3/18/2015

| |

வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார். ஆட்-டோச் சாரதிகளாக பெண்கள்

 ab84பெண்களை   ஆட்டோச் சாரதிகளாக அங்கீகரிக்கும் நடவடிக்கை இன்று மட்டக்களப்பில் முதன்முறையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 
சூரிய பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினால் மட்டக்களப்பு கல்லடியில் நடாத்தப்பட்ட இதன் ஆரம்ப வைபவத்தில் மட்டக்களப்பு சூரிய பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது ஆட்டோ சாரதிகளாக பயிற்சியை முடித்த இருபது பெண்கள் ஆட்டோக்களை செலுத்திக்காட்டியதுடன் அவர்களின் அனுபவங்களையும் இதன் போது பகிர்ந்து கொண்டனர்.
பெண்களை ஆட்டோச் சாரதிகளாக பயிற்சியளிக்கும் நடவடிக்கையும் இதன் போது ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பில் எஸ்.றொமிளா எனும் யுவதி ஆட்டோ பயிற்சி பெற்று ஆட்டோ செலுத்தி வருகின்றார் அவவின் வழிகாட்டலில் இந்தப்பயிற்சி மேற் கொள்ளப்பட்டது.
குறித்த 20 பெண்களுக்கும் டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி சாரதி அனுமதி பத்திரங்களை இலவசமாக வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  மிக நீண்ட காலமாக பெண்களின் மேம்பாட்டுக்காக உழைத்துவரும் சூர்யா பெண்கள் அமைப்பினர் பாராட்டுக்குரியவர்கள்.