3/22/2015

| |

மறுதலிக்குமா மயிலங்காடு...? கோவை நந்தன்

புலம் பெயர் சாதிய எதிர்பாழர்களால் தலித் மக்கள் என மொழிமாற்றம் செய்யப்பட்ட, தோழர் டானியல் அவர்களால் பஞ்சமர்கள் என விழிக்கப்பட்ட , தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப் பட்டவர்கள், சிறுபான்மை தமிழர்கள் எனவெல்லாம், நம் முன்னவர்கள்காலம் முதல் வஞசிக்கப்பட்டுவரும் சில சமூகத்தவர்கள் மட்டும் கல்விகற்கும் ஏழாலை சிறீமுருகன் வித்தியாலய தண்ணீர் தாங்கியினுள் கலக்கப்பட்ட நச்சுத்திராவக கொடூரம் தொடர்பான விடயங்களே சமூக அக்கறை யுடையவர்களின் இன்றைய பேசுபொருளாக இருக்க முடியும்.
கள்ளிறக்கும் தொழில் செய்யும் பள்ளர் இனமக்களை பெரும்பான்மையாக கொண்டு, சிகை அலங்காரம் மற்றும் கடல் தொழில் செய்பவர்களையும் உள்ளடக்கி மூவின சமூகம், சுமுகமாக வாழும் ஒரு கிராமம் மயிலங்காடு. இங்கே பாரம்பரியமாகவே வாழும் இந்த மூன்று சமூகத்தவர் மட்டுமே கல்வி கற்கும் ஒரே ஒரு பாடசாலையிலேயே இந்த கொடுமை இடம் பெற்று நஞசு கலந்த நீரை அருந்திய 27 மாணவர்கள் அதிர்ஸ்டவசமாக காப்பற்றப்பட்டள்ளனர். இன்று இவர்கள் காப்பாற்றப்பட்டாலும், நஞ்சு கலந்த நீரின் தாக்கம் இந்த பிஞசுகளின் உடலில் இருக்கவே செய்யும் என்கின்றனர் வைத்திய நிபுணர்கள்.
இந்த நஞ்சை கலந்தவர்கள் யார்...? இதன் வஞ்சகப் பின்னணி என்ன...? காவல்துறையின் நடவடிக்கை முன்னெடப்புக்கள் எவை...? யாரைப்பழிவாங்க குறிவைக்கப்பட்டார்கள் இந்ப் பிஞசுகள்...? மாகாண அரசையும் மாவட்டத்தில் 6 நாடாளமன்ற அங்கத்துவத்தையும் தமவசம் வைத்திருக்கும், தாமே தமிழ்மக்களின் ஏகபிரதிநிதிகள் என தம்பட்டம் அடிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த இன அழிப்பு முயற்சி தொடாபில் என்ன செய்கிறது...? செய்யப்போகிறது...? இது போன்ற பலகேள்விகள் தொக்கி நிற்க யூகங்களையும், வியூகங்களையும் மடடுமல்லாது சமூக யதார்த்ததையும் அடிப்படையாக வைத்து பல கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன சமூக, தனியார் வலைத் தளங்களில்.இந்த கொடுமையை முன்னிறுத்தி கூட வழமைபோன்ற அரசியல் சேறுபூசல்களும் அரங்கேறுகின்றன.
யாழ்மவட்டத்தில், மாசடைந்துவரும் நிலத்தடி நீர், சுண்ணாகம் மின்உற்பத்தி நிலைய கழிவு எண்ணை அதனை அண்டியுள்ள கிராமத்து கிணறுகளில் கலந்துள்ளமை, என்பன குடிதண்ணீர் தொடாபில் தற்போதைய பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளன. இவற்றில் சுண்ணாகத்தை அண்டிய, எண்ணை கழிவுகள் மிதக்கும் கிணறுகள் உள்ள மயிலங்காடு உள்ளிட்ட பகுதிகளின் வீடுகளுக்கும், பாடசாலைகள் போன்ற பொது இடங்களுக்கும் குடிநீர் வழங்கும் செயல்பாட்டை அந்த பகுதி பிரதேச செயலகங்கள் மேற்கொண்டு வருகின்றன. கடந்த பல மாதங்களாக மேறகொள்ளப் பட்டு வரும் இந்த செயல்பாடு ஒழுங்காக மேறகொள்ளப்படாமல் தினமும் மக்கள் ஆங்காங்கே அவலப்படுவது, அவ்வபபோது சுடடிக்காட்டப்பட்டு வருகிறது. இதனை கண்டித்தும் இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்திர தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதற்கானதுமான ஒரு அடையாள எதிர்ப்பே இந்த மயிலங்காட்டு அனர்த்தம் என்கின்றனர் சிலர்.
இந்தக் கூற்றிற்கு வலுச்சேர்பதான இரண்டு விடயங்களை நோக்க முடியும்.
1.சுண்ணாகம் மின் நிலைய கழிவு எண்ணை அப்பகுதி நன்
நீருடன் கலப்பது கண்டுகொள்ளப்படாமை தொடர்பில் பல
தரப்பிலிருந்தும் மாகாண சுகாதார அமைச்சுக்கு எதிரான
பேராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் இந்த நீரை
ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க, "தூய நீருக்கான
செயலணி" ஒன்றை மாகாண அரசு நியமித்திருந்தது.
சிங்கப்பூர் ,அவுஸ்தேரிலிய நாட்டு நிபுணர்கள் உட்பட்ட இந்த
செயலணி இந்த நீரில் எண்ணை கலப்பு இல்லை என
அறிக்கை சமர்பித்த அதேதினமே இந்த மயிலங்காடு கோரமும்
இடம பெற்றது.
2.இதே நீர் தொடர்பான ஆய்வுகளை, சுயாதீனமாக
மேற் கொண்ட யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடம்,
இந்தநீரில் எண்ணைக் கழிவு இருப்பதாக உறுதிப்படுத்தி, அந்த
நீரை சுத்திகரிப்பது தொடர்பிலான பொறிமுறை ஒன்றை தாம்
தயாரித்து வருவதாகவும் தெரிவித்திருந்தது. இது
தொடர்பிலான அறிக்கை ஒன்று மருத்துவ பீடத்தின்,
பீடாதிபதி திரு பாலகுமாரன் அவர்களால் வெளியிடப்பட்டும்
நம் தமிழர் தரப்பு குறிப்பாக ஊடகங்கள் எதுவும் இதனை
கவனத்தில் கொண்டிருக்கவில்லை.
ஏற்படுத்தப்பட்ட இந்த முரண்பட்ட நிலைமையின் வெளிப் பாடகவே தண்ணீர் தொட்டியில் நஞ்சு கலக்கப்பட்டது, என சாதாரணமாக சிலாகித்த யாழ்பாணத்து வெள்ளாள ஊடகவி யலாளர்கள் சிலர், இதனை ஒரு சமபவமாக மட்டுமே நோக்கினர். அங்கே பணயம் வைக்கப்பட்டது இளம் பிஞ்சுகளின் பல உயிர்கள் என்கின்ற எந்த உணர்வோ, அதன் ஊசலாட்டமோ கூட இவர்களிடம் இருப்பதாக தெரியவில்லை. இது தவிர அந்தப்பிரதேச சபைக்கு எதிராக மக்களை தூணடி விடும் செயலபாடே இது எனவும், இந்த கொடுமையின் பின்னணியில் முன்னாள் புலிகள் அமைப்பின் ஆதரவு மாகாண சபை உறுப்பினர் ஒருவரே உள்ளார் எனவும் கருத்துகள் வெளியாகின்றன.
குறிப்பாக தோழர் டக்ளஸ் தேவானந்தா மீதும் ஈழமக்கள் ஜனநாயகட்சியின் ஊடக செயலாளரும் முன்னாள் பனை அபிவிருத்தி சபைத் தலைவருமான தோழர் கிபி எனப்படும் பசுபதி சீவரட்ணம் மீதும் மிகுந்த அன்பும் பாசமும் வைத்துள்ள மயிலங்காட்டு மக்களை பீதிக்குள் சிக்வைத்து திசை திருப்புவதற்கான ஒரு தமிழ் தேசிய சதியே இது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய யாழ்பாணத்தின் அரசியல் சகதிக்குள் இவற்றுள் ஏதோ ஒன்று காரணியாக இருப்பதற்கான வாய்ப்புகள் நிறையவே இருந்தாலும் கூட, அதற்கான களமாக ஒரு பாடசாலை தெரிவு செய்யப்பட்தும், சூதுவாது எதுவும் அறியாத இளம் பிஞசுகள் குறிவைக்கப்படடதும் காட்டு மிராண்டித் தனத்தின் அதி உச்சம். குறிப்பாக தாழ்தப்பட்டவர்கள் எனப்படும் மயிலங்காட்டு மக்களின் பிஞசுகள் குறிவைக்கப்பட்டது ஐ.எஸ், போகோகராம், தலிபான்கள் போன்றவற்றின் கொடூரங்களை எல்லாம் விஞசப் போகிறதா நம் யாழ்பாணத்து சாதியம் என்கின்ற கேள்வியையே எழுப்புகிறது.
இந்த கொடுமை நடைபெறுவதற்கு முதல் நாள், மோட்டார் சைக்கிளில் வந்த, அந்த பகுதியை சாராத இருவர் பாடாசாலை பகுதியை நோட்டம் பார்த்து சென்றதை அவதானிக்க முடிந்ததாக, பாடசாலையின் பழைய மாணவனும் தற்போது யாழ்பாணத்தில் ஒட்டோ சாரதியாக இருப்பவருமான சுதா என்பவர் தெரிவித்தார். வெறும் 5ம் தரம் மட்டுமேயான வகுப்புகளைக் கொண்ட இநதப் பாடசாலை, 2001ம் ஆண்டிலேயே 10ம்வகுப்பு வகுப்பு வரையான கல்விகற்றல் வசதி உள்ளதாக தரம் உயர்த்தப்பட்டதாக தெரிவிக்கப் படுகிறது.
ஆரம்பகாலங்களில், இந்த ஏழாலை சிறீமுருகன் வித்தியாலயத்தில் 5ம்வகுப்பு சித்தியடைந்த மாணவர்கள் தமது கல்வியை தொடர அருகே உள்ள பாடசாலைகளில் அநுமதி கிடைப்பது இல்லை எனவும் எமது பாடசாலைலிருந்து அங்கே செல்பவர்கள் ஒடுக்கப்பட்ட சாதியினராகவே இருப்பார்கள் என்பதே இதற்கு ஒற்றைக்கராணம் எனவும் அந்த பழைய மாணவர் தெரிவித்தார்.
1981ம் ஆண்டு அந்தப்பாடசாலையில் 5ம் வகுப்பு சித்தியடைந்த 56மாணவர்களில் 11பேருக்கு மட்டுமே அருகே இருக்கும் குப்பிழான் விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வியை தொடர அநுமதி கிடைத்ததாகவும், பள்ளர் சமூகத்தை சேர்ந்த தான் உட்பட்ட அநுமதி மறுக்கப்பட்ட ஏனையவர்களின் பாடசாலை வாழ்வு அந்த ஆண்டுடனேயே அஸ்தமித்து விட்டதாகவும் சோகம் ததும்ப தெரிவித்தார் அந்த பழைய மாணவர்.
இப்படி பல சமூக ஒடுக்குமுறை வரலாற்றைக் கொண்ட அந்தப் பாடசாலையும் அதன் மாணவர்களும் இலங்கையின் புதிய அரசாங்கத்தின் கீழ் மாகாண சபையை சுதந்திரமாக செயல்படுத்தக் கூடியதாக உள்ளது என மார்தட்டிக் கொள்ளும் ஐயா விக்கினேஸ்வரனின், தமிழர் அரசின் கீழ் மீண்டும் ஒரு சாதிய கொடுமைக்கு உள்ளாகியிருக்கிறது.
வழமை போல் இராணுவப்புலனாய்வுப்பிரிவின் மேல் அல்லது ஈபிடிபி தோழர்களை நோக்கி கையை காண்பித்து அறிக்கை அழித்துவிட்டு அரசியல் கணக்கு பார்க்கும் சக்திகள் இப்போது என்ன சொலல்பபோகின்றன...? இவர்களின் பின்னுள்ள மக்கள், இந்த யுகத்திலும் இப்படியான கொடுமைகளை அநுமதிக்கப் போகிறார்களா...?
காலம் காலமாக பலிக்கடாக்கள் ஆக்கப்படும் இந்த மக்கள் பெறுமதி அற்றவர்களா...? இவற்றிற்கு மறுதலிப்பு இல்லாமலே போய்விடுமா...? இவையும் பதிலற்றவையே உலகின் பல போல.
20/03/2015