்தில் சம்பளம்

கிழக்கு மாகாண சபையைச்சேர்ந்த உத்தியோகஸ்தர்களுக்கு மாகாண சபையின் மீண்டுவரும் செலவீனத்தின் ஊடாக வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்ரமவுக்கே பணித்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

2015ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுதிட்டத்துக்கான அங்கிகாரம் கிழக்கு மாகாண சபையினால் இதுவரை வழங்கப்படாதால் கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் வழங்க முடியாத நிலை உருவாகியிருந்தது.

2015 ஆண்டின் வரவு- செலவுத்திட்டத்துக்கான அங்கிகாரம் வழங்கப்படாமையினால் சம்பளத்தையும், ஏனைய கொடுப்பனவுகளையும் நம்பி வாழ்ந்து வரும் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களும் ஏனைய வருமானம் பெற்றுவருவோரும் பாதிக்கப்பட்டிருந்தனர்.  

கிழக்கு மாகாண சபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் மாகாண சபையின் அங்கிகாரத்துக்காக முதலமைச்சரினால் கடந்த டிசெம்பர் மாதம் 01ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டு விவாதங்கள் நடைபெற்றன.

இந்த வரவு- செலவு திட்டம் மீதான  வாக்கெடுப்பு நடைபெறவிருந்த இறுதி வேளையில் முஸ்லிம் காங்கிரஸின் குழுத் தலைவர் ஜெமீல், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் ஆகியோர் தவிசாளரையும், முதலமைச்சரையும் அழைத்து வாக்கெடுப்பு நடாத்துவதற்கு இரண்டு வாரகால அவகாசம் தேவை எனக் கோரினர்.

இந்தகோரிக்கையை எல்லா கட்சித் தலைவர்களும் ஏற்றுக்கொண்டதையடுத்து கிழக்கு மாகாண சபையமர்வு இன்று செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
- See more at: http://www.tamilmirror.lk/137985#sthash.WXE5H6dD.dpuf
»»  (மேலும்)

| |

கே.பிக்கு எதிரான ஆணைகோர் மனு: 26ஆம் திகதி விசாரணை

வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவரான கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை கைது செய்வதற்கு கட்டளை பிறப்பிக்குமாறு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கோரியுள்ளது. அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான கட்டளையையும் பிறப்புக்குமாறு ஜே.வி.பி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், நேற்று திங்கட்கிழமை ஆணைக்கோர் மனுவொன்றை தாக்கல் செய்தது. கே.பி என்பவர் பல பெயர்களில் வெளிநாடுகளில் வாழ்ந்தவராவர். அவர், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆயுதங்களை விநியோகிப்பதில் பிரதான பங்குவகித்தவர் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்க காலத்தில் மலேசியாவில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார். தற்போது அவர், முல்லைத்தீவில் சிறுவர் இல்லமொன்றையும் நடத்திவருகின்றார். அவரை, கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோரியுள்ள ஜே.வி.பி., தனது மேன்முறையீட்டு மனுவில் பொலிஸ் மா அதிபர்,இராணுவத்தளபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்; வன்னி மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரி உள்ளிட்ட எண்மர் பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளது. ஜே.வி.பி யின் நாடாளுமன்ற  உறுப்பினரும் அக்கட்சியின் பிரசாரச் செயலாளருமான விஜித ஹேரத்தினால் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதுடன் மனுவை எதிர்வரும் திங்கட் கிழமை 26ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துகொள்வதற்கு தீர்மானித்தது. சட்டவிரோத நிதிபரிமாற்றம், போதைப்பொருள் கடத்தல், 17 போலிப் கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தியமை , இலங்கை அரசிற்கு எதிராக ஆயுங்களை சேகரித்தமை, ஆட்களை கடத்தியமை , கொன்றமை என 24 மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/137972#sthash.hB8CB2FN.dpuf
»»  (மேலும்)

| |

கிழக்கு முதலமைச்சரின் வேண்டுகோள்

கிழக்கு மாகாண சபையின் ஆட்சிமாற்றம் சம்மந்தமாக புதிதாக தோன்றியிருக்கின்ற நெருக்கடியைக் கவனத்திற் கொண்டு, அக்கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பது சம்மந்தமாக பொதுஜன ஐக்கிய முன்னணிக்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் ஏற்கெனவே செய்யப்பட்டிருக்கின்ற உடன்படிக்கையைத் தொடர்ந்தும் செயற்படுத்துவதற்கு ஏதுவான வகையில் தலையீட்டை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் எம்.நஜீப் அப்துல் மஜீத், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும், பொதுஜன ஐக்கிய முன்னணியின் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேற்படி ஒப்பந்தத்தின் பிரகாரம் தனது முதலமைச்சர் பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில், ஒப்பந்தத்தின் அடிப்படையில் உரியகாலத்தில் செயற்படுவதற்கு தான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள எம்.நஜீப் அப்துல் மஜீத், தானும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் செயலாளரும் இணைந்து ஜனாதிபதியுடன் மேலும் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பொதுஜன ஐக்கிய முன்னணியின் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் அவர் அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அவர் அக்கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது,
ஜனாதிபதித் தேர்தலின் பின் புதிய மத்திய அரசு தோற்றுவிக்கப்பட்டுள்ள நிலையில், 'கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றம்' சம்பந்தமாக அச்சபையில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் பேச்சுவரர்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது. 
கடந்த ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் அதன் செயலாளரும் எதிரெதிராக போட்டியிட்டு, இறுதியில் அக்கட்சியின் செயலாளர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும், ஜனாதிபதியாகவும் தெரிவாகியுள்ள மேன்மை தாங்கிய மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார். இரு தரப்பாக தேர்தலில் பிரிந்து செயற்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் மீண்டும் ஒன்றிணைந்துள்ளதுடன், கட்சியின் ஒற்றுமை பாதுகாக்கப்பட்டு அதன் வலிமையும் அதிகரித்துள்ளது. 
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், மூதூர் தேர்தல் தொகுதி அமைப்பாளருமாகி நான், 2012இல் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலின் பின் அமைக்கப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான, பொதுஜன ஐக்கிய முன்னணியின் கிழக்கு மாகாண சபை ஆட்சியில் முதலமைச்சராக நியமிக்கப்பட்டேன்.
மத்திய அரசாங்கத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் பங்காளியாக அப்போதிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸோடு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் முதல் இரண்டரை வருடங்களுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும், மிகுதி இரண்டரை வருடங்களுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் முதலமைச்சர் பதவி வழங்குவதென்று தீர்மானிக்கப்பட்டு, முதலில் நான் முதலமைச்சராக்கப்பட்டேன். எனது இந்த இரண்டரை வருட நியமண காலம் முடிவடைவதற்கு 3 மாதங்களே எஞ்சியிருக்கின்றன. மேற்படி ஒப்பந்தத்தின் அடிப்படையில் உரிய காலத்தில் செயற்படுவதற்கு நான் தாயாராக இருக்கிறேன்.
இதற்கிடையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஐக்கிய தேசியக் கட்சியும் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை மாற்ற வேண்டும் என்ற முடிவில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக அறிய முடிகிறது.  
நமது இன்றைய ஜனாதிபதியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஏனைய கட்சிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் மிக நேர்மையாகவும் அக்கறையுடனும் இருப்பதை வெளிப்படுத்தியிருக்கிறார். ஏற்கெனவே பொதுஜன ஐக்கிய முன்னணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு, தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஐக்கிய தேசியக் கட்சியும் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றத்திற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.
இவ்வாறான ஒரு நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கின்ற நிலையில் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைப்பது சம்பந்தமாக ஏற்கெனவே செய்யப்பட்டிருக்கின்ற உடன்படிக்கையை தொடர்ந்தும் செயற்படுத்துவதற்கு, புதிய இந்த நெருக்கடிகள் தடையாக இருக்கின்ற காரணத்தினால், கட்சியின் மத்திய குழு உறுப்பினர் என்ற வகையிலும், பொதுஜன ஐக்கிய முன்னணியின் முதலமைச்சர் என்ற வகையிலும் இவ்விடயத்தில் தங்களது தலையீட்டைக் கோருகிறேன்.
கிழக்கு மாகாண சபையின் புதிய நெருக்கடி சம்பந்தமாக மேன்மை தாங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு தெரியப்படுத்துமாறும் இவ்விடயம் சம்பந்தமாக நீங்களும் நானும் ஜனாதிபதி அவர்களை சந்தித்துப் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துமாறும் தாங்களை வினயமாகக் கேட்டுக் கொள்கிறேன்.

»»  (மேலும்)

1/18/2015

| |

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலிகள் மீண்டும் வன்முறையில்

செங்கலடிஇ ஏறாவூரைச் சேர்ந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் ஐ.தே.கட்சி மற்றும் முன்னாள் டுவுவுநு உறுப்பினர்களால்  மிக மோசமாக தாக்கப்பட்டு கவலைக்கிடமான முறையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது. 
எறாவூர் 5ம் குறிச்சியைச் சேர்ந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர் ஏகாம்பரம் பாக்கியநாதன் என்பவர் செங்கலடி செல்லம் தியேட்டருக்கு அண்மையில் வீதியால் சென்றுகொண்டிருந்த போது ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் செல்லம் தியேட்டர் உரிமையாளர் மோகனின் மருமகன்இசுரேஸ்இதேவன்இஉள்ளிட்டோரிடன்  முன்னாள் டுவுவுநு உறுப்பினர்களும் இணந்து கூரிய ஆயுதங்களினால் மிக மோசமாக தாக்கியதுடன் வீதியில் தூக்கி எறிந்துவிட்டும் சென்றுள்ளனர்.
மிகவும் மோசமாக தாக்கப்பட்ட நிலையில் இருந்த குறித்த நபரை பொது மக்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இவர் தற்போது  ஆபாத்தான நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டபோதும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் அறிய முடிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மோகனும் முன்னாள் டுவுவுநு உறுப்பினர்களும் இணைந்து நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களுக்கு ஆதரவு வழங்கியவர்களை கொலை செய்வதாக மிரட்டி வருவதுடன்  பலர் மீது தாக்குதல் நடாத்தியும்  வருகின்றார்.
முன்னாள் டுவுவுநு உறுப்பினர்ளால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதுடன் தாக்குதல்களும் மேற்கொண்டு வருகின்றார். இவர்களின் மிரட்டலால் செங்கலடியைச் சேர்ந்த பல  தமிழ் இள்ளஞர்கள்  தலைமறைவாகியும் வெளிநாடுகளுக்கும் தப்பியும் செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

1/17/2015

| |

எதிர்க்கட்சி தலைவராக நிமல் நியமனம்

எதிர்க்கட்சி தலைவராக நிமல் சிறிபாலடி சில்வாவும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவாக டப்ளியு டி ஜே செனவிரத்னவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுக்குழுவினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

»»  (மேலும்)

| |

இராணுவத்தின் எண்ணிக்கை எக்காரணத்தைக் கொண்டும் குறைக்கப்பட மாட்டாது - பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர

Sri Lanka Armyஇராணுவத்தின் எண்ணிக்கை எக்காரணத்தைக் கொண்டும் குறைக்கப்பட மாட்டாது என்றும் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிகள் தொடர்ந்தும் அவ்வாறே முன்னெடுக்கப்படும் என்றும் இராணுவ ஊடகப் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார்.
கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற வாராந்த செய்தியாளர் மாநாட்டில் பிரிகேடியர் ஜயவீர மேலும் விளக்கமளிக்கையில் :-
இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்கப்படுமா என்று தொடர்ச்சியாக பலர் கேள்வி எழுப்புகின்றனர். இராணுவத்தின் எண்ணிக்கை எக்காரணத்தைக் கொண்டும் குறைக்கப்பட மாட்டாது நாட்டின் அபிவிருத்தி உட்பட பல்வேறு தேவைகளுக்காக கடந்த காலங்களில் சுமார் 20 ஆயிரம் பேர் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். அவர்கள் வழக்கம் போன்று முன்னெடுத்த பணிகள் தொடர்ந்து; அவ்வாறே முன்னெடுக்கப்பர்.
அதேபோன்று அளுத்கம மற்றும் பேருவலை பிரதேசங்களின் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற துரதிஷ்டவசமான சமபவத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் முப்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் புணரமைப்பு பணிகள் நிறுத்தப்படும் என்று பரவலாக கூறப்பட்டுள்ளன அவ்வாறான தகவல்களில் எவ்வித உண்மைகளும் கிடையாது ஏனெனில் தொடர்ந்து; அந்த பணிகளும் முன்னெடுக்கப்படும்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 223 வீடுகளில் 213 வீடுகள் புனரமைக்கப்பட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன மேலும் 10 வீடுகளே புனரமைக்கப்படவுள்ளன. அதேபோன்று 83 கடைகளில் 75 கடைகள் புனரமைக்கப்பட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. மேலும் 08 கடைகளே புனரமைக்கப்படவுள்ளன அவை வெகு விரைவில் புனரமைக்கப்பட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்டும் என்றார்.
»»  (மேலும்)

1/16/2015

| |

பெரியாரும் உழுது களை பிடுங்கிய மண்ணிலா இது நடந்தது!!!

இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி: -பிரான்ஸ் (16-01-2015)பெருமாள் முருகன் அவர்களால் தொகுக்கப்பட்ட ‘சாதியும் நானும்’ எனும் கட்டுரைத் தொகுப்பை மையமாக வைத்து எமது 21 வது ‘வடு’ வில் ஒரு கட்டுரையும் எழுதப்பட்டது. பெருமாள் முருகன் சாதியம் குறித்த பல்வேறு கட்டுரைகளையும் எழுதியவர். இந்து பாசிச சக்திகளின் மிரட்டல்களாலும், அச்சுறுத்தல் காரணமாகவும் தான் எழுதுவதை நிறுத்திக்கொள்வதாகவும், தன்னால் எழுதப்பட்ட அனைத்தையும் மீளப் பெற்றுக்கொள்ளப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். இவ்வறிவித்தலானது இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியாகிய எமக்கு மிகவும் வேதனையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இந்து பரிவாரங்களின் வேள்வித் தீயால் அரண் அமைத்து ஆட்சி புரியும் பிரதமர் மோடி மீதா இதற்கான குற்றத்தை சுமத்துவது!
மத்தியில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியினால் ஆன புத்திகெட்ட செயல் இதுவென்றா நாம் குற்றம் சுமத்திட முடியும் !!
தந்தை பெரியாரும் உழுது களை பிடுங்கிய மண்ணில் அல்லவா இது வேர்கொண்டுள்ளது !!
பெரியாரின் பாசறையில் வளர்ந்தவர்கள் நாம் என சொல்பவர்கள் மௌனம் சாதிப்பதையே எம்மால் மன்னிக்க முடியாதுள்ளது.
தமிழையே சுவாசிப்பவன்! இலக்கியத்தின் காவலன்! என போற்றப்படும் கருணாநிதியின் முன்னால் இச்சம்பவம் நடந்திருப்பதை எவரால்தான் நம்பமுடியும்!
பெருமாள் முருகன் அவர்களுக்கு நிகழ்ந்த எழுத்துச் சுதந்திர அச்சுறுத்தலுக்கு எதிரான எமது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். தமிழ் நாட்டில் உள்ள மனித உரிமைவாதிகள் இலக்கியவாதிகள் அனைவரும் இதற்கெதிரான சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். பெருமாள் முருகன் அவர்களின் எழுத்துப் பணி தொடர்வதற்கான உளவியல் பலத்தையும் நாம் வழங்க வேண்டும்.
இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி: -பிரான்ஸ் (16-01-2015)
»»  (மேலும்)

| |

ஸ்ரீ.ல. சுதந்திரக் கட்சி தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போசகர்களாக சந்திரிகா, மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் இன்று (16) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட இருப்பதாக முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தெரிவித்தார். இன்று நடைபெறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழுக் கூட்டத்தின் போது இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுதந்திரக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து ஒதுங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் இது தொடர்பில் விசேட சந்திப்பொன்று இருவருக்குமிடையில் நடைபெற்றதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் சமிந்த சிரிமல் வத்த தெரிவித்தார்.
இதனூடாக சுதந்திரக் கட்சித் தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினைக்கு முடிவு காணப்படுவதாக சிரேஷ்ட அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தெரிவித்தார்.
சுதந்திரக் கட்சி மத்திய குழு உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கட்சித் தலைவராக கடந்த 11 ஆம் திகதி அறிவித்திருந்தனர். ஆனால் சுதந்திரக் கட்சி மத்திய குழுவின் மற்றொரு தரப்பினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்சி தலைவராக்கும் பிரேரணையை நிறைவேற்றி அவரை தலைவராக அறிவித்திருந்தனர்.
இந்த இழுபறி நிலைக்கிடையில் மேலும் பல சுதந்திரக் கட்சி முன்னாள் அமைச்சர்கள் எம்.பிக்கள் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது ஆதரவை தெரிவித்து அரசுடன் இணைந்து கொண்டனர். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சுதந்திரக் கட்சி மத்திய குழு உறுப்பினரும் சிரேஷ்ட அமைச்சருமான எஸ்.பி. நாவின்ன கூறியதாவது, சுதந்திரக் கட்சி தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினைக்கு முடிவு காணப்பட்டுள்ளது. தலைமை பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சி மத்திய குழு உறுப்பினர்கள் 53 பேரில் பெரும்பான்மையானவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தலைவராக நியமிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.

இதேவேளை கட்சி போசகர்களாக முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷவும், சந்திரிகா குமாரதுங்கவும் செயற்பட இருப்பதாக அறிய வருகிறது.

»»  (மேலும்)

| |

புலம்பெயர்ந்த இலங்கை எழுத்தாளர்களது கூட்டறிக்கை

எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவலான 'மாதொருபாகன் 'பிரதிமீது இந்துத்துவ - சாதிய சக்திகள் கோரும் தடையையும், அவர்கள் கொடுக்கும் நெருக்கடியிலிருந்து பெருமாள் முருகனைக் காப்பாற்றத் தவறியிருக்கும் தமிழக அரசையும் புலம்பெயர்ந்த இலங்கை எழுத்தாளர்களான நாங்கள் எங்களது இந்தக் கூட்டறிக்கை வழியே வன்மையாகக் கண்டிக்கிறோம்.
கருத்துச் சுதந்திரத்திற்கு எல்லைகள் கிடையாது. அவ்வாறு எல்லைகள் இருப்பின் அவை உண்மையில் ஒழுங்கமைக்கப்பட்ட மறைமுகத் தடைகளே. மதம் அல்லது சாதி போன்ற சமூக பிற்போக்கு அமைப்புகளால் கருத்துச் சுதந்திரத்தின் மீது வைக்கப்படும் தடைகள் மட்டுமல்லாது; அரசு இறைமை, இன விடுதலை, புரட்சி, சமத்துவம் போன்ற முற்போக்கு முழக்கங்களுடன் வைக்கப்படும் கருத்துச் சுதந்திரம் மீதான தடைகளும் முழுமையாகக் கண்டிக்கப்படவேண்டியவை என்பதை நாங்கள் அனுபவபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் நன்கறிவோம்.
மதவாத - சாதிய சக்திகளின் நெருக்குவாரங்களை எதிர்கொள்ள முடியாத நிலையில் எழுத்தாளர் பெருமாள் முருகன் தனது முழு இலக்கிய எழுத்துகளையும் மீளப்பெற்றுக்கொள்வதாகவும் இனிமேல் தான் இலக்கியம் எழுதமாட்டேன் எனவும் அறிவித்திருப்பது சமூகத்தின் கூட்டு அவமானமும் துயருமாகும்.
எழுத்தாளர் பெருமாள் முருகன் தனது முடிவை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக இருக்கும் அனைத்துச் சக்திகளிடமிருந்தும் கருத்துச் சுதந்திரத்தைக் காப்பாற்றும் பொறுப்பைத் தமிழக அரசு உணர்ந்து செயற்படவேண்டுமெனவும் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.
மு.நித்தியானந்தன் (இங்கிலாந்து)
எஸ். ரஞ்சகுமார் (அவுஸ்திரேலியா )
இளவாலை விஜேந்திரன் (நோர்வே)
நிர்மலா ராஜசிங்கம் (இங்கிலாந்து)
ஷோபாசக்தி (பிரான்ஸ் )
நட்சத்திரன் செவ்விந்தியன் (அவுஸ்திரேலியா )
புஷ்பராணி (பிரான்ஸ் )
மெலிஞ்சிமுத்தன் (கனடா)
உமா (ஜேர்மனி)
ஹரி ராஜலட்சுமி (இங்கிலாந்து)
சயந்தன் (சுவிற்ஸர்லாந்து)
கவிதா (நோர்வே)
சுமதி ரூபன் (கனடா)
தர்மு பிரசாத் (பிரான்ஸ் )
தேவன் (சுவிற்ஸர்லாந்து )
ஏ.ஜி. யோகராஜா (சுவிற்ஸர்லாந்து)
நெற்கொழுதாசன் (பிரான்ஸ் )
கற்சுறா (கனடா)
தர்மினி (பிரான்ஸ் )
பதீக் அபூபக்கர் (இங்கிலாந்து)
விஜி (பிரான்ஸ் )
கரவைதாசன் (டென்மார்க்)
தமயந்தி (நோர்வே)
சுரதா யாழ்வாணன் (ஜேர்மனி)
எம்.ஆர். ஸ்டாலின் (பிரான்ஸ் )
புதியவன் இராசையா (இங்கிலாந்து)
ராகவன் (இங்கிலாந்து)
க. சுதாகரன் (சுவிற்ஸர்லாந்து)
ச.தில்லைநடேசன் (பிரான்ஸ் )
பானுபாரதி (நோர்வே)
ஜீவமுரளி (ஜேர்மனி)
அதீதா (கனடா)
தேவிகா கெங்காதரன் (ஜேர்மனி)
விஜயன் (சுவிற்ஸர்லாந்து)
கோமகன் (பிரான்ஸ் )
சஞ்சயன் (நோர்வே)
அசுரா (பிரான்ஸ் )
பத்மநாதன் நல்லையா (நோர்வே)
இளங்கோ (கனடா)
காருண்யா கருணாகரமூர்த்தி (ஜேர்மனி)
சரவணன் நடராசா (நோர்வே)
கலையரசன் (நெதர்லாந்து)
திருமாவளவன் (கனடா)------------------
»»  (மேலும்)

1/15/2015

| |

வடமாகாணசபையின் புதிய ஆளுநராக எச்.எம்.ஜி.எஸ்.பலிகக்கார

 வடமாகாணசபையின் புதிய ஆளுநராக எச்.எம்.ஜி.எஸ்.பலிகக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் கடந்த காலங்களில் ஜெனீவாவிலுள்ள ஐநா அலுவலகத்துக்கான இலங்கை பிரதிநிதியாக பணியாற்றியவராகும் 

. A prominent Sri Lankan diplomat and former Foreign Secretary H. M. G. S. Palihakkara has been appointed as the Governor of the Northern Province.
The Government has appointed a non-military civil servant as the Governor.
Mr Palihakkara was former Permanent Representative of Sri Lanka to the United Nations. He has served on the Secretary-General's Advisory Board on Disarmament Matters. He retired as the Foreign Secretary of Sri Lanka in December 2006 after 38 years of civil and diplomatic service.
Since the 1990s, he has served on a number of assignments to the United Nations in Geneva and New York. Mr Palihakkara served as Acting Director-General and Deputy Director-General of Sri Lanka's Peace Secretariat (SCOPP), which serviced the Norwegian-facilitated peace talks (2002) and subsequent ceasefire (2003).
Among other positions, he was Director-General of Multilateral Affairs at Sri Lanka's Foreign Ministry, covering work related to preventative diplomacy, peace-building, arms control and non-proliferation.
He has also served as one of members of Lessons Learnt and Reconciliation Commission (LLRC).
Courtesy : President Media Unit  
»»  (மேலும்)

| |

ஹரினின் நியமனம் அரசியலமைப்புக்கு எதிரானது

ஐக்கிய தேசியக்கட்சியின் மாகாண சபை உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவை, ஊவா மாகாண முதலமைச்சராக நியமித்தது, அரசியலமைப்புக்கு எதிரானது என்று, மேல் மாகாண சபை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாணத்தில் நடந்ததை போன்று, ஐ.ம.சு.கூ.விடமிருந்து எழுத்து மூலமான அறிவிப்பை பெறாது மேல்மாகாண சபைக்கான முதலமைச்சரை நியமிக்க வேண்டாம் என்று, மேல்மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மேல்மாகாண ஆளுநரிடம் அறிவித்துள்ளார்.

மாகாண சபையில் பெருபான்மையை பெற்ற மாகாண சபை உறுப்பினரொருவரையே, முதலமைச்சராக நியமிக்க முடியும் என்று அரசியலமைப்பில் உள்ளது என்று மாகாண சபை உறுப்பினர் உதயன் கம்மன்பில தெரிவித்தார்.

மேலும், அரசியல் கட்சியின் தலைவர் ஒருவர் மாகாண சபையின் பெரும்பான்மையை கொண்டிருப்பாராயின், அவருக்கே முதலமைச்சர் பதவி கொடுக்கப்படும்.

மேல்மாகாண சபையில், ஐ.ம.சு.கூ.வுக்கே பெருபான்மை இருக்கிறது. இதனால், சத்தியக்கடதாசியை கொண்டு மேல்மாகாணத்துக்கு வேறொரு முதலமைச்சரை நியமிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

»»  (மேலும்)

1/13/2015

| |

இலங்கை மண்ணில் பரிசுத்த பாப்பரசர்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை இன்று இலங்கை வருகிறார். இன்று காலை 8.30 மணிக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடையும் பரிசுத்த பாப்பரசருக்கு விமான நிலையத்தில் அரச வரவேற்பளிக்கப்பட வுள்ளது.
இலங்கையின் புனிதர் அருளாளர் ஜோசப் வாஸ் அடிகளாரை புனிதராகத் திருநிலைப்படுத்தும் சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றும் பரிசுத்த பாப்பரசர் வடக்கிற்கு விஜயம் செய்து மடுத்திருப்பதியில் விசேட வழிபாடொன்றை நடத்துவதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உத்தியோகபூர்வமாகச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று மாலை சர்வ மதத் தலைவர்களைச் சந்திக்கும் பரிசுத்த பாப்பரசர் அங்கு விசேட உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார்.
கொழும்பிலுள்ள வத்திக்கான் அப்போஸ்தலிக்கத் தூதரகத்தில் நடைபெறும் விசேட நிகழ்வில் கலந்துகொள்ளும் பரிசுத்த பாப்பரசர் பேராயரில்லத்தில் கத்தோலிக்க ஆயர் பேரவையினரைச் சந்திக்கவுள்ளார். இச் சந்திப்பில் கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து மறை மாவட்டங்களையும் பிரதிநிதித்து வப்படுத்தும் ஆயர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதனைத் தவிர, பரிசுத்த பாப்பரசர் இலங்கையில் பங்கேற்கும் முக்கிய நிழ்வுகளில் இந்தியா, பிலிப்பைன்ஸ் உட்பட சர்வதேச நாடுகளின் கர்தினால்கள், ஆயர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை இன்று காலை 8.30 மணிக்கு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைவார்.விமான நிலையத்தில் பரிசுத்த பாப்பரசருக்கு மகத்தான அரச வரவேற்பளிக்கப்படுவதுடன் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் ஆயர்கள், அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் இந்த வரவேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
பரிசுத்த பாப்பரசர் அவர்கள் கட்டுநாயக்காவிலிருந்து விசேட ஊர்தி மூலம் கொழும்பு வத்திக்கான் அப்போஸ்தலிக்கத் தூதரகம் வரை அழைத்து வரப்படவுள்ளார். கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு வரையிலான பிரதான பாதையின் இரு மருங்கிலும் மக்கள் பரிசுத்த பாப்பரசரை வரவேற்பர். தேசியக் கொடிகள் பரிசுத்த பாப்பரசரின் கொடிகள், கொழும்பு உயர் மறை மாவட்டத்தின் கொடிகள் என மக்கள் கொடிகளை அசைத்து ஆரவாரத்துடன் பரிசுத்த பாப்பரசருக்குத் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தவுள்ளனர்.
கொழும்பு 07ல் உள்ள வத்திக்கான் தூதரகத்துக்குச் செல்லும் பரிசுத்த பாப்பரசர் அங்கு பரிசுத்த பாப்பரசரின் அப்போஸ்தலிக்கப் பிரதிநிதியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வரவேற்பு நிகழ்வில் கலந்து கொள்வார். அதனையடுத்து கொழும்பு பேராயர் இல்லத்தில் கத்தோலிக்க ஆயர் பேரவையைச் சந்திக்கும் பரிசுத்த பாப்பரசர் இலங்கையின் அனைத்து மறை மாவட்டங்களையும் சேர்ந்த ஆயர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.
இன்று பிற்பகல் 5.00 மணியளவில் இலங்கையிலுள்ள சர்வ மதத் தலைவர்களையும் பரிசுத்த பாப்பரசர் சந்திக்கவுள்ளார். இந்த நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதுடன் மதத் தலைவர்கள் மத்தியில் பரிசுத்த பாப்பரசர் சிறப்புரையொன்றையும் ஆற்றவுள்ளார். இச்சந்திப்பினையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பரிசுத்த பாப்பரசருக்குமிடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.
இதன் போது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு முத்திரைகள் வெளியிடப்படவுள்ளன. பரிசுத்த பாப்பரசரின் இலங்கை வருகை தொடர்பான முத்திரையொன்றும் இலங்கையின் புனிதராக திருநிலைப்படுத்தப்படவுள்ள அருளாளர் ஜோசப் வாஸ் அடிகளாரின் நினைவு முத்திரையுமே இங்கு வெளியிடப்படவுள்ளன. பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயத்தை நினைவு கூரும் விசேட நாணயக் குற்றிகளும் இதன் போது வெளியிடப்படவுள்ளன.
நாளை 14 ஆம் திகதி இலங்கையின் வரலாற்றில் முக்கியமானதொரு தினமாகும். இலங்கைத் திருநாட்டிற்கான முதலாவது புனிதரை உத்தியோக பூர்வமாக உலக திருச்சபையின் தலைவரான பரிசுத்த பாப்பரசர் அறிவிக்கும் நிகழ்வு அது.கொழும்பு காலி முகத்திடலில் பிரமாண்டமான முறையில் அமைக்கப் பட்டுள்ள அரங்கில் இலட்சோப இலட்சம் மக்கள் மத்தியில் அருளாளர் ஜோசப் வாஸ் அடிகளார் புனிதராக திருநிலைப் படுத்தப்படுவார். இது இலங்கை வாழ் கத்தோலிக்க மக்கள் வாழ்நாளில் கண்டிராத அரிய நிகழ்வாகும்.
இலங்கை மற்றும் சர்வதேச ஆயர்களுடன் இணைந்து பரிசுத்த பாப்பரசர் நிறைவேற்றும் மாபெரும் கூட்டுத் திருப்பலியின் போது இந்த புனிதத்துவ திருநிலை இடம்பெறும். திருப்பலியில் கலந்து கொள்வதற்கு இலங்கையின் அனைத்துப் பங்கு மட்டங்களிலும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதால் நாடளாவிய சகல பங்குகளிலிருந்தும் மக்கள் கலந்து கொண்டு இறையாசீரைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர். அதனையடுத்து பரிசுத்த பாப்பரசர் நாளை மடுத்திருப்பதிக்கு விஜயம் செய்யவுள்ளார். அங்கு வடக்கு, கிழக்கு மறை மாவட்டங்களின் ஏற்பாட்டில் மாபெரும் மத வழிபாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுமார் பத்து இலட்சம் மக்கள் இந்த வழிபாடுகளில் கலந்து கொள்ளவுள்ளதாக மன்னார் மறை மாவட்டம் அறிவித் துள்ளது.இந்த வழிபாட்டு நிகழ்வையடுத்து கொழும்பு திரும்பும் பரிசுத்த பாப்பரசர் கொழும்பிலுள்ள வத்திக்கான் அப்போஸ்தலிக்க தூதரகத்தில் தங்கி மறுநாள் காலை தமது அடுத்த திருயாத்திரையான பிலிப்பைன்ஸ் விஜயத்தை மேற்கொள்வார். பரிசுத்த திருத்தந்தை கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில் போவலலானையில் முன்னாள் பரிசுத்த பாப்பரசர் 16வது ஆசீர்வாதப்பரின் நினைவாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கல்விக் கல்லூரியை அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளமையும் குறிப் பிடத்தக்கது.
பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயத்திற்காக 24,000 மேற்பட்ட பொலிசார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் வத்திக்கானிலிருந்தும் பாதுகாப்பு அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். காலிமுகத்திடல் விசேட திருப்பலியை யொட்டி அச்சுற்றுச் சூழல்களில் விசேட கமராக்கள் பொருத்தப் பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள் ளமையும் குறிப்பிடத்தக்கது. பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயம் இலங்கைத் திருநாட்டிற்குப் பெரும் ஆசீராக அமையும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
»»  (மேலும்)

1/12/2015

| |

க.மோகனுக்கும் ஐக்கியதேசிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நிருவாகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை- UNP

க.மோகனுக்கும் ஐக்கியதேசிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நிருவாகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை- UNP மட்டக்களப்பு அமைப்பாளர் சசி .
ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட ரீதியில் துரிதமாகச் செயற்படவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழுவை பிழவு படுத்தும் நோக்கில் எமது கட்சியில் அங்கத்துவம் இல்லாதோரால் செய்ற்பாடுகள் சில முன்னெடுக்கப் பட்டுள்ளதாக அறிகின்றோம்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு பிரச்சாரங்களை முன்னெடுப்பதற்காக வேண்டி செங்கலடியைச் சேர்ந்த க.மோகன், தேர்தல் இணைப்பாளராக மாத்திரம் நியமிக்கப்பட்டாரே தவிர அவர் எமது ஐக்கியதேசியக் கட்சியின் செய்ற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அல்ல செங்கலடி க.மோகன் என்பவர் அவருடன் சிலரை இணைத்துக் கொண்டு எமது ஐக்கிய தேசியக் கட்சிக்கு இழுக்கு ஏற்படும் வகையில் செயற்பட்டு வருகின்றார்கள். எனவே க.மோகனுக்கும் எமது ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு நிருவாகத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை.
செங்கலடி க.மோகனுக்கு ஜனாதிபதி தேர்தலுக்காக வேண்டி தேர்தல் இணைப்பாளர் என்றுதான் எமது தலைமையகத்தினால் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்துவிட்டது அவருடைய நியனமும் முடிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது செங்கலடி க.மோகன் அவர்தான் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எனவும், அவருடைய தலைமையில்தான் முடிவுகள் எடுக்கப் படுவதாகவும், கூறிக் கொண்டு வருவதாகவும் அறிகின்றோம்.
கடந்த 8 ஆம் திகதி வரைக்கும் தேர்தல் இணைப்பாளர் என்ற முறையில் எமது கட்சியின் தலமைப் பீடத்திற்குக் கட்டுப்பட்டு செங்கலடி க.மோகனுடன் இணைந்து நாங்கள் செயற்பட்டு இந்த தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். 8 ஆம் திகதிக்குப் பின்னர் அவருக்கும் எமக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. எனவே அவர் ஐக்கிய தேசிய் கட்சியின் பெயரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
தொடர்ந்தும் செங்கலடி க.மோகன் ஐக்கிய தேசியக் கட்சியின் பெயரைப் பயன்படுத்தி செயற்பட்டால் அது எமது கட்சிக்கு பாரிய இழுக்காகவும் அமைந்துவிடும். எனவே கௌரவமான முறையில் க.மோகன் எமது கட்சியின் செயரை பயன்படுத்துவரைத் தவிர்துக் கொள்ள வேண்டும். என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
க.மோகனுக்கும் ஐக்கியதேசிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நிருவாகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும் இல்லை என்பதை மட்டக்களப்பு தலைமையகப் பொலிசாருக்கும், மாவட்ட அரச நிருவாகத்திற்கும் தெரிவிக்கவுள்ளோம்.
ஐக்கிய தேசிக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக அ.சசிதரன், காத்தான்குடி பகுதிக்கு பொறுப்பாக ஏ.எல்.அனிஸ் மற்றும், வி.ரி.முபாறக், ஏறாவூர் பகுதிக்கு பொறுப்பாக ஏ.உல்.கியாஸ், மற்றும், எ.உம்.யமீல், ஓட்டமாவடிப் பகுதிக்கு பொறுப்பாக எல்.புர்க்கான், வாழைச்சேனைப் பகுதிக்கு பொறுப்பாக சபீக்கா, கல்குடா பிரிவுக்கு பொறுப்பாக எம்.மாசிலாமனி, ஆ.ஜெகன், எம்.ஸ்ரீகாந் மற்றும் வி.காழிதாஸ், மட்டக்களப்பு நகர் பகுதிக்குப் பொறுப்பாக கே.வாசன், வவுணதீவு பகுதிக்குபொறுப்பாக எஸ்.சங்கர், பட்டிருப்பு தொகுதிக்கு ந.சத்தியசீலன் ஆகியோர்கள்தான் எமது கட்சியினால் நியமிக்கப்பட்டு இயங்கி வருகின்றார்கள் இவர்களைவிட ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நிருவாகத்தில் யாரும் இல்லை. என்பதையும் இத்தால் தெரியப் படுத்துகின்றோம்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் எமக்கு பூரண வெற்றி கிடைத்துள்ளது. வாக்களித்த அனைத்து மக்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது. தேர்தல் காலத்தில் எமது செய்திகளை வெளியீடு செய்து எமக்கு பக்க பலமாக இருந்த ஊடகங்களுக்கும், தேர்தல் ஆணையாளருக்கும், பொலிசாருக்கும், தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஏனைய அரசியற் கட்சிகளுக்கும், ஏனைய சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பிருக்கும் எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கடந்த 20 வருடகாலமாக இலங்கையில் நாங்கள் ஆட்சியில் இல்லாமல் இருந்து வந்தள்ளோம். தற்போது மக்கள் மாற்றத்தை உருவாக்கியுள்ளார்கள். தற்போது மக்கள் எம்மைத் தேடி வருகின்றார்கள். மட்டக்களப்பிலிருந்த காடையர்கள் அனைவரும் இந்த தேர்தல் முடிவோடு மாவட்டத்தை விட்டு ஓடிவிட்டார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் எந்தவித அமைச்சுப் பதவிகளும் வேண்டும் என்று நாம் இதுவரையில் கோரவில்லை ஆனால் மாவட்டத்தின் அபிவிருத்தி பற்றி பல கோரிக்கைகளை எமது தலையைகத்திடம், முன்வைத்துள்ளோம்.
பிரதான வாய்க்கால்களுக்கு கொங்கிறீட் இடுதல், கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடத்தை நிறுவதல், வாழைச்சேனை காகித ஆலையினை புணரமைப்பு செய்து இயங்கச் செய்தல். மாவட்டதிலுள்ள 28000 விதவைகளுக்கு, வாழ்வாதார ரீதியாக உதவுதல், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அங்கவீனர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல், போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். இவையமைத்திற்கும் எமக்கு உதவுவதாக எமது தலைமை ஒப்புக் கொண்டுள்ளது. என மேலும் தெரிவித்தார்.
»»  (மேலும்)