5/22/2015

| |

பேப்பர்காரர்களின் கொடூர முகம்

பேப்பர்காரர்களின் கொடூர முகம்
யாழ்ப்பாணத்தில் நேற்று கடையடைப்பும் பஸ்கரிப்பும் இடம்பெற்றிருந்தது. இதனால் பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் உதயன் பத்திரிகை நிறுவனத்தில் நீண்டகாலமாக வேலை செய்யும் ஆறு பெண் ஊழியர்கள் அச்சத்தின் காரணமாகவும் போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாலும் நேற்று வேலைக்குச் செல்லவில்லை எனத் தெரியவருகின்றது.  அவர்களது விபரங்கள்
ஜமுனா – Editorial
ஸ்ரீதேவி –  Proof Reading
ஜீவதாரிணி – Type Setting
சோபா –     Editorial
சீபா – Clerk
சுபோதினி – Type Setting
இன்று அவர்கள் வழமை போல் உதயன் பணிமனைக்கு பணியாற்றச்  சென்ற போது அங்கு வைத்து உதயன் ஆசிரியர் மற்றும் நிர்வாகத்தரப்பு அவர்களை வேலைக்கு வர வேண்டாம் வீட்டே போங்கள் என தரக்குறைவான வார்த்தைகளால் ஏசி வேலையை விட்டு நிறுத்தியுள்ளனர். இதே வேளை இவர்களை தான் வந்து சந்திக்கும் வரைக்கு வேலையை விட்டு நிறுத்தி வைத்திருங்கள். நான் வந்து அவர்களிடம் கதைத்த பின்னரே வேலைக்கு அவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்வது பற்றி முடிவெடுப்பேன் என உதயன் முதலாளி சரவணபவன் தெரிவித்துள்ளாராம்.