3/14/2015

| |

மோடி – தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு – மட்டக்களப்பு உறுப்பினர்கள் புறக்கணிப்பு

இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் 13.03.2015ம் திகதி சந்தித்துப் பேசயுள்ளது இச் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களோ, மாகாணசபை உறுப்பினர்களோ அழைக்கப்படவில்லை 
நரேந்திரமோடி மட்டக்களப்புக்கு வரவேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைப்பு விடுத்து இருந்ததுடன் மோடி அவர்கள் மட்டக்களப்புக்கு வராமை கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இன்று இடம்பெறும் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள் அழைக்கப்படாததனால் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கடும் குழப்பத்தில் இருக்கின்றனர். இவ்வாறு தொடர்ந்து தாம் புறக்கணிக்கப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.