2/28/2015

| |

128 அபிவிருத்தி திட்டங்களை வடமாகாண சபை தவறியுள்ளது: தவராசா

128 அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றுவதற்கு வடமாகாண சபை  தவறியுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென 690 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆயினும், வடமாகாண சபையினால் 16 மில்லியன் ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்படவில்லை என்று வடமாகாண சபைக்குரிய இணையத்தில் வெளியிட்ட கணக்கறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் எஸ்.தவராசா இந்த பிரச்சினையை இம்மாதம் 24ஆம் திகதி அவையில் பிரஸ்தாபித்தார்.
690 மில்லியன் ஒதுக்கீட்டில் 128 அபிவிருத்தி திட்டங்களை இவ்வருடம் மார்ச் முடிவுக்கு முன்னர் முடிப்பதாக 2014 டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியன்று வடமாகாண சபை ஏற்றிருந்தது.
இந்த பிரச்சினையை தவராசா பிரஸ்தாபித்த போது பல்வேறு காரணங்களால் வருட முடிவுக்கு முன்னர், ஒதுக்கப்பட்ட சகல நிதியையும் வடமாகாண சபையினால் பயன்படுத்த முடியவில்லை என முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறினார். இதனால்தான் மார்ச் முடியும் முன்னர் மீதி வேலையை பூரணப்படுத்த தீர்மானித்ததாக அவர் கூறினார்.
வடமாகாண இணையத்தளத்தில் கணக்கறிக்கை வெளியானதையிட்டு தனக்கு எதுவும் தெரியாதென்று கூறி வடமாகாண முதலமைச்சர், கணக்கறிக்கையில் ஏன் திரபுபடுத்திய கணக்கு வந்தது என்பதற்கு தன்னால் பதில் கூற முடியாதென்றும்; தெரிவித்துவிட்டார்.
பயன்படுத்தாத நிதியை திறைசேரியின் அங்கீகாரமின்றி பயன்படுத்த முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்தார்.

»»  (மேலும்)

| |

100 நாள் வேலைத்திட்ட ஆட்சி மாற்றத்தில் நரகமாக மாறும் மட்டு.நகரம்

மிகவும் எழில் கொஞ்சும் சிறப்புடன் காணப்படும் மட்டக்களப்பு மாநகரம் கவனிப்பாரற்ற நரகமாகமாறி வருகின்றது.
எப்போது பார்த்தாலும் 5 மணியைக் காட்டும் பொது பஸ் நிலையமணிக்கூடு
அழகான மட்டு.பொது பஸ் நிலையத்தின் அழகை கெடுக்கும் அவுஸ்திரேலியா பயணத்தடை விளம்பரப் பலகை.
பறவைகள் சரணாலயத்திற்கு ஒதுக்கப்பட்ட பிள்ளையாரடி ஆற்றங்கரை ஒதுக்கு காணிகளை தனியார் உடமை ஆக்குதலும் மணல் போட்டு நிரப்புதலும்.
ஆற்றங்கரை ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள தங்குமிட கூடாரங்களில் பாலியல் சேட்டைகளும்இமது அருந்தும் கூட்டமும் கட்டடத்தினை உடைத்து சேதப்படுத்தும் நிலை.
எப்போதும் துர்நாற்றம் வீசும் அரசடிச்சந்திஇமற்றும் ஆஞ்சநேயர் சுற்றுவளையச்சந்தி வடிகான்கள்.
வீதியோர வாகன நடமாடும் வியாபாரங்கள்
என அடிக்கி கொண்டே செல்லமுடியும். மிகத் துரிதமாக செயற்பட்ட மட்டு.மாநகரசபை 100 நாள் வேலைத்திட்ட ஆட்சி மாற்றத்தில் வேகம் குறைந்துள்ளதே என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
 
»»  (மேலும்)

2/26/2015

| |

சிறையிலடைப்பதோ அல்லது நாடு கடத்துவதோ நல்லாட்சியல்ல !

அரசியல் காரணங்களுக்காக நாட்டை விட்டு வெளி யேறியவர்களை மீண்டும் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுக்கும் அரசாங்கம், தன்னை நாட்டை விட்டு வெளியேற்ற முயற்சிப்பதானது அரசாங்கத்தின் நேர்மையின்மையை காட்டுகிறது என முன்னிலை சோஷலிச முன்னணியின் தலைவர் குமார் குணரத்தினம் தெரிவித்துள்ளார் .
OLYMPUS DIGITAL CAMERAநேற்று வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவனாக இருந்தும் என்னை நாடு கடத்த இந்த அரசு முனைகிறது.
எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேறியவர்களில் நானும் ஒருவன். நாட்டை விட்டு வெளியேறிய பலர் வெவ்வேறு பெயர்களையும் அடையாளத்தையும் பயன் படுத்தினர்.
வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நானும் வெவ்வேறு பெயர்களை பயன்படுத்தினேன் என்பதை மறைக்க விரும்பவில்லை. 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 07 ஆந் திகதி கடத்தப்பட்ட நான், சர்வதேச அமைப்புகளின், அரசாங்கங்களின் அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்டேன் .அன்று எதிர்க்கட்சி தலைவராக இருந்த ரணில் விக்ரமசிங்க அவர்களும் எனது கடத்தலை கண்டித்து அறிக்கை ஒன்று விட்டிருந்தார்.
நான் இரட்டை பிரஜா உரிமைக்கு விண்ணப்பிக்கவில்லை. நான் எனது அவுஸ்திரேலிய பிரஜா உரிமையை இரத்து செய்து, நான் பிறந்து வளர்ந்த, படித்த, அரசியலில் ஈடுபட்ட எனது நாடான இலங்கையின் பிரஜா உரிமையை பெற விரும்புகிறேன்.
எனது இலங்கை பிரஜா உரிமை உறுதிப்படுத்தப்படும் வரை, அவுஸ்திரேலிய பிரஜா உரிமையை இரத்து செய்ய அவுஸ்திரேலிய அரசாங்கம் மறுக்கின்றது. சில கிழமைகளுக்கு முன்னர் இலங்கை பிரஜா உரிமையை பெறுவதற்காக நான் விண்ணப்பித்திருந்தும் எனக்கு எது வித பதிலும் கிடைக்கவில்லை.
அதே வேளை, சிங்கப்பூரிலிருந்து கொண்டு வரப்பட்ட, தற்போதைய அரசின் கூட்டாளியான அர்ஜுன் மகேந்திரனுக்கு இலங்கை பிரஜா உரிமையை வழங்கியுள்ளது தற்போதைய அரசு. முன்னைய இராணுவ அதிகாரி சரத் பொன்சேகாவிற்கு முன்னர் மறுக்கப்பட்டிருந்த அரசியல் உரிமை மீள கையளிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசராக இருந்த ஷிராணி பண்டாரநாயக்க அவர்களுக்கு மீண்டும் அவரது பதவி கொடுக்கப்பட்டது. இவ்வாறான தெரிவு செய்யப்பட்ட நிர்வாகமானது ஜனநாயகத்திற்கு முரணானதாகும் .
அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். ரணில் -மைத்ரி அரசாங்கத்தை ஆதரிப்பவர்களுக்கு நீதியும் உரிமையும் வழங்குவதும், அரசை விமர்சிப்பவர்களை சிறையில் அடைப்பதும் நாடு கடத்துவதும் நல்லாட்சியல்ல.
»»  (மேலும்)

| |

பங்களாதேஷ் எதிர்க்கட்சித் தலைவியை கைதுசெய்ய உத்தரவு

பங்களாதேஷின் எதிர்க்கட்சித் தலைவி காலிதா ஸியாவை  கைதுசெய்வதற்கான பிடியாணையை பங்களாதேஷிலுள்ள நீதிமன்றம் ஒன்று இன்று புதன்கிழமை பிறப்பித்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஊழல் சம்பந்தமான வழக்கில் இவர் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காமையை தொடர்ந்து, இந்த உத்தரவை டாக்காவிலுள்ள நீதிமன்றம் பிறப்பித்துளளதாகவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.   தர்மப்பணிக்கான நிதியில் பல ஆயிரக்கணக்கான டொலர்களை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டை  பங்களாதேஷ் தேசியவாத கட்சி தலைவர் மறுத்துள்ளார். பிரதமர் ஷேக் ஹஸினா அரசாங்கத்துடன் இவரது கட்சி பாரிய மோதலில் ஈடுபட்டுள்ளது. புதிய தேர்தலுக்கு  பிரதமர் ஷேக் ஹஸினாவை  அறிவிக்க வைக்கும் முகமாக பணிப்பகிஷ்கரிப்பு மற்றும் ரயில் உள்ளிட்ட போக்குவரத்து தடைகளை  ஏற்படுத்துமாறு கடந்த மாதம் தனது ஆதரவாளர்களிடம் காலிதா ஸியா  கோரியிருந்தார். இந்த நிலையில், நாடு பூராகவும் இடம்பெற்ற மோதலில் குறைந்தபட்சம் 100 பேர் மரணமடைந்திருந்தனர். பங்களாதேஷ் தேசியவாத கட்சி, மோசடி நடக்கும் என்று கூறி ஜனவரி -2014 இல் தேர்தலை பகிஷ்கரித்திருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 
»»  (மேலும்)

| |

இரு பிரதேச சபை தேர்தலுக்கான பிரசாரங்கள் நிறைவு

எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இரு பிரதேச சபைத் தேர்தலுக்காக போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் தங்களது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை இன்று புதன்கிழமையுடன் நிறைவு செய்ய வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து இன்றுவரைக்கும் எதுவிதமான தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றதாக எங்கும் பதிவாகவில்லை. இன்று புதன்கிழமை நள்ளிரவு 12மணியுடன் சகல அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். எதிர்வரும் வெள்ளிக்கிழமை 27ஆம் திகதி காலை முதல் கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களிலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்படும். இம்முறை மிகவும் அமைதியான முறையில் தேர்தலை நடத்த எதிர்பார்க்கின்ற போதிலும் அதற்கு பொதுமக்கள் உள்ளிட்ட சகலரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
»»  (மேலும்)

| |

பிள்ளையான் ஒதுக்கிய நிதியில் கட்டப்பட்ட கட்டிடத்தை மூன்று கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக திறந்துவைத்தனர்.

 


மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட தாளங்குடா விநாயகர் வித்தியாலயத்தில் 65 இலட்சம்ரூபா செலவில் கிழக்கு மாகாண சபை விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட வகுப்பறைக்கட்டத்தினை 23.02.2015 இல் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரியேந்திரன், யோகேஸ்வரன் ,செல்வராசா ஆகியோர் திறந்துவைத்தனர் 
என்ன கொடுமை சார் இது மண்முனைப்பாலம் திறந்தால் வெளிநாட்டுநிதி ,ஆயித்தியமலை வீதி,வலையறவுப்பாலம் திறந்தால் அது வெளிநாட்டு நிதி ,பாடசாலைக்கட்டம் கலாசார மண்டபங்கள் திறந்தால் அது அரச நிதி என்று கூறி குரைக்கும் நாய்க்கு போடும் எலும்புத்துண்டுதான்  இந்த நிதி ஒதுக்கீடு என்று 2014 வரை தூற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று கொளுத்திய விளக்கில் கும்மிடும்நிலையில் தரம்கெட்ட அரசியல் செய்யத்தொடங்கிவிட்டார்கள் முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தனிடம் பாடசாலை அதிபர் மதிசுதன் விடுத்தவேண்டுகோளிற்கமையவே இக்கட்டடத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததாவும்  அதனை வெட்கமில்லாமல் திறந்தது மட்டுமன்றி தம்மால் திறந்து வைக்கப்பட்டது. என நடுகல் பதிக்க வேண்டும் என யோகேஸ்வரன் அடம்  பிடித்ததாக குறிப்பிட்ட ஆசிரியர்கள்   நிகழ்வில் கலந்து  கொள்ளவுமில்லையாம்.
»»  (மேலும்)

| |

ஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்த அதிகாரிகள் தமது இடமாற்றத்தினை எதிர்பாத்துள்ளனர்

ஆட்சிமாற்றம் வேண்டும் என்று வாக்களித்து விட்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டவுடன் பட்டாசு கொளுத்தி கொண்டாடிய சில பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தமக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதான செய்தியினை அறிந்திருக்கவில்லையாம்.
பசில் ராஜபக்ஷ மூலம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆட்சிமாற்றத்தின் பின்னர் புதிதாக உள்வாங்கப்பட்டசுமார் 18 ஆயிரம் பட்டதாரி உத்தியோகத்தர்களை வேறு திணைக்களங்களுக்கு மாற்ற உள்ளதான தகவல் கிடைத்ததும் மாற்றத்திற்காக வாக்களித்த குறித்தபட்டதாரி உத்தியோகத்தர்கள் தம்மைத் தானே ஏசிக் கொண்டனராம்.அருகில் வேலை செய்த அலுவலகங்களை விட்டு பலருக்கு வேறு மாவட்டங்களுக்கு திணைக்கள மாற்றம் நடைபெறவுள்ளதாகவும். குறித்த பட்டதாரி உத்தியோகத்தர்கள் குறிப்பிடுகின்றனர்.
»»  (மேலும்)

2/25/2015

| |

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பே கிழக்கு மாகாண அமைச்சுக்களை தீர்மானிக்கும்.சுசில் தெரிவிப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பே கிழக்கு மாகாண அமைச்சுக்களை தீர்மானிக்கும்.சுசில் தெரிவிப்பு
Résultat de recherche d'images pour "வெற்றிலை"
கிழக்கு மாகாணசபையின் யாரை அமைச்சராக நியமிப்பது எவ்வாறு ஆட்சி நடத்துவது என்பது தொடர்பாக தீர்மானிப்பது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புயே. மாறாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அல்ல.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசும் ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பும் இணைந்தே கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைந்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பிரதிநிதி முதலமைச்சராவதற்கு ஐ.ம.சு.கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர்களின் சத்தியக் கடதாசி மூலம் ஆதரவு தெரிவித்தோம். அதைவிடுத்து ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒப்பந்தம் செய்து அமைச்சுக்களை பங்கிடுவது ஜதார்த்தத்திற்கு முரணானதும் நடைமுறைக்கு சாத்தியமற்றதுமாகும். அவ்வாறு ஓர் நிலைதோன்றினால் ஐ.ம.சு கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் பிரதிநிதி முதலமைச்சராவதற்கு வழங்கிய ஆதரவினை வாபஸ் வாங்கவேண்டியநிலை தோன்றும் என ஐ.ம.சு கூட்டமைப்பின் செயலாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் தேசிய அமைப்பாளருமான சுசில் பிரேம ஜெயந்த இன்று 24.02.2015ம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் தலைமையகத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் உள்ளிட்ட தமிழ் மக்கள் வடுதலைப் புலிகள் கட்சியின் உயர்மட்ட குழுவுடனான விஷேட கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அண்மைக்காலமாக கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பது தொடர்பாகதமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கைசாத்திடப்பட்டுள்ளதாகவும் இரண்டு அமைச்சும் ஓர் பிரதித் தவிசாளரும் த.தே.கூட்டமைப்புக்கு வழங்கப்படவுள்ளது என செய்திகள் வெளிவரும் நிலையில் சுசில் பிரேம ஜயந்தவின் கருத்து ஐ.ம.சுதந்திரக் கூட்டமைப்பே தீர்மானம் மேற்கொள்ளும் என ஆணித்தரமாக குறிப்பிடப்பட்டது.
»»  (மேலும்)

2/24/2015

| |

முஸ்லிம் காங்கிரஸின் செயல்பாடுகளினால் கிழக்கு மாகாண மக்களுக்கான நிர்வாக பணிகள் ஸ்தம்பிதம்

DSC_0005கிழக்கு மாகாண சபை தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீறியுள்ளதாகவும், ஸ்தம்பிதம் அடைந்த கிழக்கு மாகாண சபையானது மக்களுக்கான பணிகளை தடையின்றி மேற்கொள்வதற்காக முதலமைச்சரை மாத்திரம் நியமிப்பதற்கே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 14 பேரினதும் விருப்பத்துடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 06 பேரும் இணைந்து அனுமதி வழங்கினோம் என கிழக்கு மாகாண கல்வி, காணி, காணி அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து அமைச்சர் விமல வீர திஸாநாயக்கா தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்கள் நியமிப்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை தொடர்பாக அம்பாறையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் அங்கு கூறுகையில், கிழக்கு மாகாண சபை கடந்த 2008ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியே ஆட்சி செய்து வருகின்றது. அதுமட்டுமல்ல இங்கு வாழுகின்ற மூவின மக்களுக்கு சிறந்த அபிவிருத்திகளை செய்து வரும் நாங்கள் இன உறவுக்காகவும் பணியாற்றி வருகின்றோம்.
2015 ஆண்டுக்குரிய கிழக்கு மாகாண சபைக்கான வரவு-செலவு திட்டத்தினை முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீட் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட போது முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சமூகளிக்கவில்லை. இதனால் இரண்டு முறை சபை நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டது. 2014 டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட வேண்டிய வரவு – செலவு திட்டம் 2015 பெப்ரவரி 10ஆம் திகதியே நிறைவேற்றப்பட்டது. அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் வழங்கல் பிரச்சினை, ஏனைய நிர்வாக செயல்பாடுகளை கருத்தில் கொண்டே புதிய முதலமைச்சராக ஹாபீஸ் நஸீர் அவர்களை நியமித்து அன்று அமைச்சுக்குரிய வரவு – செலவு திட்டத்தினை சமர்ப்பிக்க அனுமதித்தோம்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரமஜெயந்த ஆகியோர்களின் தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியைச் சேர்ந்த 14 கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் விருப்பத்தின் பேரில் கிழக்கு மாகாணத்திற்குரிய முதலமைச்சரை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஹாபீஸ் நஸீர் அவர்களை நியமிப்பது, வரவு – செலவு திட்டத்தினை நிறைவேற்றி விட்டு மீண்டும் கொழும்பில் ஒன்று கூடி கிழக்கு மாகாண சபையில் வெற்றிடமாகவுள்ள சுகாதார அமைச்சு, விவசாய அமைச்சு ஆகியவற்றிற்கு அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றுதான் தீரமாணிக்கப்பட்டது.
ஆனால் முதலமைச்சரை நியமித்து விட்டு நாங்களே கிழக்கில் எல்லாம் என்று அங்கும் இங்கும் பேச்சு வார்த்தை நடாத்தி வருகின்றனர் இது தொடர்பாக இது வரைக்கும் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி தலைமைகளுடனோ, எங்களிடமோ கலந்துரையாடவும் இல்லை. ஆலோசனைகளை பெறவும் இல்லை. முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபை தொடர்பில் ஏழனம் செய்வது கவலைக்குரிய விடயமாகும்.
ஒப்பந்தம் செய்யும் விடயங்களில் விசுவாசத்தன்மை இருக்க வேண்டும். கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்தால் அதனை மீறக்கூடாது. இன்று கிழக்கு மாகாண சபை நிர்வாக செயல்பாடுகள் குழப்ப நிலையில் காணப்படுகிறது. கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்தினை தனிப்பட்டவர்கள் ஆளுவதற்கு எத்தனிக்கின்றனர். இதற்கு ஒரு போதும் நாங்கள் அணுமதிக்கமாட்டோம்.
முஸ்லிம் காங்கிரஸின் இந்த செயல்பாடுகளினால் கிழக்கு மாகாண மக்களுக்கான நிர்வாக பணிகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதுடன், அபிவிருத்தி வேலைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் வாழுகின்ற மூவினங்களினது இன உறவுக்கு தியாகம் செய்து வரும் நாங்கள் கிழக்கு மாகாண சபை தொடர்பாக மிக விரைவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி தலைமைகளுடன் பேசி முடிவெடுக்கவுள்ளோம் எனவும் அமைச்சர் விமல வீர திஸாநாயக்கா தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி,நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும் , அமைச்சரவையின் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, மாகாண சபை உறுப்பினர் டபிள்யூ.டி.வீரசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்;.
»»  (மேலும்)

| |

மட்டக்களப்பில் கூத்தை அறிதல்,பயில்தல்.புதிய திசைகளில் வளர்த்தல் என்ற இலவச பயிற்சி நெறி

கூத்தை அறிதல்,பயில்தல்.புதிய திசைகளில் வளர்த்தல்
என்ற பயிற்சி நெறிமட்டக்களப்பில்
21.02.2015 அன்று ரம்மியமான ஒரு சூழலில் ஆரம்பித்தது,
சிங்கப்பூர் LIBARAL ARTS COLLEGE இல் கற்பிக்கும்
மானிடவியலாளரான பேராசிரியர் பெர்னாட் பேட் அவர்களும்
அண்ணாவியார் தர்மராஜா அவர்களும்
விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
மரபுவழிக் கூத்துக் கலைஞரான சிவராஜாவும்
கூத்துக்களை அடிப்படையாகக் கொண்டுஉருவாக்கிய
நவீன நாடகங்களில்பங்குகொண்டவர்களான சிவரத்தினம்
,தவராஜா,விமல்ராஜ்ஆகியோரும்
ஜெயறஞ்சனியும்கலந்துகொண்டு
தமது அனுபவங்களை பயிற்சியாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர்
இது ஓர் ஆறு மாத கால இலவச பயிற்சி நெறியாகும்.
கூத்தின் கலையாக்க நுட்பங்களுக்கு மாணவர்களை அறிமுகம் செய்வதும்
புதிய கூத்துக்களை எழுத மாணவர்களுக்கு அடிப்படைப் பயிற்சிதருவதும்
இப் பயிற்சி நெறியின் பிரதான நோக்காகும்

»»  (மேலும்)

2/23/2015

| |

புதிய அரசாங்கமும் எங்களை ஏமாற்றி வருகின்றது: அரியநேந்திரன்

முன்னைய அரசாங்கத்தின் மீதிருந்த அதிருப்தி காரணமாக புதிய அரசாங்கத்துக்கு வாக்களித்திருந்தோம். இருந்தும் புதிய அரசாங்கமும் எங்களை ஏமாற்றி வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியேந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் 'ஜெனீவாத் தீர்மானமும் மெய்ந்நிலையும் அரசியலும் ஒரு நோக்கு' என்றும் நூல் வெளியீட்டு விழா கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச் சபை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை குறித்து முழுமையான ஐ.நா. விசாரணை வேண்டும். அரசாங்கம் கூறுவது போல உள்ளக விசாரணை எவ்வித பயன்களையும் எமக்குத் தராது. அதன் மேல் எங்களுக்கு நம்பிக்கையில்லை. ஐ.நா விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை கவலைக்குரியது. தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு மற்றும் அடக்குமுறைகள் தொடர்பில் விரிவான விசாரணை வேண்டும் என்று தெரிவித்தார். 
»»  (மேலும்)

| |

'இனச்சுத்திகரிப்பு': தீர்மானம் கோரும் வடக்கு முஸ்லிம் அமைப்பு

இலங்கையில் வடக்கிலிருந்து 1990-ம் ஆண்டில் முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட சம்பவம் இனச்சுத்திகரிப்பு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு கோரியுள்ளது.
இலங்கையில் இடம்பெற்றது தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையே என்று சர்வதேசத்தின் ஆதரவுடன் போர்க்குற்ற விசாரணைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிவருகின்ற பின்னணியிலேயே இந்தக் கோரிக்கை வெளியாகியுள்ளது.
இனப்படுகொலை தொடர்பான தீர்மானத்தை வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம்களின் வெளியேற்றம் ஓர் இனச்சுத்திகரிப்பு என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பைச் சேர்ந்த எம்.எம். அமீன் தெரிவித்தார்.
வடக்கு முஸ்லிம்கள் தங்களின் அசையும் அசையா சொத்துக்களை அந்தந்த இடத்திலேயே விட்டுவிட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் ஓர் இனச்சுத்திகரிப்பு என்று அமீன் சுட்டிக்காட்டினார்.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையிடம் தங்களின் கோரிக்கையை முன்வைப்பதற்கு தயாராக இருப்பதாகவும் வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பைச் சேர்ந்த எம்.எம். அமீன் தமிழோசையிடம் கூறினார்.
கடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் எம்.எம். அமீன் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

2/22/2015

| |

கூட்டமைப்பு இரண்டுபடுகிறதா?

இலங்கை தொடர்பான ஐநா அறிக்கை திட்டமிட்டபடி ஐநா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் காணாமல் போயிருப்பவர்கள் கண்டு பிடிக்கப்பட வேண்டும் என்றும் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் உணர்ச்சிவசப்பட்டவர்களாகக் காணப்பட்ட அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் புகைப்படத்துடன் உருவப் பொம்மை ஒன்றையும் இழுத்துவந்து எரியூட்டியுள்ளனர்.
போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பு இதற்கான அழைப்பை விடுத்திருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் உபதலைவர் பேராசிரியர் சிற்றம்பலம் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், காணாமல்போனவர்கள் தொடர்பில் உண்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

தமிழ்த் தலைவர்கள் மீது குற்றச்சாட்டு


சுமந்திரனின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது

காணாமல்போனவர்கள் தொடர்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணைகளை நடத்தி வருகின்ற ஜனாதிபதி ஆணைக்குழு, தனது விசாரணைகள் குறித்து ஓர் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
'ஐநா விசாரணை அறிக்கை (இம்முறை) அமர்வில் சமர்ப்பிக்கப்படும் என்று போரினால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், அரசியல் சதி முயற்சி என சந்தேகிக்கத்தக்க வகையில் அது பிற்போடப்பட்டிருப்பது எங்களுக்கு அதிர்ச்சியூட்டியுள்ளது' என்று இங்கு கருத்து வெளியிட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பில் தமிழ்த் தலைவர்கள் உரிய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்றும், ஐநா விசாரணைக்குப் பதிலாக உள்ளக விசாரணை நடைபெறலாம் என்ற கருத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்ததாகவும், அவர்கள் உணர்ச்சி வசப்பட்டிருந்ததைக் கண்டதாகவும் அனந்தி சசிதரன் கூறினார்.
இலங்கையில் நடந்ததாகக் கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்திய ஐநா குழுவின் அறிக்கை ஜெனீவாவில் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படும் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
எனினும், இந்த அறிக்கை வரும் செப்டெம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

| |

“மகிந்த ! மகிந்த! எங்களுக்கு வேண்டும் மகிந்த!” நுகேகொடவிலிருந்து மெதமுலானவிற்கு கோஷமிடும் கூட்டத்தின் அறைகூவல் முழக்கம் எதிரொலிக்கிறது - கலாநிதி தயான் ஜயதிலகா

பெப்ரவரி 18ல் நுகேகொட எழுச்சி
“எழுச்சி பெற வாருங்கள்
எழுச்சி பெற வந்து உங்கள் கரங்களை என்னுடைய கரங்களுடன் சேருங்கள்
எழுச்சி பெற வாருங்கள்
இன்றிரவே எழுச்சி பெற வாருங்கள்”
(புறூஸ் ஸ்பிறிங்ஸ்டன் : ‘ த றைசிங்’) ( Bruce Springsteen: The Rising)
நுகேகொடவில் மகிந்த ராஜபக்ஸ தேவைப்படுகிறார் என்கிறnugegoda-2 வாசகங்களுடன் ஒரு சுவரொட்டி காணப்பட்டது, அது ஊழல்;, மனித உரிமைகள் மீறல், சர்வாதிகாரம் போன்ற குற்றங்களுக்காக ஜேவிபியினால் ஒட்டப்பட்ட சுவரொட்டி அல்ல. நூறாயிரக்கணக்கான மக்களினால் தேவை என்று கோரப்பட்ட அந்த சுவரொட்டியில்  ஸ்ரீலங்காவின் பிரதம மந்திரியாக அவர் மாறவேண்டும் என்கிற கோரிக்கை மக்களால் மற்றும் தேசத்தினால் எழுப்பப்பட்டிருந்தது.
பெப்ரவரி 18ல் நுகேகொடவில் கூட்டப்பட்ட கூட்டத்தை விட, ஸ்ரீலங்காவில் மிகப்பெரிய எதிரணிக் கூட்டம் ஒன்றில் நான் கலந்து கொண்டிருந்திருந்ததாக நினைவு, ஆனால் அது எங்கே, எப்போது, என்ன கூட்டம் என்பது எனக்குச் சரியாக நினைவில்லை. அது அநேகமாக 1960க்குப் பிந்தைய காலமாக இருக்கவேண்டும், எனது தந்தை என்னை ஸ்ரீ.ல.சு.க – லங்கா சமசமாஜ கட்சி – லங்கா கம்யுனிஸ்ட் கட்சி ஆகியன ஒன்றிணைந்த இது போன்ற ஐக்கிய முன்னணி பேரணி;களுக்கு கூட்டிச் சென்றிருந்தார். (யுபிஎப்ஏ) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் தொடர்பற்ற நம்பிக்கையான ஒருவர் நேற்றிரவு தொலைபேசி மூலம், லலித் மற்றும் காமினி தலைமையில்  நடைபெற்ற மிகப் பெரிய டி.யு.என்.எப் ஊர்வலத்துக்கு இணையானதாக நேற்றைய பேரணி; இருந்ததாகச் சொன்னார்.
எது பொருத்தமான இணையாக உள்ளதோ, எனது அனுபவத்தில் நுகேகொட கூட்டம் மிகவும் வித்தியாசமானது அதற்கு வேறு ஒரு காரணம் உள்ளது. உணர்ச்சி பூர்வமான, சக்திமிக்க, மற்றும் ஆர்வம் உள்ள மக்கள் கூட்டத்தை ஸ்ரீலங்காவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் நான் கண்டேன், மேலும் அந்த உணர்வு யாருக்கும் எதிரான ஒன்றாக இருக்கவில்லை. அது யாரோ ஒருவருக்கான ஏதோ ஒன்றுக்கானதாக இருந்தது. இதனுடன் அங்கு ஒன்று கூடியிருந்த மிகப் பெரிய எண்ணிக்கையிலான மக்கள் கூட்டம் அந்த நிகழ்வை ஒரு வரலாற்று சாத்தியமான திருப்பு முனையாக மாற்றியிருந்தது.
நுகேகொடயின் பிரதான வீரர்களாக இருந்தது, அந்தக் கூட்டத்தை எற்பாடு செய்தவர்களோ அல்லது அந்த மக்கள் கூட்டத்தில் உரையாற்றியவர்களோ அல்ல. அது அங்கிருந்த மக்கள் மட்டுமே. அவர்கள் ஒருவரையொருவர் நெருக்கித் தள்ளிக்கொண்டு அந்தப் பிரதேசம் முழுவதையும் நிறைத்துக் கொண்டு ஒரு ஆர்வமான அமெரிக்க உதைபந்தாட்ட ரசிகர் கூட்டத்தையும் மிஞ்சிய உத்வேகத்தடன் ஸ்ரீலங்கா கொடிகளையும் மற்றும் மகிந்த ராஜபக்ஸவின் பதாகைகளையும் அசைத்தவாறே நின்றிருந்தார்கள்.
நுகேகொட கூட்டத்தின் மற்றொரு பிரதான வீரர் அங்கு சமூகமளித்திருக்கவில்லை. அவர்தான் மகிந்த ராஜபக்ஸ. அன்றைய நிகழ்வு பேராசிரியர் ஏ. டபிள்யு சிங்கம் தனது நூல் ஒன்றுக்கு இட்ட தலைப்பான “கதாநாயகனும் மற்றும் மக்கள் கூட்டமும்” என்கிற உன்னதமான விடயத்துக்கு பொருத்தமானதாக இருந்தது, மாறாக இந்த நிகழ்வில் கதாநாயகன் அங்கு இல்லை அதே சமயம் அவரது பிரசன்னம் அங்கு இருந்தது. பிரசன்னமாகியும் மற்றும் பிரசன்னமாகாமலும் இருந்தது வேறு யாருமல்ல, நிச்சயமாக அது மகிந்ததான், அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டத்தால் அவரது பெயர் அடி வயிற்றில் இருந்து  பீறிட்ட முழக்கமாக வெளிப்பட்டது.
அந்த மேடையில் இருந்த பிரமுகர்கள்தான் அந்த சக்தியின் அனுசரணையாளர்களும் மற்றும் நடத்துனர்களுமாக இருந்தால், அந்த சக்தி உருவானது அங்கிருந்த மக்களிடமிருந்துதான். அந்த சக்தியோட்டம் ஒரு கண்ணுக்குத் தெரியாத சுற்றுமூலம் நுகேகொடவிலிருந்து மெதமுலானவரை சென்று திரும்பியது.
அந்த பேரணியின் செய்தி இரண்டு முக்கிய பார்வையாளர்ககளின் நோக்கங்களnugegoda-3ுக்கானது: மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்ஸ ஆகியோரே அந்த இருவர். மைத்திரிபால சிறிசேனவுக்கான செய்தி பாதுகாப்பான, சவாலற்ற, ஜனாதிபதியாக அங்கீகரிப்பதாக இருந்தது ஆனால் அதேபோன்ற செய்தி, தெரிவு செய்யப்படாத பிரதமர் மற்றும் அவரது ஐதேக அரசாங்கத்துக்கு தெரிவிக்கப்படவில்லை. மகிந்த திரும்பவும் வரவேண்டுமென்று மக்கள் விரும்புகிறார்கள் என்று அந்த செய்தி சொல்கிறது, 58 லட்சம் பேர் அவருக்கு வாக்களித்துள்ளார்கள் பெரும்பான்மை சிங்களவர்களில் 58 விகிதமானவர்கள் அவருக்கு வாக்களித்துள்ளார்கள் இந்த வாக்குகள் பிரதிநிதித்துவம் செய்யப்படாமல் கிட்டத்தட்ட உரிமையற்றதாகப் போய்விடக் கூடாது. அந்த செய்தி மேலும் தெரிவிப்பது ஒரு சமாதானமான ஓய்வை அனுபவிப்பதற்கு மகிந்த ராஜபக்ஸ அனுமதிக்கப்பட மாட்டார், அவரது மக்கள் அவரிடமிருந்து  மற்றுமொரு தேசிய சேவையினை எதிர்பார்க்கிறார்கள், அது தேசிய விரோதி ரணில் விக்கிரமசிங்காவை தோற்கடித்து பிரதமராகி ஒரு ஸ்ரீ.ல.சு.க நிருவாகத்தை ஸ்தாபிப்பது.
அது ஜனாதிபதி சிறிசேனாவை கவிழ்ப்பதாகவோ அல்லது கடிகாரத்தை பழைய பாதைக்கு திருப்புவதோ அல்ல. அது ஒரு மீளமைப்பு முயற்சி அல்ல. அது ஸ்ரீலங்கா அரசியலின் விசையை மறுசீரமைத்து மீள் சமநிலைப் படுத்தும் ஒரு முயற்சி, எனவே அந்த 58 லட்சம் வாக்குகள் (74 விகிதமான பெரும்பான்மை இன வாக்குகள்) பிரதிநிதித்துவம் அற்றதாக போய்விடாது.
என்னைப் பொறுத்தவரை, நுகேகொட பொதுக்கூட்டத்தில் முக்கியமாக அடையாளப் படுத்திய ஒரு காட்சி, மகிந்த ராஜபக்ஸவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக களமிறக்குவதற்காக அரசியலுக்கு திரும்ப வரும்படி அழைப்பு விடுப்பதற்காக பிரமாண்டமான விளம்பரப் பலகையின் உச்சியில் அமர்ந்திருந்த ஒரு இளம் மனிதன் தனது கையில் இருந்த சிங்கக் கொடியையும் மற்றும் மகிந்த ராஜபக்ஸவின் உருவப்படத்தையும் புகைப்படக்கருவியின் கண்களில் படும்படி அசைத்தபடி இருந்த காட்சிதான். தடைகளை தகர்த்தெறியும் அந்த சைகை, தடைகள் மற்றும் பெருமை அனைத்தினதும் சேர்க்கையாக இருந்தது.
அந்த பொதுக்கூட்டத்தின் அரசியல் முக்கியத்துவமாகத் தென்பட்டது, கணிசமானளவு ஸ்ரீ.ல.சு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் ரணதுங்க, மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் ஆகியோரின் பிரசன்னம்தான்.
ஒட்டுமொத்த பேச்சுக்களும் உயர் அரசியல் தரம் வாய்ந்ததாக இருந்தது, முற்போக்கு வீரர்கள், பொடி அப்புஹாமி, வாசு மற்றும் தினேஷ் ஆகியோர் உன்னத பேச்சுக்களை நிகழ்த்தினார்கள். இளம் தாரகைகளான,  விமல் வீரவன்ச  அனல் பறக்கும் பிரசங்கத்தை நிகழ்த்தியபோது, உதய கமன்பில வெளித்தோற்றத்தில் மென்மையாகவும் நகைச்சுவையாகவும் பேசினாலும், அவரது கண்களில் மிளிரும் பிரகாசத்தை நீங்கள் புறக்கணித்து விட்டு பார்த்தால் அது ஒரு சிறப்பான செயற்பாடாகத் தெரிந்திருக்கும். மிகவும் மூத்த பேச்சாளரான தினேஷ் குணவர்தன கடைசியாகப் பேசினாலும் பொருத்தமான முறையில் ஐதேக விரோத நினைவுகளை எழுப்பினார், 1956ல் நடந்தவை மட்டுமன்றி மிகவும் அழுத்தமாக 1960ல் நடந்தவற்றையும் நினைவு படுத்தினார், அப்போது இரண்டு பொது தேர்தல்கள் நடைபெற்றன முதலாவது தேர்தலில் ஐதேக வென்றது இரண்டாவதில் ஸ்ரீ.ல.சு.க வென்றது, புதிய தலைமையின் கீழ் அதனால் அதிக வாக்குகளை சுவீகரிக்க கூடியதாக இருந்தது.
நுகேகொட பொதுக்கூட்டம் ஒரு தேசிய ஜனநாயக இயக்கத்தின் தோற்றமாகவும் மற்றும் ஒரு தேசிய ஜனநாயக  அரசாங்கத்தை உருவாக்குவதற்கான தேசிய ஜனநாயக போராட்டம் ஒன்றின் ஆரம்பமாகவும் எனக்குத் தென்பட்டது. அது ஆழமான ஜனநாயகத் தன்மையானது, அதன் காரணமாக அது தேர்தல் ஒன்றில் வெற்றி பெறாமல் அல்லது பாராளுமன்றில் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையோ இல்லாமல் ஆட்சி நடத்தும் ஒரு அரசாங்கத்தின் சட்டபூர்வ தன்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. தெரிவு செய்யப்படாத பிரதமரையும் மற்றும் அரசாங்கத்தையும் நிறுவிய ஜனாதிபதியால் எதிர்க்கட்சித் தலைவரையும் நியமித்த ஜனநாயத் தன்மையையும் அது கேள்விக்குள்ளாக்குகிறது. இறுதியாக  இந்த அதிகார சமநிலையில் 5.8 மில்லியன் வாக்காளர்களின் வாக்குகள் (74 விகித பெரும்பான்மையினரில் 58 விகிதமானவர்கள்) பிரதிநிதித்துவம் பெறாமல் போகும் ஒழுங்கின்மையை சரி செய்யும்படி அது கோருவதும் ஜனநாயகம்தான். 
இந்த இயக்கம் ஒரு விதத்தில் தேசியத்தன்மை கொண்டது, புலிப் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதம் என்பனவற்றுக்கு எதிராக தைரியமான வெற்றி பெற்றதுக்கு பெருமை அடைவதுடன், தேசிய இறையாண்மை,சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு என்பனவற்றுக்கு எதிராக மையவிலகு சக்திகள், மற்றும் வட மாகாணசபையின் இன படுகொலை பிரேரணை, மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் ஐநா மனித உரிமைப் பேரவைக்கு எழுத்து மூலமாக “பொறுப்புக்கூறலை உள்ளுர் பொறிமுறை மூலமாக முன்னேற்றுவதற்கு ஒருமித்து வேலை செய்வோம்” என வழங்கப்பட்ட வாக்குறுதி போன்ற வெளிசக்திகளால் ஏற்படும் அழுத்தங்களை எதிர்த்து பாதுகாக்கிறது.
வலுவான தேசப்பற்றிற்கான சேவையில் சிங்கள தேசியவாதத்தின் ஆழமான உணர்ச்சிகள்  ஊற்றெடுக்கும் உந்துவிசையாக செயற்படுகின்ற அர்த்தத்தின் அடிப்படையிலும் அது தேசியம் ஆகிறது. அதன் சிங்கள தேசியவாதிகள் எந்த வித்திலும் தமிழர் விரோதமாக அல்லது முஸ்லிம் விரோதமாக செயற்பட மாட்டார்கள், இருந்தபோதிலும் மறைமுகமான பிரிவினை மற்றும் தேசிய பாதகாப்புக்கு கேடு விளைவித்தல் போன்ற விடயங்களை அது எதிர்க்கும். இந்த சிங்கள தேசியவாதம் ஸ்ரீலங்கா தேசத்தின் தேசியம் மற்றும் ஸ்ரீலங்காவின் தேசப்பற்று என்பனவற்றின் முன்னணிப்படையாக நின்று செயலாற்றும் ஆனால் எந்தவிதத்திலும் சிறுபான்மையினரை ஆதிக்கம் செலுத்த வழி தேடாது.nugegoda-1
வெளியார்; மற்றும் அவர்களின் உள்ளுர் தளங்கள் மற்றும் நிறுவனங்கள் (குறிப்பாக ரணில் விக்கிரமசிங்காவின் ஐதேக அரசாங்கம்) என்பனவற்றின் அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்காக இயங்குவதே இந்த தேசியவாதம் மற்றும் தேசப்பற்று, ஆனால் அது உள்ளுர் சிறுபான்மையினரை ஆதிக்கம் செலுத்த முயற்சிக்காது. அது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள சுதந்திரக் கூட்டமைப்பு என்பனவற்றுக்கு புதிய சக்தி நல்கும் ஒரு தேசப்பற்று மற்றும் தேசியவாதம் ஆகும்.
இது, கொழும்பின் மேட்டுக்குடியான உயரடுக்கினர் மகிழ்ச்சியான நாட்கள் திரும்பவும் வந்துவிட்டது எனக் பெருமையோடு பாராட்டத் தக்கதான தேசப்பற்று அல்ல. பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதம் என்பனவற்றை நிராகரித்து, அவை மறைந்துள்ள போலி வேடங்களை கண்டுபிடித்து அவற்றை எதிர்ப்பதில் உறுதியாக உள்ள மக்களின் தேசப்பற்று. நுகேகொட பார்வையாளர்கள், வெகுஜனங்களில் ஒரு பகுதியினர், யுத்தத்துக்காகப் போராடி அதை ஆதரித்த மக்கள்,; அவர்களின் மகன்கள் மற்றும் மகள்கள் அவர்களின் நாட்டின் பாதுகாப்புக்காக போராடச் சென்று உயிர் நீத்தார்கள் அதன் காரணமாக நாங்கள் அனைவரும் இன்று சமாதானமாக வாழ முடிகிறது. அவர்கள் மகிந்த ராஜபக்ஸவுக்கு நன்றி செலுத்துகிறார்கள் ஏனென்றால் அந்த அர்ப்பணிப்புள்ள தலைமையை அவர்தான் வழங்கினார், அவருக்கு முன்பிருந்த எவரும் மிகவும் முக்கியமாக ரணில் மற்றும் சந்திரிகா போன்றவர்களாலும்கூட இப்பேர்பட்ட காரியத்தை செய்ய முடியவில்லை அல்லது செய்யவில்லை. நாங்கள் இப்போது அனுபவிக்கும் சமாதானத்துக்கு அவர்களும் நன்றிக்கடன் பட்டவர்கள்.
தாழ் மட்ட வகுப்பு என கிராம்சி குறிப்பிடும் நடுத்தரத்தை சேர்ந்த மக்கள், தாங்கள் தேர்வு செய்யப்படாத தேசிய விரோத  உயரடுக்கு ஐதேகவின் ரணில் விக்கிரமசிங்காவால் ஆளப்படுவதை விரும்பவில்லை. இது மக்கள் மற்றும் தேசம் என்பனவற்றின் கலவை, இதை “தேசிய பிரபலம்” என கிராம்சி வகைப்படுத்தியுள்ளார். இதன்படி நுகேகொட அணிதிரட்டல் தேசிய – மற்றும் தேசியவாதி – எதிர்ப்பு எனும் பிரபல இயக்கத்தின் பிறப்பு ஆகும். அது மக்களின் தேசியவாத மறுமலர்ச்சியின் அடையாளம் ஆகும்.
கூட்டம் நடைபெற்ற நேரம் முழுவதும் மக்கள் கூட்டத்தினரிடமிருந்து “மகிந்த ! மகிந்த! அப்பட்ட ஓனே மகிந்த” (எங்களுக்கு மகிந்த வேண்டும்) என்கிற கோஷம் ஒலித்துக் கொண்டேயிருந்தது. எனவே  பலத்த கரகோஷத்தினிடையே “மகிந்த என்பது ஒரு பெயர் அல்ல, மகிந்த ஒரு நாடு” என்று விமல் சொன்னது அநேகமாக சரியாக இருக்க வேண்டும். பழம்பெரும் தலைவரான ஹோ சி மின் இடத்தை வெற்றி கண்டவரும் மற்றும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போரை வெற்றிப்பாதையில் நடத்தியவருமான  மிகச் சிறந்த வியட்னாமிய தலைவரான லீ டுவான் “சோசலிசமும் மற்றும் தேசமும் ஒன்று” என எப்போதும் கூறுவார். பெப்ரவரி 8ல் நுகெகொடவில் குழுமிய மக்களுக்கு கூட, மகிந்த ராஜபக்ஸவும் மற்றும் தேசமும் ஒன்றுதான்.
அனுபவம் மிக்க இடதுசாரியான வாசுதேவ நாணயக்கார நுகேகொடவில் பிரமாண்டமான முறையில் அணி திரண்டிருந்த அனைவரிடமும் அடிப்படை ஒழுக்க நெறிமுறை மற்றும் தத்துவார்த்த வார்த்தைகளில் “அது ஒரு தோல்வி அல்ல, அது ஒரு அவமானம், அது சரணாகதி” என பிரகடனம் செய்ததுடன் அதை திரும்பவும் சொன்னார்.


“நாங்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்போம் என சபதம் செய்து ஒரு வாக்குறுதி அளித்தோம்
பின்வாங்கல் இல்லை, குழந்தாய், சரணடைதலும் இல்லை
கோடைகால  இரவில் இரத்த சகோதரர்கள்
பாதுகாப்புடனான ஒரு உறுதிமொழி
பின்வாங்கல் இல்லை, குழந்தாய், சரணடைதலும் இல்லை”
(புரூஸ் ஸ்பிரிங்ஸ்டன் : “சரணாகதி இல்லை”)
நன்றி *தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
»»  (மேலும்)

2/21/2015

| |

கிழக்கில் தமிழர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் இணக்க அரசியலை ஏற்படுத்தியது நாங்களே!. பூ.பிரசாந்தன்

கிழக்கு மாகாணத்தில் இணக்க அரசியலை சிறப்பாக மேற்கொண்டு தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து காட்டிய பெருமை எம்மையே சாரும். எதிர்ப்பு அசியலே தமிழர்களின் பாதை என்பதனை மாற்றி சுய கௌரவத்துடன் இணக்க அரசியலும் செய்யலாம். அதன் மூலம் தமிழர்களின் அடிப்படைத் தேவைகளான நிதி நிருவாக சமத்துவத்தினை பேணிப்பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதனை ஏனைய அரசியல் தலைமைகளுக்கும் தமிழ் மக்களுக்கும் எடுத்துக்காட்டியது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினையே சாரும் என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளமான பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிராம மட்ட அமைப்பாளர்களுடனான 2015ம் வருடத்திற்கான கட்சியினின் செயற்திட்ட தொடர்பான கலந்துரையாடலில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 2008ல் கிழக்கு மாகாணசபையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பொறுப்பேற்று இணக்க அரசியல் மேற்கொள்ள முற்பட்டபோது பலர் தூற்றமுற்பட்டார்கள். எமக்கான பாதை இதுவல்ல துரோகத்தனமான பொம்மை மாகாணசபையினை பொறுப்பேற்கின்றார்கள் என்ன செய்யப் போகின்றார்கள் என்றெல்லாம் பல அவதூறுகள் எம் மீது வீசப்பட்ட போது மிக நிதானமாக முடிவெடுத்த த.ம.வி.பு கட்சியும் அதன் தலைவர் சி.சந்திரகாந்தனும் நான்கு வருடங்கள் கிழக்கு மாகாணத்தின் மக்களின் சமத்துவமான இன ஐக்கியத்துடன் எவ்வாறு மாகாணத்தினை நெறிப்படுத்திக் காட்டினார் என்றால் அதற்கு மக்களே சாட்சி கூறுவார்கள்.

அதற்கு பின்னரே கிழக்கு தமிழர்கள் சுய கௌரவத்துடனான இணக்க அரசியலினை ஆரம்பித்தார்கள். நாம் அந்த வகையில் திருப்தி அடைகின்றோம் காலம் காலமாக எதிர்ப்பு அரசியல் செய்த தமிழ் தலைவர்களும் இணக்க அரசியலின் தேவையினை உணர்ந்து இருக்கின்றார்கள். அதன் வெளிப்பாடே வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் கூற்றும், கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் கோரியதும் பின்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் தர மறுத்ததை தொடர்ந்து ஏதாவது இரு அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்க இணக்கம் தெரிவித்து அதற்கான முஸ்தீபுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டு வருவதும் எமது த.ம.வி.பு கட்சி 2008ல் எடுத்த தீர்க்கதரிசனமான அரசியல் பாதை வெற்றியடைந்துள்ளதினை புலப்படுத்தி நிற்கின்றது. நாம் அன்று எடுத்த முடிவு இன்று மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. எதிர்ப்பு அரசியலையே தேர்ச்சி பெற்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புபிற்கும் அதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இன்று கிழக்கு மாகாணசபையில் எந்த அமைச்சை எடுக்கலாம் எவ்வாறு ஏனைய ஆளும் கட்சிகளுடன் இணைந்து இணக்க அரசியலை மேற்கொள்ளலாம் என கூட்டங்கள் தீர்மானிக்கும் அளவிற்கு நிலைமை முன்னேறியுள்ளது. வரவேற்கக் கூடியதுதான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் காட்டிய வழியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமைகள் பயனளிப்பதன் மூலம் பல எதிர்ப்புடன் இருக்கும் மக்களுக்கு தேவைகள் ப+ர்த்தி செய்யப்படுமானால் நாம் அதனை வரவேற்போம் எந்தக் கட்சியானலும் சரி எந்தத் தலைமையானாலும் சரி எம் கிழக்கு மாகாணத் தமிழ் சமுகத்தின் உணர்வுகளை மதிப்பதுடன் தேவைகளை ப+ர்த்தி செய்வதற்கு பாடுபடும் பட்சத்தில் நாம் பெருமனதுடன் வழிவிட்டுக் கொடுக்க எப்போதும் தயக்கம் காட்டப் போவதில்லை எமது சமுகம் யாரிடமும் மண்டியிடாத நிருவாக அரசியல் அதிகாரத்துடன் இன ஐக்கியத்துடன் வாழ்வதனை உறுதிப்படுத்துவதே இன்றைய தேவை எனவும் குறிப்பிட்டார் 20.02.2015ம் திகதி கட்சியின் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
»»  (மேலும்)

2/20/2015

| |

சுற்றுலா விசாவில் யாரும் எந்தநாட்டிலும் அரசியல் செய்ய முடியாது

முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்ணத்தின்  மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளதால் அவர் நாடுகடத்தப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அவுஸ்திரேலியாவில் இருந்து சுற்றுலா விசாவில் 2015ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி இலங்கைக்கு வந்து அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதால் குமார் குணரத்னத்தை கைது செய்யுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
»»  (மேலும்)

| |

ஜனாதிபதி மைத்திரி அமெரிக்காவுக்கும் விஜயம் செய்வார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வருடத்துக்குள் அமெரிக்காவுக்கும் விஜயம் செய்வார் என்று அரசாங்க பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார் -
»»  (மேலும்)

| |

நரேந்திர மோடி மார்ச் 13ஆம் திகதி வருவார்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் மார்ச் மாதம் 13ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று அரசாங்க பேச்சாளரும் சுகாதாரத் துறை அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
அவர், மார்ச் மாதம் 15ஆம் திகதி வரையிலும் இலங்கை தங்கியிருப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

»»  (மேலும்)

2/18/2015

| |

பிரபாகரனை வெள்ளைக்கொடியுடன் வெளியே வரசெய்தவர் திருக்கோவிலில் மீண்டும் புலிகளுடன்

  முன்னாள் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கே.புஷ்பகுமார் என்றழைக்கப்படும் இனிய பாரதியின் காரியாலயம் அமைந்துள்ள வளாகத்தில் காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.சிலபிரதேச மக்களை இணைத்துக்கொண்டு   முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திர நேருவின் மகனான சந்திரகாந்தன் இவ்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.  

சந்திரநேரு சந்திரகாந்தன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ரி.கலையரசன் ஆகியோரின் இவ் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடுசெய்திருந்தனர்.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பிரபாகரன் வெள்ளைக்கொடியுடன்  வெளியே வந்த செய்தி பலரும் அறிந்ததே.இதற்கு இராணுவம்  பயன்படுத்திய முகவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திர நேருவின் மகனான சந்திரகாந்தன் ஆகும்.இவர் தனது தகப்பனின் செல்வாக்கினால் புலிகளுக்கு விசுவாச மானவராக இருப்பார் என்று எண்ணிய புலிகள் இவரை இராணுவத்துடன் தொடர்பாட அனுமதித்தனர்.ஆனால் சந்திரகாந்தன்  இரட்டை முகவராக செயற்பட்டு  இராணுவத்துக்கு உரிய நேரத்தில் பிரபாகரனை சரணடைய வைத்தார்.இவரது மனைவி ஒரு இராணுவ கேர்ணலுடைய தங்கை  என்பதுவும் இவரது நம்பிக்கை துரோகத்துக்கு வாய்ப்பானது.இவர் எந்தவித அரசியல் பதவிகளிலும் இல்லாதபோதும் இன்றுவரை இவருக்கு இராணுவ புலனாய்வு பாதுகாப்பு வழங்கப்பட்டுவருகின்றது.இவருக்கு புலனாய்வு பிரிவினரால் வழங்கப்பட்டுள்ள கைத்துப்பாக்கியுடனேயே இவர் வலம்வருகின்றார்.கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் அத்துப்பாக்கியை கையாளத்தெரியாமல் தனக்குத்தானே சுட்டுக்கொண்டுகொண்டவர்  இவர் என்பதுவும் பலரும் அறிந்த செய்தியாகும். 


இவரது துரோகம் காரணமாக கடந்த மாகாண சபைத்தேர்தலில் இவருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் வாய்ப்பு  மறுக்கப்பட்டது. அண்மையில் வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் மாநாட்டுக்கு சென்ற இவரை மண்டப வாயிலில் வைத்தே மாவையாரல் திருப்பியனுப்பபட்டவராவர்.இப்போது அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலிலாவது போட்டியிட வாய்ப்புக்கிடைக்காதா என்று ஓடித்திரியும் இவர் தன்னை ஒரு பிரபலமான மக்கள் தொண்டனாக காட்டும் போலித்தனங்களில் ஈடுபட்டுள்ளார்.அவரது முயற்சிக்கு இப்போது இவருக்கு கிடைத்திருப்பது இனியபாரதியின் பெயர்.மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் விசாரணைக்கும் தண்டனைக்கும் உரியவர்கள் என்பது அவசியமானது.ஆனால் இழப்புகளிலும் சோகங்களிலும் வெதும்பிக்கிடக்கும் மக்களின் துயரங்களை தத்தமது அரசியல் இலாபங்களுக்கு பயன்படுத்தமுனைபவர்கள், அல்லலுற்ற மக்களை பயன்படுத்தி தாம் அரியணையில் ஏற துடிப்பவர்கள் கேவலமானவர்கள் ஆகும்.இவரது மனித உரிமை கோஷம்  எவ்வளவு தூரம் பொய்மையானதும் சந்தர்ப்பவாதமானதும் என்பதை இவருக்குப்பின்னால் நின்று கோஷம்போடுபவர்கள் யாரென்பதை அறிந்தால் நன்றாக புரியும்.இவரது கைக்கூலிகளாக பாரதியின் வீட்டிற்க்கு கல்லேறிபவர்களாக செயல்படுபவர்கள்  புனர்வாழ்வுபெற்ற புலிகளாகும்.  இந்த  புலிகளின் கடந்த கால மிலேச்சத்தனமான நடவடிக்கைகளால் விதவைகளாகிப்போன தமிழ்பெண்கள் எத்தனைபேர்? அவர்களுக்காக இந்த சந்திரகாந்தன் ஏன்  இதுவரை குரல்கொடுக்கவில்லை? என்று திருக்கோவில் பிரதேச ஆசிரியர்  ஒருவர் எமது இணையத்தளத்துக்கு தெரிவித்தார். 
»»  (மேலும்)

| |

குமார் குணரட்ணத்தின் மனு நிராகரிப்பு

முன்னிலை சோசலிஷக் கட்சியின் தலைவர் குமார் குணரட்ணத்தின்  மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அவரை கைதுசெய்வதை அல்லது நாடுகடத்தலை தடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்கு எடுத்து கொண்ட போதே உயர் நீதிமன்றம் அதனை நிராகரித்துள்ளது. -
»»  (மேலும்)

2/17/2015

| |

நல்லாட்சி என்ற பெயரில் ஜனநாயக விரோத நாசகார நடவடிக்கைகள் ஆரம்பம்!

2015 ஜனவரி 08இல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவாகி, அவர் அவசர அவசரமாக ஐக்கிய தேசியத் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தனது விருப்பப்படி ஒருதலைப்பட்சமாக பிரதமராக நியமித்து, ரணில் தனக்கென ஒரு மந்திரிசபையையும் நியமித்து, ஒரு அரசாங்கத்தையும் அமைத்த பின்னர், நாடு ஜனநாயக விரோத – அழிவுப் பாதையில் வேகமாகச் செல்வதைக் காண முடிகிறது.
புதிய ஜனாதிபதியின் முதலாவது ஜனநாயக விரோதச் செயல்பாடு, ஏற்கெனவே பெரும்பான்மையுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் ஒன்று பதவியில் இருக்க, அந்த அரசாங்கத்தைக் கலந்து ஆலோசிக்காமல் புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்தது. அதுவும் புதிய ஜனாதிபதியின் சொந்தக் கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கம் இருக்கத்தக்கதாக, பாராளுமன்றத்தில் மிகச் சிறுபான்மையாக இருந்த ஐ.தே.கவின் ஆட்சியை அமைக்க ஏற்பாடு செய்தது, மைத்திரிபால சிறிசேன நாட்டின் ஜனநாயக மரபை மீறியது மட்டுமின்றி, தனது சொந்தக் கட்சிக்கே துரோகம் இழைத்ததும் ஆகும்.
மறுபக்கத்தில் ஜனநாயகம் பற்றி உரத்துப் பேசிக்கொண்டு, உலக ஜனநாயக கட்சிகளின் அமைப்பிலும் அங்கம் வகிக்கும் ரணில் விக்கிரமசிங்க, பதவிக்கு ஆசைப்பட்டு அல்லது சர்வதேச எஜமானர்களின் தேவையை நிறைவேற்றுவதற்காக அல்லது இரண்டுக்குமாக பிரதம மந்திரிப் பதவியை ஏற்றதின் மூலம் ஜனநாயகத்தை பெரும் கேலிக்கூத்தாகியுள்ளார்.
இந்த இருவரும்தான், அதாவது புதிய ஜனாதிபதியும் பிரதமரும் தான் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தாம் தேர்தலில் வென்றால் 100 நாட்களுக்குள் சர்வாதிகாரத்தனமான நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக மக்கள் முன் சென்று பிரச்சாரம் செய்தவர்கள். ஆனால் அவர்களே தேர்தல் நடந்து 48 மணித்தியாலங்களுக்குள் அதே நிறைவேற்று அதிகார முறையை ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டுவதற்காகப் பிரயோகித்துள்ளனர்.
அதுமாத்திரமல்ல, முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை முன்னைய அரசு நீக்கியதில் பலருக்குக் கருத்து முரண்பாடுகள் இருப்பினும், அவர் மீது சட்டவழியில் பாராளுமன்றத்தில் தகுதியீனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டே பதவி இழந்தார். ஆனால் நாட்டின் அதியுயர் இறைமையுள்ள நிறுவனமான பாராளுமன்றத்தைக் கேலிக்குள்ளாக்கும் வகையில் அதே நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் அவர் மீண்டும் பிரதம நீதியரசர் ஆக்கப்பட்டார். இதேபோலத்தான் புதிய பிரதம நீதியரசராக சிறீபவனை நியமிப்பதற்கு முன்னர், பதவியில் இருந்த நீதியரசர் மொகான் பீரிஸ் அவர்களை சட்டபூர்வமான வழிமுறைகளைப் பின்பற்றாது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி எதேச்சாதிகாரத்தனமாகப் பதவி நீக்கம் செய்ததின் மூலம் புதிய அரசு நீதித்துறையை கேலிக்கூத்தாக்கி உள்ளது.
அதேபோல முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகவின் பதவிகள், பதக்கங்கள் பறிக்கப்பட்ட விடயத்திலும் பலருக்கு கருத்து வித்தியாசம் இருந்தபோதிலும், இராணுவ நீதிமன்றத்தின் விசாரணைப்படியே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அவர் விடயத்திலும் சட்டபூர்வமான வழிமுறைகளை நாடாது நிறைவேற்று அதிகாரத்தின் மூலமே இழப்பீடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.
இவற்றைப் பார்க்கும்போது புதிய ஆட்சியாளர்கள் மக்களுக்குக் கொடுத்த “நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவோம்” என்ற வாக்குறுதி வெறும் ஏமாற்றுப் பேச்சா? என்ற ஐயம் மக்கள் மத்தியில் ஏற்படுவது இயல்பானது.
இது ஒருபுறமிருக்க, இது ஒரு சிறுபான்மை அரசாங்கம் என்பதை, 225 அங்கத்தவர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் உள்நாட்டு அமைச்சர் ஜோன் அமரதுங்க மீது எதிர்க்கட்சி சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 114 பேர் கையெழுத்து இட்டதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. அத்துடன் பாராளுமன்றம் எந்த நேரமும் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் ஒன்று நடாத்தப்படலாம் என ஜனாதிபதியும் பிரதமரும் கூறுவதால், இந்த அரசாங்கம் ஒரு தற்காலிக காபந்து அரசாங்கம் என்பதும் உறுதிப்பட்டுள்ளது.
பொதுவாக காபந்து அரசாங்கங்கள் நாட்டின் பிரதான விடயங்களில் முடிவு எடுக்கும் வழமை நடைமுறையில் இல்லை. அப்படியிருக்க, பல முக்கியமான விடயங்களில் இந்த தற்காலிக சிறுபான்மை அரசாங்கம் தன்னிச்சையாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
பல அரசாங்கத் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், நிதி நிறுவனங்கள், ஊடக அமைப்புகள், பொலிஸ் மற்றும் முப்படைகள், மாகாண ஆளுநர்கள், மாகாணசபைச் செயலாளர்கள், வெளிநாட்டு இராஜதந்திரச் சேவை போன்ற பல துறைகளில் அதிரடியாக மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
அதுமட்டுமின்றி, இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து நெருக்கடியான நேரங்களில் தன்னலமற்ற உதவிகள் செய்து வந்த, உலகப் பொருளாதாரத்திலும் வலிமையிலும் மிக வேகமாக முன்னேறிச் செல்லும் சீனாவுடனான ஒப்பந்தங்களைப் பற்றி அவதூறு பரப்பி அந்த நாட்டை அவமானப்படுத்தவும், பகைக்கவும் இன்றைய ஏகாதிபத்திய சார்பு ஐ.தே.க அரசு முயற்சிக்கிறது.
தேர்தல் நடைபெற்று முடிந்த நாளிலிருந்து முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களித்தவர்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆதரவாளர்களையும் ஐ.தே.க காடையர்கள் தாக்குவதும், அரசாங்கமே அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் தொடர்கதையாக நடைபெறுகின்றது. கடந்த 20 வருடங்களாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பதவியில் இருந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தல்கள், பாராளுமன்றத் தேர்தல்கள், மாகாண மற்றும் உள்ளுராட்சித் தேர்தல்கள் எனப் பல நடந்தபோதும், தொடர்ந்து தோல்வியைத் தழுவிவந்த ஐ.தே.கவினர் மீது இவ்வாறான தாக்குதல்களையோ, பழிவாங்கல்களையோ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1977இல் அரசியல் குள்ளநரியும் சகுனியுமான ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சிக்கு வந்ததும் எப்படி எதிர்க்கட்சிகளை அடித்து நொருக்கி முடமாக்கினாரோ, அதே அடிச்சுவட்டையே அவரது மருமகனும், இன்றைய பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவும் செய்ய முயற்சிக்கின்றாரோ என எண்ணத் தோன்றுகிறது.
போதாதிற்கு, விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அவரது ஆதரவாளர்களும் போட்டியிடாமல் தடுப்பதற்காக, ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்று நள்ளிரவில் மகிந்தவும் அவரது சகாக்களும் ‘இராணுவச்சதி’ ஒன்றுக்கு முயற்சித்தார்கள் என்ற பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டுள்ளதுடன், அவர்கள் பலர் மீது லஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தவும் முயற்சிக்கப்படுகிறது. அத்துடன் மகிந்தவும் அவரது குடும்பமும் ஈராக்கின் சதாம் ஹ_சேன் போல, லிபியாவின் கடாபி போல, எகிப்தின் முபாரக் போல ஆட்ம்பர வாழ்வு வாழ்ந்தார்கள்.
எனவும் அவர்கள் மீது பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு, அவர்களை மக்கள் மத்தியில் செல்வாக்கிழக்க வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகள் எல்லாம் ‘நல்லாட்சி’யின் பெயரால் நடைபெறுவதுதான் மிகவும் வேதனையானதும், வேடிக்கையானதுமான விடயம். இந்த அரசாங்கம் மகிந்தவின் அரசாங்கத்தை விட நல்லதொரு ஆட்சியை வழங்கும் என எதிர்பார்த்து வாக்களித்த மக்களுக்கு மிகக் குறுகிய நாட்களிலேயே திகைத்துப் போகும் அளவுக்கு அரசாங்கத்தின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதன் காரணமாக தேர்தல் நடந்து ஒரு மாதம் கழியுமுன்னரே “தெரியத்தனமாகத் தவறு செய்துவிட்டோம்” என்ற மக்களின் முணுமுணுப்பைக் கேட்க முடிகிறது.
எனவே மக்கள்தான் இந்த விடயத்தில் சிந்தித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். முதலாவது ஒரு தவறை நிவர்த்தி செய்ய இன்னொரு தவறு செய்வதை நிறுத்த வேண்டும். அதற்கு முன்னர் எங்கே தவறிழைத்தோம் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இப்பொழுது உள்ள ஒரே வழியும், பரிகாரமும் முன்னர் இழைத்த தவறைத் திருத்துவதற்கு அடுத்த பொதுத்தேர்தலை நன்கு பயன்படுத்துவதுதான். மக்களுக்கு இதைவிட்டால் வேறு வழியில்லை.
தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், அவர்களது அடிப்படைப் பிரச்சினைகளுக்கோ அல்லது அன்றாடப் பிரச்சினைகளுக்கோ எந்தவிதமான தீர்வையும் முன்வைக்காத இன்றைய ஜனாதிபதியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் தானும் ஆதரித்து, தமிழ்மக்களையும் ஆதரிக்க வைத்துத் தங்கள் தலையில் தாங்களே மண் அள்ளிப்போட்டது குறித்து புதிதாக நாம் எதையும் கூறுவதற்கில்லை. ஏனெனில் நாய் வாலை ஒருபோதும் நிமிர்த்த முடியாது என்பது எங்கள் எல்லோருக்கும் தெரிந்த உண்மை.
நன்றி *வானவில் 
»»  (மேலும்)

| |

பெருமாளும் தேவரும்,பிள்ளையாரும் பயணித்த பாதையில் விக்கினேஸ்வரரும்


இதுவரை காலமும் எதிர்ப்பரசியலில் ஈடுபட்டு வந்த நாங்கள் எதிர்காலத்தில் இணக்க அரசியலில் ஈடுபடப் போகின்றோம் என வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண உள்ளுராட்சி மீளாய்வுக் கூட்டம் யாழ். பொதுநூலகத்தில் இன்றைய தினம் அமைச்சர் கருஜயசூரிய தலைமையில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Résultat de recherche d'images pour "சிவனேசத்துரை சந்திரகாந்தன்"
அவர் மேலும் தெரிவிக்கையில், இதுவரை காலமும் எதிர்ப்பரசியலில் ஈடுபட்டு வந்த நாங்கள் இனிவருங்காலங்களில் இணக்க அரசியலில் ஈடுபடப் போவதாகவும், புதிய ஜனாதிபதியின் அரசாங்கம் எமது அரசாங்கம் என்பதுடன், இந்த அரசாங்கத்திடம் நாம் கோரவுள்ள கோரிக்கைகளை வழங்க இனி எந்தத் தடையும் இருக்காது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணசபையை வரதராஜப்பெருமாள் பொறுப்பெடுத்தபோது புலிகள் அவரை துரோகிகள் என்றனர்.டக்லஸ் தேவானந்தா அமைச்சராகியபோது புலிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் அவரை துரோகிகள் என்றனர்.பிள்ளையான் கிழக்கு மாகாணசபையை உருவாக்கியபோது அனைவரும் அவரை துரோகிகள் என்றனர்.இப்போது வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அதே இணக்க அரசியலை நாம் ஏற்றுக்கொள்கின்றோம் என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.இப்போது யார் யாரை துரோகிகள் என்பது? 

»»  (மேலும்)