3/12/2015

| |

'கிழக்கு மாகாண சபையில் அ.இ.ம.கா ஆட்சிமைப்பது வஞ்சிக்கப்பட்டுள்ளது'

கிழக்கு மாகாண சபை முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் கிழக்கு மாகாண சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆட்சியமைப்பது தொடர்பில் வஞ்சித்துள்ளனர் என கிழக்கு மாகாண பிரதி தவிசாளரும் முன்னாள் மாகாண அமைச்சருமான எம்.எஸ். சுபைர் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபை தொடர்பாகவும் எதிர்க்கட்சி அமைப்பது தொடர்பாகவும் இன்று புதன்கிழமை (11)  அம்பாறை ஆரியவன் விடுதியில் நடைபெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். சுபையிர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், ஆட்சி மாற்றத்துக்கான நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தலைமையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தோம். ஆட்சி மாற்றத்தின் பின்னர் கிழக்கு மாகாண சபையை அமைப்பதில் நாங்கள் பல ஒப்பந்தங்கள் செய்திருந்த போதிலும் அவ் ஒப்பந்தங்கள் அனைத்தும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் மழுங்கடிக்காப்பட்டு எங்களை அரசியல் ரீதியாக ஓரங்கட்ட நினைக்கின்றாhர்கள் இது ஒரு போதும் நிறைவேறாது மக்கள் எங்களுடனே இருக்கின்றார்கள். கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஜனநாயகத்துக்கெதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் இவை ஒரு போதும் நீடிக்காது இவரால் முடியுமானால் அபிவிருத்தியை செய்து காட்டட்டும் என நான் சவால் விடுகின்றேன். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பை சேர்ந்த பத்து உறுப்பினர்கள் கிழக்கு மாகாண சபையில் எதிர் கட்சியில் அமைந்து நல்ல செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதோடு ஜனநாயகத்துக்கு எதிராக செயற்பாடுகளுக்கு நாங்கள் குரல் கொடுப்போம். எதிர்க்கட்சி தலைவராக மாகாண முன்னாள் கல்வியமைச்சர் விமல வீர திஸாநாக்காவை நியமித்துள்ளோம் என்றார். இவ் ஊடகவியளாளர் மாநாட்டில் மாகாண சபை முன்னாள் அமைச்சர்களான எம்.எஸ். உதுமாலெப்பை, விமல வீர திஸாநாயக்கா, முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மாகாண சபை உறுப்பினாகளான்  வீரசிங்க, எம்.எல்.ஏ. அமீர் ஆகயோரும் கருத்து தெரிவித்தனர்.