5/22/2015

| |

நான்கு அமைச்சர்கள் இராஜினாமா ரணிலுடன் செயற்பட முடியாது என அறிவிப்பு

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான தேசிய
அர­சாங்­கத்தில் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் சார்பில் அங்கம் வகித்த நான்கு அமைச்­சர்கள் நேற்று தமது அமைச்சுப் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்­த­துடன் அர­சாங்­கத்­தி­லி­ருந்தும் வில­கினர்.
சமுர்த்தி மற்றும் வீட­மைப்பு இரா­ஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, பொது­நிர்­வாகம்
மற்றும் ஜன­நா­யக ஆட்சி தொடர்­பான இரா­ஜாங்க அமைச்சர் சி.பி. ரத்­நா­யக்க, சுற்­றாடல் இரா­ஜாங்க அமைச்சர் பவித்­தி­ரா­தேவி வன்­னி­யா­ராச்சி மற்றும் பாரா­ளு­மன்ற அலு­வல்கள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபே­வர்த்­தன ஆகி­யோரே தமது அமைச்சுப் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்­துள்­ளனர்.
நான்கு அமைச்­சர்­களும் தமது இரா­ஜி­னாமா கடி­தங்­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அனுப்­பி­யுள்­ள­துடன் தாங்கள் ஏன் அர­சாங்­கத்­தி­லி­ருந்து வில­கு­கின்றோம் என்­ப­தனை விளக்கி நீண்ட கடிதம் ஒன்­றையும் அனுப்­பி­யுள்­ளனர்.
அர­சாங்­கத்­தி­லி­ருந்து வில­கி­னாலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­ல­வுக்கு முழு­மை­யான ஆத­ரவை வழங்­கு­வ­தா­கவும் அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்தச் சட்­டத்தை நிறை­வேற்ற உறு­து­ணை­யாக இருப்­ப­தா­கவும் நான்கு பேரும் தெரி­வித்­துள்­ளனர்.
இது தொடர்பில் நால்­வரும் இணைந்து ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது
கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் நீங்கள் போட்­டி­யி­டு­வ­தற்கு முன்னர் சுதந்­தி­ரக்­கட்­சியின் சில எம்.பி.க்களுடன் செய்­தி­யாளர் மாநாட்­டினை நடத்­தி­யி­ருந்­தமை உங்­க­ளுக்கு நினை­வி­ருக்கும். அதே­போன்று மஹிந்­த­ரா­ஜ­ப­க்ஷவை சந்­தித்­தமை எமது கட்­சியை பொறுத்­த­வ­ரையில் மிக முக்­கிய விட­ய­மாகும்.
அதன் பின்னர் நீங்கள் சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைவர் பத­வியை மஹிந்த ராஜ­பக்ஷ உங்­க­ளிடம் ஒப்­ப­டைத்தார். அவ்­வா­றான முக்­கி­ய­மான முடி­வு­களை எடுத்த உங்­க­ளுக்கும் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கும் நன்­றி­களை தெரி­விக்­கின்றோம். அந்த தீர்­மானம் எமது நாட்டின் அர­சியல் பய­ணத்­தையும், சுதந்­தி­ரக்­கட்­சியின் பய­ணத்­தையும் தீர்க்­க­மான முறையில் மாற்­றி­ய­மைத்­தது. அந்த வகையில் இன்று நாங்கள் எடுக்­கின்ற தீர்­மா­ன­மா­னது சரி­யான தீர்­மானம் என நாங்கள் நம்­பு­கின்றோம்.
நீங்கள் சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­வ­ராக வந்த பின்னர் ஐக்­கிய தேசிய கட்சி வழ­மை­போன்று தேர்தல் வெற்­றியின் பின்னர் செய்­கின்ற அடக்கு முறைகள் குறைந்­தன. இட­மாற்­றங்கள் கூட குறைந்­தன. ஆனால் ஐக்­கிய தேசி­யக்­கட்சி கிராம மட்­டங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட அனைத்து அபி­வி­ருத்­தி­க­ளையும் நிறுத்­தி­யது. இது பாரிய விவ­கா­ர­மாக அமைந்­தது. அத்­துடன் ஐக்­கிய தேசி­யக்­கட்சி கிராம மட்­டத்தில் புதிய வேலைத்­திட்­டங்­களை ஆரம்­பித்­தது. இதனால் சுதந்­தி­ரக்­கட்சி வீழ்ச்­சி­ய­டைய ஆரம்­பித்­தது. எமது ஜனா­தி­பதி ஒருவர் பத­வியில் இருக்கும் போது எமது அமைச்­சர்கள் பத­வி­யி­லி­ருக்­கும்­போது இவ்­வாறு நடக்­கி­றது என மக்கள் ஆதங்­கப்­பட்­டனர். இதன்­போது எம்மால் பதி­ல­ளிக்க முடி­யாது இருந்­தது. பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு வழங்­கப்­படும் பன்­மு­கப்­ப­டுத்­தப்­படும் நிதி எமக்கு வழங்­கப்­ப­ட­வில்லை.
5 மில்­லியன் ரூபா பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட நிதியை 10 மில்­லியன் ரூபா­வாக உயர்த்­து­வ­தாக நிதி­ய­மைச்சர் கூறினார். ஆனால் எமக்கு முன்னர் வழங்­கப்­பட்ட 5 மில்­லியன் ரூபா கூட கிடைக்­க­வில்லை. அது­மட்­டு­மன்றி எமது ஆத­ரவைப் பெற்­றுக்­கொண்டு ஆட்சி அமைத்­துள்ள ஐக்­கிய தேசி­யக்­கட்சி சுதந்­தி­ரக்­கட்­சியை பிள­வு­ப­டுத்­தி­கொண்­டி­ருக்­கின்­றது. அது­மட்­டு­மன்றி நாட்டை பொலிஸ் இராட்­சி­ய­மாக உரு­வாக்­கி­யுள்­ளனர்.
பொலிஸ் மா அதி­ப­ருக்கு மேல் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தனது அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி எதிர்க்­கட்­சியை அடக்கி வரு­கின்றார். இந்த அர­சாங்­கத்தில் நாங்கள் 19 ஆவது திருத்த சட்­டத்­தையும் நிறை­வேற்­றினோம். அது பாரிய அர­சியல் வெற்­றி­யாகும். நாம் தேசிய அர­சாங்­கத்தில் இணைந்­தி­ருக்­கா­விடின் 19 ஆவது திருத்தச் சட்டம் தோல்­வி­ய­டைந்­தி­ருக்கும். சுதந்­தி­ரக்­கட்­சியை காப்­பாற்­று­வ­தற்கு நீங்கள் எடுக்கும் முயற்­சிகள் பாராட்­டத்­தக்­கவை, எதிர்­வரும் தேர்­தலில் உங்­க­ளதும் எங்­க­ளதும் எதி­ரா­ளி­யாக ஐக்­கிய தேசி­யக்­கட்­சியே இருக்­கப்­போ­கின்­றது.
உங்­க­ளுக்கு வாக்­க­ளித்த 61 இலட்சம் பேரையும் உங்­க­ளுக்கு எதி­ராக வாக்­க­ளித்த 58 இலட்சம் பேரையும் ஒரே தட­வையில் மகிழ்ச்­சிப்­ப­டுத்த உங்­க­ளுக்கு நேர்ந்­துள்­ளது. இது ஒரு சிக்­க­லான விட­ய­மாகும். இந்த இடத்தில் கிராம மட்­டத்தில் கட்சி ஆத­ர­வா­ளர்­களை பேணிக்­காப்­பது கடி­ன­மாகும். நாட்டில் காணப்­ப­டு­கின்ற உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் 250 சபைகள் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி வசம் இருந்­தன. அவற்றின் பத­விக்­கா­லத்தை ஒன்­றரை மாதத்­தினால் நீடித்­தீர்கள். தற்­போது அந்தப் பத­விக்­கா­லமும் முடி­வ­டைந்­துள்­ள­தாகல் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்கு செல்ல வேண்­டி­யுள்­ளது. ஆனால் அதனை செய்­யாமல் அவற்றை விசேட ஆணை­யா­ள­ருக்கு கீழ் கொண்­டு­வந்­துள்­ளமை எமக்கு மகி­கழ்ச்­சி­ய­ளிக்­க­வில்லை. இதற்கு பதி­லாக பத­விக்­கா­லத்தை நீடித்­தி­ருக்­கலாம்.
தற்­போது உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் ஆணை­யா­ளரின் கீழ் உள்­ளதால் சுதந்­தி­ரக்­கட்சி வீழ்ச்­சியை நோக்கி செல்­கின்­றது. இவ்­வா­றான பின்­ன­ணியில் எம்மால் தொடர்ந்தும் அமைச்சுப் பத­வியை வகிக்க முடி­யாது. எனவே நாங்கள் எமது பதவிகளை கைவிடுகின்றோம். நாம் அமைச்சுப் பதவிகளை விட்டு சென்றாலும், உங்கள் தலைமையில் சுதந்திரக்கட்சியை வெற்றிபெறச் செய்வோம். உங்களுககு பக்கபலமாக இருப்போம். உங்கள் கரங்களை பலப்படுத்துவோம்.
நாம் 19 ஆவது திருத்தச் சட்டத்தினை நிறைவேற்றினோம். அதேபோன்று 20 ஆவது திருத்த சட்டத்தினையும் நிறைவேற்றுவோம். எதிர்வரும் தேர்தலில் மைத்திரி- மஹிந்த தரப்புக்களை இணைத்து நாம் வெற்றிபெறுவோம். நாம் இன்று எடுக்கும் தீர்மானம் உங்களுக்கு மிகப்பெரிய பலமாக அமையும். எதிர்க்கட்சி உறுப்பினர்களாக இருந்து எமது கட்சியின் வெற்றிக்காக உழைப்போம்.