5/22/2015

| |

சவுதி அரேபியா மசூதியில் தொழுகையின் போது தற்கொலை படை திவீரவாதி தாக்குதல் பலர் பலி

கிழக்கு சவுதி அரேபியாவில் அல் குவடாக் நகரில் உள்ள இமாம் அலி மசூதியில் இஸ்லாமியர்கள் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் தான் அணிந்து இருந்த குண்டை வெடிக்க செய்தான். இந்த தாக்குதலில் பலர் உயிர் இழந்தனர்.

இந்த பள்ளியில் 150 க்கும் மேற்ட்டவர்கள் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர் எனவும் இதில் 30 பேர் வரை பலியாகி இருக்க கூடும் எனவும் நேரில் பார்த்தவர் கூறி உள்ளார்.

நாங்கள் முதல் பகுதி தொழுகையில் ஈடுபட்டு இருந்த போது  வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் கேட்டேன். என நேரில் பார்த்த  கமல் ஜாபர் ஹசன் என்பவர் ராய்ட்டர் செய்தி ஏஜென்சிக்கு டெலிபோன் மூலம் கூறி உள்ளார்

சவுதி அரசு செய்தி ஏஜென்சி வெடுகுண்டு தக்குதல் நிகழ்ந்ததை உறுதி படுத்தி உள்ளது. பாதிக்கபட்டவர் ஒருவர் ரத்தம் தோய்ந்த படத்தை சோசியல் மீடியாவில் போட்டு உள்ளார்