3/11/2015

| |

அமைச்சுப் பதவிகளுக்காக ஆசைப்பட்டு பேசுவதைவிட மரணிப்பதே மேல் என வாழ்பவன் நான். சி.சந்திரகாந்தன்

அமைச்சுப் பதவிகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் யாரிடமாவது மண்டியிட்டு பேசுவதை விட மரணிப்பதே சிறந்தது என வாழ்பவன் நான். நான் நினைத்திருந்தால் 2012ம் வருடமே அமைச்சுப் பதவிகளை கிழக்க மாகாண சபையில் பொறுப்பேற்றிருக்கலாம். அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸஇஅவரின் சகோதரர் பசில் ராஜபக்ஸ இருக்கும்போதே அமைச்சுப் பதவியினைப் பொறுப்பேற்காத நான் இன்று எந்த அமைச்சுப் பதவியும் கேட்டு நான் யாரிடமும் செல்லவில்லை செல்லப்போவதுமில்லை.
 11 ஆசனங்களை கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்புத் தமிழ் ஒருவர் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காகவே பேசுவதற்கு சென்றேன். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு முதலமைச்சை தர முடியுமா என சம்பந்தன் ஐயா கேட்டபோது அவ்விடத்திலேயே நான் தெளிவாகச் சொன்னேன். முதலமைச்சை தருகின்றோம் நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் எப்படி அமைச்சுக்களை பிரித்துக் கொடுப்பது என்று கூறினோம். அவரும் தான் உரிய நடவடிக்கைகளை பேசிவிட்டு குறிப்பிடுகின்றேன் என்றார் என கிழக்கு மகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தன் குறிப்பிட்டார்.
மட்/கல்குடா வாழைச்சேனை இந்துக் கல்லூரின் வருடாந்த மெய்வல்லுனர் போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
தற்போதைய கிழக்கு மாகாண அரசியல் மாற்றத்தினால் மாகாண சபையில் மீண்டும் ஒரு தமிழ் முதலமைச்சரை பெறுவதற்கான வாய்ப்புக்கள் பல இருந்தது. கிழக்கு மாகாணம் தமிழ், முஸ்லீம், சிங்களவர் என மூவின மக்களுக்கும் பொதுவான ஒரு மாகாணமாக இருந்தாலும் இந்நாட்டில் ஒரு அதிகாரப் பகிர்வு முறைமை தேவை என்று போராடியவார்கள் தமிழர்களே!. அதற்கமைய தமிழர்களுக்கு உரித்தான உரிமைகளை சந்தர்ப்பம் ஏற்படும்போது தவறாது பெற்றுக் கொள்வது அவர்களது கடமையாகும். நாம் அரசியலுக்கு வந்து ஒரு பிராந்திய ரீதியான அரசியல் கட்சியை உருவாக்கி இருக்கின்றோம். முதலமைச்சர் பதவி என்பது தமிழர்களுக்கு உரித்தானது அதை பேரம் பேசி பெற்றுக் கொள்ளும் சூழல் ஒன்று வருமானால் அதை தார்மிகமாக பெற்று  செய்து காட்ட வேண்டும்.
ஆனால் மட்டக்களப்பு மக்களின் துரதிஸ்டமான நிலை என்னவென்றால் நம்முடைய தமிழ்  தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் பிள்ளையான் அவர்கள் எங்களுடன் சேர்ந்து அமைச்சுப் பதவி எடுத்தால் தேர்தலில் போட்டியிட்டு அவர்களது ஆசனங்களை பெற்றுக் கொள்வார் என்று பல விமர்சனங்கள் எழுந்தன. அதை நினைத்து பெரிதும் கவலையடைந்தேன். தற்போதைய அரசியல் தெரியாது தொடர்ந்தும் எமது மாகாணத்தை கைநழுவவிட முடியாது.
ஆகவே இங்குள்ள பெற்றோர்கள், புத்திஜீவிகள் சிந்திக்க வேண்டும். குறிப்பாக அரசியல் மாற்றத்திற்க்கு பின்னர் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் மிகப் பெரிய சுருக்குவலை போட்டிருக்கின்றது. இது அவர்களின் அரசியல் சாணக்கியம் என்று தற்போதைய முதலமைச்சர் சொன்னாலும் நான் மதிக்கின்ற தலைவர் என்ற அடிப்படையில் சம்பந்தன் ஐயாவை இரண்டு முறை சந்தித்தேன். முதலாவது முறையாக சந்தித்தபோது ”தம்பி நீங்கள் எங்களோடு இருப்பது மகிழ்ச்சி, ஆனால் முதலமைச்சர் பதவியை எப்படியாவது நாங்கள் பெறுவதற்கு உதவி செய்யுங்கள்” என்று கூறினார். நான் தற்போதைய ஜனாதிபதி மைத்திபால சிறிசேனாவை சந்திக்க போகின்றேன் சந்தித்துவிட்டு சொல்கின்றேன் என்று கூறினேன்  ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் 07 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களும் இணைந்தே மொத்தமாக 22 உறுப்பினர்களும் சேர்ந்தே அன்று ஆட்சி நடைபெற்றது. புதிய ஜனாதிபதியை சந்தித்தபோது அவர் என்னிடம் “”பிள்ளையான் அவர்களே தேர்தல் முடிந்துவிட்டது நீங்கள் கடந்த தேர்தலில் எங்களுக்கு எதிராக செயற்பட்டீர்கள் இருப்பினும் தற்போதைய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் நான்தான் அதனால் எங்களுடன் இணைந்து ஆட்சி அமையுங்கள்” என்று கூறியதற்கு அமைய ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் முதலமைச்சர் ஆவதற்கு முன்கூட்டியே 19 உறுப்பினர்கள் கைச்சாத்திட்டனர். வேறு வழியின்றி நானும் கைச்சாதிட்டு ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் நசீர் ஹாபீஸ் முதலமைச்சர் ஆவதற்கு ஆதரவினை வழங்கினோம். ஆனால் அவர்கள் பதிவி பெற்ற பிறகு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்களை அமைச்சரவையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணத்தால் எங்களது முடிவு பூதாகரமாக வெடித்து நாங்கள் 10 உறுப்பினர்கள் வெளியேறினோம். மீதமாக ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் 07 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 05 உறுப்பினர்களுமாக மொத்தமாக 12 உறுப்பினர்கள் இருந்தனர். 07 ஆசனங்களை வைத்து கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தீர்மானம் எடுத்திருக்கும் நிலையில் இருந்தால், 11 ஆசனங்களை வைத்திருப்பவரிடம் ஏன்?; தீர்மானம் எடுக்க முடியாது. அவர்கள்தான் கிழக்கு மாகாணத்திக் ஆட்சி தீர்மானத்தை மாற்றும் சக்தியாக வந்திருக்க வேண்டும். மீண்டும் எங்களது கட்சியின் பொது தீர்மானத்திற்கு அமைய சம்பந்தன் அவர்களை சந்தித்தபோது எங்களை வரவேற்று பேசினார்.
ஊங்களோடு நாங்கள் இணைந்தால் எங்களுக்கு முதலமைச்சர் பதவி தருவீர்களா? என்று கேட்டார். அதற்கு நான் கூறினேன் முதலமைச்சு பதவி மட்டுமில்லாமல் ஏனைய 01 அமைச்சும், சிங்களவருக்கு 01 அமைச்சும், முஸ்லீம்களுக்கு 02 அமைச்சும் தருவதாக கூறினோம். எல்லோரும் கலந்து ஆலோசித்து சபை தலைவராக யாரை? வைப்பது வேண்டுமென்றால் சிங்களவர் ஒருவருக்கே அதையும் கொடுத்து ஒரு சமத்தவமான ஆட்சியை அமைப்போம் என்றும், நாங்கள் வாயால் சொன்னாள் எழுதி தர தேவையில்லை என்றும் கூறினோம் இதற்கு ஆதாரமும் உண்டு. நேற்று  நடைபெற்ற நிகழ்வில் யோகேஸ்வரன் அவர்கள் விமர்சித்துள்ளார் அவரது தலைவரிடம் நாங்கள் போய் கெஞ்சியதாக,”நான் ஆணித்தனமாக அடித்துக் கூறுகிறேன் பதவிகளுக்காகப் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமோ அல்லது யாரிடமோ போய் பேசும் நிலை வந்தால் அதை விட மரணிப்பதே மேல் என்று நினைக்கும் மனிதன் நான்” மக்களுக்கு சேவையாற்ற வந்துவிட்டு தனி நலன் கருதி விலகி செல்வது பொருத்தமற்றது. இம்மண்ணில் பிறந்வர்கள் என  மார்பு தட்டிக் கொள்பவர்களும், தமிழர் விடுதலைக்காக போராடியவர்களும் இவர்களின் செயற்பாடால் தலைகுனிந்து நிற்கின்றோம். இப்போதும் எங்களது இடது மார்பை பிளந்து பார்த்தால் இதயத்திற்கு கீழ் அரைத்துண்டு இரும்போடுதான் வாழ்ந்து வருகின்றோம். தற்போதைய  பாராளுமன்ற உறுப்பினர்களோ?, அல்லது மாகாணசபை உறுப்பினர்களோ? அல்லது அவர்களது பிள்ளைகளோ, தமிழர் விடுதலைக்காக துப்பாக்கி தூக்கி, இரத்தம் சிந்தி போராடவில்லை. நாங்கள் போராடும் காலப்பகுதியிலும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் இளைஞர்களாக இருந்தும் போராடவில்லை. ஆனால் இன்று அவர்கள் விடுதலை பற்றியும், விடுதலை கீதம் பற்றியும் பேசுவது கவலைக்குரிய விடயமாகும்.
ஆகையால் இவர்களது வேடம்மாற்றும் கதைகளையும், மக்களுக்காக என்று சொல்லி மக்களை மடையர்களாக்கும் சூழல்களையும் நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். முஸ்லீம் சமுகத்தினைப் பாருங்கள் 1962ம் ஆண்டு முதல் மட்டக்களப்பில் இருந்து அம்பாறையை பிரித்து தனி அலகாக
கேட்பதும், 07 ஆசனங்களை வைத்து கிழக்கு மாகாண சபையில் ஆட்சியை தீர்மானிப்பதும் இச்சமூகமே. தற்போது நமக்கு இரு அமைச்சுக்களை மட்டுமே வைத்துக் கொண்டும், காணி அமைச்சு தவறியதற்கும் காரணம் சொல்லும் பரிதாப நிலை ஏற்பட்டிருக்கின்றது.எனவும் குறிப்பிட்டார்