3/15/2015

| |

லாகூரில் கிறிஸ்தவ தேவலாயங்கள் மீது தாக்குதல்: 14 பேர் பலி

பாகிஸ்தானின் லாகூர் நகரில் இரண்டு கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஞாயிறு பிரார்த்தனை சமயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல்
ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகளில் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தபோதே இத்தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
இத்தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.
தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் என்று கருதப்படும் இத்தாக்குதல்கள், லாகூர் நகரில் கிறிஸ்தவ மக்கள் செறிவாக வாழும் புறநகர்ப் பகுதியான யௌஹனாபாதில் நடைபெற்றுள்ளது.
பாகிஸ்தானிய தாலிபான்களின் ஒரு கிளை அமைப்பான ஜமாத்துல் அஹ்ரர் எனும் அமைப்தே இத்தாக்குதல்களை நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் மிகப் பெரும்பான்மையாக முஸ்லிம்களே வாழ்ந்துவரும் சூழலில் அங்குள்ள கிறிஸ்தவர்கள் நாட்டின் மக்கட்தொகையில் இரண்டு சதவீதத்துக்கும் குறைவான அளவே உள்ளனர்.