3/12/2015

| |

RSSன் சூழ்ச்சிகளைத் தகர்த்தெறிந்த தமிழக காவல் துறை

அமைதிப் பூங்கா என்று பெயர் பெற்றுள்ளதமிழகத்‌தில், சென்னை, திருவாரூர், தூத்துக்குடி, கரூர், தென்காசி, கன்னியாகுமாரி, கோவைஆகியஏழு மாவட்டங்களில், கடந்த நவம்பர் மாதம் 9ம் தேதி, ராஜ ராஜ சோழனின் ஆயிரமாவது ஆண்டு விழா என்ற காரணத்தைக் காட்டி, தனது அமைப்பு சார்பாக தடிகளுடன் அணிவகுப்பு நடத்தி, அதன் மூலம் இனக் கலவரத்தை உண்டு பண்ணலாம் என்று RSS அமைப்பு சதித் திட்டம் தீட்டியது (அமைதியுடனும் மற்றும் ஆயுதங்களில்லாமலும் ஒன்று கூடுதல் என்னும் இந்திய அரசியலமைப்பின் ஷரத்து 19(1)(b)க்‌கு எதிரானது, இவர்களின் தடிகளுடன் கூடும் அணிவகுப்பு).
அந்த அணி வகுப்பிற்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும், பல மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்ட RSS அமைப்பினர், மேற் சொன்ன ஏழு மாவட்டங்களிலும் எந்த வித சட்டப் பிரச்சினைகளிலும் சிக்காமல் இருப்பதற்காக, அந்தந்த மாவட்ட நிர்வாகங்களை அணுகியது.
மேற்படி அமைப்பினரின் கோரிக்கைகளை முறையாகப் பரிசீலித்தஏழு மாவட்ட நிர்வாகங்களும் மற்றும் காவல் துறையும், RSS அமைப்பினரின் பேரணி மற்றும் அணிவகுப்பிற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
மேற்படி ஏழு மாவட்ட நிர்வாகங்களும் மற்றும் காவல் துறையும்தடை விதித்துபிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, பேரணி மற்றும் அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி, RSS அமைப்பின் ஏழு மாவட்ட நிர்வாகிகளும் தனித் தனியாக ஏழு செயலுறுத்தும் நீதிப் பேராணையை (Writ of Mandamus) (W.P No: 28677 - 28683) சென்னை உயர் நீதிமன்றத்‌தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளின் விசாரணை, நீதிபதி v ராமசுப்ரமணியன் முன்பாக விசாரணைக்கு வந்தது.
RSS நிர்வாகிகளின் சார்பாக மூத்த வழக்கரிஞர் ராமானுஜம் மற்றும்வழக்கரிஞர்கள்S பிரபாகரன், B ராபு மனோகர் வாதம் புரிந்தனர். அப்பொழுது இந்த நாட்டிற்கு இரண்டு பிரதமர்களை தந்த ஒரு அமைப்பின்பேரணி மற்றும் அணிவகுப்பிற்கு அனுமதி மறுப்பது வருந்தத்தக்கது என்று RSS அமைப்பின் சார்பாக வாதம் வைக்கப்பட்டது.
அதற்குபதிலளித்து வாதிட்ட தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் சோமையாஜி, RSS அமைப்பினர் நடத்த இருக்கும் அணிவகுப்பு மற்றும் பேரணியால், தமிழகத்தில் மிகப் பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் உண்டாகும். எனவே தான் அந்த மாவட்ட நிர்வாகங்கள் RSS அமைப்பினர் மேற்கொள்ளும் அணிவகுப்பு மற்றும் பேரணிக்குஅனுமதி மறுத்துள்ளது என்று வாதம் புரிந்தார்.
எனினும், எல்லா அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் நடத்தும் பேரணி மற்றும் அணிவகுப்புகளுக்குவழங்கப்பட்ட அனுமதிகளை மேற்கோள் காட்டி, RSS அமைப்பின்பேரணி மற்றும் அணி வகுப்புகளுக்கு அனுமதி வழங்கி, கடந்த மாதம் 7ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதனை எதிர்த்து, இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அமர்வில், தமிழக அரசு மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. ஆனால், இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க முடியாது என்று அந்த அமர்வு கூறியதால், இடையில் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், வேறு வழியில்லாமல் உயர் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவை செயல்படுத்தும் நிலை தமிழக அரசுக்கு உண்டானது.
rss 600உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, நவம்பர் 9ம் தேதியன்று பேரணி மற்றும் அணிவகுப்பிற்கான பணிகளை தீவிரப்படுத்திய அந்த அமைப்பினர், அன்று மாலை சுமார் 4.30 மணியளவில் பேரணி மற்றும் அணிவகுப்பிற்காக ஒன்று கூடிய பொழுது, RSS அமைப்பினர் சீருடையுடன் அணிவகுப்பு நடத்த, தமிழக காவல் துறை அனுமதி மறுத்தது. அதனைத் தொடர்ந்து காவல் துறையினருடன் வாக்குவாதங்களில் ஈடுபட்ட RSS அமைப்பினர் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்.
RSS அமைப்பினர் கைது செய்யப்பட்டு அவர்களின் பேரணி மற்றும் அணிவகுப்பு தடைபட்டதால், தமிழகத்தைச் சூழ்ந்திருந்த கலவரச் சூழல் நீங்கி மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
இதனைபொறுக்க முடியாத RSS நிர்வாகியொருவர், இந்த அனுமதி மறுப்பு நீதிமன்ற அவமதிப்பாகும். இதை நாங்கள் நீதிமன்ற அவமதிப்பாக வழக்குத் தொடருவோமென்று ராமநாதபுரத்தில் நிருபர்கள் கூட்டத்தில் கூறினார். அதனைத் தொடர்ந்து, அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்‌தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர்ந்தனர்.
அந்த வழக்குகளும், நீதிபதி V ராமசுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி, பேரணிக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டது சீருடைஅணிவகுப்பிற்கல்ல, ஆகையால் மாநில அரசின் நடவடிக்கை சரியானதே என்று கூறி மேற்படி நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தள்ளுபடி செய்து கடந்த 27ம் தேதி உத்தரவிட்டார்.
தமிழக காவல் துறையின் சீரான நடவடிக்கைகளால் தமிழகத்தைச் சூழ்ந்த இனக் கலவரச் சூழல் முறியடிக்கப்பட்டுள்ளது.

நன்றி கீற்று