3/12/2015

| |

வடமாகாண முதலமைச்சரை சந்திக்கச்சென்ற முன்னால் போராளிக்கு நடந்தகெதி.

வடமாகாண முதலமைச்சரை சந்திக்கச்சென்ற முன்னால் போராளிக்கு நடந்தகெதி..11.03.2015 இன்றய தினம் மதிப்புகுரிய வடமாகாண முதலமைச்சர் அவர்களை கிளிநொச்சியில் வசிக்கும் முன்னால் போராளியான இரு கண் பார்வையிலந்த மகிந்தகுமர் என்பவர், தனக்கும் தனது மனைவிக்கும் தொடர்ச்சியாக இலங்கை புலனாய்வார்களினால் இழைக்கப்படும்.
அச்சுருத்தல் மற்றும் பாதுகாப்பின்மை தொடர்பாக நேரில் சந்தித்து முறையிட்டு அதற்கான தீர்வினை எதிர்பார்த்து வந்ததுடன் அவர் தனது மன ஆதங்கத்தினை மக்கள் முன் சாதாரனமாக உரத்த குரலில் கதைத்துக்கொண்டிருந்த போது அவ்விடத்திற்கு வந்த முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் .சுந்தரலிங்கம் அவர்கள அவ் முன்னாள்  போராளியிடம் உன் கன்னத்தில் அரைந்து வெளியில் வீசுவேன் சத்தம் போட கூடாது.
என கடும் தொனியில் எச்சரித்தபோது கோபமடைந்த முன்னாள் போராளி எங்கே முடிந்தால் செய்யும் என கேட்டார். அதற்கு அவ் செயலாளர் 61330 இலக்கம் கொண்டரத்னாயகா என்றழைக்கப்படும் சிங்கள பொலிசை அழைத்து அவருக்கு அடிக்குமாரு உத்தரவு இட்டார்.
அதற்கு செவிசாய்த்து அவ் சிங்கள பொலிசு முன்னால் போராளியை கூடியிருந்த பொதுமக்கள் முன் கடுமையாக தாக்கினார் உண்மையாக இச்செயலை பார்க்கும் போது எங்களது உரிமைகளை எங்களது மண்ணிலே நிலை நாட்ட முடியாதவர்களா உள்ளோம் என்பது புலனாகின்றது.