4/13/2015

| |

களுவாஞ்சிகுடி விபத்தில் 32 பேர் காயம்

வாழைக்காடு களுவாஞ்சிகுடி பகுதியில் பழுகாமம்- திக்கோடை வீதியில் காந்திபுரம் என்னுமிடத்தில் தனியார் பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 32 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் அறுவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்றுக்காலை இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.