3/19/2015

| |

யாழ்ப்பாணத்தில் அடங்காத்தமிழனின் சாதிவெறி அடங்காதா?

elalai-sri-murugan-students-posionயாழ். ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் நஞ்சு கலந்து, 26 மாணவர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை கண்டித்து பாடசாலை முன்றலில் வீதி மறிப்பு போராட்டம், வியாழக்கிழமை (19) முன்னெடுக்கப்பட்டது. 
பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.
‘மாணவர்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? சுன்னாகம் பொலிஸாரே உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யுங்கள்’ என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தாழ்த்தப்பட்ட (நளவர் சமூக) மரம் ஏறி கள்ளிறக்கும் மக்கள் வாழும் இந்த பகுதியில் இயங்கும் இந்த பாடசாலை இதுவரை காலமும் கவனிப்பாரற்று கிடந்தது. இந்த பிரதேச சனசமூக நிலையத்தின் தலைவராகவும் பனை அபிவிருத்தி சங்க தலைவராகவும் அண்மைக்காலங்கள் வரை செயல்பட்ட  பசுபதி சீவரத்தினம் ஆவார். அமைச்சர் டக்ளசினுடைய உதவியுடன் இப்பிரதேசத்தில் பல அபிவிருத்தி திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.கடந்த காலங்களில் வெறும் ஐந்தாம் தரம் வரையுமே கல்வி கற்க முடிந்த இந்தபிரதேச ஒடுக்கப்பட்ட சமுக மாணவர்களுக்கு அண்மையில் இப்பாடசால தரமுயர்த்தப்பட்டதனால் தரம் 11 வரை படிக்கும் வாய்ப்பை பெற்றனர்.
இந்நிலையில் ஒடுக்கப்பட்ட மாணவர்களின் வளர்ச்சியை பொறுக்க முடியாத ஆதிக்க சாதி விசமிகளே மாணவர்களின் கல்வியை தடுக்க இந்தவிதமான விஷம் கலக்கும் கொடிய செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என தெரிய  வருகின்றது.